TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 01 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 01 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. அன்னை மொழியே எனும் கவிதையை எழுதியவர் யார்?

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  1. “அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே”எனும் வரிகளை இயற்றியவர் யார்?

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  1. “தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

கனிச்சாறு

  1. “உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?”-இவ்வரிகளை எழுதியவர் யார்?

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  1. “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்- என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்”- இவ்வரிகளை கூறியவர் யார்?

 சச்சிதானந்தன்

  1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்தக் இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பினார்?

தென்மொழி ,தமிழ்ச்சிட்டு

  1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

துரை.மாணிக்கம்

  1. பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?

உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு,எண்சுவை  எண்பது ,மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள், திருக்குறள் மெய்ப்பொருளுரை

  1. தமிழ் சொல் வளம் எனும் உரைநடையை எழுதியவர் யார்?

தேவநேயப்பாவணர்

  1. “நாடும் மொழியும் நமது இரு கண்கள்” எனக் கூறியவர் யார்?

மகாகவி பாரதியார்

  1. “தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு தமிழுக்கே சிறப்பாக உரியனவாக கருதப்படும் சொற்கள் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக்   கருதப்படும் சொற்களும் தமிழில்  உள” எனக் கூறியவர் யார்?

கால்டுவெல்

  1. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?

கால்டுவெல்

  1. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு குறிக்கப்படும்?

தாள்

  1. கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?

 தண்டு

  1. நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி அவ்வாறு அழைக்கப்படும்?

கோல்

  1. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?

 தூறு

  1. கம்பு, சோளம் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?

தட்டு அல்லது தட்டை

  1. கரும்பின் அடியை குறிக்கப் பயன்படும் சொல் எது?

கழி

  1. மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?

 கழை

  1. புளி மற்றும் வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?

அடி

  1. அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை பிரிவிற்கு பெயர் என்ன?

 கவை

  1. கவையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?

கொம்பு அல்லது கொப்பு

  1. கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?

கிளை

  1. கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?

சினை

  1. சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?

போத்து

  1. போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?

 குச்சு

  1. குச்சியின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?

இணுக்கு

  1. காய்ந்த குச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 சுள்ளி

  1. காய்ந்த சிறுகிளையின் பெயர் என்ன?

விறகு

  1. காய்ந்த கழியின் பெயர் என்ன?

 வெங்கழி

  1. காய்ந்த கொம்பும் கவையும் அடியும் எவ்வாறு அழைக்கப்படும்?

 கட்டை

  1. புளி வேம்பு முதலியவற்றின் இலையின் பெயர் என்ன?

இலை

  1. நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படும்?

தாள்

  1. சோளம், கரும்பு முதலியவற்றைறின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தோகை

  1. தென்னை மற்றும் பனை முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 ஓலை

  1. காய்ந்த தாளும் தோகையும் எவ்வாறு அழைக்கப்படும்?

சண்டு

  1. காய்ந்த இலையின் வேறு பெயர் என்ன?

 சருகு

  1. நெல் ,புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?

துளிர் அல்லது தளிர்

  1. புளி,வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?

முறி அல்லது கொழுந்து

  1. சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?

குருத்து

  1. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

கொழுந்தாடை

  1. பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படும்?

அரும்பு

  1. பூ விரியத் தொடங்கும் நிலைக்கு என்ன பெயர்?

 போது

  1. பூவின் மலர்ந்த நிலை பெயர் என்ன?

 மலர் அல்லது அலர்

  1. மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை எவ்வாறு குறிக்கப்படும்?

வீ

  1. பூ வாடிய நிலைக்கு பெயரென்ன?

செம்மல்

  1. சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?

 தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார்

  1. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் யார்?

தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார்

  1. தமிழ் தென்றல் என அழைக்கப்பட்டவர் யார்?

 திரு வி க

  1. இமைகளை மூடியபடி தமிழில் எழுதும் ஆற்றல் கொண்டவர் யார்?

திரு.வி.க

  1. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழ் இழந்துவிடக் கூடாது என திரு வி.க போல் எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் யார்?

தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார்

  1. தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார் இயற்றிய நூல்கள் என்னென்ன?

இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம் ,தனித்தமிழ் இயக்கம் ,பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை,காக்கைபாடினிய உரை,தேவநேயம்

  1. பூவோடு கூடிய இளம்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?

பூம்பிஞ்சு

  1. இளம் காயின் வேறு பெயர் என்ன?

பிஞ்சு

  1. மாம்பிஞ்சு வேறு பெயர் என்ன?

வடு

  1. பலாப்பிஞ்சு வேறு பெயர் என்ன?

 மூசு

  1. எள்பிஞ்சிற்கு வழங்கும் சொல் என்ன?

கவ்வை

  1. தென்னை பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?

குரும்பை

  1. சிறு குரும்பையின் வேறு பெயர் என்ன?

முட்டு குரும்பை

  1. முற்றாத தேங்காய் எவ்வாறு அழைக்கப்படும்?

 இளநீர்

  1. இளம்பாக்கு எவ்வாறு அழைக்கப்படும்?

நுழாய்

  1. இளநெல் எவ்வாறு அழைக்கப்படும்?

கருக்கல்

  1. வாழைப்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?

கச்சல்

  1. அவரை,துவரை முதலியவற்றின் குலையின் பெயர் என்ன?

 கொத்து

  1. கொடிமுந்திரி போன்றவற்றின் குலையின் பெயர் என்ன?

குலை

  1. வாழைக் குலையின் பெயர் என்ன?

 தாறு

  1. கேழ்வரகு,சோளம் இவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?

 கதிர்

  1. நெல், தினை முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?

அலகு அல்லது குரல்

  1. வாழைத் தாற்றின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

 சீப்பு

  1. நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படும்?

சூம்பல்

  1. சுருங்கிய பழத்தின் பெயர் என்ன?

 சிவியல்

  1. புழு ,பூச்சி அரித்த காய் அல்லது கனி எவ்வாறு அழைக்கப்படும்?

சொத்தை

  1. சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?

வெம்பல்

  1. குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படும்?

 அளியல்

  1. குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு அழைக்கப்படும்?

 அழுகல்

  1. பதராய்ப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படும்?

சொண்டு

  1. கோட்டான் உட்கார்ந்ததனால் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படும்?

 கோட்டான் காய் அல்லது கூகைக்காய்

  1. தேரை அமர்ந்ததினால் கெட்ட காய் இதன் பெயர் என்ன?

தேரைக்காய்

  1. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் இதன் பெயர் என்ன?

அல்லிக்காய்

  1. தென்னையில் கெட்ட காய் அவ்வாறு அழைக்கப்படும்?

ஒல்லிக்காய்

  1. மிக மெல்லிய பழத்தின் மேற்பகுதியை குறிக்கப் பயன்படும் சொல் எது?

தொலி

  1. திண்ணமான பழத்தின் மேற்பகுதியை குறிக்க பயன்படும் சொல்?

 தோல்

  1. வன்மையான பழத்தின் மேற்பகுதியை குறிக்கப் பயன்படும் சொல்?

தோடு

  1. மிக வன்மையான பழத்தின் மேல் பகுதியை குறிக்க பயன்படும் சொல்?

ஓடு

  1. சுரையின் ஓடு எவ்வாறு அழைக்கப்படும்?

குடுக்கை

  1. தேங்காய் நெற்றின் மேற்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

மட்டை

  1. நெல் ,கம்பு முதலியவற்றின் மூடியவாறு அழைக்கப்படும்?

உமி

  1. வரகு ,கேழ்வரகு முதலியவற்றின் ஒலி எவ்வாறு அழைக்கப்படும்?

கொம்மை

  1. நெல் புல் கம்பு முதலிய தானியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

கூலம்

  1. அவரை உளுந்து முதலிய தானியங்கள் குறிக்கப் பயன்படும் சொல்?

பயறு

  1. வேர்க்கடலை கொண்டக்கடலை முதலிய தானியங்கள் குறிக்க பயன்படும்?

 கடலை

  1. கத்தரி மிளகாய் முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?

விதை

  1. புளி,காஞ்சிரை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?

காழ்

  1. வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?

 முத்து

  1. மா,பனை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?

 கோட்டை

  1. தென்னையின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?

தேங்காய்

  1. அவரை துவரை முதலிய பயிர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

 முதிரை

  1. நெல் கத்தரி முதலியவற்றின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?

நாற்று

  1. மா புளி வாழை முதலியவற்றின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?

கன்று

  1. வாழையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?

குருத்து

  1. தென்னையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?

பிள்ளை

  1. விளாவின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?

 குட்டி

  1. பனையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?

மடலி அல்லது வடலி 

  1. நெல் ,சோளம்  முதலியவற்றின்  பசும் பயிர் எவ்வாறு அழைக்கப்படும்?

பைங்கூழ்

  1. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

மலேசியா

  1. உலகத்திலேயே முதல் முறையாக மொழிக்கு உலக மாநாடு நடத்தப்பட்டது எந்த மொழி?

தமிழ்

  1. க. அப்பாதுரையாரின் சிறப்பு பெயர் என்ன?

பன்மொழிப்புலவர்

  1. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலங்கள் என்னென்ன?

 வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி

  1. மொழி ஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?

தேவநேயபாவாணர்

  1. தமிழ் சொல் வளம் எனும் கட்டுரை எந்த நூலில் உள்ளது?

 சொல்லாய்வு கட்டுரைகள்

  1. சொல்லாய்வு கட்டுரைகள் என்னும் நூலை எழுதியவர் யார்?

 தேவநேயப்பாவணர்

  1. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்?

தேவநேய பாவணர்

  1. போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர் எது?

 லிசுபன்

  1. கார்டிலா எனும் நூல் முதன்முதலாக தமிழ் மொழியில் எந்த ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது?

1554

  1. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?

தமிழ்

  1. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்..”என ஆழிக்கு இணையாக தமிழ் கூறப்பட்டுள்ளது எந்த நூல்?

தனிப்பாடல் திரட்டு

  1. மூன்று வகையான சங்குகள் என்னென்ன?

வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம்

  1. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவதற்கு என்ன பெயர்?

இரட்டுறமொழிதல் அணி

  1. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் என்ன?

சிலேடையணி

  1. சந்தக்கவிமணி என குறிப்பிடப்படுபவர் யார்?

தமிழழகனார்

  1. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

சண்முகசுந்தரம்

  1. முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1983 செப்டம்பர்

  1. முதல் தமிழ் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?

டிசிஎம் டேட்டா   புரொடக்ட்ஸ்

  1. முதல் தமிழ்வழிக் கணினியின் பெயர் என்ன?

திருவள்ளுவர்

  1. குறிஞ்சி மலர் என்னும் நூலை எழுதியவர் யார்?

நா.பார்த்தசாரதி

  1. “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்” என உருவகத்தை பற்றி கூறியவர் யார்?

தண்டி

  1. “களம்புக துடித்து நின்ற உனக்கு வெற்றி சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகை தான் அதற்கு சான்று” இவ்வரிகளை எழுதியவர் யார்?

அறிஞர் அண்ணா

  1. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதற்கு என்ன பெயர்?

இணை ஒப்பு

  1. மழையும் புயலும் எனும் நூலை எழுதியவர் யார்?

வ. ராமசாமி

  1. உயிர் இல்லாத பொருள்களை உயிருள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வதற்கு என்ன பெயர்?

இலக்கணை 

  1. தமிழ் இன்பம் எனும் நூலை எழுதியவர் யார்?

இரா.பி.சேதுபிள்ளை 

  1. இரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கும் சிறப்பு பெயர் என்ன?

சொல்லின் செல்வர்

  1. நாட்டுப்பற்று எனும் கட்டுரை எழுதியவர் யார்?

மு.வரதராசனார்

  1. சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுவதற்கு பெயரென்ன?

எதிரிணை இசைவு

  1. “பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல -ஒரு சகாப்தம்- ஒரு கால கட்டம் -ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்” எனக் கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

  1. “இந்தியாதான் என்னுடைய மோட்சம்” எனக் கூறியவர் யார்?

மகாகவி பாரதியார்

  1. உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரை எந்த நூலில் உள்ளது?

புதிய உரைநடை

  1. புதிய உரைநடை எனும் நூலை எழுதியவர் யார்?

எழில்முதல்வன்

  1. எழில்முதல்வன் இயற்பெயர் என்ன?

மா.ராமலிங்கம்

  1. எழில்முதல்வன் எங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்?

குடந்தை அரசு ஆடவர் கல்லூரி ,பாரதிதாசன் பல்கலைகழகம் 

  1. எழில்முதல்வன் எழுதிய நூல்கள் என்னென்ன?

இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய்

  1. எழில்முதல்வன் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றார்?

 புதிய உரைநடை

  1. “வாழையும் கமுகும் தாழ்குலைத்  தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

சிலப்பதிகாரம் காடுகாண் காதை

  1. “வாழையும் கமுகும் தாழ்குலைத்  தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”இவ்வரிகளில் குறிப்பிடப்படும் சிறுமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

திண்டுக்கல்

  1. “மரமது மரத்தில் ஏறி மரமதை தோளில் வைத்து..” தனிப்பாடல் திரட்டு எழுதியவர் யார்?

சுந்தர கவிராசர்

  1. மரம் எனும் சொல்லிற்கு வழங்கப்படும் பொருள்கள் என்ன?

அரசமரம் குதிரை வேல் அரசன் புலி கருவேலம் காட்டுவழி ஆலமரம் அத்திமரம் குதிரை மாமரம்

  1. “தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” என கூறியவர் யார்?

கவிமணி தேசிய விநாயகம்

  1. “தேனினும் இனிய நற் செந்தமிழ் மொழியே” இவ்வரிகளை எழுதியவர் யார்?

கா.நமச்சிவாயர்

  1. நாம் ஏன தமிழ் காக்க வேண்டும் என் நூலின் ஆசிரியர் யார்?

முனைவர் சேதுமணி மணியன்

  1. தவறின்றித் தமிழ் எழுதுவோம் நூலின் ஆசிரியர் யார்?

மா.நன்னன்

  1. பச்சை நிழல் எனும் நூலின் ஆசிரியர் யார்?

உதயசங்கர்    


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 01 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page