TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. எழுத்தாளர் ஜெயகாந்தனின் காலம் என்ன?

24.04.1934-08.04.2015

  1. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் என்னென்ன?

குடியரசுத் தலைவர் விருது, சாகித்திய அகடமி விருது, சோவியத்து நாட்டு விருது, ஞானபீட விருது

  1. ஜெயகாந்தன் எதற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றார்?

உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்காக

  1. ஜெயகாந்தன் சாகித்ய அக்கடமி விருது எதற்காக பெற்றார்?

சில நேரங்களில் சில மனிதர்கள் புதினத்துக்காக

  1. ஜெயகாந்தன் சோவியத் நாட்டு விருது எதற்காக பெற்றார்?

இமயத்துக்கு அப்பால் எனும் நூலிற்காக

  1. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?

குருபீடம், யுகசந்தி ,ஒரு பிடி சோறு ,உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும் ,தேவன் வருவாரா ,புதியவார்ப்புகள்

  1. ஜெயகாந்தன் எழுதிய குறும் புதினங்கள் என்னென்ன?

பிரளயம் ,கைவிலங்கு ,ரிஷிமூலம் ,பிரம்ம உபதேசம் ,யாருக்காக அழுதான்? ,கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு

  1. ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் என்னென்ன?

பாரீசுக்கு போ ,சுந்தரகாண்டம் ,உன்னை போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

  1. ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்புகள் என்னென்ன?

வாழ்விக்க வந்த காந்தி (பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்), ஒரு கதாசிரியரின் கதை ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)

  1. ஜெயகாந்தனின் எந்த படைப்புகள் திரைப்படம் ஆகியுள்ளன?

சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான்

  1. சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் யார்? ஜெயகாந்தன்
  2. சித்தாளு எனும் கவிதையை எழுதியவர் யார்?

நாகூர் ரூமி

  1. நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன?

முகமது ரஃபி

  1. நாகூர் ரூமி எங்கு பிறந்தார்?

 தஞ்சை மாவட்டம்

  1. நாகூர் ரூமி எந்த இதழில் எழுதத் தொடங்கினார்?

கணையாழி

  1. இதுவரை நாகூர் ரூமியின்  வெளிவந்துள்ள கவிதைத் தொகுதிகள் என்னென்ன?

 நதியின் கால்கள் ,ஏழாவது சுவை ,சொல்லாத சொல்

  1. நாகூர் ரூமி படைத்த நாவலின் பெயர் என்ன?

கப்பலுக்கு போன மச்சான்

  1. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?

திருமுழுக்கு யோவான் அல்லது அருளப்பன்

  1. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் திருமுழுக்கு யோவான் அவர்களுக்கு என்ன பெயரிட்டுள்ளார்?

கருணையன்

  1. கருணையனின் தாயார் பெயர் என்ன?

எலிசபெத் அம்மையார்

  1. “உய்முறை அறியேன்; ஓர்ந்த உணர்வினொத்து உறுப்பும் இல்லா மெய்முறை அறியேன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

தேம்பாவணி

  1. வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட எந்த மன்னரை சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியை கற்றுக்கொண்டார்?

சந்தாசாகிப்

  1. சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு என்ன பட்டம் அளித்தார்?

இஸ்மத் சன்னியாசி

  1. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்கு என்ன பொருள்?

தூய துறவி

  1. தேம்பாவணி என்பதன் பொருள் என்ன?

வாடாத மாலை என்றும்  , தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

  1. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?

கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர்  என்னும் யோசேப் (வளன்)

  1. தேம்பாவணி எத்தனை காண்டங்களையும் படலங்களையும் கொண்டது?

மூன்று காண்டங்கள் ,36 படலங்கள்

  1. தேம்பாவணி எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

3615 பாடல்கள்

  1. தேம்பாவணி எந்த காலகட்டத்தில் படைக்கப்பட்டது?

பதினேழாம் நூற்றாண்டு

  1. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி

  1. தமிழின் முதல் அகராதி எது?

சதுரகராதி

  1. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் என்னென்ன?

சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலக்கியங்கள் ,உரைநடை நூல்கள், பரமார்த்த குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள்

  1. ஒருவன் இருக்கிறான் எனும் சிறுகதையை எழுதியவர்?

கு.அழகிரிசாமி

  1. “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

மதுரைக்காஞ்சி

  1. “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி” இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள ஊர் எது?

திருவாரூர் மாவட்டத்தின் ஆலங்கானம்

  1. ஒருவன் இருக்கிறான் என்னும் கதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்

  1. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் என அழைக்கப்படுபவர்?

கு.அழகிரிசாமி

  1. சேரர்களின் பட்டப் பெயர்கள் என்னென்ன?

 கொல்லி வெற்பன் ,மலையமான்

  1. சேரர்களில் எந்த மலையை வென்றவர்கள் கொல்லி வெற்பன் என பட்டப்பெயர்கள் சூட்டிக்கொண்டனர்?

கொல்லிமலை

  1. சேரர்களில் பிற மலையை வென்றவர்கள் என்ன பட்டம் சூட்டிக் கொண்டனர்?

மலையமான்

  1. யானை சவாரி எனும் நூலின் ஆசிரியர் யார்?

பாவண்ணன்

  1. கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

திலகவதி

  1. அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் நூலின் ஆசிரியர் யார்?

முருகேசபாண்டியன்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page