TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 06 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 06 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. ” பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக!” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

தகடூர் யாத்திரை

  1. தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தர்மபுரி

  1. பஞ்சம் ஏற்படும் காலங்களில் மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று உப்பில்லா சோற்றை வாங்கி பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர் .இதனை கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை இந்நிகழ்வுக்கு என்ன பெயர்?

மழைச்சோற்று நோன்பு

  1. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?

அ.கௌரன்

  1. “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு”எனக் கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

  1. மூவேந்தர்களின் எந்த மரபினர் பழமையானவர்கள்?

சேரர்கள்

  1. “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது? 

தொல்காப்பியம்

  1. சேரர்களின் நாடு என்ன நாடாக அறியப்பட்டது?

குடநாடு

  1. சேரர்களின் தலைநகராக விளங்கிய நகரம் எது?

வஞ்சி /கருவூர்

  1. சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்களாக விளங்கிய நகரங்கள் எவை?

தொண்டி, முசிறி ,காந்தளூர்

  1. சேரர்களின் கொடி மற்றும் பூ எது?

வில்கொடி ,பனம் பூ

  1. பண்டைய சேர நாடு என்பது இன்றைய எந்தெந்த பகுதிகளை இணைத்து வழங்கியதாக கூறுவார்கள்?

கேரளப்பகுதிகள், தமிழ்நாட்டின் சேலம் ,கோவை மாவட்டங்கள்

  1. எந்த நூலில் கொங்கு மண்டலம் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி மலை ,மேற்கே வெள்ளி மலை, கிழக்கே மதிற்க்கரை என நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக விளங்கியதாக கூறுகிறது?

கொங்கு மண்டல சதகம்

  1. கொங்கு மண்டல சதகம் எனும் நூலை இயற்றியவர் யார்?

கார்மேக கவிஞர்

  1. கொங்கு மண்டலத்தின் இன்றைய பகுதிகள் என்னென்ன?

 நீலகிரி, கோயம்புத்தூர் ,திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் சேலம்,கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது

  1. கொங்கு நாட்டுப் பகுதியை என்ன ஆறுகள் வளம் செழிக்க செய்தன?

பவானி ,காவிரி ,நொய்யல் ,ஆண்பொருநை என அழைக்கப்படும் அமராவதி

  1. கடம்பர் இன கடற் கொள்ளையர்களை அடக்கிய மன்னர்கள் யார்?

சேரமன்னர்கள்

  1. “களம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

  1. “நெல்லும் உப்பும் நேரே ஊரீர் ” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

அகநானூறு

  1. தேயிலை தொழிற்சாலைகள் ,புகைப்படச் சுருள் தயாரிப்பு தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை ,தைலமரம் எண்ணெய் தொழிற்சாலை முதலியவை எந்த பகுதியில் உள்ளன?

நீலகிரி

  1. பஞ்சாலைகள், நூற்பாலைகள் ,மின்சார பொருட்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எந்த மாவட்டத்தில் உள்ளன?

கோயம்புத்தூர்

  1. தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படுவது எது?

திண்டுக்கல்

  1. சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவை?

திண்டுக்கல்

  1. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது எது?

ஈரோடு

  1. தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம் எது?

ஈரோடு

  1. பின்னலாடை நகரம் என அழைக்கப்படுவது எது?

திருப்பூர்

  1. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா எது?

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா

  1. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா எங்கு உள்ளது?

 திருப்பூர்

  1. முட்டைக் கோழி வளர்ப்பிலும் ,முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதன்மையான இடம் எது?

நாமக்கல்

  1. மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட நகரம் எது?

சேலம்

  1. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது?

 சேலம்

  1. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது?

சேலம்

  1. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது எது?

ஏற்காடு

  1. முத்து நகரம் என அழைக்கப்படுவது?

தூத்துக்குடி

  1. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது?

சிவகாசி

  1. தூங்கா நகரம் என அழைக்கப்படுவது?

மதுரை

  1. தீப நகரம் என அழைக்கப்படுவது?

திருவண்ணாமலை

  1. வஞ்சிமாநகரம் என அழைக்கப்படும் ஊர் எது?

கரூர்

  1. கரூரை தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டுள்ளவர் யார்?

கிரேக்க அறிஞர் தாலமி

  1. பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் ஊர் எது?

 கரூர்

  1. சீரங்கராயன் சிவக்குமார் எங்கு பிறந்தார்?

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடி

  1. சீரங்கராயன் சிவகுமார் பெற்ற விருதுகள் என்னென்ன? சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருது
  2. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?

 கன்னிவாடி , குணச்சித்திரங்கள், உப்புக்கடலை குடிக்கும் பூனை


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 06 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page