DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கத்திற்கு என்ன பெயர்?
பாவை நோன்பு
- திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் எது?
திருப்பாவை
- சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?
திருவெம்பாவை
- திருவெம்பாவை நூலை இயற்றிய ஆசிரியர் யார்?
மாணிக்கவாசகர்
- இறையரசனின் இயற்பெயர் என்ன?
சே.சேசுராசா
- ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி சேசுராசா எழுதிய நூல் எது?
கன்னிப்பாவை
- “நீ விழித்தெழும் திசையே பூமிக்கு கிழக்கு உன் விரல்களில் ஒளிரும் சூரிய விளக்கு” இவ்வரிகளை எழுதியவர்?
மு. மேத்தா
- புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படுபவர் யார்?
மு மேத்தா
- மு மேத்தா எழுதிய நூல்கள் என்னென்ன?
கண்ணீர் பூக்கள் ,ஊர்வலம், சோழ நிலா, மகுட நிலா
- மு மேத்தா எழுதிய என்ன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது?
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
- விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் யார்?
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
- அம்பேத்கர் எப்போது பிறந்தார்?
ஏப்ரல் 14, 1891
- அம்பேத்கரின் பெற்றோர் யார்?
ராம்ஜி சக்பால்- பீமாபாய்
- அம்பேத்கர் தனது பெற்றோருக்கு எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்?
14வது குழந்தை
- அம்பேத்கரின் ஊர் எது?
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவாதே
- அம்பேத்கரின் தந்தை ஆற்றிய பணி என்ன?
இராணுவ பள்ளி ஒன்றில் ஆசிரியர்
- அம்பேத்கர் தனது பள்ளிக் கல்வியை எங்கு தொடங்கினார்?
சதாராவில் உள்ள பள்ளி
- பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் எனும் தன் பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என யார் மீது கொண்ட பற்றால் மாற்றிக்கொண்டார்?
தனது ஆசிரியர் மகாதேவ அம்பேத்கர்
- இந்த ஆண்டு அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது?
1904
- அம்பேத்கர் தனது உயர்நிலைக் கல்வியை எந்த பள்ளியில் முடித்தார்?
எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளி
- அம்பேத்கர் எந்த ஆண்டு தனது பள்ளி படிப்பை முடித்தார்?
1907
- அம்பேத்கர் யாருடைய உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்?
பரோடா மன்னர்
- அம்பேத்கர் எந்த ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்?
1912
- யாருடைய உதவியுடன் உயர்கல்வி கற்க அம்பேத்கர் அமெரிக்கா சென்றார்?
பரோடா மன்னர் சாயாஜி ராவ்
- அம்பேத்கர் எந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம் அரசியல் தத்துவம் சமூகவியல் பாடங்களை கற்றார்?
கொலம்பியா பல்கலைக்கழகம்
- எந்த ஆண்டு பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்?
1915
- அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது?
இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
- எந்த ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக் கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?
இந்தியாவின் தேசிய பங்கு வீதம்
- எந்த ஆண்டு பொருளாதார படிப்பிற்காக லண்டன் சென்றார்?
1920
- அம்பேத்கர் எந்த ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்?
1921
- அம்பேத்கர் எந்த ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சி கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்?
1923
- அம்பேத்கர் எந்த ஆண்டு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்?
1923
- அம்பேத்கர் எந்த ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை எனும் அமைப்பை நிறுவினார்?
1924
- “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று: முதல் தெய்வம் அறிவு ,இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என கூறியவர் யார்?
அம்பேத்கர்
- “ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென” அம்பேத்கர் எந்த வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தினார்?
இரண்டாவது வட்டமேசை மாநாடு
- பூனா ஒப்பந்தம் எப்போது யாருக்கிடையே கையெழுத்தானது?
செப்டம்பர் 24 , 1931 அம்பேத்கருக்கும் – காந்தியடிகளுக்கும் [சரியான விடை –1932]
- எந்த ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?
1935
- அம்பேத்கர் தொடங்கிய கட்சியின் பெயர் என்ன?
சுதந்திர தொழிலாளர் கட்சி
- ஒடுக்கப்பட்ட பாரதம் எனும் இதழை அம்பேத்கர் எந்த ஆண்டு தொடங்கினார்?
1927
- அம்பேத்கர் சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் என்ன அமைப்பை நிறுவினார்?
சமாஜ் சமாத சங்கம்
- அம்பேத்கர் எந்த ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார்?
1930
- முதலாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்தவர் யார்?
ராவ் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்
- ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பணியாற்றியவர் யார்?
அம்பேத்கர்
- அரசியல் நிர்ணய சபையால் எப்போது இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஏழு பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது?
ஆகஸ்ட் 29 1947
- அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யார்?
கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே எம் முன்ஷி ,சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான்
- அரசமைப்பு சட்ட வரைவு குழு தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது?
பிப்ரவரி 21, 1948
- அம்பேத்கர் எப்போது புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்?
அக்டோபர் 14 ,1956
- அம்பேத்கரின், புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகம் எப்போது வெளியானது?
1957
- அம்பேத்கர் எப்போது இயற்கை எய்தினார்?
டிசம்பர் 6 1956
- அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
1990
- கோமகளின் இயற்பெயர் என்ன?
இராஜலட்சுமி
- கோமகளின் எந்த புதினம் தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றது?
அன்னை பூமி
- கோமகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் என்ன விருதினை பெற்றுள்ளார்?
தமிழன்னை விருது
- கோமகள் இயற்றிய நூல்கள் என்னென்ன?
உயிர் அமுதாய் ,நிலாக்கால நட்சத்திரங்கள் ,அன்பின் சிதறல்
- பால் மனம் எனும் சிறுகதை என்னும் நூலில் உள்ளது?
மீதமிருக்கும் சொற்கள்
- மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
அ.வெண்ணிலா