TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. உழவு உலகிற்கு அச்சாணி என கூறியவர் யார்?
  • வள்ளுவர்
  1. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் எனக் கூறியவர் யார்?
  • பாரதியார்
  1. பனைமரத்தை எத்தனை அடி இடைவெளி விட்டு நடவேண்டும்?
  • மூன்றடிக்கு மூன்றடி
  1. பனைமரம் பலன் தர எத்தனை ஆண்டுகளாகும்?
  • பதினோரு ஆண்டுகள்
  1. ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படுவது எது?
  • பனைமரம்
  1. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதற்கு பெயர் என்ன?
  • மதிப்புக் கூட்டுப் பொருள்
  1. வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வு செய்தவர் யார்?
  • ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா
  1. “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் அதேநேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட” எனக் கூறியவர் யார்?
  • மசானபு ஃபுகோகா
  1. “விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லா காலத்திலும் திகழும்” எனக் கூறியவர் யார்?
  • மசானபு ஃபுகோகா
  1. ஐந்து விவசாய மந்திரங்கள் எனக் கூறப்படுபவை?
  • உழப்படாத நிலம், ரசாயன உரம் இல்லாத உற்பத்தி,பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி,ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்
  1. ஐந்து விவசாய மந்திரங்களை உலகுக்கு சொன்னவர் யார்?
  • மசானபு ஃபுகோகா
  1. ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
  • 1978
  1. ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூலை எழுதியவர் யார்?
  • மசானபு ஃபுகோகா
  1. உளுந்திற்கு ஊடுபயிராக விளைவிப்பது எது?
  • நெல்
  1. உளுந்தின் வேர் முடிச்சுகளில் இருக்கும் தனிமம் எது?
  • நைட்ரஜன்
  1. ஏதிலி குருவிகள் எனும் கவிதையை இயற்றியவர் யார்?
  • அழகிய பெரியவன்
  1. “…போகும் வழியெல்லாம் தூக்கணாங் குருவி கூடுகள் காற்றில் ஆடும் புல் வீடுகள்…” இவ்வரிகளை இயற்றியவர்?
  • அழகிய பெரியவன்
  1. உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?
  • மார்ச் 20
  1. அழகிய பெரியவனின் இயற்பெயர் என்ன?
  • அரவிந்தன்
  1. அழகிய பெரியவன் பிறந்த இடம் எது?
  • பேரணாம்பேட்டை, வேலூர் மாவட்டம்
  1. அரவிந்தனின் எந்த புதினம் தமிழக அரசின் விருது பெற்றது?
  • தகப்பன் கொடி
  1. அழகிய பெரியவன் எந்த ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றார்?
  • 2003
  1. அழகிய பெரியவனின் சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?
  • குறடு,நெரிக்கட்டு
  1. அழகிய பெரியவனின் கவிதைத் தொகுப்புகள் என்னென்ன?
  • உனக்கும் எனக்குமான சொல்,அரூப நஞ்சு
  1. அரவிந்தனின் கட்டுரைத் தொகுப்புகள் என்னென்ன?
  • மீள் கோணம், பெருகும் வேட்கை
  1. வேளாண்மை இலக்கியத்தின் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது?
  • பள்ளு/திருமலை முருகன் பள்ளு
  1. உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவது எந்த சிற்றிலக்கியத்தின் உட்கோள் ஆகும்?
  • பள்ளு சிற்றிலக்கியம்
  1. “… மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்…”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • திருமலை முருகன் பள்ளு
  1. “…குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்…”இவ்வரிகளில் குறிப்பிடப்படும் நாடு எது?
  • வடகரை நாடு
  1. “…இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்- முத்(து) ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்..”-இவ்வரிகளில் குறிப்பிடப்படும் நாடு எது?
  • தென்கரை நாடு
  1. திருமலை முருகன் பள்ளு நூலை இயற்றியவர் யார்?
  • பெரியவன் கவிராயர்
  1. வடகரை நாடு என அழைக்கப்படுவது?
  • திருமலை
  1. தென்கரை நாடு என அழைக்கப்படுவது?
  • குற்றாலம்
  1. பள்ளுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
  • உழத்திப் பாட்டு
  1. பள்ளு தொல்காப்பியம் குறிப்பிடும் எந்த இலக்கிய வகையைச் சாரும்?
  • புலன்
  1. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் எத்தனை?
  • 23
  1. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் எத்தனை?
  • 8
  1. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக்கருவிகள் எத்தனை
  • 10
  1. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் என்னென்ன?
  • சீரகசம்பா,பைங்குழலாள், சீதாபோகம், ரங்கஞ்சம்பா, மணல்வாரி ,அதிக்கிராதி, அரிக்ராவி, முத்துவெள்ளை, புழுகுசம்பா, சொரிகுரம்பை,புத்தன்வாரி,சிறைமீட்டான்,கார்நெல்,அரியநாயகன்,கருங்சூரை,பூம்பாளை,குற்றாலன்,பாற்கடுக்கன், கற்பூரப்பாளை, காடைகழுத்தன்,மிளகுசம்பா,பனைமுகத்தன்,மலைமுண்டன்,திருவரங்கன்,குருவைக்கிள்ளை
  1. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் என்னென்ன?
  • காரி,தொந்திகாளை,மால்காளை,மறைக்காளை,மயிலைக்காளை,மேழைக்காளை,செம்மறையான்,கருமறையான்
  1. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள் என்னென்ன?
  • கலப்பை, நுகம், பூட்டு, கயிறு ,வள்ளைக்கை ,உழக்கோல்,கொழு,கயமரம்,மண்வெட்டி,வடம்
  1. கண்காணம் என்பது எந்தத் தொழிலில் கையாளப்படும் ஒரு சொல்
  • பயிர்த் தொழில்
  1. கங்காணம் என்றால் என்ன?
  • நாள்தோறும் வயலில் நெல் அறுவடை செய்து களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவு என்பதாகும்
  1. ஒப்பனையை மேற்பார்வை செய்பவரை குறிக்கும் சொல்?
  • கண்காணி
  1. பண்புளிப் பட்டணம் எங்கு உள்ளது?
  • குற்றாலத்துக்கு அருகில் திருநெல்வேலி மாவட்டம்
  1. பண்புளிப் பட்டணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
  • பண்பை / பண்பொழில்
  1. திருமலை முருகன் பள்ளு யாரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது?
  • முருகக் கடவுள்
  1. திருமலை முருகன் பள்ளுவில் பயின்று வந்துள்ள பா வகைகள் என்னென்ன?
  • கலித்துறை கலிப்பா சிந்து
  1. திருமலை முருகன் பள்ளு இருக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்னென்ன?
  • பள்ளிசை மற்றும் திருமலை அதிபர் பள்ளு
  1. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியரின் காலம் என்ன?
  • பதினெட்டாம் நூற்றாண்டு
  1. “..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்….”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
  • ஐங்குறுநூறு
  1. “..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்….”இவ்வரிகளை ஐங்குறுநூறு நூலில் பாடியவர் யார்?
  • பேயனார்
  1. “..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்….”இவ்வரிகள் பாடப்பட்ட திணை எது?
  • முல்லைத் திணை
  1. ஐங்குறுநூற்றின் அடிவரையரை என்ன?
  • 3 அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை
  1. ஐங்குறுநூறு என்ன பாக்களால் ஆன நூல்?
  • அகவற்பா
  1. ஐங்குறுநூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
  • 500 பாடல்கள்
  1. குறிஞ்சித்திணை பாடிய புலவர் யார்?
  • கபிலர்
  1. முல்லைத்திணை பாடிய புலவர் யார்?
  • பேயனார்
  1. மருதத்திணை பாடிய புலவர்?
  • ஓரம்போகியார்
  1. நெய்தல் திணைப் பாடிய புலவர் யார்?
  • அம்மூவனார்
  1. பாலைத்திணை பாடிய புலவர் யார்?
  • ஓதலாந்தையார்
  1. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்
  • பாரதம் பாடிய பெருந்தேவனார்
  1. ஐங்குறு நூலைத் தொகுத்தவர் யார்?
  • புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  1. ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் யார்?
  • யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  1. பேயனார் இயற்றிய எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன?
  • 105 பாடல்கள்
  1. யானைடாக்டர் என்னும் சிறுகதையை எழுதியவர் யார்
  • ஜெயமோகன்
  1. எந்த விலங்கை காட்டின் மூலவர் என அழைக்கின்றனர்?
  • யானைகள்
  1. நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள் என்னென்ன?
  • கயம்,வேழம், களிறு,பிளிறு, களபம்,மாதங்கம், கைம்மா,வாரணம்,

அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா,அல்லியன், அனுபமை,ஆனை,இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி ,அஞ்சனம்

  • யானைகளில் மூன்று சிற்றினங்கள் என்ன?
  • ஆப்பிரிக்க புதர்வெளி யானைகள் ,ஆப்பிரிக்கக் காட்டு யானைகள் ,ஆசிய யானைகள்
  1. பொதுவாக யானைகள் உயிர்வாழும் ஆண்டு எவ்வளவு
  • 70 ஆண்டுகள்
  1. “..காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு..” எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?
  • கலித்தொகை
  1. யானை டாக்டர் என அழைக்கப்படுபவர் யார்?
  • வி.கிருஷ்ணமூர்த்தி
  1. வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது?
  • வேணுமேனன் ஏலீஸ் விருது
  1. வி கிருஷ்ணமூர்த்தி வேணுமேனன் ஏலீஸ் விருது விருதினை

எப்போது பெற்றார்

  • 2000
  1. தமிழகக் கோவில் யானைகளுக்கு வான புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர் யார்?
  • வி.கிருஷ்ணமூர்த்தி
  1. ஜெயமோகன் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
  • நாகர்கோவில்
  1. ஜெயமோகன் எழுதிய நாவல்கள் என்னென்ன?
  • விஷ்ணுபுரம் ,கொற்றவை
  1. ஜெயமோகன் யானையை பாத்திரமாக வைத்து எழுதிய கதைகள் என்னென்ன?
  • ஊமைச்செந்நாய், மத்தகம்
  1. யானை டாக்டர் எனும் சிறுகதை எந்த புதினத்தில் இடம்பெற்றுள்ளது?
  • அறம்
  1. தமிழிசை இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
  • ஆபிரகாம் பண்டிதர்
  1. ஆபிரகாம் பண்டிதர் எங்கு பிறந்தார்?
  • தென்காசிக்கு அருகில் உள்ள சாம்பவர் வடகரை
  1. ஆபிரகாம் பண்டிதரின் காலம் என்ன
  • 1859 – 1919
  1. ஆபிரகாம் பண்டிதர் எங்கு ஆசிரியராக பணியாற்றினார்?
  • திண்டுக்கல்
  1. ஆபிரகாம் பண்டிதர் மக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
  • பண்டுவர்
  1. ஆபிரகாம் பண்டிதர் தஞ்சையில் குடியேறிய பின்னர் மக்கள் அவரை எவ்வாறு அழைக்க தொடங்கினர்?
  • பண்டிதர்
  1. ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய அமைப்பின் பெயர் என்ன
  • சங்கீத வித்தியா மகாஜன சங்கம்
  1. ஆபிரகாம் பண்டிதருடைய இசைத் தமிழ் தொண்டின் சிகரம் எனப்படுவது எது?
  • கருணாமிர்த சாகரம்
  1. ஆபிரகாம் பண்டிதர் எத்தனை வயது வரை வாழ்ந்தார்?
  • 71 ஆண்டுகள்
  1. “… மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே ! ஒரு வெள்ளி ஓடம் போல வரும் வெண்ணிலாவே!..”இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page