TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


 1. ஜீவா எப்போது மறைந்தார்?
 • ஜனவரி 18, 1963
 1. ஜீவாவின் இயற்பெயர் என்ன?
 • ப.ஜீவானந்தம்
 1. சுந்தர ராமசாமி எந்த ஊரைச் சார்ந்தவர்?
 • நாகர்கோவில்
 1. சுந்தர ராமசாமி என்ன புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்?
 • பசுவைய்யா
 1. சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகள் என்னென்ன?
 • ரத்னாபாயின் ஆங்கிலம் ,காகங்கள்
 1. பசுவய்யா எழுதிய புதினங்கள் என்னென்ன?
 • ஒரு புளிய மரத்தின் கதை ,ஜே ஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
 1. பசுவய்யா எந்த புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்?
 • செம்மீன் ,தோட்டியின் மகன்
 1. ஜீவா பற்றிய காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரை எந்த இதழில் எந்த ஆண்டு வெளிவந்தது?
 • தாமரை இதழ் 1963
 1. மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் என்னென்ன?
 • சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்
 1. புரட்சிக்கவியின் கதாநாயகன் கதாநாயகி யார்?
 • உதாரன் ,அமுதவல்லி
 1. “சாதல் எனில் இருவரும் சாதல் வேண்டும்,தவிரவதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்”வரிகளை கூறியவர் யார்?
 • அமுதவல்லி
 1. “ஒருமனிதன் தேவைக்கே இந்த தேசம் உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்”இவ்வரிகளை இயற்றியவர் யார்?
 • பாரதிதாசன்
 1. ஒரு மூல மொழி பிரதியின் அர்த்தத்தை அதற்கு இணையான இலக்கு மொழி பிரதியின் வழியாக வெளிப்படுத்துதல் எவ்வாறு அழைக்கப்படும்?
 • மொழிபெயர்ப்பு
 1. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:

அந்நியன்- ஆல்பர் காம்யு

 1. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:உருமாற்றம்-காப்கா(ஜெர்மனியிலிருந்து)
 2. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:

சொற்கள்- ழாக் பிரெவர்

 1. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:

குட்டி இளவரசன்-எக்சுபெரி-பிரெஞ்சிலிருந்து

 1. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:

உலக கவிதைகள் –பிரம்மராஜன்

 1. தமிழிலிருந்து பிற மொழிக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:

love poems from a classical Tamil anthology –ஏ.கே.ராமானுஜம்

 1. தமிழிலிருந்து பிற மொழிக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:

hues and hormonies from an ancient land- ம.லெ‌.தங்கப்பா

 1. புரட்சிக்கவி எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?
 • பில்கணீயம் வடமொழி
 1. புரட்சிக்கவியின் ஆசிரியர் யார்?
 • பாரதிதாசன்

 

 1. புரட்சிக்கவி எந்த ஆண்டு எழுதப்பட்டது?
 • 1937
 1. பாரதிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
 • புரட்சிக்கவிஞர்
 1. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?
 • பாரதிதாசன்
 1. பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
 • குடும்பவிளக்கு ,பாண்டியன் பரிசு ,இரண்ட வீடு, சேரதாண்டவம், பிசிராந்தையார் ,அழகின் சிரிப்பு
 1. பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ்?
 • குயில்
 1. பாரதிதாசனுடைய எந்த நூலுக்கு சாகித்ய அகடமி விருது வழங்கப்பட்டது?
 • பிசிராந்தையார்
 1. பாரதிதாசனின், வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற தமிழ் வாழ்த்துப் பாடலை எந்த அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது?
 • புதுவை அரசு
 1. தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் எங்கு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது?
 • திருச்சி
 1. “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” எனக் குறிப்பிடுபவர் யார்?
 • வள்ளுவர்
 1. உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்?
 • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
 1. இமயத்தில் வில்லினை பொறித்தவன் யார்?
 • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
 1. சேரலாதனின் நாடு காத்தற சிறப்பையும் கொடை சிறப்பையும் புகழ்ந்து பாடியவர் யார்?
 • குமட்டூர் கண்ணனார்
 1. குமட்டூர் கண்ணனார் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
 • இரண்டாம் பத்து
 1. “மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
 • பதிற்றுப்பத்து
 1. பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது எந்த திணையின் நோக்கம்?
 • பாடாண்திணை
 1. உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களை பாடுதல் எந்தத் துறை?
 • செந்துறைப் பாடாண்பாட்டு

 

 1. இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
 • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
 1. இரண்டாம் பத்து பாடியதற்காக குமட்டூர் கண்ணனார் பெற்ற பரிசு என்ன?
 • உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயில் பாதியையும் பரிசாகப் பெற்றார்
 1. “வீட்டுக்கு உயிர் வேலி வீதிக்கு விளக்குத்தூண் நாட்டுக்கு கோட்டை மதில் நடமாடும் கொடி மரம் நீ!” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
 • தாராபாரதி
 1. தாராபாரதி வழங்கப்பெறும் சிறப்பு பட்டம் என்ன?
 • கவிஞாயிறு
 1. “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா” என மழையைப் பார்த்து பாடியவர் யார்?
 • மகாகவி பாரதியார்
 1. “வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்” என  கட்டளையிட்டவர் யார்?
 • பாரதியார்
 1. “தேடுகல்வி இலாததோர்  ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்” எனக் கூறியவர் யார்?
 • பாரதியார்
 1. ” வல்லமை தாராயோ- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?”- இவ்வரிகளை  பாடியவர் யார்?
 • பாரதியார்
 1. “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே “என கூறியவர் யார்?
 • புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
 1. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனக் கூறியவர் யார்?
 • பாவேந்தர் பாரதிதாசன்
 1. வீட்டிற்கோர் புத்தகச்சாலை வேண்டும் எனக் கூறியவர் யார்?
 • அறிஞர் அண்ணா
 1. “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து பொதுவில் நடத்து” என கூறியவர் யார்?
 • புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
 1. “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
 • பாரதி
 1. “பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்” எனக் கூறும் நூல் எது?
 • மணிமேகலை
 1. மயிலை சீனி வெங்கடசாமின் காலம் என்ன?
 • (1900-1980)
 1. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய கட்டுரைகள் என்னென்ன?
 • ராமேஸ்வரத் தீவு, உறையூர் அழிந்து வரலாறு, மறைந்துபோன மருங்காப்பட்டினம்
 1. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல்கள் என்னென்ன?

கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு,சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன், களப்பிரர் காலத் தமிழகம்,கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும் ,பௌத்தமும் தமிழும் ,மறைந்து போன தமிழ் நூல்கள்

 1. மதுரை பல்கலைக்கழகம் மயிலை சீனி வெங்கடசாமிக்கு எந்த ஆண்டு தமிழ்ப் பேரவைச் செம்மல் எனும் பட்டம் அளித்தது?
 • 1980
 1. “சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
 • நாமக்கல் கவிஞர்
 1. “பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டு சொன்னது பூமி ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ “-இவ்வரிகளை எழுதியவர் யார்?
 • ஈரோடு தமிழன்பன்
 1. “எப்போதும் மத்தாப்பு கொளுத்தி விளையாடுகிறது மலையருவி” இவ்வரிகளை எழுதியவர் யார்?
 • கழனியூரன்
 1. ஹைக்கூ என்பதற்கு தமிழில் என்ன பெயர்?
 • துளிப்பா
 1. ஜீவா வாழ்க்கை வரலாறு என்னும் நூலை எழுதியவர் யார்?
 • கே பாலதண்டாயுதம்
 1. சொல்லாக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?

இ.மறைமலை


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page