TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 10 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 10 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. தாகூரின் சிதறிய கடிதங்கள் என்னும் கடிதம் எந்த ஆண்டு எழுதப்பட்டது?
  • 9, ஆகஸ்ட் 1894
  1. தாகூர் குறிப்பிட்டுள்ள கிழக்கு வங்காளத்தின் பெரிய நதியின் பெயர் என்ன?
  • பத்மா
  1. தாகூரின் மொழியிலும் வழி முடிவிலும் என்னும் கடிதம் எந்த ஆண்டு எழுதப்பட்டது?
  • 16, செப்டம்பர் 1929
  1. கபோதாக்ஷி என்றால் என்ன?
  • புறாக்கண்ணி
  1. மயூராக்ஷி என்பது?
  • மயில் விழியாள்
  1. இச்சாமதி என்பது?
  • விருப்புடையவள்
  1. “நமது தேசப் பற்று புத்தகமூட்டையால் உருவானது தேசத்து மக்களிடம் கொண்டுள்ள பற்று காரணமாக உண்டானதல்ல” இக்கூற்றை கூறியவர் யார்?
  • தாகூர்
  1. பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என அழைக்கப்பட்டவர் யார்?
  • தாகூர்
  1. கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டவர் யார்?
  • தாகூர்
  1. தாகூர் தனது எத்தனையாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார்?
  • 16 வயது
  1. எந்த ஆண்டு தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்?
  • 1913
  1. தாகூர் எந்த நூலுக்காக நோபல் பரிசு பெற்றார்?
  • கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்புக்காக
  1. ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் வருந்திய தாகூர் தனது எந்த பட்டத்தை துறந்தார்?
  • சர்
  1. எந்த ஆண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை தாகூர் நிறுவினார்?
  • 1921
  1. தாகூர் அனைவராலும் எவ்வாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்?
  • குருதேவ்
  1. தாகூர் எழுதிய அமர் சோனார் பங்களா எனும் பாடல் எந்த தேசத்தின் நாட்டுப்பண்ணாக உள்ளது?
  • வங்காளதேசம்
  1. சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
  • த.நா.குமாரசுவாமி
  1. த.நா.குமாரசுவாமி அவர்கள் தமிழ் வங்க மொழிகளுக்கு ஆற்றிய தொண்டை பாராட்டி வங்க அரசு என்ன விருது அளித்து சிறப்பித்துள்ளது?
  • நேதாஜி இலக்கிய விருது
  1. “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” வரிகளை எழுதியவர் யார்?
  • இன்குலாப்
  1. “எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளில் எதிரொலி கேட்கும்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • இன்குலாப்
  1. இன்குலாபின் இயற்பெயர் என்ன?
  • சாகுல் அமீது
  1. இன்குலாபின் கவிதைகள் மொத்தமாக என்ன பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன?
  • ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
  1. இன்குலாப்பின் உடல் எந்த அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடை அளிக்கப்பட்டது?
  • செங்கை அரசு மருத்துவக் கல்லூரி
  1. மனோன்மணியம் நூலில் சுந்தர முனிவர் தனது அறையிலிருந்து ஆசிரமம் வரை யாரும் அறியாவண்ணம் சுரங்கம் அமைக்கும் பணியை யாருக்கு அளித்திருந்தார்?
  • நடராஜன்
  1. “எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும்ஓர் இலக்கு வேண்டும்”-இவர்கள் இடம் பெற்ற நூல் எது?
  • மனோன்மணியம்
  1. “யாரே உனைப்போல் அனுதினமும் உழைப்போர்?”-இவ்வரிகள் எதை குறிப்பிடுகிறது?
  • வாய்க்கால்
  1. “ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள?”-இவ்வரிகள் எதை குறிப்பிடுகிறது?
  • நாங்கூழ்ப்புழு
  1. தமிழ் நாடக இலக்கண நூல்கள் என்னென்ன?
  • அகத்தியம், குணநூல், கூத்தநூல், சந்தம் ,சயந்தம்,செயன்முறை, செயிற்றியம், முறுவல், மதிவாணனார் நாடக இலக்கண நூல், நாடகவியல்
  1. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?
  • மனோன்மணியம்
  1. இரகசிய வழி எனும் நூல் எந்த ஆண்டு யாரால் எழுதப்பட்டது?
  • லிட்டன் பிரபு 1866
  1. பேராசிரியர் சுந்தரனார் இரகசிய வழி எனும் நூலைத் தமிழில் எந்த ஆண்டு மனோன்மணியமாக எழுதினார்?
  • 1891
  1. மனோன்மணியம் எந்த பா வகையில் அமைந்தது?
  • ஆசிரியப்பா
  1. மனோன்மணியம் எத்தனை அங்கங்களையும் களங்களையும் கொண்டது?
  • 5 அங்கங்கள், 20 களங்கள்
  1. மனோன்மணியத்திலுள்ள கிளைக் கதை எது?
  • சிவகாமியின் சரிதம்
  1. பேராசிரியர் சுந்தரனார் எங்கு பிறந்தார்?
  • திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழை
  1. பேராசிரியர் சுந்தரனார் எப்போது பிறந்தார்?
  • 1855
  1. மனோன்மணியம் சுந்தரனாருக்கு எது  ராவ்பகதூர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது?
  • சென்னை மாகாண அரசு
  1. தமிழக அரசு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை எங்கு நிறுவியுள்ளது?
  • திருநெல்வேலி
  1. நர்த்தகி நடராஜ் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
  • அனுப்பானடி, மதுரை
  1. நர்த்தகி நடராஜ் இளமையில் யாருடைய நடனத்தால் ஈர்க்கப்பட்டார்?
  • வைஜயந்திமாலா
  1. நர்த்தகி நடராஜ் யாரிடம் பரதம் கற்றார்?
  • தஞ்சை கிட்டப்பா
  1. நர்த்தகி நடராஜ்க்கு நர்த்தகி எனும் பெயர் சூட்டியவர் யார்?
  • தஞ்சை கிட்டப்பா
  1. பழங்காலத்திலும் திருநங்கையர் இருப்பதற்கான சான்று எந்த நூலில் உள்ளது?
  • தொல்காப்பியம்
  1. வேளிர் ஆடல் முதலான 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் எந்த நூலில் உள்ளன?
  • சிலப்பதிகாரம்
  1. நர்த்தகி நடராஜ் திருவாசகம் தேவார பண்ணிசை பாடல்களை பரதமாக எங்கு நிகழ்த்தினார்?
  • ஜப்பானில் உள்ள ஒசாகா நகரம்
  1. நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள் என்னென்ன?
  • தமிழக அரசின் கலைமாமணி விருது, இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது, இந்திய அரசு தொலைக்காட்சியில் ஏ கிரேடு கலைஞர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர் ,பெரியார் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்
  1. தாமரை நெஞ்சம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
  • அகிலன்
  1. நர்த்தகி நடராஜ் நடத்தும் அறக்கட்டளையின் பெயர் என்ன?
  • வெள்ளியம்பலம் அறக்கட்டளை
  1. திருநங்கை எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
  • நர்த்தகி நடராஜ்
  1. திருநங்கைகளுள் முதன்முதலில் கடவுச்சீட்டு ,தேசிய விருது ,மதிப்புறு முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர் யார்?
  • நர்த்தகி நடராஜ்
  1. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் யார்?
  • சேலத்தைச் சேர்ந்த பிரத்திகா யாஷினி
  1. முதல் முறையாக லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட திருநங்கை  யார்?
  • மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜோயிதா மோண்டல் மாஹி
  1. தமிழ்நாட்டில் மூன்றாம் பாலின பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார்?
  • தாரிகா பானு
  1. திரு வி கல்யாண சுந்தரனார் காலம் என்ன?
  • 1883-1953
  1. “பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள் உணர்ந்து உலகை நோக்கங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்” என தனது எந்த நூலில் திரு வி கல்யாண சுந்தரனார் இளைஞர்களை அழைத்தார்?
  • இளமை விருந்து
  1. திருவிக வெஸ்லி பள்ளியில் படித்தபோது யாரிடம் தமிழ் கற்றார்?
  • நா. கதிரைவேல்
  1. திரு.வி.க யாரிடம் சைவ நூல்களைப் பயின்றார்?
  • மயிலை தணிகாசலம்
  1. திரு.வி.க என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
  • பெண்ணின்பெருமை, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை
  1. திருவிக ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் என்னென்ன?
  • தேசபக்தன் ,நவசக்தி
  1. திருவிக எந்த கல்லூரியில் தலைமை தமிழாசிரியராக இருந்தார்?
  • சென்னை ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி
  1. “ஆறாம்நிலத்தில் துளிர்த்த அறிவியல் தமிழி நீயென”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
  • ஹெச்.ஜி.ரசூல்

TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 10 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page