TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

முத்துலட்சுமி

  1. முத்துலட்சுமியின் காலம் என்ன?

1886-1968

  1. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்

முத்துலட்சுமி

  1. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் மற்றும் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?

முத்துலட்சுமி

  1. முத்துலட்சுமி அவர்கள் என்னென்ன சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார்?

தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ,இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண தடை சட்டம்

  1. அடையாற்றில் ஔவை இல்லத்தை நிறுவியவர் யார்?

முத்துலட்சுமி

  1. எந்த ஆண்டு ஔவை இல்லம் நிறுவப்பட்டது ?

1930

  1. எந்த ஆண்டு புற்றுநோய் மருத்துவமனை அடையாற்றில் நிறுவப்பட்டது?

1952

  1. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையை முடக்க எழுந்தவர் யார்

தந்தை பெரியார்

  1. விடியாத பெண்ணாலே என்கின்ற கேலியனை மிதித்து தொலைத்தவர் யார்

பாரதியார்

  1. பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீருமோ என முழக்கம் செய்தவர் யார்?

பாரதிதாசன்

  1. பண்டித ராமாபாயின் காலம் என்ன?

  1858-1922

  1. ஹன்டர் குழு எந்த ஆண்டு பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது?

 1882

  1. ஹண்டர் குழு அறிவிப்பின்படி முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கியவர்கள்?

ஜோதிபா பூலே சாவித்திரிபாய் பூலே

  1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் காலகட்டம் என்ன?

 1883-1962

  1. மூவலூர் ராமாமிர்தம் எந்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார்?

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

  1. எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரால் வழங்கப்படுகிறது?

 மூவலூர் ராமாமிர்தம்

  1. தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்?

ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

  1. ஐடாஸ் சோபியா ஸ்கட்டரின் காலம் என்ன?

1870-1960

  1. நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?

சாவித்திரி பாய் பூலே

  1. எந்த ஆண்டு பெண்களுக்கான தனிப்பள்ளி தொடங்கப்பட்டது?

1848

  1. சாவித்திரி பாய் பூலேயின் காலக் கட்டம் என்ன?

1831-1897

  1. பாகிஸ்தானில் பெண் கல்வி வேண்டுமென போராட்ட களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?

 12

  1. ஈவேரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பெண்களின் எந்த கல்விக்கு உரியது?

பட்டமேற்படிப்பு

  1. நீலாம்பிகை அம்மையார் யாருடைய மகள்?

 மறைமலை அடிகள்

  1. நீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள் என்னென்ன?

தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை ,முப்பெண்மணிகள் வரலாறு ,பட்டினத்தார் பாராட்டிய மூவர்

  1. கோத்தாரிக் கல்விக் குழு எந்த ஆண்டு அனைத்து நிலைகளிலும் மகளிர் கல்வியை பரிந்துரைத்தது?

1964

  1. எந்த ஆண்டு குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது?

1929

  1. ஈ.த. ராஜேஸ்வரி அம்மையாரின் காலம் என்ன?

1906- 1955

  1. ஈ.த. ராஜேஸ்வரி எழுதிய நூல்கள் என்னென்ன?

சூரியன், பரமாணுப்புராணம்

  1. “கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்” எனக் கூறியவர்?

பாரதிதாசன்

  1. குடும்ப விளக்கு என்னும் நூலை இயற்றியவர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன்

  1. குடும்ப விளக்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

ஐந்து பகுதிகள்

  1. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

கனகசுப்புரத்தினம்

  1. பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?

பாண்டியன் பரிசு அழகின் சிரிப்பு இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்

  1. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம கூறியவர்?

பாரதி

  1. ” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ” கூறியவர்?

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

  1. “பெண்ணில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது” கூறியவர்?

பாவேந்தர் பாரதிதாசன்

  1. “மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 சிறுபஞ்சமூலம்

  1. சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?

 ஐந்து சிறிய வேர்கள்

  1. சிறுபஞ்சமூலம் என்னென்ன வேர்களைக் கொண்டுள்ளது?

கண்டங்கத்திரி சிறுவழுதுணை சிறுமல்லி பெருமல்லி நெருஞ்சி

  1. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்

காரியாசன்

  1. காரியாசன் யாருடைய மாணாக்கர்

மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின்

  1. காரியாசன் இயற்பெயர் என்ன

காரி

  1. காரியாசானை பாயிரச் செய்யுள் எவ்வாறு சிறப்பிக்கிறது

மாக்காரியாசன்

  1. எத்தனை வயதிற்குள் சொற்பொழிவு ஆற்றவும் பாடவும் ஆற்றல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்

10

  1. பாரதியார் எத்தனை வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி எனும் பட்டம் பெற்றார்

பதினோரு வயது

  1. 15வது வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியவர் யார்

விக்டர் ஹ்யூகோ

  1. மாவீரன் அலெக்சாண்டர் தனது தந்தையின் போர்ப்படையில் எப்போது தளபதியானார்

16 வயது

  1. பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் விளக்கு ஊசலாடுவது குறித்து கலிலியோ தனது எத்தனையாவது வயதில் ஆராய்ந்தார்?

17

  1. “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் ” எனக் கூறியவர்?

ஆபிரகாம் லிங்கன்

  1. 2009ஆம் ஆண்டு நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட எத்தனை ரூபாய் நாணயத்தை வெளியிட்டது?

 ஐந்து ரூபாய்

  1. எந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது?

2010

  1. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு எனக் கூறியவர்?

அண்ணா

  1. கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும் கூறியவர்?

அறிஞர் அண்ணா

  1. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் எனக் கூறியவர்?

அறிஞர் அண்ணா

  1. சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என கூறியவர்?

அறிஞர் அண்ணா

  1. மக்களின் மதியை கெடுக்கும் ஏடுகள் நமக்கு தேவையில்லை தமிழரை தட்டியெழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பை பெருக்கும் நூல்கள் தேவை எனக் கூறியவர்?

பேரறிஞர் அண்ணா

  1. நல்ல வரலாறுகளை படித்தால் தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் எனக் கூறியவர்?

பேரறிஞர் அண்ணா

  1. இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என கூறியவர்?

பேரறிஞர் அண்ணா

  1. இளைஞர்கள் உரிமைப் போர் படையின் ஈட்டி முனைகள் எனக்கூறியவர்?

 பேரறிஞர் அண்ணா

  1. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என கூறியவர்?

அறிஞர் அண்ணா

  1. நமக்கு உண்மை உலகை காட்ட நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கு ஒரு திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும் என கூறியவர்?

 அறிஞர் அண்ணா

  1. தென்னகத்து பெர்னாட்ஷா என அழைக்கப்பட்டவர் யார்? பேரறிஞர் அண்ணா
  2. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், இன்ப ஒளி முதலியன யாருடைய படைப்புகள்?

பேரறிஞர் அண்ணா

  1. எந்த ஆண்டு அண்ணா சென்னை பெத்தநாயக்கன்பேட் டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்?

 1935

  1. அறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்?

 ஹோம்ரூல் ஹோம்லேண்ட் நம்நாடு திராவிடநாடு மாலை மணி காஞ்சி

  1. அறிஞர் அண்ணா எந்த இதழ்களின் துணையாசிரியராக இருந்தார்?

குடியரசு விடுதலை

  1. அண்ணாவின் சிறுகதை திறன் என்ற நூலை எழுதியவர்?

முனைவர் பெ குமார்

  1. சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றியவர்?

அறிஞர் அண்ணா

  1. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்கு உரியது?

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்

  1. உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது?

கன்னிமரா நூலகம்

  1. கன்னிமாரா நூலகம் எங்கு அமைந்துள்ளது?

சென்னை எழும்பூர்

  1. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது?

திருவனந்தபுரம் நடுவன் நூலகம்

  1. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது?

கொல்கத்தா தேசிய நூலகம்

  1. கொல்கத்தா தேசிய நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1836

  1. கொல்கத்தா தேசிய நூலகம் எந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது?

1953

  1. உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைப் பெற்றிருப்பது?

அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்

  1. “வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும்” என கூறியவர்?

 அறிஞர் அண்ணா

  1. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே எனக் கூறுவது?

 கதே

  1. ஓய்ந்திருக்கலாகாது கல்வி சிறுகதைகள் தொகுத்தவர்?

அரசி ஆதி வள்ளியப்பன்

  1. முதல் ஆசிரியர் நூலின் ஆசிரியர்?

சிங்கிஸ் ஐத்மாத்தவ்

  1. கல்வியில் நாடகம் நூலின் ஆசிரியர்?

பிரளயன்

  1. கரும்பலகை யுத்தம் என்ற நூலின் ஆசிரியர்?

மலாலா


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page