TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 6TH TAMIL QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 6TH TAMIL QUESTIONS AND ANSWERS  

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


6TH TAMIL TERM 01 QUESTIONS AND ANSWERS

  1. “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என கூறியவர் யார்?

பாரதிதாசன்

  1. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

 சுப்புரத்தினம்

  1. யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்?

பாரதியார்

  1. பாரதிதாசன் எவ்வாறு போற்றப்படுகிறார்?

புரட்சிக்கவி ,பாவேந்தர்

  1. “தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்”என பாடியவர்?

கவிஞர் காசி ஆனந்தன்

  1. “எட்டு திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி” என பாடியவர் யார்?

 பெருஞ்சித்திரனார்

  1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

மாணிக்கம்

  1. பெருஞ்சித்திரனார் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?

 பாவலரேறு

  1. பெருஞ்சித்திரனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்?

கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவிய கொத்து, நூறாசிரியம்

  1. பாவலரேறு பெருஞ்சித்திரனார்  நடத்திய இதழ்கள் என்னென்ன?

தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ,தமிழ்நிலம்

  1. தனித்தமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர் யார் ?

 பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  1. தமிழ் கும்மி எனும் கவிதை பெருஞ்சித்திரனாரின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?

கனிச்சாறு

  1. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?

எட்டு தொகுதிகள்

  1. ” வான் தோன்றி வளி தோன்றி ….தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே நீ தோன்றி வளர்ந்தாய் வாழி” என பாடியவர் யார்?

 வாணிதாசன்

  1. உலகில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன?

6,000

  1. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என பாடியவர் ?

 பாரதியார்

  1. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என பாரதியார் எதனை வியந்து பாடுகிறார்?

தமிழ் மொழியின் இனிமை

  1. “என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”என பாடியவர் யார்?

பாரதியார்

  1. என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”என பாரதியார் எதை வியந்து பாடியுள்ளார்?

பாரதத்தாயின்  தொன்மை

  1. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் எது?

தொல்காப்பியம்

  1. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த சுழி எழுத்துக்களாக உள்ளன?

வலஞ்சுழி

  1. தமிழ் என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?

தொல்காப்பியம்

  1. “தமிழன் கிளவியும் அதனோரற்றே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம்

  1. தமிழ்நாடு என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?

வஞ்சிக்காண்டம் ,சிலப்பதிகாரம்

  1. “இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

சிலப்பதிகாரம்

  1. தமிழன் எனும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?

அப்பர் தேவாரம்

  1. ஒழுங்கு முறையை குறிக்கும் சொல் எது?

சீர்மை

  1. திணைகள் எத்தனை வகை?

இரண்டு: உயர்திணை அஃறிணை

  1. மா என்ற சொல்லின் பொருள் என்ன?

மரம், விலங்கு, பெரிய ,திருமகள், அழகு, அறிவு, அளவு ,அழைத்தல் ,துகள், மேன்மை, வயல், வண்டு

  1. எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?

 இயல் தமிழ்

  1. உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?

இசைத்தமிழ்

  1. உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும் தமிழ் எது?

நாடகத்தமிழ்

  1. ஆல், அரசு ,மா ,பலா, வாழை ஆகியவற்றின் இலைப் பெயர் என்ன?

 இலை

  1. அகத்தி, பசலை, முருங்கை முதலியவற்றின் தாவர இலை பெயரென்ன?

 கீரை

  1. அருகு ,கோரை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?

புல்

  1. நெல், வரகு முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?

தாள்

  1. மல்லி முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?

 தழை

  1. சப்பாத்தி கள்ளி,தாழை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?

மடல்

  1. கரும்பு, நாணல் முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?

தோகை

  1. பனை,தென்னை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?

ஓலை

  1. கமுகு முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?

கூந்தல்

  1. 1 தமிழ் எண்?

  1. 2 தமிழ் எண்?

  1. 3 தமிழ் எண்?

  1. 4 தமிழ் எண்?

  1. 5 தமிழ் எண்?

  1. 6 தமிழ் எண்?

  1. 7 தமிழ் எண்?

  1. 8 தமிழ் எண்?

  1. 9 தமிழ் எண்

  1. வேளாண்மை என்னும் சொல் இடம் பெற்ற நூல் எது?

கலித்தொகை 101 ,திருக்குறள் 81

  1. உழவர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?

நற்றிணை 4

  1. பாம்பு என்னும் சொல் இடம் பெற்ற நூல்?

குறுந்தொகை 239

  1. வெள்ளம் எனும் சொல் இடம் பெற்ற நூல்?

பதிற்றுப்பத்து 15

  1. முதலை எனும் சொல் இடம்பெற்ற நூல்?

குறுந்தொகை 324

  1. கோடை எனும் சொல் இடம் பெற்ற நூல்?

 அகநானூறு 42

  1. உலகம் எனும் சொல் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம் கிளவியாக்கம் 56 ,திருமுருகாற்றுப்படை 1

  1. மருந்து எனும் சொல் இடம் பெற்ற நூல்?

அகநானூறு 147 திருக்குறள் 952

  1. ஊர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம் ,அகத்திணையியல் 41

  1. அன்பு எனும் சொல் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம் களவியல் 110 திருக்குறள் 4

  1. உயிர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியம் ,கிளவியாக்கம் 56 திருக்குறள் 955

  1. மகிழ்ச்சி எனும் சொல் இடம்பெற்ற நூல்?

தொல்காப்பியம் கற்பியல் 142 திருக்குறள் 531

  1. மீன் எனும் சொல் இடம் பெற்ற நூல்?

குறுந்தொகை 54

  1. புகழ் எனும் சொல் இடம்பெற்ற நூல்?

தொல்காப்பியம் வேற்றுமையியல் 71

  1. அரசு எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?

திருக்குறள் 554

  1. செய் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?

குறுந்தொகை 72

  1. செல் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம் 75 புறத்திணையியல்

  1. பார் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?

பெரும்பாணாற்றுப்படை 435

  1. ஒழி எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம் கிளவியாக்கம் 48

  1. முடி எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம் வினையியல் 206

  1. ” அன்பு வேண்டும், அறிவு வேண்டும், பண்பு வேண்டும் ,அறிவு வேண்டும்” என பிறந்தநாள் வாழ்த்து பாடியவர் யார்?

கவிஞர் அறிவுமதி

  1. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்திக் கூறியுள்ளவர்?

தொல்காப்பியர்

  1. கடல் நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பொழியும் என்ற செய்தியை எந்த பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன?

முல்லைப்பாட்டு, பரிபாடல் ,திருக்குறள் ,கார்நாற்பது, திருப்பாவை

  1. “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி” இப்பாடல் யாரால் இயற்றப்பட்டது?

அவ்வையார்

  1. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

பதிற்றுப்பத்து

  1. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் காணப்படுகிறது?

 நற்றிணை

  1. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகளை இடம் பெற்ற நூல்?

தொல்காப்பியர்

  1. “கடல் நீர் முகந்த கமஞ்சூல் எழிலி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 கார் நாற்பது

  1. “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

பதிற்றுப்பத்து

  1. “கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

நற்றிணை

  1. தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என எந்த அறிவியல் அறிஞர் கூறினார்?

 கலிலியோ

  1. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

திருவள்ளுவமாலை

  1. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” இவ்வரிகளை இயற்றியவர்?

கபிலர்

  1. நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் மழையின் பயனையும் கூறும் நூல் எது?

சிலப்பதிகாரம்

  1. “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

சிலப்பதிகாரம் ஆசிரியர்- இளங்கோவடிகள்

  1. “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

சிலப்பதிகாரம் ஆசிரியர்- இளங்கோவடிகள்

  1. “மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

சிலப்பதிகாரம் ஆசிரியர்- இளங்கோவடிகள்

  1. சிலப்பதிகாரம் காப்பியத்தை இயற்றியவர் யார்?

இளங்கோவடிகள்

  1. இளங்கோவடிகள் எந்த மன்னர் மரபைச் சார்ந்தவர்?

சேரமன்னர்

  1. இளங்கோவடிகளின் காலம் என்ன?

கிபி 2 ஆம் நூற்றாண்டு

  1. தமிழின் முதல் காப்பியம் எது?

சிலப்பதிகாரம்

  1. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

முத்தமிழ் காப்பியம் ,குடிமக்கள் காப்பியம்

  1. எந்த இரு நூல்கள் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன?

 சிலப்பதிகாரம், மணிமேகலை

  1. “முத்துச்சுடர் போலே நிலாவொளி முன்பு வரவேணும் அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும் “இவ்வரிகளை எழுதியவர்?

பாரதியார்

  1. பாரதியாரின் இயற்பெயர் என்ன?

சுப்பிரமணியன்

  1. பாரதியார் யாரால் பாரதி எனும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்?

எட்டயபுர மன்னர்

  1. பாரதியார் இயற்றிய நூல்கள் என்னென்ன ?

 பாஞ்சாலி சபதம் ,கண்ணன் பாட்டு, குயில் பாட்டு

  1. காணி நிலம் எனும் பாரதியாரின் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

பாரதியார் கவிதைகள்

  1. பறவைகள் இடம்பெயர்தலுக்கு என்ன பெயர்?

வலசை போதல்

  1. எந்த காரணத்திற்காக பறவைகள் இடம் பெயர்கின்றன?

உணவு, இருப்பிடம் ,தட்பவெட்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்

  1. எதை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?

 நிலவு, விண்மீன் ,புவியீர்ப்பு பலம்

  1. பொதுவாக பறவைகள் எந்த திசையிலிருந்து வலசை போகின்றன?

 வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் ,மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும்

  1. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

 தலையில் சிறகு வளர்தல், சிறகுகளின் நிறம் மாறுதல், உடலில் கற்றையாக முடி வளர்தல்

  1. சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை எது?

கப்பல் பறவை

  1. கப்பல் பறவைக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்னென்ன?

கப்பல் கூழைக்கடா ,கடற்கொள்ளை பறவை

  1. கப்பல் பறவை தரை இறங்காமல் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்?

 400 கிலோமீட்டர்

  1. “நாராய் நாராய் செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர் யார்?

சத்திமுத்தப் புலவர்

  1. “தென்திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” இவ்வரிகள் என்ன செய்தியை குறிப்பிடுகின்றன?

பறவைகள் வலசை வந்த செய்தி

  1. செங்கால் நாரைகள் எந்த நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருகின்றன?

ஐரோப்பா

  1. ஆண் சிட்டுக்குருவியின் தொண்டை பகுதி என்ன நிறத்தில் இருக்கும்?

 கறுப்பு

  1. சிட்டுக்குருவியின் உடல் என்ன நிறத்தில் இருக்கும்?

பழுப்பு நிறம்

  1. சிட்டுக்குருவியின் அடைகாக்கும் காலம் எவ்வளவு?

14 நாட்கள் 

  1. சிட்டுக்குருவியின் வாழ்நாள் எத்தனை ஆண்டுகள்?

10 முதல் 13 ஆண்டுகள்

  1. காக்கை குருவி எங்கள் ஜாதி என பாடியவர் யார்?

பாரதியார்

  1. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர் சலீம் அலி

  1. டாக்டர் சலீம் அலி எழுதிய தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு என்ன பெயரிட்டுள்ளார்?

சிட்டுக்குருவியின் வீழ்ச்சி

  1. “மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும் பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது” எனக் கூறியவர்?

பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி

  1. உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் எது?

ஆர்டிக் ஆலா (22,000)

  1. பறவை பற்றிய படிப்புக்கு என்ன பெயர்?

ஆர்னித்தாலஜி

  1. உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?

மார்ச் 20

  1. “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?

1954

  1. “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்தை எழுதியவர் யார்?

எர்னெஸ்ட் ஹெமிங்வே

  1. “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்தின் கதைநாயகன் யார்?

சாண்டியாகோ

  1. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?

நெல்லை சு முத்து

  1. நெல்லை சு.முத்து எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்?

80

  1. “வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் ” என கூறியவர் யார்?

மகாகவி பாரதியார்

  1. ரோபோ என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்?

காரெல் கபெக்(1920)

  1. காரெல் கபெக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

செக் நாடு

  1. “இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும்” என தானியியங்கிகளுக்கு விளக்கம் தந்தது எது?

பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்

  1. எந்த ஆண்டு உலக சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் மீத்திறன் கணினியுடன் சதுரங்கப் போட்டியில் போட்டியிட்டார்?

1997

  1. ஐபிஎம் எனும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினி என்ன?

டீப் புளூ

  1. உலகிலேயே முதன் முதலாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ள நாடு எது?

சவுதி அரேபியா

  1. சோபியா ரோபோவுக்கு புதுமைகளின் வெற்றியாளர் எனும் பட்டத்தை எது வழங்கியது?

ஐக்கிய நாடுகள் சபை

  1. விளக்குகள் பல தந்த ஒளி (lights from many lamps) என்னும் நூலை எழுதியவர் யார்?

லிலியன் வாட்சன்

  1. போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செயற்கை கால்களை அப்துல்கலாம் கார்பன் இழையை கொண்டு எவ்வளவு கிராம் எடையில் உருவாக்கினார்?

300 கிராம்

  1. எப்போது ராமன் விளைவு என்னும் தனது கண்டுபிடிப்பை சர்.சி.வி ராமன் வெளியிட்டார் ?

பிப்ரவரி 28 1928

  1. இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசு யாரால் பெற்றுத்தரப்பட்டது?

சர்.சி.வி ராமன்

  1. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

 பிப்ரவரி 28 

  1. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

மூதுரை 

  1. மூதுரை நூலின் ஆசிரியர் யார்?

ஔவையார்

  1. ஔவையார் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் ,நல்வழி

  1. மூதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?

மூத்தோர் கூறும் அறிவுரை

  1. மூதுரை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

31 பாடல்கள்

  1. “வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?

மக்கள் கவிஞர்

  1. காமராஜரின் சிறப்பு பெயர்கள் என்னென்ன?

பெருந்தலைவர் ,கருப்பு காந்தி ,படிக்காத மேதை, ஏழை பங்காளர், கர்ம வீரர், தலைவர்களை உருவாக்குபவர்

  1. கல்விக்கண் திறந்தவர் என யாரால் காமராசர் பாராட்டப்பட்டார்?

பெரியார்

  1. எந்த  பல்கலைக்கழகத்திற்கு  காமராஜர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது?

 மதுரை

  1. காமராஜருக்கு நடுவண் அரசு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது?

1976

  1. காமராசருக்கு எங்கு சிலை நிறுவப்பட்டது?

சென்னை மெரினா கடற்கரை

  1. எந்த உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

சென்னை

  1. காமராஜருக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது?

கன்னியாகுமரி(02.10.2000)

  1. ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?

 சீனா

  1. ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?

அண்ணா நூற்றாண்டு நூலகம்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு என்ன?

8 ஏக்கர்

  1. இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

 இரா.அரங்கநாதன்

  1. சிறந்த நூலகர்ளுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?

டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருது

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு எது?தரைத்தளம்
  2. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல் படிப்பகம் பிரிவு எது?தரைத்தளம்
  3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் அமைந்துள்ள பிரிவு எது?முதல் தளம்
  4. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் எவ்வளவு குறுந்தகடுகள் சேகரித்து வைக்கபட்டுள்ளன?

20,000 மேற்பட்ட

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் எவ்வளவு பிற நாடுகளில் இருந்து திரட்டபாட்ட நூல்கள் சேகரித்து வைக்கபட்டுள்ளன?

50,000 மேற்பட்ட

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?

இரண்டாம் தளம்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினி அறிவியல்,தத்துவம் ,அரசியல் நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?

மூன்றாம் தளம்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொருளியல் ,சட்டம்,வணிகவியல்,கல்வி நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?

நான்காம் தளம்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணிதம் ,அறிவியல்,மருத்துவம் நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?

ஐந்தாம் தளம்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொறியியல்,வேயாண்மை,திரைப்படக்கலை நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?

ஆறாம் தளம்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரலாறு ,சுற்றுலா நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?

ஏழாம் தளம்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்திசை சுவடிகள் நூலகம் அமைந்துள்ள பிரிவு எது ?

ஏழாம் தளம்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வி தொலைகாட்சி,நூலகத்தின் அலுவலக பிரிவு அமைந்துள்ள தளம் எது ?

எட்டாம் தளம்

  1. “நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

 பெருவாயின் முள்ளியார்

  1. “ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

ஆசாரக்கோவை

  1. ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார்?

 பெருவாயின் முள்ளியார்

  1. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?

கயத்தூர்

  1. ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள்?

நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு

  1. ஆசாரக்கோவை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

 நூறு வெண்பாக்கள்

  1. கதிரவனுக்கு நன்றி கூறி சிறப்பு செய்யும் விழா என்ன?

பொங்கல் விழா

  1. வாழ்க்கைக்கு வளம் தரும் மழை கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை என்ன விழாவாக கொண்டாடப்பட்டது?

இந்திரவிழா

  1. எந்த நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது?

தை முதல் நாள்

  1. எப்போது திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது?

தை இரண்டாம் நாள்

  1. ஏறுதழுவுதல் வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

 மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு ,மஞ்சுவிரட்டு

  1. அறுவடைத் திருநாள் எந்த மாநிலங்களில் மகர சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது?

 ஆந்திரா, கர்நாடகா ,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம்

  1. அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் என்னவாக கொண்டாடப்படுகிறது?

லோரி

  1. அறுவடைத் திருநாள் குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் என்னவாக கொண்டாடப்படுகிறது?

உத்தராயன்

  1. மாமல்லன் என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?

நரசிம்மவர்மன்

  1. நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவன்?

ஏழாம் நூற்றாண்டு

  1. சிற்பக்கலை எத்தனை வகைப்படும் ?

நான்கு வகைப்படும்: குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள் ,புடைப்புச் சிற்பங்கள்

  1. நான்கு வகையான சிற்பக்கலைகளும் காணப்படும் ஒரே இடம் எது?

 மாமல்லபுரம் 

  1. “அஞ்சாமை மிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவது அஞ்சி அகற்றிடுவான் ” இவ்வரிகளை இயற்றியவர்?

 முடியரசன்

  1. முடியரசனின் இயற்பெயர் என்ன?

துரைராசு

  1. முடியரசன் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?

பூங்கொடி, வீரகாவியம் ,காவியப்பாவை, புதியதொரு விதி செய்வோம்

  1. திராவிட நாட்டின் வானம்பாடி எனப் பாராட்டப்பட்டவர் யார்?

முடியரசன் 

  1. “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” எனக் கூறியவர் யார்?

பாரதியார்

  1. “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” எனக் கூறியவர் யார் ?

 பாரதியார்

  1. நாட்டுப்புற இயல் ஆய்வு எனும் நூலைத் தொகுத்தவர் யார்?

சு. சக்திவேல்

  1. “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சுற்றி …உமணர் போகலும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்  எது?

நற்றிணை

  1. “பாலொடு வந்து கூழொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

குறுந்தொகை

  1. “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

அகநானூறு

  1. துறைமுக நகரங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன?

பட்டினம் ,பாக்கம்

  1. வணிகத்தை எவ்வாறு பிரிக்கலாம்?

தரை வழி வணிகம் ,நீர் வழி வணிகம்

  1. வணிகர்கள் வெளியூருக்கு செல்லும் போது குழுவாகவே செல்வார்கள் இந்த குழு எவ்வாறு அழைக்கப்படும்?

வணிகச்சாத்து

  1. தமிழ்நாட்டிலிருந்து பழங்காலத்தில் என்ன பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?

தேக்கு ,மயில்தோகை ,அரிசி, சந்தனம் ,இஞ்சி ,மிளகு

  1. சீனத்திலிருந்து என்ன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன?

கண்ணாடி ,கற்பூரம் ,பட்டு

  1. குதிரைகள் எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன?

அரேபியா

  1. “நடுவு நின்று நன்னெஞ்சினோர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 பட்டினப்பாலை

  1. “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

பட்டினப்பாலை

  1. “பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை?

ஔவையார்

  1. “புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசலிது” இவ்வரிகளை எழுதியவர்?

தாராபாரதி

  1. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?

இராதாகிருஷ்ணன்

  1. தாராபாரதி எவ்வாறு புகழப்படுகிறார்?

கவிஞாயிறு

  1. தாராபாரதி இயற்றிய நூல்கள் என்னென்ன?

புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு விரல்நுனி வெளிச்சங்கள்

  1. பாரதம் அன்றைய நாற்றங்கால் எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

தாராபாரதியின் கவிதைகள்

  1. காந்தியடிகள் எப்போது சென்னைக்கு வந்தார்?

1919 ,பிப்ரவரி மாதம்

  1. எப்போது காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது தன் வாழ்நாள் முழுவதும் எளிமை திருக்கோலம் தரிக்க காரணமாக அமைந்தது?

செப்டம்பர்,1921

  1. எங்கு வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியதாக காந்தியடிகள் கூறியுள்ளார்?

தென்னாப்பிரிக்கா

  1. காந்தியடிகள் யார் எழுதிய தமிழ் கையேடு தம்மை கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்?

ஜி யு போப்

  1. காந்தியடிகள் யாருடைய உரையைக் கேட்டு இந்த பெரியவரின் அடி நிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும் எனும் ஆவல் உண்டாகிறது எனக் கூறினார்?

உ.வே.சாமிநாதர்

  1. ராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் யார்?

வேலுநாச்சியார்

  1. எங்கு நடந்த போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்?

காளையார்கோவில்

  1. வேலு நாச்சியாரின் ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?

 மருது சகோதரர்கள்

  1. வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவு தலைமை ஏற்றவர் யார்?

 குயிலி

  1. வேலுநாச்சியாரை காட்டி கொடுக்க கூறி மறுத்ததால் ஆங்கிலேயர்கள் கொன்ற பெண் யார்?

உடையாள்

  1. “அன்பர்பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானேவந்தெய்தும் பராபரமே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

பராபரக்கண்ணி

  1. “எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

தாயுமானவர்

  1. தாயுமானவர் திருச்சியை ஆண்ட எந்த மன்னரிடம் தலைமைக் கணக்கராக பணிபுரிந்தார்?

விசயரகுநாத சொக்கலிங்கர் 

  1. தமிழ்மொழியின் உபநிடதம் என அழைக்கப்படுவது எது?

தாயுமானவர் பாடல்கள்  

  1. இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகையின் பெயர் என்ன ?

 கண்ணி

  1. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

லெபனான்

  1. தீர்க்கதரிசி என மொழிபெயர்ப்பு நூல் யாரால் இயற்றப்பட்டது?

புவியரசு

  1. மணிபல்லவத் தீவில் இருக்கும் எந்த பொய்கையில் இருந்து அட்சய பாத்திரம் தோன்றியது?

கோமுகி

  1. அட்சய பாத்திரம் எந்த நாளில் தோன்றும்?

 வைகாசித் திங்கள் முழுநிலவு நாள்

  1. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நூல்கள் என்னென்ன?

 உபபாண்டவம் ,கதாவிலாசம் ,தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் ,தாவரங்களின் உரையாடல்

  1. “தீயவும் நல்லவும் செய்தவரை விட்டு செல்வது ஒரு நாளும் இல்லைஐயா” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

கவிமணி தேசிக விநாயகனார்

  1. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?

36 ஆண்டுகள்

  1. ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி கவிமணியால் எழுதப்பட்டது?

லைட் ஆஃப் ஆசியா

  1. லைட் ஆஃப் ஆசியா (Light of asia) எனும் நூலை எழுதியவர் யார்?

எட்வின் அர்னால்டு

  1. “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

  1. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என கூறியவர் யார்?

வள்ளலார்

  1. “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை” எனக் கூறியவர் யார்?

அன்னை தெரசா 

  1. பள்ளி செல்லா குழந்தைகளுக்காக “குழந்தைகளை பாதுகாப்போம் “என்னும் இயக்கத்தை தொடங்கியவர் யார்?

 கைலாஷ் சத்யார்த்தி

  1. “குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள்” கூறியவர்?

கைலாஷ் சத்யார்த்தி


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 6TH TAMIL QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page