TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


 1. “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என கூறியவர்?

 மணவை முஸ்தபா

 1. “ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும். உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என கூறியவர்?

மூ.கு. ஜகந்நாதராஜா

 1. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் எங்கு குறிப்பிட்டுள்ளார்?

மரபியல்

 1. “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம்வைத்தும் ..”இக்குறிப்பு காணப்படும் செப்பேடு?

சின்னமனூர்ச் செப்பேடு

 1. வடமொழி கதைகளை தழுவி தமிழில் படைக்கப்பட்ட காப்பியங்கள் என்னென்ன?

பெருங்கதை ,சீவகசிந்தாமணி ,கம்பராமாயணம் ,வில்லிபாரதம்

 1. ஷேக்ஸ்பியர் எந்த மொழியில் மொழி பெயர்ப்பின் மூலம் அறிமுகமானார்?

ஜெர்மன்

 1. கீதாஞ்சலி நூலை எழுதியவர் யார்?

ரவீந்திரநாத் தாகூர்

 1. கீதாஞ்சலி நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?

வங்கமொழி

 1. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை எதனைக் கொண்டு மதிப்பிடுவார்கள்?

 ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலை பயன்படுத்துகிறது என்பதை கொண்டு

 1. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர் யார்?

 ராகுல் சாங்கிருத்யாயன்

 1. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எந்த மொழியில் எப்போது எழுதப்பட்டது?

இந்திமொழி, 1942

 1. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை யார் தமிழில் மொழிபெயர்த்தார்?

கண முத்தையா

 1. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது?

1949

 1. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை யார் 2016ஆம் ஆண்டு மொழிபெயர்த்தவர்?

டாக்டர் என். ஸ்ரீதர், முத்து மீனாட்சி

 1. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை யார் 2018ஆம் ஆண்டு மொழிபெயர்த்தவர்?

யூமா வாசுகி

 1. ஜெர்மனியில் ஓராண்டில் பிறமொழிகளிலிருந்து எத்தனை நூல்கள் வரை மொழிபெயர்க்கப் படுகின்றன?

5000

 1. ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்படும் வரிசையில் எந்த மொழி முதலிடம் வகிக்கிறது?

ஆங்கிலம்

 1. கருத்துப் பகிர்வு தருவதால் மொழிபெயர்ப்பை எவ்வாறு குறிப்பிடுவார்கள்?

பயன்கலை

 1. “காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகள் எல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் என குறிப்பிடுபவர் யார்?

குலோத்துங்கன்

 1. “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என கூறியவர் யார்?

பாரதியார்

 1. “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” எனக் கூறியவர்?

பாரதியார்

 1. எங்குள்ள தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன?

பிரான்ஸ்

 1. “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் ,சரளிப்புத்தகம் ,புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களும் பிரான்ஸ் தேசிய நூலகத்தில் உள்ளதாக கூறியவர் யார்?

தனிநாயக அடிகள்

 1. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை யகற்றி மதிக்கும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

நீதிநெறி வெண்பா

 1. ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடையிளித்தலுக்கு என்ன பெயர்? சதாவதானம்
 2. செய்குதம்பி பாவலர் எங்கு பிறந்தார்?

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி

 1. செய்குத்தம்பி பாவலரின் காலம் என்ன?

1874 -1950

 1. செய்குதம்பி பாவலர் எந்த வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றிருந்தார்?

 15

 1. செய்கு தம்பி பாவலர் சென்னை விக்டோரியா அரங்கத்தில் எப்போது சதாவதானி பட்டம் பெற்றார்?

மார்ச் 10, 1907

 1. செய்குதம்பி பாவலரின் மணிமண்டபமும் பள்ளியும் எங்கு உள்ளது?

 இடலாக்குடி

 1. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தில் எந்த காண்டத்தில் உள்ளது?

திரு ஆலவாய் காண்டம்

 1. இடைக்காடனை அவமதித்த மன்னன் யார்?

குசேல பாண்டியன்

 1. இடைக்காடன் யாருடைய நண்பர்?

கபிலர்

 1. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுதுணர்ந்த கபிலன்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

திருவிளையாடல் புராணம்

 1. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார்?

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

 1. “மாசற விசித்த வார்புறு வள்பின்..” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

 1. திருவிளையாடற்புராணம் நூலை இயற்றியவர் யார்?

பரஞ்சோதி முனிவர்

 1. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

மூன்று :மதுரைக்காண்டம் கூடற்காண்டம் திருவாலவாய்க் காண்டம்

 1. திருவிளையாடல் புராணம் எத்தனை படலங்கள் உடையது?

 64 படலங்கள்

 1. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

திருமறைக்காடு (வேதாரண்யம்)

 1. பரஞ்சோதி முனிவரின் காலம் என்ன?

பதினேழாம் நூற்றாண்டு

 1. பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?

வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

 1. உனக்கு படிக்க தெரியாது என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?

 கமலாலயன்

 1. உனக்கு  படிக்க தெரியாது என்ற தலைப்பில் யாருடைய வாழ்க்கையை நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன்?

அமெரிக்க கருப்பின பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்

 1. கமலாலயன் இயற்பெயர் என்ன?

வே. குணசேகரன்

 1. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

ஐங்குறுநூறு

 1. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை “இவர்களில் குறிப்பிடப்படும் ஊர்?

 தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்க்கை

 1. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

வெற்றிவேற்கை

 1. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என கூறியவர்?

 பாரதியார்

 1. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என கூறியவர்?

பாரதியார்

 1. “அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன் பேத்தி நெட்டுருப் பண்ணினாள் நீதி நூல் திரட்டையே” இவ்வரிகளை எழுதியவர்?

பாரதிதாசன்

 1. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று எனும் நூலை எழுதியவர் யார்?

தமிழில் -வல்லிக்கண்ணன்

 1. குட்டி இளவரசன் என்னும் நூலை எழுதியவர் யார்?

தமிழில் -வே. ஸ்ரீராம்

 1. ஆசிரியரின் டைரி என்ற நூலை எழுதியவர் யார்?

தமிழில்- எம் பி அகிலா


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page