DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST
[For best experience, use Chrome, Firefox, or Edge. Some features may not work in other browsers]
DOWNLOAD APP FROM PLAYSTORE —LOGIN–CLICK FREE COURSE–ENJOY THE TEST
6 தமிழ் | இன்பத்தமிழ்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- ஏற்றத்தாழ்வற்ற ——— அமைய வேண்டும்
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
- நாள்முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ——– ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
- நிலவு+ என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
- தமிழ்+ எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொவ்
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
- ‘அமுதென்று‘என்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
- செம்பயிர்‘என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
- வினைவுக்கு- பால்
- அறிவுக்கு- வேல்
- இளமைக்கு- நீர்
- புலவர்க்கு– தோள்
ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.) பேர் – நேர்
பேர் – நேர் அமுதென்று – நிலவென்று
பேர் – நீர் உயிருக்கு – விளைவுக்கு
பேர் – ஊர் இளமைக்கு – புலவர்க்கு
பால் – வேல் தமிழுக்கு – வாழ்வுக்கு
வான் – தேன் உயர்வுக்கு – அசதிக்கு
தோள் – வாள் அறிவுக்கு – கவிதைக்கு
6 தமிழ் | தமிழ்க்கும்மி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- தாய்மொழியில் படித்தால் —– அடையலாம்
அ) பன்மை
ஆ) மேன்மை
இ) பொறுமை
ஈ) சிறுமை
- தகவல்தொடர்பு முன்னேற்றத்தால் ———- சுருங்கிவிட்டது
அ) மேதினி
ஆ) நிலா
இ) வானம்
ஈ) காற்று
- ‘செந்தமிழ்‘என்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
- ‘பொய்யகற்றும்‘என்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) பொய் + அகற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஆ)பொய் + கற்றும்
ஈ)பொய் + யகற்றும்
- பாட்டு+ இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பாட்டிருக்கும்
ஆ) பாட்டுருக்கும்
இ) பாடிருக்கும்
ஈ) பாடியிருக்கும்
- எட்டு+ திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எட்டுத்திசை
ஆ) எட்டிதிசை
இ) எட்டுதிசை
ஈ) எட்டிஇசை
நயம் உணர்ந்து எழுதுக.
- பாடல்அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.
சீர்மோனை :
கொட்டுங்கடி – கோதையரே
எட்டுத்திசை – எட்டிடவே
ஊழி – ஊற்று
ஆழிப் – அழியாமல்
பொய் – பூண்டவரின்
மெய்புகட்டும் – மேதினி
- பாடல்அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோவ் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
அடிஎதுகை :
கொட்டுங்கடி – எட்டு
ஊழி – ஆழி
பொய் – மெய்
சீர் எதுகை :
எட்டுங்கடி – எட்டிடவே
ஆழி – அழியாமலே
- பாடல்அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
இயைபு :
கொட்டுங்கடி – கொட்டுங்கடி,
கொண்டதுவாம் – நின்றதுவாம்,
பாட்டிருக்கும் – காட்டிருக்கும்
6 தமிழ் | வளர்தமிழ்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- ‘தொன்மை‘என்னும்சொல்லின் பொருள்.
அ) புதுமை
ஆ) பழமை
இ) பெருமை
ஈ) சீர்மை
- ‘இடப்புறம்‘என்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…….
அ) இடன் + புறம்
ஆ) இடை + புறம்
இ) இடம் + புறம்
ஈ) இடப் + புறம்
- ‘சீரிளமை‘என்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) சிறு + இளமை
ஆ) சீர்மை + இளமை
இ) சீரி + இளமை
ஈ) சீற் + இளமை
- சிலம்பு+ அதிகாரம் என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சிலம்பதிகாரம்
இ) சிலம்புதிகாரம்
ஆ) சிலப்பதிகாரம்
ஈ) சில பதிகாரம்
- கணினி+ தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கணினிதமிழ்
ஆ) கணினித்தமிழ்
இ) கணிணிதமிழ்
ஈ) கனினிதமிழ்
- 6. ‘தமிழ்மொழிபோல்இனிதாவது எங்கும் காணோம்‘ என்று பாடியவர்
அ) கண்ணதாசன்
ஆ) பாரதியார்
இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்
- ‘மா‘என்னும்சொல்லின் பொருள்.
அ) மாடம்
ஆ) வானம்
இ) விலங்கு
ஈ) அம்மா
கோடிட்ட இடத்தை நிரப்புக.
- நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது.
மொழி
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்
தொல்காப்பியம்
- மொழியைக்கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
எண்களின்
6 தமிழ் | தமிழ் எழுத்துகளின் வகை தொகை
- பழமொழியின்சிறப்பு ——— சொல்வது
அ) விரிவாகச்
ஆ) சுருங்கச்
இ) பழைமையைச்
ஈ) பல மொழிகளில்
- நோயற்றவாழ்வைத் தருவது
சுத்தம்
- உடல்நலமே——– அடிப்படை
உழைப்புக்கு
- உழைத்துத்தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
உணவு, உடை. உறைவிடம்
- 5.பத்திக்குப்பொருத்தமான தலைப்புத் தருக.
சுத்தம்
பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக
- எங்கஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
எங்கள் பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
- பெற்றோரிடம்பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.
பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.