TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


 

  1. “பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்” இவ்வரிகள் இயற்றியவர் யார்?

சுந்தரர்

  1. சுந்தரர் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

நம்பியாரூரர் ,தம்பிரான் தோழர்

  1. சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன?

ஏழாம் திருமுறை

  1. யார் இயற்றிய நூலை முதல்நூலாக கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்?

(திருத்தொண்டத்தொகை) சுந்தரர்

  1. யார்  மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் என அழைக்கப்படுகிறது?

திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர்

  1. தேவாரம் என்பதன் பொருள் என்ன?

இறைவனுக்கு சூட்டப்படும் மாலை அல்லது இனிய இசை பொருந்திய பாடல்கள்

  1. பதிகம் என்பது எத்தனை பாடல்களைக் கொண்டது?

பத்து பாடல்கள்

  1. “ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

கலித்தொகை

  1. கலித்தொகை என்ன பாவகையால் ஆன நூல்?

கலிப்பா

  1. கலித்தொகை எத்தனை பிரிவுகளை உடையது?

ஐந்து: குறிஞ்சிக்கலி ,முல்லைக்கலி, மருதக்கலி ,நெய்தல் கலி, பாலைக்கலி

  1. கலித்தொகையை தொகுத்தவர் யார்?

நல்லந்துவனார்

  1. மண் பானை செய்வதற்கு மணலை பக்குவப்படுத்த என்னென்ன கலக்க வேண்டும்?

மெல்லிய மணல் மற்றும் சாம்பல்

  1. பானை செய்ய பயன்படும் சக்கரத்திற்கு என்ன பெயர்?

திருவை

  1. எத்தனை வகை மூங்கில்கள் உண்டு?

மூன்று: கல் மூங்கில், மலை மூங்கில், கூட்டு மூங்கில்

  1. குழந்தைகளை படுக்க வைக்க பயன்படும் பாய் எது?

தடுக்கும் பாய்

  1. உட்கார்ந்து உண்ண உதவுவது என்ன பாய்?

 பந்திப் பாய்

  1. உட்காரவும் படுக்கவும் உதவுது என்ன பாய்?

திண்ணை பாய்

  1. திருமணத்துக்கு பயன்படுத்துவது என்ன பாய்?

பட்டுப்பாய்

  1. இஸ்லாமிய தொழுகைக்கு பயன்படுத்துவது என்ன பாய்?

தொழுகை பாய்

  1. “கூம்பொடு மீப்பாய் களையாது “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

 பனைமரம்

  1. பிரம்பின் தாவரவியல் பெயர் என்ன?

கலாமஸ் ரொடாங்

  1. பிரம்பின் கொடி வகை எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது?

அசாம் ,அந்தமான் ,மலேசியா

  1. ஒரு சொல்லின் பொருளை அறிய பயன்படுவதற்கு பெயரென்ன?

அகராதி

  1. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள பயன்படுவது எது?

கலைக்களஞ்சியம்

  1. இசைக்கருவி எத்தனை வகையாகப் பிரிப்பர்?

 இரண்டு : குரல்வழி இசை, கருவிவழி இசை

  1. இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

பாணர்

  1. “நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?

4 :தோல் கருவி ,நரம்புக்கருவி , காற்றுக்கருவி,கஞ்சக் கருவி

  1. விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள் எவ்வாறு அழைக்கப்படும்?

தோல் கருவிகள்

  1. நரம்பு அல்லது தந்திகளை உடைய இசைக்கருவிகள் எவ்வாறு அழைக்கப்படும்?

நரம்புக் கருவிகள்

  1. காற்றை பயன்படுத்தி இசைக்கப்படுபவை எவ்வாறு அழைக்கப்படும்?

காற்றுக் கருவிகள்

  1. ஒன்றோடொன்று மோதி இசைக்கப்படுபவை எவ்வாறு அழைக்கப்படும்?

கஞ்சக் கருவிகள்

  1. இடை சுருங்கிய ஒரு கைபறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உடுக்கை

  1. உடுக்கையின் உடல் பகுதி எதனால் ஆனது?

பித்தளை

  1. பெரிய உடுக்கைக்கு பெயரென்ன?

தவண்டை

  • சிறிய உடுக்கைக்கு பெயரென்ன?

குடுகுடுப்பை

  1. “தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்” இவ்வரிகள் இடம்பெற்றது?

திருஞானசம்பந்தர் தேவாரம்

  1. ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்த கருவிக்கு பெயர் என்ன?

குடமுழா

  1. குடமுழாவிற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன? பஞ்சமகா சத்தம்
  2. புல்லாங்குழல் எத்தனை துளைகள் உடையதாக இருக்கும்?

ஏழு துளைகள்

  1. புல்லாங்குழல் எத்தனை விரல் நீளம் உடையதாக இருக்கும்?

20 விரல்

  1. புல்லாங்குழல் எந்தவகை மரங்களால் செய்யப்படுகிறது?

மூங்கில், சந்தனம், செங்காலி கருங்காலி

  1. கொன்றைக்குழல், முல்லைக்குழல் ,  ஆம்பல் குழல் என பல வகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல் எது?

சிலப்பதிகாரம்

  1. இயற்கையான இசைக்கருவி எது?

சங்கு

  1. “சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

திருப்பாவை

  1. சாலரா இசைக்கருவியின் வேறு பெயர் என்ன?

பாண்டில்

  1. வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்த இசைக் கருவி எது?

சேகண்டி

  1. சேகண்டி இசைக் கருவிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

சேமங்கலம்

  1. பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்கு தோலினால் கட்டப்படும் கருவிக்கு பெயர் என்ன?

திமிலை

  1. திமிலைக்கருவி என்ன வடிவத்தில் அமைந்திருக்கும்?

மணல் கடிகாரம் வடிவம்

  1. திமிலை தோல்கருவிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

பாணி

  1. “வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

பெரியபுராணம்

  1. பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க என்ன கருவி பயன்படுத்தப்பட்டது? 

கோட்பறை

  1. பகைவர்களின் ஆநிரை கவரச் செல்லும் போது என்ன கருவியை முழக்குவர்?

ஆகோட்பறை

  1. மத்து என்பது எதனுடைய பெயர்?

ஓசை

  1. இசைக் கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படையாகும். மத்து+தளம்=மத்தளம் என்று ஆகியது எனக் கூறுபவர் யார்?

அடியார்க்குநல்லார்

  1. மத்தளம் இரண்டுகைகளாலும் இசைக்கப் படுவதால் இதனை எவ்வாறு அழைப்பர்?

முதற்கருவி

  1. “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத…”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

நாச்சியார் திருமொழி

  1. தமிழர்கள் போர் துணையாக கொண்ட கருவிகளில் முதன்மையானது எது?

முரசு

  1. எத்தனை வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன?

 படை முரசு, கொடை முரசு,மண முரசு

  1. தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல் எது?

சிலப்பதிகாரம்

  1. மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல் எது?

மதுரைக்காஞ்சி

  1. ஒரே முகத்தை உடைய முரசு வகையைச் சேர்ந்த இசைக் கருவி எது?

முழவு

  1. மண்ணமைமுழவு என எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

பொருநராற்றுப்படை

  1. “கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

  1. இருபத்தோரு நரம்புகளைக் கொண்ட யாழ் எது?

பேரியாழ்

  1. 19 நரம்புகள் கொண்ட  மீன் வடிவில் அமைந்த யாழ் எது?

மகர யாழ்

  1. 14 நரம்புகள் கொண்ட யாழ்?

சகோட யாழ்

  1. எத்தனை நரம்புகளைக் கொண்ட நரம்புக்கருவி வீணையாகும்?

ஏழு நரம்புகள்

  1. பரிவாதினி எனும் வீணை எந்த பல்லவ மன்னன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது?

மகேந்திரவர்மன்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page