TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


 1. ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கி பணியாற்ற வேண்டும் என்பதற்கு திருவள்ளுவர் எந்த அதிகாரத்தின் வழியே வழிகாட்டுகிறார்?

 மடியின்மை

 1. “பலர் துஞ்சவும்  தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 புறநானூறு

 1. “பலர் துஞ்சவும்  தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன்” இப்புறநானூற்றுப் பாடலில் யார் யாரைப் பற்றி பாடியுள்ளார்?

 கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளி பற்றி

 1. “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

பாலகாண்டம் கம்பராமாயணம்

 1. “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” இவ்வரிகளில்? கம்பர் யாரை புகழ்ந்துள்ளார்

 தசரதன்

 1. “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

அறநெறிச்சாரம்

 1. கடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன?

 அரலை, அரி ,அலை, அழுவம் ,அளம்,அளக்கர்,ஆர்கலி,ஆழி,ஈண்டுநீர், உவரி,திரை,பானல், பெருநீர்,சுழி,நீராழி,புணர்ப்பு,தென்நீர்,திரை,பௌவம், முந்நீர்,வரி,ஓதம்,வலயம் 

 1. உரோமாபுரி சிப்பாய்கள் பாண்டிய போர் படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது?

சிலப்பதிகாரம்

 1. குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி” நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் “என குறிப்பிடும் நூல்?

பட்டினப்பாலை

 1. காவிரிப்பூம்பட்டினத்தில் மாரி காலத்து மழை மேகம் போல பொருட்கள் பண்டகசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன என்பதை “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்” எனக் கூறும் நூல் எது?

பட்டினப்பாலை

 1. பாண்டியநாட்டு தூதுக்குழு ஒன்று அகஸ்டஸ் சீசர் கி.மு 20 ஆம் ஆண்டு சந்தித்ததை பற்றி தெரிவிப்பவர் யார்?

ஸ்ட்ரேபோ

 1. புறநானூற்றில் எந்த பாடலில் யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது?

56வது பாடல்

 1. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனை தொழிலாளர்கள் ஆக்கி கட்டுப்படுத்தினான் என்ற செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

இரண்டாம் பத்து,பதிற்றுப்பத்து

 1. “கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர்”  இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

நாலடியார்

 1. “ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?

 நல்வழி

 1. நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?

ஔவையார்

 1. 126 ஒற்றை வரிகளில் துளிகள் எனும் நூலை எழுதியவர் யார்?

ஹிராக்ளிடஸ்

 1. இலக்கியத்தில் மேலாண்மை எனும் நூலை எழுதியவர் யார்?

 வெ.இறையன்பு

 1. வெ.இறையன்பு எழுதிய நூல்கள் என்னென்ன?

வாய்க்கால் மீன்கள், ஐஏஎஸ் வெற்றிப்படிகட்டுகள் ,ஏழாவது அறிவு ,உள்ளொளிப் பயணம் ,மூளைக்குள் சுற்றுலா

 1. வெ.இறையன்பு எழுதிய வாய்க்கால் மீன்கள் எனும் கவிதை நூல் எந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசை பெற்றது?

 1995

 1. அதிசய மலர் என்னும் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது?

அதன்பிறகும் எஞ்சும்

 1. அதன்பிறகும் எஞ்சும் எனும் கவிதை தொகுப்பு எழுதியவர் யார்?

தமிழ்நதி ( கலைவாணி)

 1. தமிழ் நதி எங்கு பிறந்தார் ?

 ஈழத்தின் திருகோணமலை

 1. தமிழ்நதி எழுதிய நூல்கள் என்னென்ன? 

நந்தகுமாரனுக்கு  மாதங்கி எழுதியது( சிறுகதை) சூரியன் தனித்தலையும் பகல் ,இரவுகளில் பொழியும் துயரப்பணி (கவிதைகள்)  கானல் வரி (குறுநாவல்) ஈழம் :கைவிட்ட தேசம் ,பார்த்தீனியம் (நாவல்)

 1. தேயிலைத் தோட்டப் பாட்டு எனும் கவிதையை எழுதியவர்?

முகமது ராவுத்தர்

 1. பாரத மக்களின் பரிதாப சிந்து என அழைக்கப்படுவது எது?

தேயிலை தோட்ட பாட்டு

 1. இயல்பாக தங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களை பாடல்கள் கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துவதற்கு என்னென்ன பெயர்கள்?

 வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம் ,குஜிலி நூல்கள் ,காலணா அரையணா பாட்டு புத்தகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள் ,தெருப்பாடல்கள்

 1. “காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

பிசிராந்தையார், புறநானூறு

 1. “யானை புக்க புலம் போல தானும் உண்ணான் உலகமும் கெடுமே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

பிசிராந்தையார்,புறநானூறு

 1. புறநானூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 புறம் புறப்பாட்டு

 1. புறநானூற்றை உ.வே.சா எந்த ஆண்டு பதிப்பித்தார்?

1894

 1. “the four hundred songs of war and wisdom and anthology of poems from classical Tamil the purananooru” என்ற நூலை  ஜார்ஜ் எல் ஹார்ட் எந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்?

1999

 1. பிசிர் என்பது எந்த நாட்டில் இருந்து ஓர் ஊர்?

பாண்டிய நாடு

 1. பிசிராந்தையார் யாருடைய ஆட்சிக்காலத்தில் புறநானூற்றுப் பாடலை இயற்றினார்?

அறிவுடைநம்பி பாண்டிய மன்னன்

 1. ஆறுநாட்டார் குன்றின்மீது பொறிக்கப்பட்டுள்ள சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகள் எங்கு உள்ளது?

கரூரை அடுத்த புகளூர்

 1. ஐராவதம் மகாதேவன் எந்த ஆண்டு முதல் கைத்தறித் துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்?

1962

 1. தென் தமிழ்நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளை எந்தெந்த வரிவடிவங்கள் கண்டறியப்பட்டது?

பிராம்மி, தமிழி, தரமிழி,திராவிடி

 1. “எர்லி தமிழ் எபிகிராபி”என்பது யாருடைய ஆய்வுநூல்?

ஐராவதம் மகாதேவன்

 1. மதுரைக்கு அருகே உள்ள மாங்குளம் கல்வெட்டுகள் யாருடைய காலத்தது?

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்

 1. ஐராவதம் மகாதேவன் மாங்குளம் கல்வெட்டுகளை எந்த ஆண்டு பாண்டியமன்னனுடையது எனக் கண்டுபிடித்தார்?

1965 நவம்பர் 3

 1. தமிழ்நாட்டிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர் யார்?

திரு கே வி சுப்பிரமணியனார்

 1. “சங்க காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்” என்னும் இக்கட்டுரை எந்த இதழில் வெளிவந்தது?

கல்வெட்டு

 1. ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகள் என்னென்ன? ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970 ) ஃஇந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992 ) ஃதாமரை திரு விருது (2009)

TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page