TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. “கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

குமரகுருபரர்

  1. “கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

நீதிநெறி விளக்கம்

  1. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?

பதினேழாம் நூற்றாண்டு

  1. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?

கந்தர் கலிவெண்பா ,கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை ,மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் ,முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

  1. “கல்வி கரையில கற்பவர் நாள் சில ” என கூறும் நூல் எது?

நாலடியார்

  1. “கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு ” என்பது யாருடைய பாடல் வரிகள்?

ஆலங்குடி சோமு

  1. ஆலங்குடி சோமு எங்கு பிறந்தார்?

சிவகங்கை மாவட்டம் ஆலங்குடி

  1. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் என்ன விருது பெற்றார்?

கலைமாமணி

  1. “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல. அது மெய்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறையாகும்” எனக் கூறியவர்?

விஜயலட்சுமி பண்டிட்

  1. ஐநா அவையின் முதல் பெண் தலைவர் யார்?

விஜயலட்சுமி பண்டிட்

  1. “தமிழிலேயே கல்வி போதிக்க தமிழில் போதிய கலைகள் இல்லையே; சிறப்பான அறிவியல் கலைகள் இல்லையே என சிலர் கூக்குரலிடுகின்றனர்” எனக் கூறியவர் யார்? 

திரு.வி.க

  1. இயற்கை ஓவியம் என அழைக்கப்படுவது?

பத்துப்பாட்டு

  1. இயற்கை இன்பக்கலம் என அழைக்கப்படுவது?

கலித்தொகை

  1. இயற்கை வாழ்வில்லம் என அழைக்கப்படுவது?

 திருக்குறள்

  1. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படுவது?

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

  1. இயற்கை தவம் என அழைக்கப்படுவது?

 சிந்தாமணி

  1. இயற்கை பரிணாமம் என அழைக்கப்படுவது?

கம்பராமாயணம்

  1. இயற்கை அன்பு என அழைக்கப்படுவது?

பெரியபுராணம்

  1. இயற்கை இறையுறையுள் என அழைக்கப்படுவது எது?

தேவார திருவாசக வரிகள்

  1. “இயற்கை கழகத்தில் பயின்று பயின்று சங்கப்புலவர் இளங்கோ ,திருத்தக்கதேவர் ,திருஞானசம்மந்தர், ஆண்டாள் ,சேக்கிழார், கம்பர் ,பரஞ்சோதி முதலியோர் இயற்கை கோலத்தை எவ்வாறு எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கின்றனர் என ஆராயுங்கள்” எனக் கூறியவர் யார்?

திரு.வி.க

  1. “ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி ;ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி ;அது வளர்ச்சி வாயில் இவ்வரிகளை எழுதியவர் யார்?

குலோத்துங்கன்

  1. திரு வி க வின் இயற்பெயர் என்ன?

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்

  1. திரு வி க வின் சிறப்பு பெயர் என்ன? 

தமிழ்தென்றல்

  1. திரு.வி.க இயற்றிய நூல்கள் என்னென்ன?

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ,பெண்ணின்பெருமை ,தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல் ,முருகன் அல்லது அழகு,இளமை விருந்து

  1. ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு எனும் நூலை எழுதியவர் யார்?

பி.ச. குப்புசாமி

  1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்னும்  நூலை எழுதியவர் யார்?

பி.ச. குப்புசாமி


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page