TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 01 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 01 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகளை எழுதியவர் யார்?

மகாகவி பாரதியார்

  1. “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

தமிழ்மொழி வாழ்த்து , பாரதியார் கவிதைகள் தொகுப்பு

  1. சி.சுப்ரமணிய பாரதியார் நடத்திய இதழ்கள் என்னென்ன?

இந்தியா, விஜயா

  1. பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் என்னென்ன? சந்திரிகையின் கதை, தராசு
  2. பாரதியாரை பாரதிதாசன் எவ்வாறு புகழ்ந்துள்ளார்?

சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ ,புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன்

  1. “முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே எழில்மகவே எந்தம் உயிர்” என செந்தமிழ் அந்தாதியை பாடியவர் யார்?

து.அரங்கன்

  1. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

தொல்காப்பியம்

  1. தொல்காப்பியத்தின் ஆசிரியர் பெயர் என்ன?

தொல்காப்பியர்

  1. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்?

தொல்காப்பியம்

  1. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?

மூன்று: எழுத்து, சொல், பொருள்

  1. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?

9 இயல்கள்

  1. புலியின் இளமைப் பெயர் என்ன?

பறழ்

  1. சிங்கத்தின் இளமைப் பெயர் என்ன?

குருளை

  1. யானையின் இளமை பெயர் என்ன?

கன்று

  1. பசுவின் இளமைப் பெயர் என்ன?

கன்று

  1. கரடியின் இளமைப் பெயர் என்ன?

குட்டி

  1. புலியின் ஒலிமரபு என்ன?

 உறுமும்

  1. சிங்கத்தின் ஒலிமரபு என்ன?

முழங்கும்

  1. யானையின் ஒலிமரபு என்ன?

பிளிரும்

  1. பசுவின் ஒலி மரபு என்ன?

கதறும்

  1. கரடியின் ஒளிமரபு என்ன?

கத்தும்

  1. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவத்தைக் குறிப்பதாக அமைந்தது இவ்வரிவடிவம் எவ்வாறு அழைக்கப்படும்?

 ஓவிய எழுத்து

  1. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை எவ்வாறு அழைப்பர்?

ஒலி எழுத்து நிலை

  1. கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?

 கி.மு . மூன்றாம் நூற்றாண்டு

  1. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?

 கி.பி ஏழாம் நூற்றாண்டு

  1. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு முறை எவ்வாறு உள்ளது?

‘ஸ’ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது,மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை,எகர,ஒகர குறில் நெடில் வேறுபாடில்லை

  1. கல்வெட்டுகள்,செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

இரண்டுவகை: வட்டெழுத்து, தமிழெழுத்து

  1. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வட்டெழுத்து

  1. சேர மண்டலம் ,பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எந்த நூற்றாண்டு காலத்தில் கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன?

8 நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை

  1. எந்த நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன?

11ம் நூற்றாண்டு

  1. பதினோராம் நூற்றாண்டு எந்த சோழனின் ஆட்சிக் காலமாகும்? 

முதலாம் இராஜராஜ சோழன்

  1. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

 கண்ணெழுத்துக்கள்

  1. “கண்ணெழுத்து படுத்த எண்ணுப் பல்பொதி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 சிலப்பதிகாரம்

  1. எந்த கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் எழுதப்பட்டுள்ளன?

அரச்சலூர் கல்வெட்டு

  1. எகர ஒகர குறில் எழுத்துகளை குறிக்க என்ன வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது? எழுத்துக்களின் மேல் புள்ளி வைப்பது
  2. அகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துகளை நெடில் எழுத்தாக கருத என்ன வழக்கம் பின்பற்றப்பட்டது?

 குறில் எழுத்துக்களுக்கு இடதுபக்க புள்ளி இடப்படுவது

  1. ஐகார எழுத்துக்களை குறிப்பிட என்ன பழக்கம்  பின்பற்றப்பட்டது?

எழுத்துக்களின் முன் இரட்டை புள்ளி

  1. எகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துக்களை ஔகார எழுத்துக்களாக கருதப்பட பின்பற்றப்பட்ட விளக்கம் என்ன?

குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளிகள் இடப்படுவது

  1. மகர எழுத்தை குறிப்பிட என்ன விளக்கம் பின்பற்றப்பட்டது?

பகர எழுத்தின் உள்ளே புள்ளி இடுவது

  1. தமிழ் எழுத்துக்களின் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர்?

வீரமாமுனிவர்

  1. எ என்னும் இடத்திற்கு கீழ் கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்கு சுழியிட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கியவர் யார்?

வீரமாமுனிவர்

  1. ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துக்களை குறிக்க இரட்டை கொம்பு ,இரட்டை கொம்பு டன் கால் சேர்த்து புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

வீரமாமுனிவர்

  1. யார் செய்த எழுத்து சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?

 தந்தை பெரியார்

  1. தமிழில் சொல் என்பதற்கு என்ன பொருள்?

நெல்

  1. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று?

தொல்காப்பியர்

  1. மொழியை எத்தனை வகைப்படுத்துவர்?

மூன்று: ஓரெழுத்து மொழி ,ஈரெழுத்து மொழி ,இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி

  1. நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி எனக் கூறுபவர் யார்?

தொல்காப்பியர்

  1. குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல்லாவது இல்லை என்பதை குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே எனக் கூறுபவர் யார்?

தொல்காப்பியர்

  1. நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் எனக் கூறுபவர் யார்?

பவனந்தி முனிவர்

  1. நொ,து என்னும் உயிர்மெய் எழுத்துக்களும் பொருளுடைய ஓரெழுத்து மொழி ஆகும் எனக் கூறுபவர் யார்?

பவனந்தி முனிவர்

  1. அம்பு விரைந்து செல்வது போல சென்று உரிய கடமை புரிபவன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?

ஏவலன்

  1. அம்புவிடும் கலையை எவ்வாறு அழைப்பர்?

ஏகலை

  1. அம்பு விடுவதில் வல்லவனை எவ்வாறு அழைப்பர்?

 ஏகலைவன்

  1. ஏவுகின்ற அம்பைப் போல கூர்‌முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் என்ன?

 எய்ப்பன்றி

  1. அம்பையை எயபவர் எவ்வாறு அழைக்கப்படுவர்?

எயினர்

  1. எயினரது மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர்?

எயினியர்

  1. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்? இரா.இளங்குமரனார்
  2. இரா.இளங்குமரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?

இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம் ,தனித்தமிழ் இயக்கம், தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்

  1. இரா.இளங்குமரனார் தொகுத்த நூல் எது?

தேவநேயம்

  1. இரா இளங்குமரனார் எந்த ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் அமைத்துள்ளார்?

 திருச்சிக்கு அருகில் உள்ள அல்லூர்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 01 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page