TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. “நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி..” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

வாணிதாசன்

  1. ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

தொடுவானம்

  1. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என புகழப்படுபவர் யார்?

கவிஞர் வாணிதாசன்

  1. கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?

அரங்கசாமி என்ற எத்திராசலு

  1. கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர்?

பாரதிதாசன்

  1. கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்?

தமிழ் தெலுங்கு ஆங்கிலம் பிரெஞ்சு

  1. கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?

கவிஞரேறு ,பாவலர்மணி

  1. பிரெஞ்சு அரசு என்ன விருது வழங்கியுள்ளது?

செவாலியர் விருது

  1. வாணிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?

தமிழச்சி ,கொடிமுல்லை, தொடுவானம் ,எழிலோவியம், குழந்தை இலக்கியம்

  1. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் என்ன பாடல்களாக பாடினர்?

கும்மிபாடல்கள்

  1. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிபாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

பஞ்சக்கும்மிகள்

  1. பஞ்சக்கும்மிகள் எனும் நூலைத் தொகுத்தவர் யார்?

புலவர்.செ இராசு

  1. காத்து நொண்டி சிந்து யார் இயற்றியது?

வெங்கம்பூர் சாமிநாதன்

  1. அமெரிக்காவின் பூஜேசவுண்ட் எனும் இடத்தை சுற்றி வாழந்த பழங்குடியினர் யார்?

சுகுவாமிஷ் பழங்குடியினர்

  1. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் யார்?

சியாட்டல்

  1. தமிழக பழங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் யார்?

பக்தவச்சல பாரதி

  1. பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் யார்?

காடர் சமூகத்தினர்

  1. காடர் தாங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?

ஆல்அலப்பு

  1. காடர்களின் கதைகள் சிலவற்றை தொகுத்தவர்கள் யார்?

மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்

  1. யானையோடு பேசுதல் எனும் மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?

.கீதா

  1. எந்த நாள் உலக இயற்கை வள பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது?

ஜூலை 28

  1. திருவள்ளுவருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?

பெருநாவலர் ,முதற்பாவலர் ,நாயனார் மற்றும் பல

  1. திருக்குறள் எத்தனை பகுப்புகளை கொண்டது?

அறம் ,பொருள் ,இன்பம் மூன்று பகுப்புகள்

  1. அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?

நான்கு: பாயிரவியல், இல்லறவியல் ,துறவறவியல் ,ஊழியல்

  1. பொருட்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?

மூன்று :அரசியல், அமைச்சியல் ,ஒழிபியல்

  1. இன்பத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?

இரண்டு :களவியல் கற்பியல்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page