TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இலக்கணம் QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இலக்கணம் QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எந்த 4 இடங்களில் ஒன்றில் பொருந்தி எழுத்துக்கள் பிறக்க காரணமாக அமைகிறது?

மார்பு ,தலை, கழுத்து, மூக்கு

  1. எந்த உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு மொழிகளாக எழுத்துகள் பிறக்கின்றன?

இதழ்,நாக்கு,பல்,மேல்வாய்

  1. எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகையாக பிரிப்பர்?

இரண்டு :இடப்பிறப்பு ,முயற்சி பிறப்பு

  1. உயிர் எழுத்துக்கள் 12 எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

 கழுத்து

  1. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் எதனை இடமாக கொண்டு பிறக்கின்றன?

மார்பு

  1. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

 மூக்கு

  1. இடையின மெய் எழுத்துகள் ஆறும் எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

கழுத்து

  1. ஆயுத எழுத்து எதனை இடமாகக் கொண்டு பிறக்கிறது?

தலை

  1. எந்த உயிரெழுத்துக்கள் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன?

அ,ஆ

  1. எந்த உயிர் எழுத்துக்கள் ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல் வாய்ப்பல்லை பொருந்தும் முயற்சியில் பிறக்கின்றன?

 இ,ஈ,எ,ஏ,ஐ

  1. எந்த உயிர் எழுத்துக்கள் ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கின்றன?

உ,ஊ,ஒ,ஓ,ஔ

  1. எந்த மெய்யெழுத்துக்கள் நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன?

க்,ங்

  1. எந்த மெய்யெழுத்துக்கள் நாவின் இடைப்பகுதி நடு அண்ணத்தின் இடைப் பகுதியை பொருந்துவதால் பிறக்கின்றன?

ச்,ஞ்

  1. எந்த மெய் எழுத்துக்கள் நாவின் நுனி அண்ணத்தின் நுனியை பொருந்துவதால் பிறக்கின்றன?

ட்,ண்

  1. எந்த மெய்யெழுத்துக்கள் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன?

த்,ந்

  1. எந்த மெய்யெழுத்துக்கள் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன?

ப்,ம்

  1. நாக்கின் அடிப் பகுதியில் மேல் வாய் அடிப்பகுதியை பொருந்துவதால் எந்த மெய் எழுத்து பிறக்கிறது?

ய்

  1. எந்த மெய் எழுத்துக்கள் மேல் வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன?

ர்,ழ்

  1. எந்த மெய் எழுத்துக்கள் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது?

ல்

  1. எந்த மெய்யெழுத்து மேல்வாயை நாக்கின் ஓரங்களில் தடித்து தடவுதலால் பிறக்கிறது?

 ள்

  1. எந்த மெய் எழுத்து மேல் வாய் பல்லை கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது?

வ்

  1. எந்த மெய் எழுத்துக்கள் மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன?

ற்,ன்

  1. வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கும் சார்பெழுத்து எது?

 ஆய்த எழுத்து      

  1. செயல் வேறு எவ்வாறு குறிப்பிடப்படும்?

 வினை

  1. ஒன்றன் செயலை குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

வினைச்சொல்

  1. பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

 முற்று வினை அல்லது வினைமுற்று

  1. வினைமுற்று எந்தெந்த இடங்களில் வரும்?

 ஐந்து பால் ,மூன்று காலம் ,மூன்று இடம் ஆகிய அனைத்தும் வரும்  

  1. வினைமுற்று எத்தனை வகைப்படும்?

 இரண்டு வகை :தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று

  1. ஒரு செயல் நடைபெறுவதற்கு எந்த ஆறும் முதன்மையானவை?

செய்பவர், கருவி ,நிலம், செயல் ,காலம் ,செய்பொருள்

  1. ஒரு செயல் நடைபெறுவதற்குரிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது என்ன வினைமுற்று?

தெரிநிலை வினைமுற்று

  1. பொருள், இடம், காலம், சினை ,குணம் ,தொழில் ஆகியவற்றில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது ,செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று எவ்வாறு அழைக்கப்படும்?

 குறிப்பு வினைமுற்று

  1. தெரிநிலை குறிப்பு வினைமுற்றுக்கள் அன்றி வேறு என்ன வகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு?

வியங்கோள் வினைமுற்று, ஏவல் வினைமுற்று

  1. தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலை செய்யுமாறு ஏவும் வினைமுற்று எவ்வாறு அழைக்கப்படும்?

 ஏவல் வினைமுற்று

  1. ஏவல் வினைமுற்று எத்தனை வகைகளில் வரும்?

ஒருமை ,பன்மை

  1. வியங்கோள் வினைமுற்று என்னென்ன பொருள்களில் வரும்?

வாழ்த்துதல், வைதல் ,விதித்தல் ,வேண்டல்

  1. வியங்கோள் வினைமுற்று எவற்றை காட்டும்?

 இரு திணைகள், ஐந்து பால்கள் ,மூன்று இடங்கள்

  1. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

க,இய,இயர்,அல்

  1. விகுதி பெற்றும் பெறாமலும் வரும் வினைமுற்று எது?

ஏவல் வினைமுற்று

  1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று என்ன இடத்தில் வராது?

தன்மை இடம்

  1. எந்த வியங்கோள் வினைமுற்று விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை?

இயர்,அல்    

  1. பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

 எச்சம்

  1. எச்சம் எத்தனை வகைப்படும்?

இரண்டு :பெயரெச்சம் ,வினையெச்சம்

  1. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?

பெயரெச்சம்

  1. பெயரெச்சம் எந்த காலத்தில் வரும்?

மூன்று காலமும்

  1. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?

 தெரிநிலை பெயரெச்சம்

  1. செயலையோ காலத்தையோ தெளிவாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?

 குறிப்பு பெயரெச்சம்

  1. வினையைக் கொண்டு முடியும் எச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?

வினையெச்சம்

  1. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் வினையெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?

தெரிநிலை வினையெச்சம்

  1. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் எது?

குறிப்பு வினையெச்சம்

  1. ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

முற்றெச்சம்

 
  

       

  1. பெயர்ச் சொல்லுடன் ஐ, ஆல், கு ,இன், அது போன்ற அசைகள் இணைந்து அச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைக்கு என்ன பெயர்?

வேற்றுமை

  1. பெயர்ச் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?

வேற்றுமை உருபுகள்

  1. சில இடங்களில் உருபுகளுக்கு பதிலாக முழு சொற்களே வேற்றுமை உருவாக வருவதும் உண்டு அவை எவ்வாறு அழைக்கப்படும்?

சொல்லுருபுகள்

  1. சொல்லுருபுகளுக்கு எடுத்துக்காட்டு?

ஆல், கொண்டு

  1. வேற்றுமை எத்தனை வகைப்படும்?

எட்டு

  1. வேற்றுமையின் வகைகள் என்னென்ன?

 முதல் வேற்றுமை ,இரண்டாம் வேற்றுமை ,மூன்றாம் வேற்றுமை ,நான்காம் வேற்றுமை ,ஐந்தாம் வேற்றுமை ,ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை

  1. வேற்றுமை உருபுகள் இடம்பெற்றுள்ள தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

வேற்றுமை தொடர்கள்

  1. வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

வேற்றுமைத்தொகை

  1. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?

முதல் வேற்றுமைக்கும் ,எட்டாம் வேற்றுமைக்கும்

  1. பெரும்பாலான சொற்றொடர்களில் எந்த மூன்று உறுப்புகள் இடம்பெற்றிருக்கும்?

எழுவாய், செயப்படுபொருள் ,பயனிலை

  1. எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது என்ன வேற்றுமை?

முதல் வேற்றுமை

  1. முதல் வேற்றுமைக்கு வழங்கப்படும் வேறு பெயர்?

எழுவாய் வேற்றுமை

  1. இரண்டாம் வேற்றுமை உருபு என்ன?

 ஐ

  1. ஒரு பெயரை செயப்படு பொருளாக வேறுபடுத்திக் காட்டுவது என்ன வேற்றுமை?

இரண்டாம் வேற்றுமை

  1. இரண்டாம் வேற்றுமைக்கு வழங்கப்படும் வேறு பெயர்?

செயப்படுபொருள் வேற்றுமை

  1. இரண்டாம் வேற்றுமை எத்தனை வகையான பொருள்களில் வரும்?

 ஆறு

  1. இரண்டாம் வேற்றுமை என்னென்ன பொருள்களில் வரும்?

 ஆக்கல் ,அழித்தல், அடைதல் ,நீத்தல் ,ஒத்தல் ,உடைமை

  1. மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் என்னென்ன?

ஆல், ஆன், ஒடு ,ஓடு

  1. மூன்றாம் வேற்றுமையின் எந்த உருபுகள் கருவிப்பொருள், கருத்தாப்பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்?

ஆல்,ஆன்

  1. கருவிப் பொருள் எத்தனை வகைப்படும்?

இரண்டு: முதற்கருவி,துணைக்கருவி

  1. கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவதற்கு என்ன பெயர்?

முதற்கருவி

  1. ஒன்றை செய்வதற்கு துணையாக இருப்பது எது?

துணைக்கருவி

  1. கருத்தா பொருள் எத்தனை வகைப்படும்?

இரண்டு: ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா

  1. பிறரை செய்ய வைப்பது என்ன வகை கருத்தா பொருள்?

ஏவுதல் கருத்தா

  1. தானே செய்வது என்ன வகை கருத்தாப்பொருள்?

இயற்றுதல் கருத்தா

  1. ஆன் எனும் உருபு பெரும்பாலும் என்ன வழக்கில் இடம் பெறும்?

செய்யுள் வழக்கு

  1. உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் மூன்றாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன?

ஒரு,ஓடு

  1. நான்காம் வேற்றுமைக்குரிய உருபு எது?

 கு

  1. நான்காம் வேற்றுமை உருபு என்ன பொருள்களில் வரும்?

கொடை, பகை, நட்பு, தகுதி ,அதுவாதல் ,பொருட்டு ,முறை ,எல்லை

  1. நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக என்ன அசை சேர்ந்து வருவதும் உண்டு?

 ஆக

  1. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன?

 இன்,இல்

  1. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன பொருள்களில் வரும்?

 நீங்கல் ,ஒப்பு ,எல்லை, ஏது

  1. ஆறாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன?

அது,ஆது,அ

  1. உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை எது?

ஆறாம் வேற்றுமை

  1. உரிமை பொருளை வேறு எவ்வாறு அழைப்பர்?

கிழமை பொருள்

  1. இக்காலத்தில் பயன்படுத்தப்படாத ஆறாம் வேற்றுமை உருபுகள் எது?

ஆது,அ

  1. ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு எது?

கண்,மேல்,கீழ்,கால்,இல்,இடம்

  1. இல் எனும் உருபானது எந்த இரண்டு வேற்றுமைகளுக்கு பொதுவானது?

 ஐந்தாம் வேற்றுமை , ஏழாம் வேற்றுமை

  1. இல் உருபு என்ன பொருளில் ஐந்தாம் வேற்றுமையில் இடம்பெறும்?

 நீங்கல்

  1. இல் உருபு என்ன பொருளில் ஏழாம் வேற்றுமையில் இடம்பெறும்?

 இடப்பொருள்

  1. எவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்?

 இடம்,காலம்

  1. விளிப்பொருளில் வரும் வேற்றுமை எது?

 எட்டாம் வேற்றுமை

  1. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதற்கு என்ன பெயர்?

விளி வேற்றுமை

  1. முதல் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?

ஆனவன், ஆவான், ஆகின்றவன்

  1. மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபு என்ன?

கொண்டு ,வைத்து, உடன், கூட

  1. நான்காம் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?

ஆக, பொருட்டு, நிமித்தம்

  1. ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?

இலிருந்து, நின்று ,காட்டிலும், பார்க்கிலும்

  1. ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?

உடைய    

  1. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை ,பண்பு

முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்? தொகைநிலைத்தொடர்

  1. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

ஆறு

  1. தொகைநிலைத் தொடரின் வகைகள் என்னென்ன?

வேற்றுமைத்தொகை ,வினைத்தொகை ,பண்புத்தொகை ,உவமைத்தொகை ,உம்மைத்தொகை ,அன்மொழித்தொகை

  1. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

வேற்றுமைத்தொகை

  1. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

 உருபும் பயனும் உடன் தொக்க தொகை

  1. காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?

வினைத்தொகை

  1. பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய எனும்  பண்புருபுகள் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

பண்புத்தொகை

  1. சிறப்பு பெயர் முன்னும் ,பொதுப்பெயர் பின்னும் நிற்க இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 இருபெயரொட்டுப் பண்புத்தொகை

  1. உவமைக்கு உவமேயத்துக்கும் இடையில் போல ,போன்ற, நிகர ,அன்ன முதலிய உவம உருபுகள் ஒன்று மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

உவமைத்தொகை

  1. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

எண்ணும்மை

  1. சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச் சொல் மறைந்து நின்று பொருள் தருவது எவ்வாறு் அழைக்கப்படும்?

 உம்மைத்தொகை

  1. வேற்றுமை, வினை, பண்பு ,உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

அன்மொழித்தொகை

  1. ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

தொகாநிலைத் தொடர்

  1. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

 ஒன்பது வகை

  1. தொகாநிலை தொடரின் வகைகள் என்னென்ன?

எழுவாய்த்தொடர், விளித்தொடர் ,வினைமுற்றுத் தொடர் ,பெயரெச்சத் தொடர் ,வினையெச்சத் தொடர் ,வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ,இடைச்சொல்  தொடர்,உரிச்சொல் தொடர், ,அடுக்குத்தொடர்

  1. எழுவாய் ஐ தொடர்ந்து பயனிலை அமைந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்தால் அது என்ன தொடர்?

எழுவாய் தொடர்

  1. விளிபெயர் பயனிலையைக்கொண்டு முடிந்து எந்த சொல்லும் மறையாமல் வந்தால் அது என்ன தொடர்?

விளித்தொடர்

  1. வினைமுற்று பெயரைக்கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

 வினைமுற்றுத் தொடர்

  1. எச்சவினை பெயர்ச்சொல் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

பெயரெச்சத் தொடர்

  1. வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்தினால் அது என்ன வகை தொடர்?

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

  1. இடைச்சொல் வெளிப்படையாக வரும் சொல்தொடர் எவ்வாறு அழைக்கப்படும்?

இடைச்சொல் தொடர்

  1. உரிச்சொல் வெளிப்படையாக வரும் சொல்தொடர் எவ்வாறு அழைக்கப்படும்?

 உரிச்சொல் தொடர்

  1. ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது என்னவகை தொடர்?

அடுக்குத்தொடர்    

  1. இரு சொற்கள் அமைந்த சொல்லில் முதலில் உள்ள சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

 நிலைமொழி

  1. இரு சொற்கள் நிலைமொழியுடன் வந்து சேரும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

 வருமொழி

  1. நிலைமொழி ஈறும் ,வருமொழி முதலும் இணைவதற்கு என்ன பெயர்?

புணர்ச்சி

  1. நிலைமொழியின் இறுதியில் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

உயிரீற்றுப் புணர்ச்சி

  1. நிலைமொழியின் இறுதியில் மெய்யெழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

மெய்யீற்றுப் புணர்ச்சி

  1. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

 உயிர் முதல் புணர்ச்சி

  1. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

 மெய் முதல் புணர்ச்சி

  1. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவதற்கு என்ன பெயர்?

 இயல்பு புணர்ச்சி

  1. இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ, வருமொழியிலோ அல்லது இரண்டிலுமே மாற்றங்கள் நிகழுமாயின் அது எவ்வாறு அழைக்கப்படும்?

விகாரப்புணர்ச்சி

  1. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

மூன்று :தோன்றல் ,திரிதல், கெடுதல்

  1. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படும்? 

தோன்றல் விகாரம்

  1. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது  ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?

 திரிதல் விகாரம்

  1. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது எவ்வாறு அழைக்கப்படும்? 

கெடுதல் விகாரம்    

  1. ஒரு சொல்லின் முதலெழுத்து எந்த வல்லின எழுத்துக்களுள் ஒன்றாக இருந்தால் அதற்கு முன்னாலுள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய் எழுத்தை சேர்த்து எழுத வேண்டும்?

 க,ச,த,ப

  1. சொல்லின் இறுதியில் இலக்கண விதிப்படி பொருந்தும் வல்லின மெய் எழுத்தை சேர்த்த எழுதுவது எவ்வாறு அழைக்கப்படும்?

வல்லினம் மிகல்

  1. வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் ,மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?

சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை

  1. வல்லினம் மிகும் இடங்கள் என்னென்ன?
  • அந்த ,இந்த என்னும் சுட்டு திரிபுகள் அடுத்து வல்லினம் மிகும்,
  • எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்,
  • இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்
  • நான்காம் வேற்றுமை உருபு கு வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்,
  • இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்,
  • உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்,
  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும் ,
  • உவமைத் தொகையில் வல்லினம் மிகும்,
  • உருவகத்தில் வல்லினம் மிகும்,
  • எண்ணுப்பெயர்களில் எட்டு,பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்,
  • அப்படி ,இப்படி ,எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும் ,
  • திசை பெயர்களை அடுத்து வல்லினம் மிகும் ,
  • மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால் ,
  • அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்
  1. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

 ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

  1. வல்லினம் மிகா இடங்கள் என்னென்ன?
  • எழுவாய்சொற்களை அடுத்து வல்லினம் மிகாது,
  • அது,இது,எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது,
  • பெயரெச்சம் ,எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது,
  • 2ஆம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் வல்லினம் மிகாது,
  • உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென் தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது,
  • வினைத்தொகையில் வல்லினம் மிகாது
  • அப்படி இப்படி எப்படி ஆகிய சொற்களை தவிர படி என முடியும் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது,
  • உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
 
  

     

  1. குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகள் எவ்வாறு அழைக்கப்படும்?

மரபுக்கவிதைகள்

  1. இலக்கண கட்டுப்பாடுகளின்றி கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள் எவ்வாறு அழைக்கப்படும்?

 புதுக்கவிதைகள்

  1. மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் எவ்வாறு அழைக்கப்படும்?

யாப்பிலக்கணம்

  1. யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புகள் எத்தனை?

ஆறு

  1. யாப்பிலக்கணம் குறிப்பிடும் செயலுக்குரிய ஆறு உறுப்புகள் என்னென்ன?

எழுத்து ,அசை, சீர் ,தளை, அடி, தொடை

  1. யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிப்பர்?

 மூன்று: குறில், நெடில் ,ஒற்று

  1. எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது என்ன?

அசை

  1. அசை எத்தனை வகைப்படும்?

இரண்டு :நேரசை, நிரையசை

  1. குறில் அல்லது நெடில் எழுத்து தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் அது என்ன அசை?

நேரசை

  1. இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில் நெடில் எழுத்துக்களை இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் அது என்ன அசை?

 நிரை அசை

  1. ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவதற்கு பெயர் என்ன?

சீர்

  1. சீர் எத்தனை வகைப்படும்?

நான்கு: ஓரசைச்சீர், ஈரசைச்சீர் ,மூவசைச்சீர் ,நாலசைச்சீர்

  1. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவது எவ்வாறு அழைக்கப்படும்?

தளை

  1. தளைகள் எதனடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?

முதல் சீர் இறுதியிலும் ,வரும் சீரின் முதலிலும் உள்ள அசைகள் பொருத்து

  1. தளைகள் எத்தனை வகைப்படும்?

 ஏழு

  1. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவதற்கு பெயர் என்ன?

அடி

  1. அடி எத்தனை வகைப்படும்?

ஐந்து வகை

  1. செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ ,அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமை எவ்வாறு அழைக்கப்படும்?

தொடை

  1. தொடைகள் எத்தனை வகைப்படும்?

எட்டு

  1. முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பதற்கு பெயரென்ன?

மோனை

  1. இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது பெயர் என்ன?

எதுகை

  1. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவர தொடுப்பதற்கு பெயர் என்ன?

 இயைபு

  1. ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடுவது?

அந்தாதித் தொடை

  1. பா எத்தனை வகைப்படும்?

நான்கு: வெண்பா, ஆசிரியப்பா ,கலிப்பா, வஞ்சிப்பா

  1. வெண்பா என்ன ஓசை உடையது?

செப்பலோசை

  1. அறநூல்கள் பலவும் எந்த பாவகையால் அமைக்கப்பட்டுள்ளது?

வெண்பா

  1. ஆசிரியப்பாவின் ஓசை எது?

 அகவலோசை

  1. ஆசிரியப்பாவில் அமைந்த நூல்கள் எவை? சங்க இலக்கியங்கள் பல
  2. கலிப்பா என்ன ஓசை உடையது?

துள்ளலோசை

  1. கலிப்பாவால் இயற்றப்பட்ட இலக்கியம் எது?

கலித்தொகை

  1. வஞ்சிப்பா என்ன ஓசை உடையது?

தூங்கலோசை  

  1. உவமை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது என்ன அணி?

பிறிதுமொழிதலணி

  1. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை கூறி ,பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது என்ன அணி?

வேற்றுமை அணி

  1. ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமையும் அணி என்ன?

  இரட்டுரமொழிதல்

  1. இரட்டுறமொழிதலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?

சிலேடை


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இலக்கணம் QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page