TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


 1. கணக்கு என்பது?

 நூலின் பெயர்

 1. மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

 வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்

 1. வெள்ளக்கால் சுப்பிரமணியனார் எந்த திண்ணைப் பள்ளியில் படித்தார்?

 திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணை பள்ளி

 1. ப இராசமாணிக்கனார் யாரிடம் படித்திருக்கிறார்?

 மௌனகுரு

 1. பின்னத்தூர் நாராயணசாமி எந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?

 கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடம்

 1. சோமசுந்தர பாரதியார்  எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?

 எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம்

 1. ந மு வேங்கடசாமி எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?

 வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளி

 1. வ.சுப.மாணிக்கம் எந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்

மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளி

 1. இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை என்ற நூலின் ஆசிரியர் யார்?

பேராசிரியர் அ கா பெருமாள்

 1. பள்ளி எனும் சொல் எந்த மதத்தில் இருந்து வந்தது

சமணம்

 1. ஊர்தோறும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய மரத்தின் அடியில் இருக்கும் மேடை எவ்வாறு அழைக்கப்படும்

மன்றம் அல்லது அம்பலம்

 1. உபாத்தியாயர் ஒன்றை சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதற்கு பெயர் என்ன

முறை வைப்பது

 1. உபாத்தியாயர்க்கு பிரதியாக சில சமயங்களில் இருக்கும் முறையின் பெயர் என்ன

சட்டாம்பிள்ளை முறை

 1. எழுத்துக்கள் தெரிவதற்கு சுவடியில் தடவப்படும் மை எவற்றால் ஆனது?

 வசம்பு மஞ்சள் மணத்தக்காளி இலை சாறு மாவிலைக்கரி தர்ப்பைக்கரி

 1. “ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்” எனக் கூறும் நூல் எது?

சிந்தாமணி

 1. “மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் ” எனக் கூறும் நூல் எது?

தமிழ்விடு தூது

 1. வரி எழுத்தின் உறுப்புகள் என்னென்ன?

புள்ளி கால் கொம்பு விலங்கு

 1. கீழ்வாயிலக்கம் மேல்வாயிலக்கம் குழிமாற்று நெல் இலக்கம் முதலிய வாய்ப்பாடுகளை கட்டாயம் மனப்பாடம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட புத்தகம் எது ?

 பிரபாவதி சுவடி

 1. இரட்டை துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கில் குச்சியை செருகி கட்டுவார்கள் அதற்கு பெயர் என்ன

 நாராசம்

 1. ஆசிரியர்கள் தனித்தனியே ஏடுகளில் தாம் மேல் எழுதி அதைப் போல எழுதி வரச் சொல்வார்கள் அதற்கு பெயர் என்ன?

சட்டம்

 1. பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருபவனை எவ்வாறு அழைப்பார்கள்?

வேத்தான்

 1. மிகச் சிறந்த நூல் பயிற்சி உடையவர்கள் அரசவைகளில் வாதம் புரிந்து நம் கலைத்திறமையை நிலைநாட்டுவார் அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டி இருப்பர் என்று கூறும் நூல் எது

 மதுரைக்காஞ்சி

 1. ” வினாதல் வினாயக விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

 நன்னூல்

 1. ஓதற்ப்பிரிவிற்கான கால எல்லை எவ்வளவு

மூன்று வருடம்

 1. எந்த நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு பண்டிதர்கள் படிக்க வந்து சென்றனர்

நவத்வீபம்

 1. ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சாவூரிலிருந்த யாரிடம் அந்நிய தேசத்து மாணவர்கள் கல்வி கற்று சென்றனர்?

ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதர்

 1. உ.வே.சாவின் இலக்கிய கட்டுரைகள் எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன?

உயிர் மீட்சி

 1. உ.வே சா பெற்றுள்ள பட்டங்கள் என்னென்ன?

 மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி

 1. உ வே சா எந்தக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி

 1. உ.வே.சா விற்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது

சென்னைப் பல்கலைக்கழகம்

 1. உ.வே. சாவிற்கு எந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது?

 1932

 1. உ வே சா நூலகம் எந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது

திருவான்மியூர் சென்னை

 1. மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவதற்கு பெயர் என்ன

உரைநடை

 1. சொற்கள் எதுகை மோனை இயைபு முரண் சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவதற்கு பெயர் என்ன

கவிதை

 1. “விண்வேறு ; விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

துறைமுகம்

 1. துறைமுகம் என்ற நூலை எழுதியவர் யார்

சுரதா

 1. சுரதாவின் சிறப்பு பெயர் என்ன

உவமைக் கவிஞர்

 1. சுரதாவின் இயற்பெயர் என்ன

இராசகோபாலன்

 1. சுரதா யாரின் மீது கொண்ட பற்றுதலால் தனது பெயரை மாற்றிக்கொண்டார்

பாரதிதாசன்

 1. சுரதா முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்டு நடத்திய இதழின் பெயர் என்ன

காவியம்

 1. சுரதா நடத்திய இலக்கிய ஏடுகள் என்னென்ன?

இலக்கியம் விண்மீன் ஊர்வலம்

 1. சுரதா எழுதிய நூல்கள் என்னென்ன?

தேன்மழை துறைமுகம் மங்கையற்கரசி அமுதும் தேனும்

 1. சுரதா பெற்றுள்ள விருதுகள் என்னென்ன?

தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது,தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராசராசன் விருது

 1. “சொல்ல விரும்பியதெல்லாம் சொல்லில் வருவதில்லை”- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

 இதுவரை

 1. இடையீடு என்ற கவிதையை எழுதிய சி மணியின் இயற்பெயர் என்ன ?

 சி பழனிச்சாமி

 1. சி மணி  நடத்திய சிற்றிதழின் பெயர் என்ன? 

நடை

 1. சி மணி எழுதிய நூல்கள் என்னென்ன?

யாப்பும் கவிதையும் வரும் போகும் ஒளிச்சேர்க்கை

 1. சி.மணி எந்த நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் சீன மெய்யியல் நூல்

தாவோ தே ஜிங்

 1. புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாக பயன்படுத்தியவர் மற்றும் இருத்தலின்  வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாக சொன்னவர் யார்?

 சி. மணி

 1. சி.மணி எந்தப் புனைபெயர்களில் எழுதியுள்ளார்

வே.மாலி,செல்வம்

 1. சி.மணி பெற்ற விருதுகள் என்னென்ன?

விளக்கு இலக்கிய விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக விருது ,ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது

 1. “வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி…” என தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

 1. “அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,வறுந்தலை உலகமும் அன்றே;”இவ்வரிகளை கூறியவர்

ஔவையார்

 1. “எத்திசைச் செலினும்,அத்திசைச் சோறே”இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?இயற்றியவர்?

புறநானூறு ஔவையார்

 1. “வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி…” என தொடங்கும் புறநானூற்றுப் பாடல் எந்த அரசனைப் பற்றிக் கூறுகிறது?

அதியமான் நெடுமான் அஞ்சி

 1. புறநானூற்றின் வேறு பெயர்கள் என்னென்ன?

 புறம் புறப்பாட்டு

 1. அதியமானின் அரசவைப் புலவர் யார்?

ஔவையார்

 1. ஔவையார் எந்தெந்த நூல்களில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?

அகநானூறு 4, குறுந்தொகை 15, நற்றிணை 7,புறநானூறு 33  மொத்தம் 59 பாடல்கள்

 1. சாலைப் போக்குவரத்து உதவி எண்?

103

 1. எங்கு எப்போது முதல் பன்னாட்டு சாலை அமைப்பு மாநாடு நடைபெற்றது?

பாரிஸ் 1909


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page