TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”என கூறியவர்?

 கணியன் பூங்குன்றனார், புறநானூறு

  1. “நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமொன்று” எனக் கூறியவர்?

இலத்தீன் புலவர் தெறென்ஸ்

  1. முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என கூறியவர்?

கோர்டன் ஆல்போர்ட்

  1. “பூட்கையில்லோன் யாக்கை போல” எனக் கூறும் நூல்?

புறநானூறு, கூறியவர் ஆலத்தூர்கிழார்

  1. லாவோட்சு எப்போது பிறந்தார்?

கி.மு.604

  1. கன்பூசியசின் காலம் என்ன?

கி.மு 551-479

  1. “விந்திய மலைத் தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது?

கரும பூமி

  1. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலக மேதை  யார்?

ஆல்பர்ட் சுவைட்சர்

  1. “இத்தகைய உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என திருக்குறளை பற்றி கூறியவர் யார்?

ஆல்பர்ட் சுவைட்சர்

  1. “படுதிரை வையம் பாத்திய பண்பே”-என நிலத்தைப் பிரித்து முறை பற்றி கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

  1. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறிவிலை வணிகன் ஆய் அலன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

  1. “உண்டாலம்ம இவ்வுலகம்” எனக்கூறும் நூல் எது?

புறப்பாட்டு

  1. 1966ம் ஆண்டு எங்கு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?

கோலாலம்பூர்,மலேசியா

  1. சென்னையில் எப்போது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?

1968

  1. மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?

பாரிஸ் ,பிரான்ஸ் 1970

  1. யாழ்ப்பாணத்தில் எப்போது உலக தமிழ் மாநாடு நடைபெற்றது?

1974

  1. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எப்போது நடைபெற்றது?

மதுரை 1981

  1. 1987 எங்கு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?

கோலாலம்பூர் மலேசியா

  1. மொரீசியசில் எந்த ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?

1989

  1. இறுதியாக நடந்த உலகத் தமிழ் மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?

தஞ்சாவூர் 1995

  1. செம்மொழி மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?

2010 ,கோவை

  1. “பண்புடைமையாவது யாவர் மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் விருப்பத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை” எனக் கூறியவர் யார்?

பரிப்பெருமாள்

  1. “இமயத்துக் கோடு உயர்ந்தன்ன”எனக் கூறும் நூல் எது?

 புறநானூறு

  1. “இமையத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை “எனக் கூறும் நூல் எது?

புறநானூறு

  1. “உலகில் ஒற்றுமை உண்டு என்றும், மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் என்றும், எல்லா ஒரே குலத்தவர் என்றும், எல்லா உயிர்களும் தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளன” என்றும் கற்பித்தவர்கள் யார்?

ஸ்டாயிக்வாதிகள்

  1. “எல்லாருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்” எனக் கூறிய தத்துவஞானி யார்?

செனக்கா

  1. “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்” எனக் கூறியவர் யார்?

மார்க்ஸ் அரேலியஸ்

  1. உலகத் தமிழ் ஆய்வு மன்றம் உருவாகவும்ம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார்?

தனிநாயகம் அடிகள்

  1. தனிநாயகம் அடிகள் தொடங்கிய இதழ் எது?

தமிழ்ப் பண்பாடு

  1. கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?

கல்யாணசுந்தரம்

  1. கல்யாணசுந்தரம் என்ன பெயரில் கதை இலக்கியப் பங்களிப்பு செய்து வருகிறார்?

வண்ணதாசன்

  1. வண்ணதாசனின் கவிதை நூல்கள் என்னென்ன?

புலரி, முன்பின், ஆதி ,அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு

  1. வண்ணதாசன் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் என்ன?

அகமும் புறமும்

  1. வண்ணதாசனின் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு என்ன பெயரில் வெளிவந்துள்ளது?

சில இறகுகள் சில பறவைகள்

  1. வண்ணதாசனின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?

கலைக்க முடியாத ஒப்பனைகள் ,தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது

  1. வண்ணதாசனுக்கு எந்த சிறுகதைத் தொகுப்பிற்காக 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது?

ஒரு சிறு இசை

  1. “இந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? ” இந்த ஹைக்கூ கவிதை எழுதியவர்?

 அமுதோன்

  1. “பிம்பங்கள் அற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்”இந்த ஹைக்கூ கவிதை எழுதியவர்?

நா.முத்துக்குமார்

  1. “வெட்டுக்கிளியின் சப்தத்தில் மலையின் மௌனம் ஒரு கணம் அசைந்து திரும்புகிறது”இந்த ஹைக்கூ கவிதை எழுதியவர்?

ஜப்பானியக் கவிஞர் பாஷோ

  1. “நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

குறுந்தொகை

  1. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

401 பாடல்கள்

  1. குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?

சௌரிப்பெருமாள் அரங்கனார், 1915

  1. பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபை சேர்ந்த மன்னர்?

 சேர மரபு

  1. என்‌ கதைகளின் கதைகள் எனும் நூலை எழுதியவர் யார்?

 சு.சமுத்திரம்

  1. சு.சமுத்திரம் எங்கு பிறந்தார்?

 திப்பணம்பட்டி , திருநெல்வேலி மாவட்டம்

  1. சு.சமுத்திரம் புகழ்பெற்ற சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?

வாடாமல்லி ,பாலைப் புறா, மண் சுமை ,தலைப்பாகை ,காகித உறவு

  1. சு.சமுத்திரத்தின் எந்த நூல் சாகித்திய அகடமி விருதை வென்றுள்ளது?

வேரில் பழுத்த பலா

  1. சு.சமுத்திரத்தின் எந்த சிறுகதை தொகுதி தமிழக அரசின் பரிசை வென்றுள்ளது?

குற்றம் பார்க்கில்

  1. “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்” என பாடியவர்?

வள்ளலார்

  1. சிற்பியின் மகள் நூலின் ஆசிரியர்?

பூவண்ணன்

  1. அப்பா சிறுவனாக இருந்தபோது என்ற நூலின் ஆசிரியர்?

அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் நா.முகமது செரீபு)          

  1. ‘கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாவன” எனக் குறிப்பிடும் நூல் எது?

திவாகர நிகண்டு

  1. சிற்பக்கலை குறித்த குறிப்புகள் வேறு எந்த நூலில் காணப்படுகின்றன?

மணிமேகலை, தொல்காப்பியம்

  1. சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்? அவை என்னென்ன?

இரண்டு வகை :முழு உருவ சிற்பங்கள் ,புடைப்பு சிற்பங்கள் 

  1. எத்தனை நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன?

நான்கு தெய்வ உருவங்கள் ,இயற்கை உருவங்கள் ,கற்பனை உருவங்கள், முழு வடிவ (பிரதிமை)உருவங்கள்

  1. சிப்பிகளை வேறு எவ்வாறு அழைத்து சிறப்பிக்கின்றனர்?

கற்கவிஞர்கள்

  1. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகள் நடப்படும் இச்செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்

  1. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை( சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூல் மூலம் அறியமுடிகிறது

மணிமேகலை

  1. பல்லவர் கால சிற்பக்கலைக்கு எந்த சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும்?

மாமல்லபுர சிற்பங்கள்

  1. யார் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன?

பல்லவர் காலம்

  1. பாண்டியர் காலக் சிற்ப வேலைபாடுகளை எங்கு காணலாம்?

திருமயம், பிள்ளையார்பட்டி ,குன்றக்குடி ,திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில்

  1. கற்சிற்பங்கள் அமைக்கும் கலை யாருடைய காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது?

சோழர்காலம்

  1. முதலாம் ராஜராஜசோழன் கட்டிய கோவில் எது?  

தஞ்சை பெரிய கோவில்

  1. முதலாம் ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவில் எது?  

கங்கை கொண்ட சோழபுரம் 

  1. இரண்டாம் இராசராசன் எழுப்பிய கோவில் எது?

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்

  1. மூன்றாம் குலோத்துங்க சோழன் அமைத்த கோவில் எது?

திரிபுவன வீரேஸ்வரம் கோவில்

  1. தஞ்சை பெரிய கோவிலில் காணப்படுகின்ற வாயில் காவலர் உருவங்கள் எத்தனை அடி உயரம் கொண்டவை?  

14 அடி

  1. எங்கு ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுக கிணறும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்களும் குறிப்பிடத்தக்கன?

கங்கைகொண்ட சோழபுரம்

  1. கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டவை?   

இரண்டாம் பராந்தக சோழன்

  1. நடன முத்திரைகளுடன் கூடிய சிற்பங்கள் காணப்படும் இடமான நார்த்தாமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?  

புதுக்கோட்டை மாவட்டம்

  1. குரங்கநாதர் கோவில் எங்கு அமைந்துள்ளன?

சீனிவாசநல்லூர்,திருச்சிராப்பள்ளி மாவட்டம்

  1. யாருடைய காலத்தில் மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவாக்கப்பட்டன?

சோழர்காலம்

  1. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படுவது யாருடைய காலம்?  

சோழர் காலம்

  1. யாருடைய காலத்தில் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப்பட்டன?  

விஜயநகர அரசு  

  1. தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி எங்கு நடத்தி வருகிறது?  

மாமல்லபுரம்

  1. உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் எங்கு அமைந்துள்ளன?  

சுவாமிமலை ,கும்பகோணம் ,மதுரை

  1. சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எந்த நூலை வெளியிட்டுள்ளது?  

சிற்ப செந்நூல்

  1. நாயக்கர் கால சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன?

 மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேஸ்வரம் பெருங்கோவில் ,திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்,திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பெருமாள் கோவில், பேரூர் சிவன் கோவில்

  1. எந்த கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிற்பக்கலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு என கூறப்படுகிறது?

பேரூர் சிவன் கோவில்

  1. ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக எங்கு செதுக்கப்பட்டுள்ளன?

திருநாதர் குன்று, விழுப்புரம் மாவட்டம்

  1. ராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சி பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என கூறியவர் யார்?

பேரறிஞர் அண்ணா

  1. இராவண காவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது?

ஐந்து காண்டங்கள்

  1. இராவண காவியத்தின் ஐந்து காண்டங்கள் என்னென்ன?  

தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம் ,பழிபுரி காண்டம்,மதுரைக் காண்டம் ,போர் காண்டம்

  1. இராவண காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

3100 பாடல்கள் 

  1. ராவண காவியம் யாரால் இயற்றப்பட்டது?

புலவர் குழந்தை

  1. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்?  

புலவர் குழந்தை

  1. புலவர் குழந்தை எழுதிய வேறு நூல்கள் என்னென்ன?  

யாப்பதிகாரம் ,தொடையதிகாரம் மேலும் 30க்கும் மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்கள்

  1. “மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்

நாச்சியார் திருமொழி

  1. பெண்ணின் திருமண வயது எவ்வளவு?

18 

  1. ஆணின் திருமண வயது எவ்வளவு?

21

  1. திருமாலை வழிபட்டு சிறப்பு நிலையை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர்?

பன்னிருவர்

  1. சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப் பெற்றவர் யார்?

ஆண்டாள்

  1. ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?  

பெரியாழ்வார்

  1. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நாலாயிர திவ்ய பிரபந்தம் 

  1. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகக் கூறப்படுபவை?  

திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி

  1. நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?  

143 பாடல்கள்

  1. செய்தி எனும் சிறுகதையை எழுதியவர் யார்?

தி.ஜானகிராமன்

  1. 4 சாகித்திய அகடமி விருது பெற்ற கதைகள் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பிடுக:

1970- அன்பளிப்பு (சிறுகதைகள்) அழகிரிசாமி 

  1. 1979– சக்தி வைத்தியம் (சிறுகதைத்தொகுப்பு) தி.ஜானகிராமன்
  2. 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத்தொகுப்பு) ஆதவன் 
  3. 1996 – அப்பாவின் சினேகிதர் (சிறுகதைத்தொகுப்பு ) அசோகமித்திரன்
  4. 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள் ) மேலாண்மை பொன்னுசாமி
  5. 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) நாஞ்சில்நாடன்
  6. 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) வண்ணதாசன் 
  7. “சிறுகதை என்றால் சிறிய கதை கொஞ்சம் பக்கங்களில் முடிந்துவிடுவது என்பதல்ல சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எழுதப்படும் பொருள் பற்றியது” எனக் கூறியவர்?

புதுமைப்பித்தன்

  1. தி. ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயண அனுபவங்களை எந்த தலைப்பில், எந்த வார இதழில் எழுதினார்?  

உதயசூரியன் ,சுதேசமித்திரன் வார இதழ்

  1. உதய சூரியன் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட அனுபவங்கள்   நூலாக வெளியிடப்பட்டது எப்போது?  

1967

  1. தி.ஜானகிராமன் ரோம் ,செக்கோஸ்லோவாகியா சென்ற அனுபவங்களை எந்த தலைப்பில் 1974ல் நூலாக வெளியிட்டார்?  

கருங்கடலும் கலைக்கடலும்

  1. தி.ஜானகிராமன் தமது காவிரிக்கரை வழியான பயணத்தை என்ன தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்?

நடந்தாய் வாழி காவேரி

  1. 5தி.ஜானகிராமன் எழுதிய வேறு நூல்கள் என்னென்ன?

பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல்

  1. தி.ஜானகிராமன் எழுதிய கதைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்தன?

மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள் ,சுதேசமித்திரன் ,ஆனந்தவிகடன், கல்கி

  1. “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” எனும் கோட்பாட்டை கொண்டவர் யார்?

தி.ஜானகிராமன்

  1. செய்தி எனும் சிறுகதை எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

சிவப்பு ரிக்க்ஷா

  1. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் எனும் நூலில் எந்தக் கருவி கூறப்படவில்லை?  

நாகஸ்வரம் 

  1. நாகசுரக் கருவி எந்த மரத்தில் செய்யப்படுகிறது?

ஆச்சாமரம்

  1. நாகஸ்வரத்தின் மேற்பகுதியில் பொருத்தப்படும் கருவியின் பெயர் என்ன?  

சீவாளி

  1. சீவாளி எந்த புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது?

நாணல்

  1. நட்பு காலம் எனும் நூலின் ஆசிரியர்?

கவிஞர் அறிவுமதி 

  1. திருக்குறள்கதைகள் நூலின் ஆசிரியர்?

கிருபானந்தவாரியார் 

  1. கையா, உலகே ஒரு உயிர் -நூலின் ஆசிரியர்?-

ஜேம்ஸ் லவ்லாக், தமிழில் மொழிபெயர்த்தவர் சா. சுரேஷ்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page