TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. மயிலை சீனி வெங்கடசாமி எப்போது எங்கு பிறந்தார்?

 16.12 .1900 சென்னை மயிலாப்பூர்

  1. மயிலை சீனி வேங்கடசாமியின் தந்தை பெயர் என்ன?

சீனிவாசன்

  1. யார் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றியதன் ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி கிறித்துவமும் தமிழும் என்னும் நூலை எழுதினார்?

 ச.த.சற்குணர்

  1. மயிலை சீனி வெங்கடசாமி முதல் நூல் எது?

கிறித்துவமும் தமிழும்

  1. மூன்றாம் நந்திவர்மன் என்னும் மன்னனை பற்றி எழுதப்பட்ட முதல் நூல் யாரால் எழுதப்பட்டது?

மயிலை. சீனி வேங்கடசாமி

  1. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய இந்த நூல் கவின் கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூலாகும்?

தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

  1. “5 அடிக்கு உட்பட்ட குறள் வடிவம் ;அகன்ற நெற்றி என மயிலை சீனி வேங்கடசாமி பற்றி குறிப்பிட்டவர் யார்?

நாராண துரைக்கண்ணன்

  1. மயிலை சீனி வேங்கடசாமி எந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளை சொற்பொழிவு ஒன்றினை நிகழ்த்தினார்?

1962

  1. மயிலை சீனி வேங்கடசாமி மறைந்துபோன எத்தனை நூல்களை தொடர்பான குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்?

333 நூல்கள்

  1. “தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்கெட  லாற்றா அண்ணல் வேங்கட சாமி என்பேன்” எனக் கூறியவர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன்

  1. சீனி வேங்கடசாமி  எந்த இதழில் சொல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்?

செந்தமிழ்ச்செல்வி

  1. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வு கட்டுரைகள் எந்த தொகுப்பாக வெளியிடப்பட்டது?

அஞ்சிறைத் தும்பி

  1. மயிலை சீனி வெங்கடசாமி எந்த மொழிகளில் பயிற்சி உடையவர்?

மலையாளம் ,கன்னடம் ,சமஸ்கிருதம் ,பாலி,ஆங்கிலம்

  1. மயிலை சீனி வேங்கடசாமி மகேந்திரவர்மன் இயற்றிய எந்த நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழ் ஆக்கியுள்ளார்?

மத்தவிலாசம்

  1. “மயிலை சீனி வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர் எல்லோருடைய கூட்டுறவை பொன்னேபோல் போற்றுபவர் “என புகழாரம் சூட்டியவர் யார்? 

சுவாமி விபுலானந்த அடிகள்

  1. எந்த ஆண்டு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டி கேடயம் வழங்கியது?

1962

  1. மயிலை சீனி வெங்கடசாமிக்கு எந்தப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது அளித்தது?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

  1. அறிஞர்கள் பலர் கூடி மயிலை சீனி வெங்கடசாமிக்கு என்ன பட்டத்தை வழங்கினர்?

ஆராய்ச்சிப் பேரறிஞர்

  1. சங்ககால பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானை சின்னத்தை கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர்?

மயிலை சீனி வேங்கடசாமி

  1. மயிலை சீனி வேங்கடசாமி இயற்றிய நூல்கள் என்னென்ன?

கிறித்துவமும் தமிழும் பௌத்தமும் தமிழும் சமணமும் தமிழும் மகேந்திரவர்மன் நரசிம்மவர்மன் மூன்றாம் நந்திவர்மன் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் தமிழர் வளர்த்த அழகு கலைகள் தமிழ்நாட்டு வரலாறு சாசன செய்யுள் மஞ்சரி, மறைந்து போன தமிழ் நூல்கள்

  1. முகம் என்னும் கவிதை எந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது?

 சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

  1. சுகந்தி சுப்ரமணியன் எந்த ஊரை சேர்ந்தவர்?

கோவை புறநகரின் ஆலந்துறை

  1. சுகந்தி சுப்ரமணியனின் கவிதைகள் என்ன தொகுப்புகளாக வெளிவந்துள்ளன?

புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம்

  1. “நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மீன்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

இரட்சணிய யாத்திரிகம்

  1. திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த எந்த ஆன்மீக இதழில் இரட்சண்ய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?

 நற்போதகம்

  1. இரட்சணிய யாத்திரிகம் எந்த ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது?

1894

  1. எந்த நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டது?

பில்கிரிம்ஸ் புரோகிரஸ்

  1. பில்கிரிம்ஸ் புரோகிரஸ்  எனும்  ஆங்கில நூலை எழுதியவர் யார்?

ஜான் பனியன்

  1. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

 3766

  1. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களைக் கொண்டது?

ஐந்து

  1. இரட்சணிய யாத்திரிகம் என்னென்ன பருவங்களைக் கொண்டது?

ஆதி பருவம் ,குமார ப்பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம்

  1. இரட்சணிய யாத்திரிகம் நூலை எழுதியவர் யார்?

எச்.ஏ.கிருட்டிணனார்

  1. எச்.ஏ.கிருட்ணனார் எழுதிய நூல்கள் என்னென்ன?

போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம்

  1. கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?

எச்.ஏ.கிருட்டிணனார்

  1. பொதினி மலையை ஆட்சி செய்தவன் யார்?

பேகன்

  1. பறம்பு மலையை ஆட்சி செய்தவன் யார்?

 பாரி

  1. மலையமான் நாட்டை ஆட்சி செய்தவன் யார்?

 காரி

  1. பொதிய மலையை ஆட்சி செய்தவன் யார்?

ஆய்

  1. தகடூரை ஆட்சி செய்தவன் யார்?

அதிகன்

  1. நளிமலையை ஆட்சி செய்தவன் யார்?

நள்ளி

  1. கொல்லிமலையை ஆட்சி செய்தவன் யார்?

ஓரி

  1. பேகனின் ஊர் எது?

பொதினி என்று அழைக்கப்பட்ட ஆவினன்குடி, தற்போது பழனி

  1. பாரி நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பிரான்மலை

  1. பிரான்மலை எங்கு உள்ளது?

சிங்கம்புணரி அருகில் ,திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை மாவட்டம்

  1. மலையமான் திருமுடிக் காரியின் ஊர் எது?

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர்

  1. ஆய் நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அகத்தியர் மலை

  1. அகத்தியர் மலை தற்போது எங்கு உள்ளது?

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளும்

  1. தகடூர் என்று அழைக்கப்பட்ட தர்மபுரியை தலைநகராக கொண்டு விளங்கிய பகுதி எது?

அதிகமான நாடு

  1. எந்த மலைப் பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை அவ்வையாருக்கு அதியமான் கொடுத்ததாக கூறப்படுகிறது?

பூரிக்கல்

  1. நள்ளியின் நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெடுங்கோடு மலை முகடு என அழைக்கப்பட்டு தற்போது உதகமண்டலம்
  2. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையும் அதனை சுற்றி உள்ள பல ஊர்களும் யாருடைய நாடு?

ஓரியின் நாடு

  1. “அறிமடமும் சான்றோர்க்கு அணி” எனக் கூறும் நூல் எது?

பழமொழி நானூறு

  1. முதிர மலை ஆட்சி செய்த குறுநில மன்னன் யார்?

குமணன்

  1. குமரனை நாடிப் பரிசில் பெற வந்தவர் யார்? பெருந்தலைச்சாத்தனார்
  2. தன் தலையை அரிந்து சென்று இளங்குமணனிடம்  கொடுத்து பரிசில் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொண்ட குறுநில மன்னன் யார்?

குமணன்

  1. தமிழுக்கு தலை கொடுத்த குமணவள்ளல் என போற்றப்படுபவர் யார்?

குமணன்

  1. சிறுபாணாற்றுப் படையை இயற்றியவர் யார்?

 நல்லூர் நத்தத்தனார்

  1. சிறுபாணாற்றுப்படை எந்த மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது?

ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்

  1. சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளில் எழுதப்பட்ட நூல்?

269 அடிகள்

  1. கோடை மழை எனும் சிறுகதையை எழுதியவர் யார்?

சாந்தா தத்

  1. சாந்தா தத் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

காஞ்சிபுரம்

  1. கோடை மழை எனும் இச்சிறுகதை எந்த நூலில் வெளியானது?

அமுதசுரபி

  1. சாந்தா தத் ஐதராபாத்தில் வெளியாகும் எந்த மாத இதழின் ஆசிரியராக உள்ளார்?

நிறை

  1. சாந்தா தத் எந்த மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்?

திசையெட்டும்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page