DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES-2016]
1.
மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
a)சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
b)பாண்டியன் நெடுஞ்செழியன்
c)கோப்பெருஞ்சோழன்
d)முதலாம் குலோத்துங்கன்
2.
பொருத்துக :
கவுந்தியடிகள் 1. ஆயர்குல மூதாட்டி
மாதரி 2. மாநாய்கனின் மகள்
மாதவி 3. – சமணத்துறவி
கண்ணகி 4. ஆடலரசி
a)3 1 4 2
b)2 4 1 3
c)3 4 2 1
d)1 3 2 4
3.
கடிகை என்பதன் பொருள் யாது?
a)அணிகலன்
b)கடித்தல்
c)கடுகு
d)காரம்
4.
‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’ – எனக் கூறும் நூல்
a)நான்மணிக்கடிகை
b)பழமொழி நானூறு
c)ஏலாதி
d)திரிகடுகம்
5.
வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து”
எனத் திருக்குறளை பாராட்டியவர்
a)பரிமேலழகர்
b)கபிலர்
c)மாங்குடி மருதனார்
d)பரணர்
6.
நூல் – நூலாசிரியர் அறிதல்
பட்டியல் I – பட்டியல் II
சயங்கொண்டார் – 1. சடகோபரந்தாதி
காரியாசான் – 2. புறநானூறு
கம்பர் – 3.கலிங்கத்துப்பரணி
கண்ணகனார் – 4.சிறுபஞ்சமூலம்
a)3 4 1 2
b)1 2 4 3
c)2 1 3 4
d)3 2 4 1
7.
“என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்”
என்ற வரிகளைப் பாடியவர்
a)திருப்பாணாழ்வார்
b)குலசேகராழ்வார்
c)பேயாழ்வார்
d)ஆண்டாள்
8.
‘செறு’ என்பதன் பொருள்
a)செருக்கு
b)சேறு
c)சோறு
d)வயல்
9.
திருக்குறளில் “ஏழு” என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
a)11
b)09
c)08
d)10
10.
கீழ்க்கண்ட நூற்களில் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
a)திரிகடுகம்
b)திருவள்ளுவமாலை
c)திருமந்திரம்
d)திருக்குறள்
11.
“தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?
a)அப்பூதியடிகள்
b)திருநாவுக்கரசர்
c)சேக்கிழார்
d)திருஞானசம்பந்தர்
12.
யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
a)கவுந்தியடிகள்
b)மாதவி
c)அறவணவடிகள்
d)கண்ணகி
13.
‘தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்’ என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
a)கம்பர்
b)இளங்கோவடிகள்
c)திருத்தக்க தேவர்
d)காரியாசான்
14.
கம்பரைப் புரந்தவர் யார்?
a)ஒட்டக்கூத்தர்
b)சடையப்ப வள்ளல்
c)சீதக்காதி
d)சந்திரன் சுவர்க்கி
15.
ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
a)பிரெஞ்சு
b)கிரேக்கம்
c)ஆங்கிலம்
d)ஜெர்மன்
16.
நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
a)2004
b)2003
c)2005
d)2002
17.
குரூக், மால்தோ , பிராகுயி என்பன
a)தென் திராவிட மொழிகள்
b)நடுத்திராவிட மொழிகள்
c)வடதிராவிட மொழிகள்
d)மேலை நாட்டு மொழிகள்
18.
“ஓர் இலட்சிய சமூகம் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றவர்
a)பெரியார்
b)அண்ணல் அம்பேத்கர்
c)காந்தியடிகள்
d)திரு.வி.க.
19.
திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
a)முருகன் அல்லது அழகு
b)சித்திரக்கவி
c)உரிமை வேட்டல்
d)தமிழ்ச் சோலை
20.
பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
a)சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
b)திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
c)சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
d)மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
21.
தமிழக அரசு, கவிஞர் சாலை. இளந்திரையனுக்கு வழங்கிய விருது ,
a)பாவேந்தர் விருது
b)பாரதியார் விருது
c)கலைமாமணி விருது
d)கவிச்செம்மல் விருது
22.
ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு
a)1786
b)1806
c)1856
d)1886
23.
‘மணநூல்’ என அழைக்கப்பெறும் நூல்
a)சிலப்பதிகாரம்
b)மணிமேகலை
c)சீவக சிந்தாமணி
d)குண்டலகேசி
24.
பொருத்துக:
சிந்தை – 1. நீர்
நவ்வி – 2.மேகம்
முகில் – 3.எண்ணம்
புனல் – 4.மான்
a)2 1 3 4
b)1 3 4 2
c)3 4 2 1
d)4 3 1 2
25.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
Writs – 1. வாரிசுரிமைச் சட்டம்
Succession Act – 2. உரிமைச் சட்டங்கள்
Substantive Law – 3. சான்றுச் சட்டம்
Evidence Act – 4. சட்ட ஆவணங்கள்
a)1 3 4 2
b)4 1 2 3
c)2 4 3 1
d)1 2 3 4
26.
“யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” – இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
a)சொல்லாகு பெயர்
b)கருத்தாகு பெயர்
c)காரியவாகு பெயர்
d)கருவியாகு பெயர்
27.
வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது –யைக் குறிக்கும்.
a)சிங்கம்
b)கடல்
c)சந்தனம்
d)மாலை
28.
“எயிறு” என்னும் சொல் – சொல்லின் எவ்வகை?
a)திரிசொல்
b)இயற்சொல்
c)வினைத் திரிசொல்
d)பெயர்த் திரிசொல்
29.
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
a)எதுகை மட்டும் வந்துள்ளது
b)எதுகையும், மோனையும் வந்துள்ளது
c)எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன
d)மோனை மட்டும் வந்துள்ளது
30.
பெயரெச்சத்தை எடுத்து எழுது.
a)படித்து
b)எழுதி
c)வந்த
d)நின்றான்
31.
பொருத்துக :
பட்டியல் 1 – பட்டியல் II
அறுவை வீதி – 1. அந்தணர் வீதி
கூல வீதி – 2. பொற்கடை வீதி
பொன் வீதி- 3. ஆடைகள் விற்கும் வீதி
மறையவர் வீதி – 4. தானியக்கடை வீதி
a)4 3 2 1
b)3 4 2 1
c)1 3 2 4
d)2 1 3 4
32.
துணி கலையரசியால் தைக்கப்பட்டது – இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
a)கலையரசி துணி தைத்தாள்
b)கலையரசி தைத்தாள் துணி
c)கலையரசி என்ன தைத்தாள்
d)கலையரசி துணியைத் தைத்தாள்
33.
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே” – இத்தொடரில் “ஒறுத்தார்” என்பதன் இலக்கணக் குறிப்பு –
a)முற்றெச்சம்
b)தொழிற்பெயர்
c)வினையாலணையும் பெயர்
d)வினையெச்சம்
34.
வா – என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சத்தைக் கூறு
a)வந்தான்
b)வந்து
c)வருதல்
d)வந்த
35.
“உவமைத்தொகை” இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க
a)கயல்விழி
b)மலர் முகம்
c)வெண்ணிலவு
d)தாமரைக் கண்கள்
36.
“கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு” – இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை
a)இன்னிசை அளபெடை
b)செய்யுளிசை அளபெடை
c)சொல்லிசை அளபெடை
d)ஒற்றளபெடை
37.
இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக்கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி
a)வழுவமைதி
b)வினாவழு
c)காலவழு
d)வழாநிலை
38.
‘யவனர்’ என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
a)ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர்
b)கிரேக்கர், உரோமானியர்
c)பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர்
d)சீனர், மலேசியர்
39.
தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
a)ஏலமும், இலவங்கமும்
b)இஞ்சியும், மிளகும்
c)பட்டும், சருக்கரையும்
d)முத்தும், பவளமும்
40.
இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு “இந்திய மாமணி” என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?
a)1991
b)1990
c)1993
d)1992
41.
“ஞானபோதினி” என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
a)முடியரசன்
b)மு.சி. பூர்ணலிங்கம்
c)நாமக்கல்லார்
d)சுரதா
42.
பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு
a)1860
b)1870
c)1880
d)1890
43.
காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
a)சுரதா
b)கண்ணதாசன்
c)முடியரசன்
d)நா. காமராசன்
44.
வள்ளலார் பதிப்பித்த நூல்
a)ஜீவகாருண்ய ஒழுக்கம்
b)சின்மய-தீபிகை
c)இந்திர தேசம்
d)வீரசோழியம்
45.
கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
a)ஒளிப் பறவை
b)சிரித்த முத்துக்கள்
c)ஒரு கிராமத்து நதி
d)நிலவுப்பூ
46.
அகழாய்வில் “முதுமக்கள் தாழிகள்” கண்டுபிடிக்கப்பட்ட ஊர்
a)தச்சநல்லூர்
b)ஆதிச்சநல்லூர்
c)பெரவல்லூர்
d)பெரணமல்லூர்
47.
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
a)முடியரசன்
b)வாணிதாசன்
c)சுரதா
d)மோகனரங்கன்
48.
விடிவெள்ளி” என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்
a)ஈரோடு தமிழன்பன்
b)மு. மேத்தா
c)சாலை. இளந்திரையன்
d)சுரதா
49.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
a)துறைமுகம்
b)சுவரும் சுண்ணாம்பும்
c)தேன்மழை
d)இது எங்கள் கிழக்கு
50.
எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு – எனக் கூறியவர்
a)பாவாணர்
b)காந்தி
c)தெ.பொ.மீ
d)அயோத்திதாசப் பண்டிதர்
51.
பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?
a)விதுரன்
b)துரியோதனன்
c)தர்மன்
d)சகுனி
52.
நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
a)பூரிக்கோ
b)பாண்டியன் உக்கிர பெருவழுதி
c)பன்னாடு தந்த மாறன் வழுதி
d)உருத்திர சன்மார்
53.
“…………. நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்” -இவ்வடிகள் இடம்பெறும்
a)பெரியபுராணம்
b)மணிமேகலை
c)கம்பராமாயணம்
d)சீவக சிந்தாமணி
54.
“புலனழுக்கற்ற அந்தணாளன்” – எனப் பாராட்டப்படுபவர்
a)ஓதலாந்தையார்
b)நக்கீரர்
c)பரணர்
d)கபிலர்
55.
பொருந்தாத நூலை எடுத்து எழுதுக
a)நான்மணிக்கடிகை
b)நாலடியார்
c)புறநானூறு
d)இனியவை நாற்பது
56.
அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
a)மலையைப் போன்றது
b)கடலைப் போன்றது
c)வளர்பிறையைப் போன்றது
d)தேய்பிறையைப் போன்றது
57.
பட்டியல் 1ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் 1 – பட்டியல் II
ஒழுக்கத்தின் எய்துவர் – 1. செல்வம் நிலைக்காது
இழுக்கத்தின் எய்துவர் – 2. மேன்மை
பொறாமை உடையவரிடம் – 3. உயர்வு இருக்காது
ஒழுக்கமில்லாதவரிடம் – 4. எய்தாப் பழி
a)2 4 1 3
b)2 3 1 4
c)1 4 2 3
d)3 4 1 2
58.
வாய்மை எனப்படுவது
a)குற்றமோடு பேசுதல்
b)மற்றவர் வருந்த பேசுதல்
c)சுடும் சொற்களைப் பேசுதல்
d)தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
59.
கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்’
a)சுந்தர காண்டம்
b)அயோத்திய காண்டம்
c)ஆரண்ய காண்டம்
d)யுத்த காண்டம்
60.
‘நூறாசிரியம்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
a)கவிஞர் மீரா
b)கவிஞர் சுரதா
c)கவிஞர் பெருஞ்சித்திரனார்
d)மு. மேத்தா
61.
‘மடங்கல்’ என்னும் சொல்லின் பொருள்
a)மடக்குதல்
b)புலி
c)மடங்குதல்
d)சிங்கம்
62.
அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
a)களிற்று யானை நிரை
b)மணிமிடைப் பவளம்
c)நித்திலக் கோவை
d)வெண்பாமாலை
63.
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
a)பூரிக்கோ
b)நல்லாதனார்
c)கணிமேதாவியார்
d)கார்மேகப்புலவர்
64.
‘உத்தர வேதம்’ என்று அழைக்கப்படும் நூல்
a)நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
b)நாலடியார்
c)திருக்குறள்
d)இன்னாநாற்பது
65.
பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
a)ஏலாதி
b)ஆசாரக் கோவை
c)திரிகடுகம்
d)சிறுபஞ்சமூலம்
66.
‘திரைக்கவித் திலகம்’ என்ற சிறப்புக்குரியவர்
a)வாலி
b)உடுமலை நாராயண கவி
c)பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
d)மருதகாசி
67.
சதகம்’ என்பது – பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக
a)10
b)100
c)400
d)1000
68.
பொருத்துக :
வசன நடை கை வந்த வல்லாளர் – 1. இராமலிங்க அடிகள்
புது நெறி கண்ட புலவர் – 2. நாமக்கல் கவிஞர்
தைரியநாதர் – 3. ஆறுமுக நாவலர்
காந்தியக் கவிஞர் – 4. வீரமாமுனிவர்
a)3 1 4 2
b)3 4 2 1
c)2 1 3 4
d)1 4 2 3
69.
உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
a)ரா.பி. சேதுப்பிள்ளை
b)கடிகை முத்துப்புலவர்
c)சி. இலக்குவனார்
d)மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
70.
பொருத்துக :
சிறுமலை, பூம்பாறை – 1. முல்லை நில ஊர்கள்
ஆற்காடு, பனையபுரம் – 2. நெய்தல் நில ஊர்கள்
ஆத்தூர், கடம்பூர் – 3 . குறிஞ்சி நில ஊர்கள்
கீழக்கரை, நீலாங்கரை – 4. மருத நில ஊர்கள்
a)2 1 3 4
b)3 4 2 1
c)3 1 4 2
d)4 2 1 3
71.
இதில் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது யாருடைய மொழி
a)கணியன்பூங்குன்றனார்
b)பாரதியார்
c)ஒளவையார்
d)கம்பர்
72.
“இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்” – யார்?
a)உ.வே. சாமிநாதர்
b)ஜி.யு. போப்
c)கால்டுவெல்
d)வீரமாமுனிவர்
73.
“இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுபவர்
a)சி. இராமநாதன்
b)சி.இரா. அரங்கநாதன்
c)ப. கமலநாதன்
d)-ம. இளந்திரையன்
74.
“வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்
a)குறுந்தொகை
b)கலித்தொகை
c)புறநானூறு
d)பரிபாடல்
75.
மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே” – இக்கூற்றை கூறியவர்
a)கணியன் பூங்குன்றனார்
b)கம்பர்
c)உமறுப்புலவர்
d)வள்ளலார்
76.
பொங்கலை “அறுவடைத் திருவிழாவாகக்” கொண்டாடும் மேலை நாடுகள்
a)இலங்கை, மலேசியா
b)ஜப்பான், ஜாவா
c)மொரீசியஸ், சிங்கப்பூர்
d)இங்கிலாந்து, அமெரிக்கா
77.
இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
a)பொன்மனம்
b)ஆர்த்து
c)உற்றார்
d)சார்பு
78.
பொருத்துக :
பட்டியல் 1 – பட்டியல் II
I.இரண்டு சீர்களான அடி -1. நெடிலடி
II.நான்கு சீர்களான அடி – 2.கழிநெடிலடி
III.ஐந்து சீர்களான அடி – 3.குறளடி
IV.ஐந்துக்கும் அதிக சீரடி – 4.அளவடி
a)4 3 2 1
b)2 1 3 4
c)1 2 3 4
d)3 4 1 2
அங்காப்பு என்பதன் பொருள்
a)சலிப்படைதல்
b)வாயைத் திறத்தல்
c)அலட்டிக் கொள்ளுதல்
d)வளைகாப்பு
80.
கார்குலாம்” – எனும் சொல் – எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?
a)ஐந்தாம் வேற்றுமைத் தொகை
b)மூன்றாம் வேற்றுமைத் தொகை
c)ஆறாம் வேற்றுமைத் தொகை
d)நான்காம் வேற்றுமைத் தொகை
81.
பொருத்துதல் :
பட்டியல் 1 – பட்டியல் II
I.திணைமாலை நூற்றைம்பது – 1. உ.வே. சாமிநாதைய்யர்
II.திரிகடுகம் – 2. கணிமேதாவியர்
III.திணைமொழி ஐம்பது – 3. நல்லாதனார்
IV.புறப்பொருள் வெண்பாமாலை -4.கண்ணஞ்சேந்தனார்
a)3 1 2 4
b)1 4 2 3
c)2 3 4 1
d)4 3 2 1
82.
‘இல்லை ‘ – என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
a)தெரிநிலை வினைமுற்று
b)எதிர்மறை பெயரெச்சம்
c)குறிப்பு வினைமுற்று
d)வியங்கோள் வினைமுற்று
83.
Might is right’ – இதன் தமிழாக்கம்.
a)‘கடமையே உரிமை’
b)’வலிமையே சரியான வழி’ –
c)வல்லான் வகுத்ததே வாய்க்கால்’
d)’ஒற்றுமையே வலிமை’
பொருத்துக :
குமரன், தென்னை – 1. இடப்பெயர்
காடு, மலை – 2. காலப்பெயர்
பூ, காய் – 3. பொருட்பெயர்
திங்கள், வார – 4.சினைப்பெயர்
a)4 1 3 2
b)3 1 4 2
c)3 4 2 1
d)2 3 1 4
85.
அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
a)நைதல் நாடு நொச்சி நுங்கு
b)நுங்கு நொச்சி நாடு நைதல்
c)நொச்சி நுங்கு நைதல் நாடு
d)நாடு நுங்கு நைதல் நொச்சி
86.
பொருத்துக
பிறமொழிச்சொல் – தமிழ்ச் சொல்
ஐதீகம் – 1. விருந்தோம்பல்
இருதயம் – 2. சொத்து
ஆஸ்தி – 3. உலக வழக்கு
[d] உபசரித்தல் – 4.நெஞ்சகம்
a)2 3 1 4
b)3 4 2 1
c)4 1 2 3
d)1 2 3 4
87.
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
a)சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது
b)திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது
b)விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்
c)வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
88.
இலக்கணக் குறிப்பு அறிக. பட்டியல் I ஐ II உடன் பொருத்து
பட்டியல் I – பட்டியல் II
உரிச்சொற்றொடர் – 1. சூழ்கழல்
[b] வினைத் தொகை – 2. தழீஇய
. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் – 3. தடக்கை
சொல்லிசை அளபெடை – 4. கூவா
a)2 1 3 4
b)3 1 4 2
c)1 3 2 4
d)4 1 2 3
ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
a)கலம்பகம்
b)காவலூர்க் கலம்பகம்
c)கதம்பமாலை
d)தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
90.
கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
a)மாங்கனி
b)ஆயிரம் தீவு
c)அங்கயற்கண்ணி
d)இராச தண்டனை
91.
வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்?
a)இந்தியன் ஒப்பினியன்
b)டிஸ்கவரி ஆப் இந்தியா
c)தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
d)யங் இந்தியா
92.
“நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்” – இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
a)1973- செப்டம்பர் – 17
b)1943- செப்டம்பர் – 17
c)1953- செப்டம்பர்-17
d)1963- செப்டம்பர் – 17
93.
‘சட்டை ‘ என்ற சிறுகதையை எழுதியவர் .
a)பார்த்தசாரதி
b)ஜெயகாந்தன்
c)மீரா
d)புதுமைப்பித்தன்
94.
“கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்” எனப் போற்றப்படும் நூல்
a)இரட்சண்ய மனோகரம்
b)இரட்சண்ய யாத்திரிகம்
c)போற்றி திருவகல்
d)தேம்பாவணி
95.
“மருமக்கள் வழி மான்மியம்”, – என்ற நூலை எழுதியவர்
a)கவிமணி
b)சிவதாமு
c)பாரதிதாசன்
d)புதுமைப்பித்தன்
96.
தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்
a)பெரியார்
b)அம்பேத்கர்
c)அயோத்திதாசப் பண்டிதர்
d)இராமலிங்க அடிகளார்
97.
பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
a)சுகுணவிலாச சபை
b)மாடர்ன் தியேட்டர்
c)பாய்ஸ் கம்பெனி
d)கூத்துப்பட்டறை
“இந்திய அரசியலில் சாணக்கியர்” என்று போற்றப்படுபவர்
a)காந்தியடிகள்
b)பாலகங்காதர திலகர்
c)இராசகோபாலாச்சாரியார்
d)சர்தார் வல்லபாய் படேல்
99.
பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ” எனக் கூறியவர்
a)சோமசுந்தரபாரதியார்
b)திரு. வி. கலியாண சுந்தரனார்
c)பாரதிதாசன்
d)தாரா பாரதி
100.
‘குயில்’ என்ற இதழை நடத்தியவர்
a)சுரதா
b)வாணிதாசன்
c)பாரதியார்
d)பாரதிதாசன்