TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2013 | TEST 04

Telegram Logo GIF TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2013 | TEST 04  

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST


[2013]-Executive Officer, Grade-IV IN The Tamil Nadu Hindu Religious

 

1.
பின்வருவனவற்றுள் பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க: a)ஆநிரை கள்வராலோ அல்லது பகைவராலோ கவரப்படின் அது தூய்மைக் குலைச்சலாகவோ பேரிழப்பர்கவோ கருதப்பட்டது
b)ஆநிரை கள்வரால் அல்லது பகைவரால் கவரப்படின் அது தூய்மைக் குலைச்சலாகவோ அல்லது பேரிழப்பாகவோ கருதப்பட்டது
c)ஆநிரை கள்வராலோ அல்லது பகைவராலோ கவரப்படின் அது தூய்மைக் குலைச்சலாக அல்லது பேரிழப்பாகக் கருதப்பட்டது
d)ஆநிரை கள்வரால் அல்லது பகைவரால் கவரப்படின் அது தூய்மைக் குலைச்சலாகவோ பேரிழப்பாகக் கருதப்பட்டது.    
2.
வழூஉச்சொல்லற்ற தொடர் எது?   a)வலது பக்கச் சுவரில் எழுதாதே
b)வலப்பக்கச் சுவரில் எழுதாதே
c)வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே
d)வலது பக்கச் சுவற்றில் எழுதாதே    

3.
“கொம்பினை யொத்த மடப்பிடி” யார்?   a)கண்ணகி
b)சீதை
c)திரௌபதி
d)மாதவி    

4.
ANCIENT AND MODERN TAMIL POETS என்னும் நூலின் ஆசிரியர்   a)சி.என். அண்ணாதுரை
b)வேதநாயகம் பிள்ளை
c)மறைமலையடிகள்
d)உ.வே. சாமிநாதையர்    

5.
“திருவாரூர் நான்மணிமாலை” என்னும் நூலில் இடம்பெறாத பாவகை   வெண்பா
b)ஆசிரியப்பா
c)கட்டளைக் கலித்துறை
d)வஞ்சிப்பா    

6.
பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்   a)பராங்குசன்
b)தமிழ்மாறன்
c)தமிழ்வியாசர்
d)சடகோபன்    

7.
பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை இம்மூலிகை நீக்குவதால் இதற்குக் குமரி என்ற பெயருண்டு. அம்மூலிகை எது?   a)குப்பைமேனி
b)துளசி
c)கீழாநெல்லி
d)கற்றாழை    

8.
“வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” – என்று எடுத்துரைத்தவர்   a)காந்தியடிகள்
b)கல்யாணசுந்தரனார்
c)முத்துராமலிங்கர்
d)விவேகானந்தர்    

9.
பொருந்தாததைச் சுட்டுக :   a)வாதம்
b)ஏமம்
c)பித்தம்
d)சீதம்    

10.
‘தென்னவன் பிரமராயன்’ என்ற விருதிற்கு உரியவர்   a)திருநாவுக்கரசர்
b)சுந்தரர்
c)மாணிக்கவாசகர்
d)திருஞான சம்பந்தர்    

11.
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – இவ்வாறு தமிழரின் நாகரிகப் பண்பை சுட்டும் இலக்கியம்   a)நற்றிணை
b)குறுந்தொகை
c)ஐங்குறுநூறு
d)அகநானூறு    

12.
பொருத்துக : .
சொல் பொருள்
I.களபம் 1.அம்பு
II.புயம் 2. பெயர்
III.நாமம் 3. சந்தனம்
IV.பகழி 4.தோள்   a)1 2 3 4
b)2 3 4 1
c)3 4 2 1
d)4 2 1 3    

13.
தமிழகத்தில் கழுமலம் என்ற ஊரில் நிகழ்ந்த போர் வரலாற்றைக் கூறும் நூல் எது?   a)முத்தொள்ளாயிரம்
b)புறநானூறு
c)களவழி நாற்பது
d)பதிற்றுப்பத்து    

14.
புதுக்கவிதையின் தந்தை ந. பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை   a)பெட்டிக்கடை நாராயணன்
b)கிளிக்கூண்டு
c)காதல்
d)ஒளியின் அழைப்பு    

15.
சிறந்த படிமக் கவிஞர் எனப் பாராட்டப்படுபவர்   a)மயன்
b)தேவதேவன்
c)பிரமிள்
d)எஸ். வைதீஸ்வரன்    

16.
“ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை” என்று கூறும் நூல்   a)திருக்குறள்
b)சிறுபஞ்சமூலம்
c)முதுமொழிக் காஞ்சி
d)ஆசாரக்கோவை    

17.
பொருத்துக :
I.மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ 1.தெய்வப்பாடல்
II.மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே 2. குழந்தைப்பாடல்
III.ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி 3.ஏற்றப்பாடல்
IV.சந்திரரே சூரியரே – 4. திருமணப்பாடல்   a)1 2 3 4
b)3 2 4 1
c)2 3 4 1
d)2 3 1 4    

18.
பின்வரும் செய்யுள் அடியில் அமைந்துள்ள மோனைத் தொடை விகற்பம் வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்   a)ஒரூஉ மோனை
b)பொழிப்பு மோனை
c)கூழை மோனை
d)மேற்கதுவாய் மோனை    

19.
கீழ்வருவனவற்றுள் பிழையில்லாச் சொற்றொடர் எது?   a)அவளது தந்தையும் எனது மகனும் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல
b)அவள் தந்தையும் என் மகனும் கூறுவன ஏற்கத்தக்கன அல்ல
c)அவளின் தந்தையும் என் மகனும் கூறுவன ஏற்கத்தக்கது அன்று
d)அவள் தந்தையும் எனது மகனும் கூறுவது ஏற்கத்தக்கது அன்று    

20.
உரிய விடையை எழுதுக :
“இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என தம் கல்லறையில் எழுத வேண்டுமென விரும்பிய மேனாட்டு அறிஞர்
a)ஜி.யு. போப்
b)வீரமாமுனிவர்
c)சீகன்பால்கு
d)டாக்டர் கால்டுவெல்    

21.
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர் யார்?   a)ரா.பி. சேதுப்பிள்ளை
b)குணங்குடி மஸ்தான் சாகிபு
c)ஆறுமுக நாவலர்
பரிதிமாற்கலைஞர்    
22.
பொருந்தாததைக் கண்டெழுதுக: ‘
நூல் அடிகள்
a)பெரும்பாணாற்றுப்படை – 500
b)முல்லைப்பாட்டு – 103
c)மதுரைக்காஞ்சி – 872
d)பட்டினப்பாலை -301    

23.
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக : பண்புத் தொகை
a)நற்றிறம்
b)நன்மொழி
c)செம்மொழி
d)தேமொழி    

24.
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க! “நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணியராயினும்”   a)வெறுப்பூட்டுவர்
b)உதவமாட்டார்
c)துன்புறுத்துவர்
d)நட்பு கொள்ளார்    

25.
இவர்களுள் ஒருவர் இலங்கையில் பிறந்த தமிழ்க் கவிஞர்   a)தருமு சிவராமு
b)சி. மணி
c)பசுவய்யா
d)தேவதேவன்    

26.
‘பாம்பு’ என்னும் பொருளைத் தராத சொல்லைத் தேர்வு செய்க   a)பாந்தள்
b)முழை
c)உரகம்
d)பன்னகம்    

27.
பொருத்துக :
I.துளசி 1. மலப்புழுக்கள் வெளியேறும்
II.கீழாநெல்லி 2. இளைப்பு இருமல் போக்கும்
III.தூதுவளை 3. மஞ்சட்காமாலை நோய் நீங்கும்
IV.குப்பைமேனி 4. தலைவலி நீங்கும்   a)4 3 2 1
b)3 4 2 1
c)2 1 3 4
d)1 2 3 4    

28.
விடைத் தேர்க :
“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி”. என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்   a)பெருஞ்சித்திரனார்
b)பரிதிமாற் கலைஞர்
c)பாரதியார்
d)மறைமலையடிகள்    
29.
கோடிட்ட இடத்தை நிரப்புக: தமிழ்மொழி.—- —– ஒலிகளைக் கொண்டுள்ளது   a)முப்பது
b)ஐந்நூறு
c)இருநூற்று நாற்பத்தேழு
d)அறுநூறு    

30.
பொருளோடு பொருத்தமான வினையை இணைக்க
I.கூரை 1. வனைந்தான்
II.ஓலை 2. கொய்தான்
III.பானை 3.முடைந்தான்
IV.தேங்காய் 4.வேய்ந்தான்   a)4 3 1 2
b)4 3 2 1
c)3 4 1 2
d)3 4 2 1    

31.
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை   a)ஓவியக் கலை
b)இசைக்கலை
c)பேச்சுக்கலை
d)சிற்பக்கலை    

32.
“உலகியலின் அடங்களுக்கும் துறைதோறும் நூற்கள்” ‘அடங்கு’ என்னும் வேர்ச்சொல்லின் வினை எச்சத்தை தேர்ந்து எழுதுக :   a)அடங்கினான்
b)அடங்கி
c)அடங்கிய
d)அடங்கியவர்    

33.
வழுவற்ற வாக்கியம் எது?   a)மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த மாட்டைப் புலி துரத்தின
b)மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த மாடுகளைப் புலித் துரத்தின
c)மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த மாடுகளைப் புலி துரத்தியது
d)மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த மாட்டைப் புலி துரத்தியது.    

34.
வினைத்தொகை
1.சென்னிழல்
2. செந்நிழல்
3. சூழ் கடல்
4. உகுநீர்   a)1, 2, 3, 4 சரியானவை
b)1, 3, 4- சரி, 2 – தவறு
c)1,2- தவறு, 3. 4 – சரி
d)2,3, 4 – சரி, 1 – தவறு    

35.
பொதும்பர் – என்பதன் இலக்கணக் குறிப்பு – தேர்க :   a)உருவகம்
b)உம்மைத்தொகை
c)ஈற்றுப்போலி
d)ஆகுபெயர்    

36.
நூல்களை நூலாசிரியர் பெயரோடு பொருத்துக :
I நூல் II நூலாசிரியர்
I.மானவிஜயம் 1.கதிரேசஞ்செட்டியார்
II.மண்ணியல் சிறுதேர் 2.பரிதிமாற்கலைஞர்
III.மனோன்மணியம் 3.கோபால கிருஷ்ண பாரதி
IV.நந்தனார் சரித்திரம் 4.சுந்தரம் பிள்ளை   a)2 4 1 3
b)2 1 4 3
c)3 1 4 2
d)1 3 2 4    
37.
‘நேர்க்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?   a)ஒருவர் கூறியதை அவர் கூறியபடியே கூறுவது
b)மேற்கோள் குறியீடு இடம் பெறும்
c)தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்
d)முன்னிலைப் பெயர்கள், படர்க்கைப் பெயரில் மாறி அமையும்    
38.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க : – “கீழோர் ஆயினும் தாழ் உரை”   a)தாழ உரைக்க வேண்டும் – ஏன்?
b)கீழோர் எப்படி இருக்க வேண்டும்?
c)கீழோரிடம் எப்படிப் பேச வேண்டும்?
d)கீழோர்க்கு நன்மை எது?    

39.
பொருத்துக :
I.தொண்டை மண்டல சதகம் 1. வண்ணக்களஞ்சியப் புலவர்
II.பிரபுலிங்க லீலை. 2. முகமது உசைன் புலவர்
III.முகையதீன் புராணம் 3. படிக்காசுப் புலவர்
IV.பெண் புத்தி மாலை 4. சிவப்பிரகாச சுவாமிகள்   a)3 2 4 1
b)4 3 1 2
c)2 4 1 3
d)3 4 1 2    

40.
சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க :   a)சங்க காலத்தில் இசைத் தமிழ் சீரும் சிறப்பு முற்றுத் திகழ்ந்தது
b)சங்கக் காலத்தில் இசைத்தமிழ் சீரும் சிறப்பு முற்றுத் திகழ்ந்தது
c)சங்க காலத்தில் இசை தமிழ் சீரும் சிறப்பு முற்றுத் திகழ்ந்தது
d)சங்க காலத்தில் இசைத்தமிழ் சீரும் சிறப்புமுற்று திகழ்ந்தது    

41.
வழுஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க :   a)வெண்ணீர் தாவாரத்தில் ஓடியது
b)வெந்நீர் தாவாரத்தில் ஓடியது
c)வெந்நீர் தாழ்வாரத்தில் ஓடியது
d)வெண்ணீர் தாழ்வாரத்தில் ஓடியது    

42.
கீழ்க்காணும் பொருள் உணர்த்தும் உவமை
“பற்றுக்கோடற்ற”   a)மழை காணாப் பயிர்
b)கீரியும் பாம்பும்
c)அடியற்ற மரம்
d)உள்ளங்கை நெல்லிக்கனி    

43.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக:   a)முருகன் சிலப்பதிகாரத்தைப் படித்தான்
b)முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்
c)சிலப்பதிகாரம் முருகனால் புடிக்கப்பட்டது
d)சிலப்பதிகாரத்தைப் படித்தவன் முருகன்    

44.
வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க :   a)ஒருத்தி புட்டு வித்து சிலவு செய்தாள்
b)ஒருத்தி புட்டு விற்று செலவு செய்தாள்
c)ஒருத்தி பிட்டு வித்து சிலவு செய்தாள்
d)ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்    

45.
whit – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:   a)வெண்மையான
b)மாசற்ற
c)சுத்தமான
d)மிகச்சிறிய அளவு    

46.
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக :   a)பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்
b)குயில் பாட்டு பாரதியாரால் பாடப்பட்டது
c)குயில் பாட்டைப் பாடினார் பாரதியார்
d)குயில் பாட்டைப் பாடியவர் பாரதியார்    

47.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :
a)யாமம் யாப்பு யாணர் யவனர்
b)யவனர் யாணர் யாப்பு யாமம்
c)யாணர் யவனர் யாமம் யாப்பு
d)யாப்பு யாமம் யவனர் யாணர்    

48.
யான் என்னும் தன்மை ஒருமைப்பெயர் வேற்றுமை உருபேற்கும் போது இவ்வாறு திரியும்   a)என்
b)நான்
c)நின்
d)தான்    

49.
பெயர்ச்சொல்லின் வகையறிதல் : ‘
மரம்’   a)காரணச் சிறப்புப் பெயர்
b)காரணப் பொதுப்பெயர்
c)இடுகுறிப் பொதுப்பெயர்
d)இடுகுறி சிறப்புப்பெயர்    

50.
பட்டியல் -I ல் உள்ள சொற்களைப் பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து குறியீடுகளைக் கொண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : –
1 சொல் – II பொருள்
I.கேசரி 1. துன்பம்
II.பூதரம் 2. குடை
III.கவிகை 3.மலை
IV.இடர் 4. சிங்கம்   a)4 2 3 1
b)1 3 2 4
c)4 3 2 1
d)2 1 4 3    

51.
”யாமம்’ என்பது …….   a)முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது
b)நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது
c)குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது
d)மருதத் திணைக்குரிய சிறுபொழுது    

52.
குற்றியலுகரம் பயின்று வரும் சொல்   a)கயிறு
b)பயிரு
c)வரவு
d)செலவு    

53.
பின்வருவனவற்றுள் செயப்பாட்டுவினை அல்லாதது எது?   a)செல்வம் அரசர்களால் கைப்பற்றவும் படும்
b)கல்வி நுண்பொருளாகையால் கவரப்படமர்ட்டாது
c)உயர்ந்த அறிவுடையோரால் அருளிச் செய்யப்பெற்றன
d)கல்வி நுண்பொருளாகையால் வெள்ளத்தில் அழியாது    

54.
பின்வரும் விடைக்கு ஏற்ற வினாத்தொடர் எது?
செய்திப் படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்   a)நிகழ்வுகளை எங்கு கண்டுகளிக்கலாம்
b)தம் இருப்பிடத்தில் கண்டுகளிக்க கூடியன யாவை?
c)எதன் வாயிலாக நிகழ்வுகளைத் தம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்?
d)செய்திப் படங்கள் வாயிலாக எதனைக் கண்டுகளிக்கலாம்?    

55.
உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?   a)ஏறத்தாழ – 235 நாடுகள்
b)ஏறத்தாழ – 154 நாடுகள்
c)ஏறத்தாழ – 195 நாடுகள்
d)ஏறத்தாழ – 164 நாடுகள்    

56.
“பிராகுயி’ முதலிய வடபுல மொழிகளுக்கும் தாயாக விளங்குவது தமிழே” என்று கூறியவர்   a)டாக்டர் ராபர்ட் N கஸ்ட்
b)டாக்டர் ஸ்டெங் கெனோவின்
c)டாக்டர் கால்டுவெல்
d)டாக்டர் எமனோ    

57.
சிற்றிலக்கிய வகைகளைக் கூறாத பாட்டியல்   a)வரையறுத்தப் பாட்டியல்
b)பிரபந்த மரபியல்
c)பன்னிரு பாட்டியல்
d)நவநீத பாட்டியல்    

58.
கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர்”   a)நல்லார் X தீயார்
b)உபகாரம் X உபத்திரவம்
c)ஈரம் Xகாய்ந்த
d)காணுமே X காணாதே    

59.
கௌடநெறிப் புலவர் என அழைக்கப்படுபவர்   a)ஒட்டக்கூத்தர்
b)காளமேகம்
c)எல்லப்ப நாவலர்
d)எவரும் இல்லை    

60.
உரிய விடையைத் தேர்க : –
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ள வெளிநாடுகள்   a)இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
b)தென் அமெரிக்கா, கனடா, பிரான்சு
c)மொரிஷியஸ் தீவு, பினாங்குத் தீவு, பிஜித் தீவுகள்
d)அயர்லாந்து, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து    

61.
உரிய விடையைத் தேர்க :
நோய்க்கு முதற்காரணம் எது?   a)உப்பு
b)கொழுப்பு
c)சர்க்கரை
d)கார்ப்பு    

62.
இவரது சேவையைப் பாராட்டி இத்தாலி அரசு இவருக்கு சர்வதேசப் பெண்மணி விருதினை வழங்கிற்று – அப்பெண்மணி யார்?   a)கல்பனா சாவ்லா
b)கிரண்பேடி
c)திலகவதி
d)அன்னை தெரேசா    

63.
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனி தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இப்பாடலடியில் ஊன் – இணையான தமிழ்ச்சொல் எழுது.   a)உணவு
b)பிணவு
c)நிணம்
d)குணம்    

64.
பெரிய புராணத்துள் குறிப்பிடப்படும் தொகை அடியார்களின் எண்ணிக்கை யாது?   a)8 அடியார்கள்
b)9அடியார்கள்
c)10 அடியார்கள்
d)11 அடியார்கள்    

65.
சலவர்’ என்னும் சொல்லிற்கு உரிய பொருள்   a)தூய்மையானவர்
b)வஞ்சகர்
c)மென்மையானவர்
d)கடுமையானவர்    

66.
கீழுள்ளவற்றுள் பரஞ்சோதி முனிவர் இயற்றாத நூல் எது?   a)திருவிளையாடற் புராணம்
b)திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா
c)மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி
d)நான்முகன் அந்தாதி    

67.
உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று முத்தாய்ப்பாய் நம் உள்ளத்தில் நறுந்தேனைப் பெய்வித்தவர்   a)அயோத்திதாசப் பண்டிதர்
b)மாயூரம் வேதநாயகம் பிள்ளை
c)ந.மு. வேங்கடசாமி நாட்டார்
d)உ.வே. சுவாமிநாத ஐயர்    

68.
கீழ்க்காண்பவர்களுள் சீட்டுக்கவி’ எழுதியவர்   a)நாமக்கல் கவிஞர்
b)சுப்பிரமணிய பாரதியார்
c)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
d)உ.வே. சுவாமிநாத ஐயர்    

69.
‘நரம்பின் மறை’ என்று இசையைப் பற்றிக் குறிப்பிடும் நூல்   a)நன்னூல்
b)தேவாரம்
c)தொல்காப்பியம்
d)திருவாசகம்    

70.
இந்தியாவின் பெப்பிசு’ என அழைக்கப்படுபவர்   a)அறிஞர் அண்ணா
b)ஜவகர்லால் நேரு
c)மு. வரதராசனார்
d)ஆனந்தரங்கர்    

71.
“நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ” இச்செய்யுளில் வந்துள்ள அவல்’ என்ற சொல்லின் பொருள் என்ன?   a)பள்ளம்
b)மேடு
c)பொரி வகை
d)அரிசி வகை    

72.
கடலைக் குறிக்காதச் சொல்லைக் கண்டறிக :   a)பெளவம்
b)புணை
c)புணரி
d)பரவை    

73.
பெரியபுராணம் காட்டும் முப்பொருட்கள் என திரு.வி.க. பட்டியலிடுபவை   a)அன்பு, அறிவு, ஆனந்தம்
b)பக்தி, பணிவு, பாசம்
c)உலகம், உயிர், கடவுள்
d)தெய்வம், பக்தி, பூசை    

74.
கவிஞர் தாரா பாரதி எழுதாத கவிதை நூல் இது.   a)புதிய விடியல்கள்
b)இது எங்கள் கிழக்கு
c)சொந்தச் சிறைகள்
d)இன்னொரு சிகரம்    

75.
மும்பையில் 1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தைத் தோற்றுவித்தவர் இவர்   a)அண்ணல் அம்பேத்கார்
b)மகாத்மா காந்தி
c)சர்தார் வல்லபாய் பட்டேல்
d)வினோபா பாவே    

76.
பின்வரும் சொற்களில் அமைந்த எழுத்துக்கள் பிறக்குமிடம் அறிந்து பொருத்துக :
I.மென்மை – 1. மார்பு
II.வளையல் – 2. மூக்கு
III.காக்கை – 3. கழுத்து
IV.கஃறீது – 4.மார்பும் தலையும்   a)3 2 1 4
b)2 3 1 4
c)2 3 4 1
d)4 2 1 3    

77.
‘வீ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி குறிக்காத பொருள்   a)காற்று
b)மலர்
c)கொல்
d)பறவை    

78.
சொல்லும் பொருளும் பொருத்துக
I.கா – 1.பெருமை
II.கூ – 2.செயல்
III.கை – 3.நிலம்
IV.கோ – 4.காப்பாற்று   a)1 3 2 4
b)4 3 2 1
c)2 3 4 1
d)3 2 1 4    

79.
வெண்பாவின் இலக்கணத்தை முதலிலும் ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஈற்றிலும் பெற்று வருவது   a)இணைகுறள் ஆசிரியப்பா
b)கலிப்பா
c)மருட்பா
d)குறள்வெண் செந்துறை    

80.
பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைக் கண்டெடு :
வெற்பு – வெட்பு   a)கல் – சும்மா
b)மலை – சூடு
c)நோய் – மலை
d)வெறுப்பு- விருப்பு    

81.
“தான் அதைச் சம்புவின் கனி என்று
ஆசை தடங்கையில் எடுத்து முன் பார்த்தான்” இவ்வரிகளில் இடம்பெறும் கனி   a)மாங்கனி
b)நாவற்கனி
c)நெல்லிக்கனி
d)கொய்யாக்கனி    

82.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :   a)குமுதம், குயில், குவளை, குறவன்
b)குயில், குவளை, குமுதம், குறவன்
c)குறவன், குமுதம், குயில், குவளை
d)குவளை, குறவன், குயில், குமுதம்    

83.
சரியான விடையைக் கண்டறி : தில்லையாடி வள்ளியம்மை குறித்து காந்தி அடிகள் இந்தியன் ஒப்பீனியன் இதழில் கூறியுள்ளது   a)வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்
b)வள்ளியம்மை சிறைத் தண்டனைக்கு வருந்தவில்லை
c)வள்ளியம்மை உடல் நலிவுற்றுள்ளார்
d)நம்பிக்கை தான் வள்ளியம்மையின் ஆயுதம்    

84.
பொருத்தமான விடையைக் கண்டுபிடி :
நாட்டுப்புறப் பாடல்கள் எனப்படுபவை
a)கிராமியப் பாடல்கள்
b)நாடோடிப் பாடல்கள்
c)வாய்மொழிப் பாடல்கள்
d)இவை அனைத்தும்    

85.
பொருந்தாக் கூற்றைத் தேர்க :
இராணி மங்கம்மாள் தன் ஆட்சிக் காலத்தில் தன் படைத்தளபதி நரசப்பையன் தலைமையில்   a)திருவிதாங்கூர்ப் போரில் வெற்றி பெற்றார்
b)தஞ்சை மன்னரால் கைப்பற்றப்பட்ட பகுதியை மீட்டெடுத்தார்
c)மைசூர் மீது படையெடுக்க தஞ்சை – மதுரை கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார்
d)முகலாயரோடு போரிட்டு வெற்றி பெற்றார்    

86.
‘தானியாகு பெயர் அல்லாத சொற்றொடர்   a)கழல் பணிந்தான்
b)இளநீர் சீவினான்
c)பாலை இறக்கினான்
d)மோர் குடித்தான்    

87.
மகர குறுக்கம் பயின்று வராத சொல்
a)வரும் வள்ளல்
b)போன்ம்
c)கேணம்
d)தரும் செல்வர்    
88.
கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் அடியில் அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக :
சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்   a)பண்புத் தொகை, உருவகம்
b)பண்புத்தொகை, வினையெச்சம்
c)பண்புத்தொகை, வினைத்தொகை
d)பண்புத்தொகை, பண்புத்தொகை    

89.
நில் – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரைத் தேர்ந்தெடு :   a)நின்று
b)நின்ற
c)நிற்க
d)நிற்றல்    

90.
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத தொடரைக் கண்டறிக
‘ஆகுபெயர்’   a)உலகு சிரித்தது
b)விருந்து வந்தது
c)வெற்றிலை நட்டான்
d)பழம் உண்டான்    

91.
பொருந்தா இணையைக் கண்டறிக   a)நூல் -வரை
b)தாள் -வணங்கு
c)களை – பறி
d)நார் -கிழி    

92.
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தது அந்தக்காலம் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக…   a)தன்வினை
b)செய்தி வாக்கியம்
c)நேர்க்கூற்று வாக்கியம்
d)கலவை வாக்கியம்    

93.
வாகீசர் என்றழைக்கப்படும் சான்றோர் யார்?   a)திருநாவுக்கரசர்
b)திருஞானசம்பந்தர்
c)சுந்தரர்
d)மாணிக்கவாசகர்    

94.
நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்   a)பரிபாடல்
b)கலித்தொகை
c)புறநானூறு
d)அகநானூறு    
95.
வாக்கியங்களைக் கவனி :
கூற்று : அனைவரும் தாய்மொழியைப் போற்றுக.
காரணம் (R) : விழைவு வேண்டுதல், வாழ்த்தல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும்
வாக்கியம் வியங்கோள் வாக்கியம்
இவற்றுள் :   a)மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல
b)சரி. ஆனால் (R) தவறு
c)மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கம்
d)(A0தவறு, ஆனால் (R) சரி.    

96.
பெயர்ச்சொல்லின் வகை அறிக : ‘கேண்மை’   a)குணப்பெயர்
b)இடப்பெயர்
c)காலப்பெயர்
d)சினைப்பெயர்    

97.
பொருத்துக :
I.SHELL AC – 1 கிளிஞ்சல் உயிரி
II.SHELL, FISH – 2 அரக்கு
III.SHELVE – 3 மேல் ஓடு
IV.SHELL – 4 தள்ளிப்போடு   a)2 1 4 3
b)4 3 2 1
c)3 4 1 2
d)2 4 1 3    

98.
Forfend – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது தவறானது?   a)தவிர்
b)விலக்கு
c)ஒன்று சேர்
d)வேறுபக்கமாகத் திரும்பு    

99.
பொருத்தம் இல்லாச் சொல்லைத் தேர்வு செய் :   a)Cajole – மருட்டி இசைவி
b)Cajolement – மருட்டி வசப்படுத்துதல்
c)Catifi – இணங்கச் செய்
d)Cajolery – பசப்புதல்    

100.
பொருந்தா இணையைக் கண்டறிக :   a)PERCHANCE – அநேகமாக
b)PERFORATOR – துளையிடுபவர்
c)PERFORM – துளை
d)PERFECT – முழு நிறைவு .    

 


TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2012 | TEST 04

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page