TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- தந்தை பெரியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ், வைக்கம் வீரர், ஈரோட்டு சிங்கம், புத்துலக தொலைநோக்காளர், பெண்ணின போர் முரசு,சுயமரியாதை சுடர் ,பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தர்
- எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு?எப்படி? என்ற வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதற்கு பெயர் என்ன?
பகுத்தறிவு
- “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது.மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களில் இழிவுபடுத்துகிறது.அந்த சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என கூறியவர் யார்?
தந்தை பெரியார்
- “கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும் சுயமரியாதை உணர்ச்சியையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கு ஏற்ற தொழில் செய்யவும் அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என கூறியவர்?
தந்தை பெரியார்
- “அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத்தரக் கூடாது .தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” எனக் கூறியவர்?
பெரியார்
- “ஒரு மொழியின் தேவை என்பது ,அதன் பயன்பாட்டு முறையை கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும்.இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்” என கூறியவர் யார்?
தந்தை பெரியார்
- “மொழி என்பது உலகின் போட்டி ,போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும் எனக் கூறியவர் யார்?
தந்தை பெரியார்
- உயிரெழுத்துக்களில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனையும் ‘அவ்’ எனவும் சீரமைத்தவர் யார்?
தந்தை பெரியார்
- “மெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்களை குறைப்பதன் வாயிலாக தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும்,அவ்வாறு குறைப்பதால் தமிழ்மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும்” என கூறியவர் யார்?
தந்தை பெரியார்
- பெரியாரின் எழுத்துச் சீரமைப்பு கருத்தின் சில கூறுகளை எந்த ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது?
1978
- “பொருளாதாரத் தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தை கடைபிடிப்பது கட்டாயம்” எனக் கூறியவர்?
பெரியார்
- எங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா. வுக்கு பெரியார் எனும் பட்டம் வழங்கப்பட்டது?
சென்னை
- எப்போது ஈ.வெ.ரா.வுக்கு “பெரியார்” என பட்டம் வழங்கப்பட்டது?
நவம்பர் 13,1938
- எப்போது யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியாரை ‘தெற்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்’ எனப் பாராட்டியது?
27.06.1970
- சுயமரியாதை இயக்கம் பெரியாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1925
- பெரியார் நடத்திய இதழ்கள் என்னென்ன?
குடியரசு ,விடுதலை ,உண்மை ,ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
- “தொண்டு செய்து பழுத்த பழம் ” என பெரியாரை பாடியவர்?
புரட்சிக்கவி பாரதிதாசன்
- “முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி” எனக் கூறியவர் யார்?
ந.பிச்சமூர்த்தி
- “இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்காண மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்” என கூறியவர் யார்?
வல்லிக்கண்ணன்
- “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலை எழுதியவர் யார்?
வல்லிக்கண்ணன்
- பாரதியாரின் வசன கவிதையை தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் யார்?
ந.பிச்சமூர்த்தி
- புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
ந.பிச்சமூர்த்தி
- புதுக்கவிதையை வேறு என்னென்ன பெயர்களில் குறிப்பிடுகின்றனர்?
இலகு கவிதை, கட்டற்ற கவிதை ,விலங்குகள் இலாக் கவிதை ,கட்டுக்குள் அடங்காக் கவிதை
- ந.பிச்சமூர்த்தி தொடக்க காலங்களில் என்னவாக பணியாற்றினார்?
வழக்குரைஞர் மற்றும் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு துறை அலுவலர்
- ந.பிச்சமூர்த்தி என்ன இதழ்களில் துணையாசிரியராகப் பணியாற்றினார்?
ஹனுமான், நவ இந்தியா
- ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது?
ஸயன்ஸூக்கு பலி
- ந.பிச்சமூர்த்தி எந்த ஆண்டு கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றார்?
1932
- ந.பிச்சமூர்த்தி என்னென்ன புனைபெயர்களில் படைப்புகளை எழுதியுள்ளார்?
பிஷு, ரேவதி
- லாவோட்சு சீனாவில் எந்த நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்தவர்?
கி.மு இரண்டாம் நூற்றாண்டு
- லாவோட்சுவின் சம காலத்தவர் யார்?
கன்ஃபூசியஸ்
- யாருடைய காலம் சீன சிந்தனையின் பொற்காலமாக திகழ்ந்தது?
லாவோட்சு
- ஒழுக்கத்தை மையமாக வைத்து சிந்தித்தவர் யார்?
கன்பூசியஸ்
- தாவோ தே ஜிங் எனும் லா வோட்சு கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர்?
சி.மணி
- “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக” எனக் கூறும் நூல் எது?
யசோதர காவியம்
- யசோதர காவியம் எந்த மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றது?
வடமொழி
- யசோதரக் காவியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
அவந்தி நாட்டு மன்னன் ,யசோதரன்
- யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டுள்ளது?
5 சருக்கங்கள்
- யசோதர காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
320 அல்லது 330 பாடல்கள்
- “தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்” என கூறியவர்?
திருவள்ளுவர்
- கடித வடிவில் இலக்கியங்களைப் படைத்துள்ளவர்கள் யார்?
தாகூர் ,நேரு,டி.கே.சி,வல்லிக்கண்ணன்,பேரறிஞர் அண்ணா , மு.வரதராசனார்,கு. அழகிரிசாமி ,கி.இராஜநாராயணன்
- பெரியாரின் சிந்தனைகள் என்னும் நூலின் ஆசிரியர்?
வே .ஆனைமுத்து
- அஞ்சல் தலைகளின் கதை எனும் நூலினை எழுதிய ஆசிரியர் யார்?
எஸ்.பி. சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு – வீ.மு.சாம்பசிவன்)
- தம்பிக்கு என கடிதம் எழுதுபவர்?
அறிஞர் அண்ணா
- தங்கைக்கு என கடிதம் எழுதுபவர்?
மு.வரதராசன்