TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2016 | TEST 07

Telegram Logo GIF TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2016 | TEST 07

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST

2016-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT

1.
‘குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்-எவ்வகைத் தொடர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)எதிர்மறைத் தொடர்
b)பிறவினைத் தொடர்
c)செய்வினைத் தொடர்
d)தன்வினைத் தொடர்
2.
சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)குறிஞ்சி
b)மருதம்
c)நெய்தல்
d)முல்லை
3.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று – இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)இல்பொருள் உவமை அணி
b)உருவக அணி
c)வேற்றுமை அணி
d)பிறிது மொழிதல் அணி
4.
கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை,சொத்துரிமை
b)ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்
c)மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்
d)திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது
5.
கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)வெண்தயிர்
b)சேவடி
c)செந்நெல்
d)சுடரொளி
6.
‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)இனிய சொல்
b)இனிமையற்ற சொல்
c)இழிவான சொல்
d)விரிவான சொல்
7.
வழுஉச் சொல்லற்ற தொடர் எது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை
b)கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை
c)கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை
d)கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை
8.
செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)கொண்டு கூட்டுப் பொருள்கோள்
b)அளைமறி பாப்புப் பொருள்கோள்
c)மொழி மாற்றுப் பொருள்கோள்
d)அடிமறி மாற்றுப் பொருள்கோள்
9.
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்
b)நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது
c)கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்
d)மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்
10.
வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)உள்ளுறை
b)உருவகம்
c)உவமை
d)வெளிப்படை
11.
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)தமிழர்கள் அரபு நாட்டுடனும், யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
b)சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தார்
c)தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன
d)இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது
12.
“தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)குமரகுருபரர்
b)சீத்தலைச் சாத்தனார்
c)சேக்கிழார்
d)பாரதிதாசன்
13.
சேக்கிழாரின் இயற்பெயர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)மீனாட்சி சுந்தரனார்
b)ஆனந்தரங்கம் பிள்ளை
c)அருண் மொழித்தேவர்
d)வாகீசர்
14.
குறுந்தொகைப் பாடலின் அடிவரையறை
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை
b)ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை
c)நான்கடிச் சிறுமை எட்டடிப் பெருமை
d)இரண்டடி சிறுமை பாடுபவன் மனக்கருத்து
15.
“சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது ;
சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது”
என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)மு. மேத்தா
b)சாலை. இளந்திரையன்
c)அப்துல் ரகுமான்
d)ந. பிச்சமூர்த்தி
16.
கீழ்க்காணும் சொற்களுள் ‘சூரியன்’ எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)ஞாயிறு
b)பகலவன்
c)பிரமன்
d)ஆதவன்
17.
திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப்பெயர் கண்டறிக
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)ஆதி காவியம்
b)பொய்யாமொழி
c)உத்தர வேதம்
d)தமிழ்மறை
18.
பொருத்துக :
a.அடவி 1. மான்
b.நவ்வி 2.சிலுவை
c.விசும்பு 3. காடு
d.குருசு -4. வானம்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)4 2 1 3
b)3 1 4 2
c)3 4 2 1
d)2 3 1 4
19.
‘தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும். – இக்கடித வரிகள் யாருடையது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)நேரு
b)காந்தி
c)அண்ணா
d)மு.வ.
20.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)காலதர்
b)சாளரம்
c)சன்னல்
d)கொட்டில்கள்
21.
உரிய சொல்லால் நிரப்புக :
செய்க பொருளைச்…………………………………செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)செய்யார்
b)செய்வார்
c)சென்று
d)செறுநர்
22.
இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)நற்றிணை
b)புறநானூறு
c)ஐங்குறுநூறு
d)பரிபாடல்
23.
“நெடியோன் குன்றம்” – எனப்பெறுவது
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)இமயமலை
b)திருவேங்கடமலை
c)கொல்லி மலை
d)அழகர் மலை
24.
“உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” -இப்பாடல் இடம்பெறும் நூல்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)அகநானூறு
b)புறநானூறு
c)நற்றிணை
d)திருக்குறள்
25.
“நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” – இதனைக் கூறியவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)சீத்தலைச் சாத்தனார்
b)புகழேந்திப் புலவர்
c)இளங்கோவடிகள்
d)இராமலிங்க அடிகள்
26.
‘சிங்கவல்லி’ என்ற சொல் எச்செடியைக் குறிக்கும்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)குப்பை மேனி
b)துளசி
c)கரிசலாங்கண்ணி
d)தூதுவளை
27.
“தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும்”
இவ்வடிகளில் ‘தாது’ என்பதன் பொருள்.
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)மலர்
b)மகரந்தம்
c)குளம்
d)சோலை
28.
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே
இவ்வடியிலுள்ள ‘அல்’ என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)காலை
b)மாலை
c)இரவு
d)பகல்
29.
“பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி : அதுவே நம்மொழி” என்பார்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பாரதியார்
b)தேவநேயப் பாவாணர்
c)பரணர்
d)மறைமலையடிகள்
30.
கீழ்க்கண்டவற்றுள் கரிசிலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)கீழ்வாய்நெல்லி
b)குமரி
c)பிருங்கராசம்
d)ஞானப் பச்சிலை
31.
‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)ஒட்டக்கூத்தர்
b)பரணர்
c)குமரகுருபரர்
d)பிசிராந்தையார்
32.
1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)கீழார் வெளி
b)ஆதிச்சநல்லூர்
c)மதுரை
d)திருவண்ணாமலை
33.
‘எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்’
–சிறுபாணாற்றுப்படை வரி கடையெழுவள்ளல்களுக்குப் பிறகு வள்ளன்மையைக் கொண்டவனாக யாரைக் கூறுகிறது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)நச்சினார்க்கினியர்
b)நல்லியக்கோடன்
c)கரிகாலன்
d)நக்கீரர்
34.
நீலமணி மிடற்(று) ஒருவன் போல மன்னுக பெரும நீயே -இவ்வாறு ஔவையாரால் பாடப்பெற்ற மன்னர் யார்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)குமணன்
b)கோப்பெருஞ் சோழன்
c)சோழன் கரிகாற்பெருவளத்தான்
d)அதியமான் நெடுமான் அஞ்சி
35.
பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற்குரிய வயது வரம்பு
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)14- 19
b)12-13
c)20 – 25
d)13-14
36.
கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலிசபதத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)92 படலங்கள், 5027 பாடல்கள்
b)12 சருக்கங்கள், 2330 பாடல்கள்
c)5 சருக்கங்கள், 412 பாடல்கள்
d)10 சருக்கங்கள், 894 பாடல்கள்
37.
கடற்பயணத்தின் சிறப்பை – அதை விளக்கும் நூலோடு பொருத்துக :
a.விளைந்து முதிர்ந்த விழுமுத்து – 1. பட்டினப்பாலை
b.பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி – 2. புறநானூறு
c.காற்றின் போக்கையறிந்து கலம் செலுத்தினர் – 3.மதுரைக்காஞ்சி
d.கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது போல் நாவாய் அசைந்தது – 4.அகநானூறு
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)4 3 2 1
b)3 4 2 1
c)1 2 4 3
d)3 4 1 2
38.
‘திவ்விய கவி’ என்றழைக்கப்படுபவர் யார்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)குலசேகர ஆழ்வார்
b)ஆண்டாள்
c)பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
d)பெரியாழ்வார்
39.
“சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா”? என்று கேட்டார் காந்தியடிகள்.
அப்பெண் “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார். அப்பெண் யார்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)வேலு நாச்சியார்
b)அஞ்சலையம்மாள்
c)தில்லையாடி வள்ளியம்மை
d)அம்புஜத்தம்மாள்
40.
உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பாம்பாட்டிச் சித்தர்
b)குதம்பைச் சித்தர்
c)அழுகுனிச் சித்தர்
d)கடுவெளிச் சித்தர்
41.
“பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பாரதியார்
b)பாரதிதாசன்
c)வெ. இராமலிங்கனார்
d)சுரதா
42.
‘பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)அப்துல் ரகுமான்
b)வாணிதாசன்
c)முடியரசன்
d)துரை. மாணிக்கம்
43.
மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் ;
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் – என்று பாராட்டப்படுபவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)உமறுப்புலவர்
b)அப்துல் ரகுமான்
c)ந. பிச்சமூர்த்தி
d)ஞானக் கூத்தன்
44.
தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
b)நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு
c)திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை
d)புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை
45.
‘ஞான சாகரம்’ – இதழினை அறிவுக்கடல்’ என மாற்றியவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பரிதிமாற்கலைஞர்
b)மறைமலையடிகள்
c)இரா. பி. சேதுப்பிள்ளை
d)திரு.வி.க
46.
“நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில் ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து” இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)கபிலர்
b)ஔவையார்
c)கவிமணி
d)பரணர்
47.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும் – இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது
b)பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
c)கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
d)நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
48.
‘காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே’ என்று பாடியவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)திருமூலர்
b)கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
c)பாரதியார்
d)பாரதிதாசன்
49.
“நாளை என் தாய்மொழி சாகுமானால் – இன்றே
நான் இறந்து விடுவேன்” – என்று கூறியவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)காந்தியக் கவிஞர் இராமலிங்கர்
b)மகாவித்துவான் மீனாட்சி கந்தரனார்
c)ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
d)ருசிய அறிஞர் தால்கதாய்
50.
தாயுமேது தந்தையேது
தனையர் கற்றத் தாருமேது
ஆயும்போது யாவும் பொம்ம
லாட்டமே பூலோகசூது என்று பாடியவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)மீரா
b)சாலை இளந்திரையன்
c)பாஸ்கரதாஸ்
d)பாரதிதாசன்
51.
“சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” — எனப் பெரியார் குறிப்பிடுவது
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)மணக்கொடை
b)கைம்மை ஒழிப்பு
c)மூடநம்பிக்கை
d)குழந்தைத் திருமணம்
52.
நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)நாற்சீர்
b)முச்சீர்
c)ஐஞ்சீர்
d)அறுசீர்
53.
இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துக்கள்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)உ, ஒ
b)இ, ஈ
c)அ. ஆ
d)ப,ம
54.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
ஐயோ, முள் குத்திவிட்டதே!
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)வினா வாக்கியம்
b)கட்டளை வாக்கியம்
c)உணர்ச்சி வாக்கியம்
d)செய்தி வாக்கியம்
55.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
‘சித்தன்னவாசல் ஓவியங்கள் அழகுமிக்கவை’
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)வினா வாக்கியம்
b)கட்டளை வாக்கியம்
c)உணர்ச்சி வாக்கியம்
d)செய்தி வாக்கியம்
56.
கீழ்க்காணும் சொற்களுள் ‘நிலவு’ என்னும் பொருள் குறிக்காத சொல்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)திங்கள்
b)ஞாயிறு
c)இந்து
d)மதி
57.
நெய்தல் திணைக்குரிய தெய்வம்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)இந்திரன்
b)வருணன்
c)துர்க்கை
d)திருமால்
58.
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)அவன் கவிஞன் அல்ல
b)அவன் கவிஞன் அன்று
c)அவன் கவிஞன் அல்லன்
d)அவன் கவிஞன் இல்லை
59.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
என்னால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறப்பட்டது
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)செய்வினை வாக்கியம்
b)செயப்பாட்டு வினை வாக்கியம்
c)தொடர் வாக்கியம்
d)கலவை வாக்கியம்
60.
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும் – இப்பாடலில் அடிக்கோடிட்டவையில் எவ்வகைத் தொடை நயம் இடம்பெற்றுள்ளது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)எதுகை
b)இயைபு
c)மோனை
d)தொடை
61.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
இக்குறட்பாவில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு தருக
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)உரிச்சொற்றொடர்
b)வினையெச்சம்
c)இரண்டாம் வேற்றுமைத் தொகை
d)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
62.
கீழ்க்காணும் தொடரில் வழூஉச்சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)இடப்பக்கச் சுவறில் எழுதாதே
b)இடது பக்கச் சுவரில் எழுதாதே
c)இடப்பக்கச் சுவற்றில் எழுதாதே
d)இடப்பக்கச் சுவரில் எழுதாதே
63.
கீழ்க்காணும் அடிக்கோடிட்ட சொற்களுள் முதனிலை திரிந்த தொழிற்பெயரைக் காண்க
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)அறிவறிந்த மக்கட்பேறு
b)ராமனுக்கு அடி விழுந்தது
c)முருகன் பரிசு பெற்றான்
d)மாதவி ஆடற்கலையில் சிறந்தவள்
64.
‘வந்தான்’, ‘நடந்தான்’- வேர்ச்சொல்லைச் சுட்டுக
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)வந்து, நடந்து
b)வந்த, நடந்த
c)வா, நட
d)வந்தான், நடந்தான்
65.
பின்வரும் சொற்களில் ஈறுபோதல் விதிப்படியும் இனமிகல் விதிப்படியும் புணரும் பண்புச் சொல் எது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)நிலங்கடந்தான்
b)வாழைப்பழம்
c)கருங்குயில்
d)பெரியன்
66.
‘விரல்கள் பத்தும் மூலதனம்’ என்று கூறியவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)திருமூலர்
b)தொல்காப்பியர்
c)தாராபாரதி
d)மருதகாசி
67.
தென்னிந்தியாவின் ஏதென்சு நகர் என்றழைக்கப்பெறுவது எது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)மதுரை
b)நாகர்கோவில்
c)இராமநாதபுரம்
d)திருச்சி
68.
கீழ்க்காணும் நூல்களில் எட்டுத்தொகையில் அடங்காத நூல் எது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)அகநானூறு
b)கலித்தொகை
c)ஐங்குறு நூறு
d)நெடுநல்வாடை
69.
தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)தேசியக்கொடி
b)கதரின் வெற்றி
c)தேச பக்தி
d)கதரின் இரகசியம்
70.
நானிலத்திற்குரிய ஊரின் பெயர்களைப் பொருத்துக :
a.குறிஞ்சி 1. ஆலங்காடு
b.முல்லை 2. கோடியக்கரை
c.மருதம் 3. ஆனைமலை
d.நெய்தல் 4. புளியஞ்சோலை
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)3 1 4 2
b)2 1 3 4
c)3 2 1 4
d)1 3 4 2
71.
‘ஆற்றுணா வேண்டுவ(து) இல்’- இப்பழமொழியில் உள்ள ஆற்றுணா’ என்பதன் பொருள்.
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)அரையன்
b)வழிநடைஉணவு
c)அரண்மனை
d)திருவிழா
72.
சங்க கால இலக்கியங்கள்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்
b)நன்னூலும், நம்பியகப்பொருளும்
c)கம்பராமாயணமும், பெரியபுராணமும்
d)வளையாபதியும், குண்டலகேசியும்
73.
கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமில்லாததைக் கூறுக.
I.பெருமுத்தரையர் பற்றிய குறிப்பு நாலடியாரில் உள்ளது. பழமொழியிலும் இடம்பெற்றுள்ளது.
II.கபிலர் பாடிய அறநூல் ‘இன்னா நாற்பது
III.’நான்மணிக்கடிகையில் உள்ள நூறு பாடல்களும் நான்கு நான்கு கருத்துக்களைக் கொண்டு இயங்குவது
IV.அம்மை என்னும் வனப்பின்பாற்படும் காரியாசான் இயற்றிய நூல் சிறுபஞ்சமூலம் என்பதாகும்.
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)II மட்டும் பொருத்தமற்றது
b)III மட்டும் பொருத்தமற்றது
c)IV மட்டும் பொருத்தமற்றது
d)I மட்டும் பொருத்தமற்றது
74.
“எனக்கு மிக விருப்பமான இலக்கியம்” கலிங்கத்துப்பரணியே – இப்படிக் கூறியவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)திரு. வி. கல்யாண சுந்தரம்
b)பெரியார்
c)அண்ணாதுரை
d)மு. வரதராசன்
75.
குரவைக் கூத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவி
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)தொண்டகப்பறை
b)செங்கோட்டுயாழ்
c)புல்லாங்குழல்
d)உடுக்கை
76.
“கண்ணுள் வினைஞர்” என மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப்பெறுபவர்கள்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)ஓவியக் கலைஞர்கள்
b)சிற்பக் கலைஞர்கள்
c)கட்டடக் கலைஞர்கள்
d)இசைக் கலைஞர்கள்
77.
தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களுள் மிகவும் பழமையான கோயில் உள்ள ஊர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)சுவாமிமலை
b)பிள்ளையார்பட்டி
c)திருப்பரங்குன்றம்
d)பழனி
78.
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
b)எலிக்குப் பகை பூனை, நண்டுக்குப் பகை நரியும் கொக்கும், தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்
c)கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
d)சேற்று நண்டு சேற்றைக் குழைத்து ஏற்றடைக்குதே
79.
திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் சேராத ஒருவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)தருமர்
b)ஜி.யு. போப்
c)பரிமேலழகர்
d)மல்லர்
80.
கபிலரைப் பிற கவிஞர்கள் புகழ்ந்ததைச் சரியாகப் பொருத்துக :
a. நக்கீரர் 1.’வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’
b. பெருங்குன்றூர் கிழார் 2. ‘வாய்மொழிக் கபிலன்’
c. இளங்கீரனார் 3. ‘பொய்யா நாவிற் கபிலன்’
d. மாறோக்கத்து நப்பசலையார் 4. ‘நல்லிசைக்கபிலன்’
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)2 1 4 3
b)2 4 1 3
c)3 1 4 2
d)3 4 2 1
81.
சித்தர் பாடலில் ‘கடம்’ என்பதன் பொருள் யாது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பாம்பு
b)இறுமாப்பு
c)உடம்பு
d)வேம்பு
82.
பொருட்பாலில் பகுக்கப் பெறாத இயல்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பாயிரவியல்
b)அரசியல்
c)அங்கவியல்
d)ஒழிபியல்
83.
கம்பராமாயணத்தில் அமைந்திராத காண்டம்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)அயோத்தியா காண்டம்
b)மதுரைக் காண்டம்
c)ஆரணிய காண்டம்
d)யுத்த காண்டம்
84.
தமிழகத்தின் இருண்ட காலம் என அழைக்கப்படுவது
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)நாயக்கர் காலம்
b)களப்பிரர் காலம்
c)கற்காலம்
d)உலோகக் காலம்
85.
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது” — எனும் குறளில் ‘கூகை’ என்பதன் பொருள் யாது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)ஆட்டுக்கடா
b)கோட்டான்
c)முதலை
d)யானை
86.
“அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” – என்னும் பழமொழியில் ‘அஷ்டபிரபந்தம்’ என்பது எத்தனை நூல்களைக் குறிக்கிறது?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பத்து நூல்கள்
b)பதினெட்டு நூல்கள்
c)எட்டு நூல்கள்
d)நான்கு நூல்கள்
87.
பொருத்துக
a.சிறுபஞ்ச மூலம் – 1. கணி மேதாவியார்
b.திருவிளையாடல் புராணம் – 2. முன்னுரை அரையனார்
c.பழமொழி நானூறு – 3. பரஞ்சோதி முனிவர்
d.ஏலாதி – 4. காரியாசன்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)1 2 3 4
b)1 3 2 4
c)4 2 3 1
d)4 3 2 1
88.
பொருத்துக :
ஊர் – சிறப்புப்பெயர்
a.சிதம்பரம் – 1. திருமறைக்காடு
b.வேதாரணியம் – 2. திருச்சிற்றம்பலம்
c.விருத்தாசலம் – 3. திருப்பாதிரிப்புலியூர்
d.கடலூர் – 4. திருமுது குன்றம்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)4 2 1 3
b)3 1 2 4
c)2 3 1 4
d)2 1 4 3
89.
தன் கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று பொறிக்க வேண்டுமென்று விரும்பியவர் யார்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)கால்டுவெல்
b)வீரமாமுனிவர்
c)ஜி. யூ. போப்
d)சீகன் பால்கு
90.
‘திருவேங்கடத்தந்தாதி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)குமரகுருபரர்
b)ஒட்டக்கூத்தர்
c)கம்பர்
d)பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
91.
கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I.முத்துராமலிங்கர் விருப்பத்துக்கு இணங்க மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்தார்
II.நடுவண் அரசு முத்துராமலிங்கரது அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது
III.ஆங்கில அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் ‘தேசியம் காத்த செம்மல்’ எனும் விருதளித்தது.
IV.முத்துராமலிங்கர் தம் சொத்துகள் முழுவதையும் பதினேழு பாகங்களாகப் பிரித்து,திருக்கோவில்களுக்கு எழுதி வைத்தார்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)I, III, சரியானவை
b)III, IV சரியானவை
c)II, IV சரியானவை
d)I, II சரியானவை
92.
‘தமிழுக்குக் கதி’ என்று அழைக்கப்பட்ட இரண்டு நூல்கள்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)சங்க இலக்கியம், மகாபாரதம்
b)சிலப்பதிகாரம், மணிமேகலை
c)கம்பராமாயணம், திருக்குறள்
d)தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம்
93.
“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” கூறியவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)மகாகவி பாரதியார்
b)பேரறிஞர் அண்ணாத்துரை
c)தமிழ்த்தென்றல் திரு.வி.க
d)செயங்கொண்டார்
94.
பொருத்துக :
a.மணிமேகலை1. உமறுப்புலவர்
b.தேவாரம்2. கிருஷ்ணப்பிள்ளை
c.சீறாப்புராணம் 3. சீத்தலைச்சாத்தனார்
d.இரட்சணியயாத்திரிகம்4. சுந்தரர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)3 1 4 2
b)1 2 4 3
c)3 4 1 2
d)1 4 2 3
95.
“திராவிட சாஸ்திரி” – என அழைக்கப்பட்டவர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)பரிதிமாற் கலைஞர்
b)மறைமலை அடிகள்
c)சி.வை. தாமோதரனார்
d)உ.வே. சாமிநாதர்
96.
பட்டியல் I உடன் பட்டியல் II யை பொருத்துக :
பட்டியல் | – பட்டியல் II
a.சாதியும், நிறமும் அரசியலுக்கும் இல்லை ஆன்மீகத்துக்கும் இல்லை என்றவர் – 1. கடுவெளிச் சித்தர்
b. அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும் என்றவர் – 2. ஜவஹர்லால் நேரு
c.பிறர் தாழும்படிக்கு நீ தாழ்வைப் பண்ணாதே என்றவர் – 3. பசும்பொன் முத்துராமலிங்கர்
d.ஆயிரம் முகங்கள் கொண்ட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் -4. தந்தை பெரியார்
a)1 2 4 3
b)3 4 1 2
c)2 3 1 4
d)4 2 3 1
97.
‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்’ என்று பாடியவர் யார்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)ஔவையார்
b)கம்பர்
c)பாரதியார்
d)பாரதிதாசன்
98.
பொருத்துக :
a.வினையே ஆடவர்க்குயிர் – 1. தாராபாரதி
b.உடம்பை வளர்த்தேன் ;உயிர் வளர்த்தேனே – 2. தொல்காப்பியர்
c.முந்தீர் வழக்கம் மகடூஉவோடில்லை – 3. குறுந்தொகை
d.விரல்கள் பத்தும் மூலதனம் – 4. திருமூலர்
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)3 4 1 2
b)1 2 3 4
c)3 4 2 1
d)4 3 2 1
99.
பொருத்துக :
நூலாசிரியர் – நூல்
a.சி. சு. செல்லப்பா – 1. ‘அப்பாவின் சிநேகர்’
b.பி. எஸ். இராமையா – 2. ‘வலம்புரிச் சங்கு’
c.அசோகமித்திரன் – 3. ‘எழுத்து’
d.நா. பார்த்தசாரதி – 4. ‘நட்சத்திரக் குழந்தைகள்’
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)3 4 1 2
b)3 4 2 1
c)4 3 1 2
d)1 2 3 4
100.
“அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” – இவ்வடிகளுக்குச் சொந்தக்காரர் யார்?
[ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT-2016]
a)தாயுமானவர்
b)திருமூலர்
c)இராமலிங்கர்
d)மறைமலையடிகள்

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2016 | TEST 07

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page