TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 01 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 01 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. “கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போல குளிர்ப்பொதிகைத் தென்தமிழே சீறி வா வா” என தமிழை அழைத்தவர் யார்?

 சிற்பி பாலசுப்பிரமணியம்

  1. இளந்தமிழே எனும் கவிதை இடம் பெற்ற நூல் எது?

 நிலவுப்பூ

  1. சிற்பி பாலசுப்பிரமணியம் எங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார் ?

 பாரதியார் பல்கலைக்கழகம்

  1. சிற்பி பாலசுப்ரமணியம் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு மற்றும் நூல்?

அக்னிசாட்சி 2001

  1. சிற்பி பாலசுப்ரமணியம் எந்த நூலுக்காக 2002 ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்?

ஒரு கிராமத்து நதி

  1. சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன?

நிலவுப்பூ, ஒளிப்பறவை, சர்ப்பயாகம்,சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி

  1. சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய உரைநடை நூல்கள் என்னென்ன?

இலக்கிய சிந்தனைகள் ,மலையாளக் கவிதை ,அலையும் சுவடும்

  1. சிற்பி பாலசுப்ரமணியம் எத்தனை முறை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளார்?

இரண்டு முறை

  1. தமிழ் மொழியின் நடை அழகியல் என்னும் உரைநடையை எழுதியவர்?

தி சு நடராசன்

  1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கணம் எது?

 தொல்காப்பியம்

  1. எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாக கருதும் நூல்?

தொல்காப்பியம்

  1. இலக்கியத்தனம் ஆங்கிலாக்கம் தருக?

poeticalness / literariness

  1. இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறவியல் சார்ந்த கருத்து நிலைகள் உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனை சுட்டிக் காட்டும் நூல்?

 தொல்காப்பியம்

  1. பா வகைகள் நான்கு எனக் கூறும் நூல்?

தொல்காப்பியம்

  1. நான்கு பா வகைகள் என்னென்ன?

ஆசிரியப்பா ,வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா

  1. “அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும் உரிய என்ப” எனக் கூறும் நூல்?

தொல்காப்பியம்

  1. “ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி” என கூறும் நூல்?

தொல்காப்பியம்

  1. எந்த தொன்மையான மொழியும் எதனில் இருந்து தொடங்குகின்றது?

சமிக்ஞை & இசை

  1. ஒலிபின்னல்- ஆங்கிலாக்கம் தருக?

sound texture

  1. “கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே” எனும் பாடல் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

  1. மூன்று பேரும் கூடி நின்று எதிர்த்தாலும் பறம்பு நாட்டை உங்களால் வெல்ல முடியாது என மூவேந்தர்களிடம் கூறியவர் யார்?

கபிலர்

  1. “படாம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக” எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

  1. “புணரின் புணராது பொருளே; பொருள் வயின் பிரியின் புணராது புணர்வு” எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?

 நற்றிணை

  1. “நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை”- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

புறநானூறு

  1. எந்தக் கலியில் காளைகளில் பல இனங்களை காட்டுகின்ற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன?

 முல்லைக்கலி

  1. எந்தக் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்கள் மற்றும் அதன் பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?

கிடை

  1. கிடை என்னும் குறு நாவலை எழுதியவர்?

கி ராஜநாராயணன்

  1. வாசிப்போருடைய உளப்பாடாக ஆங்கிலாக்கம் தருக?

 purport

  1. மறித்தாக்கம் ஆங்கிலாக்கம் தருக?

transform

  1. Poetic inversion என்பதன் தமிழாக்கம் என்ன?

 கவிதை மறுதலைத்தொடர்

  1. நம்பி நெடுஞ்செழியனுடைய சாவு சடங்கு பற்றி பாடல் பாடியவர்?

பேரெயின் முறுவலார்

  1. “இடுகவொன்றோ,சுடுகவொன்றோ; படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே”எனும் பாடல் வரி இடம்பெற்ற நூல் எது ?

 புறநானூறு

  1. திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?

தி சு நடராசன்

  1. தி சு நடராசன் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்த இடங்கள்?

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம் ,திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

  1. தி சு நடராசன் எழுதிய நூல்கள் என்னென்ன?

கவிதையெனும் மொழி ,திறனாய்வு கலை, தமிழ் அழகியல் ,தமிழின் பண்பாட்டு வெளிகள்

  1. “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 தண்டியலங்காரம்

  1. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் என்னென்ன?

தண்டியலங்காரம் மாறனலங்காரம் குவலயானந்தம்

  1. அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் என்னென்ன?

தொல்காப்பியம் வீரசோழியம் இலக்கண விளக்கம் தொன்னூல் விளக்கம் முத்துவீரியம்

  1. வீரசோழியம் நூல் யாருடைய பெயரால் இயற்றப்பட்டது? வீரராஜேந்திர சோழன்
  2. வீரசோழியம் நூலை இயற்றியவர்?

புத்தமித்திரர்

  1. மாறனலங்காரம் யாருடைய பெயரால் இயற்றப்பட்டது?

 நம்மாழ்வார்

  1. மாறனலங்காரம் நூலை இயற்றியவர் யார்?

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

  1. தண்டியலங்காரத்தை தழுவி தொகுக்கப்பட்ட நூல்?

இலக்கண விளக்கம்

  1. இலக்கண விளக்கம் நூலை தொகுத்து இயற்றியவர்?

 வைத்தியநாத தேசிகர்

  1. தொன்னூல் விளக்கம் நூலை இயற்றியவர் யார்?

 வீரமாமுனிவர்

  1. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி

  1. குவலயானந்தம் நூலின் மூல மொழி மற்றும் ஆசிரியர் யார்?

வடமொழி அப்பைய தீட்சிதர்

  1. குவலயானந்தம் யாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது? மீனாட்சி சுந்தர கவிராயர்
  2. முத்துவீரியம் என்பது யாரால் இயற்றப்பட்ட நூல்?

முத்துவீரிய உபாத்தியாயர்

  1. எந்த நூலைத் தழுவி தண்டியலங்காரம் இயற்றப்பட்டது? காவியதர்சம்
  2. காவியதர்சம் எந்த மொழி நூல்?

வடமொழி

  1. தண்டியலங்காரத்தின் ஆசிரியர் யார்?

தண்டி

  1. தண்டியின் காலம் என்ன?

12ம் நூற்றாண்டு

  1. தண்டியலங்காரம் எத்தனை பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது? என்னென்ன?

 3 பிரிவுகள், பொதுவியல் பொருளணியியல் சொல்லணியியல்

  1. “நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுவதே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும், வேறு வழியில்லை”என கூறியவர்?

பாரதியார்

  1. “தமிழ் தமிழ் தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க” எனக் கூறியவர்?

பாரதியார்

  1. “புதிய புதிய செய்தி புதிய புதிய யோசனை புதிய புதிய உண்மை புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்” என கூறியவர்?

பாரதியார்

  1. “நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்க சிரி” எனக் கூறியவர்?

பாரதியார்

  1. “தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது” எனக் கூறியவர்?

பாரதியார்

  1. “ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரண்டு தலைகள் என்றெழுது” எனக் கூறியவர்?

பாரதியார்

  1. வம்சமணி தீபிகை என்னும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

1879

  1. வம்சமணி தீபிகை எனும் நூலை வெளியிட்டவர் யார்?

கவி கேசரி சாமி தீட்சிதர்

  1. வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பு யாரால் எப்போது வெளியிடப்பட்டது?

இளசைமணி 2008

  1. பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு பாட்டு ஆகியவற்றை பதிப்பித்தவர் யார்?

பரலி சு நெல்லையப்பர்

  1. பாரதி நடத்திய எந்த இதழ்களில் நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்?

சூரியோதயம் கர்மயோகி

  1. நெல்லையப்பர் துணை ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணி யாற்றிய இதழ்கள்?

லோகோபகாரி ,தேசபக்தன்

  1. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்?

வ.உ.சிதம்பரனார்

  1. நெல்லையப்பர் எழுதிய கவிதை நூல்கள் என்னென்ன?

நெல்லை தென்றல், பாரதி வாழ்த்து ,உய்யும் வழி

  1. பாரதி கடிதங்கள் எனும் நூலை பதிப்பித்தவர்?

ரா.அ.பத்மநாபன்

  1. பாரதி தனது எத்தனையாவது வயதில் கல்விகற்க உதவி வேண்டிய பேரும் அரசருக்கு கவிதைக் கடிதம் எழுதினார்?

15ஆவது வயதில்

  1. பாரதி தனது மறைவிற்கு முன்னர் யாருக்குக் கடிதம் எழுதினார்?

குத்திகேசவர்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 01 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page