TNPSC SAMACHEER NOTES | சமச்சீர் 6 தமிழ் மேற்கோள்கள் – நூல்கள் -ஆசிரியர்

Telegram Logo GIF TNPSC SAMACHEER NOTES | சமச்சீர் 6 தமிழ் மேற்கோள்கள் - நூல்கள் -ஆசிரியர்

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


 1. “கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்தே இருக்கின்றான்…”- திருவருட்பா- இராமலிங்க அடிகள்
 2. “நாய்க்கால் சிறுவிரல்போல் நன் கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார்”- நாலடியார் சமண முனிவர்கள்
 3. “ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் “-பாரதியார்
 4.  “சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்”- பாரதியார்
 5. “மனைக்கு விளக்கம் மடவாள் ; மடவாள் தனக்கு தகைசால் புதல்வர்..”- நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
 6. “மழையே மழையே வா வா- நல்ல வானப் புனலே வா வா- இவ் வையத்தமுதே வா வா”- இசையமுது பாரதிதாசன்
 7. “தலையா வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் உழுவார் எல்லாம் மலைபோல் எருதை ஓட்டிப் பொன்னேர் பூட்டவும்”- இசையமுது – பாரதிதாசன்
 8. “ஆற்றவும் கற்றார் அறிவுடையார் ;அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை…ஆற்றுணா வேண்டுவது இல்”- பழமொழி நானூறு -முன்றுறை அரையனார்
 9.   “பிளேட்டோவின் புத்தகங்கள் சுவையானவை சிந்தனையை தூண்டுபவை. கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தைத் தூண்டுபவை. அவை சுருக்கமாகவும் இருக்கும் வாசிக்க எளிதாகவும் இருக்கும்”- நேரு
 10. “எனக்கு மிகவும் பிடித்தமானவர் பெட்ரண்ட் ரஸல் அவருடைய ஆங்கிலம் அருமையானது. அறிவுப்பூர்வமான எழுத்து அவருடையது”- நேரு
 11. “வைதோரைக் கூட வையாதே இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே”- கடுவெளிச்சித்தர்
 12.  “கள்ள வேடம் புனையாதே பல கங்கையிலே உன் கடம் நனையாதே”- கடுவெளிச் சித்தர்
 13. “பிறப்பினால் வரும் கீழ்சாதி மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி மக்கள் அனைவரும் மனிதசாதி எனும் ஓர் இனமாக எண்ண வேண்டும்”-பெரியார்
 14.  “மேல் ஜாதி கீழ் ஜாதி வேற்றுமை, தீண்டாமை கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி அவசியம் எல்லோரும் கல்வி பெற வேண்டும்”- தந்தை பெரியார்
 15. “மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்கள் அதுபோல மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதிக்க வேண்டும் “-தந்தை பெரியார்
 16. “பெண்களுக்கு நகைகள் உடைகள் முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் மிக முக்கியம்”- தந்தை பெரியார்
 17. “அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் எனவே புதியவற்றை ஏற்க வேண்டும்”- தந்தை பெரியார்
 18. “நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; அயலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!”- புறநானூறு ஔவையார்
 19. “கடலில் நான் ஒரு துளி என்று நீ கரைந்து போவதில் பயனென்ன ? கடலில் நான் ஒரு முத்து என்று நீ காட்டு; உந்தன் தலைதூக்கு”- திண்ணையை இடித்து தெருவாக்கு -தாராபாரதி
 20.  “எத்தனை உயரம் இமயமலை அதில் இன்னொரு சிகரம் உனது தலை”-திண்ணையை இடித்து தெருவாக்கு -தாராபாரதி
 21. “பூமிப்பந்து என்ன விலை உன் புகழைத் தந்து வாங்கும் விலை”-திண்ணையை இடித்து தெருவாக்கு -தாராபாரதி
 22. “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வு படுத்துவது பெருங்கொடுமை. ஆண்டவன் மனிதகுலத்தை தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை ஆன்மீகத்திற்கும் இல்லை”-முத்துராமலிங்கர்
 23. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம் ”-பாரதியார்
 24.   “பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு”- முத்துராமலிங்கர்
 25.  “செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம்”-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 26. “காயும் ஒரு நாள் கனியாகும் நம் கனவும் ஒருநாள் நனவாகும்”-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 27. “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?”- இராமச்சந்திரக் கவிராயர்
 28. “நினைத்ததை எல்லாம் எழுதி வச்சது அந்தக்காலம் எதையும் நேரில் பார்த்தே நிச்சயிப்பது இந்த காலம்”-உடுமலை நாராயணகவி
 29. “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி
 30.  “ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம் ..”-குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயர்
 31. “பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும்”- அழகிய சொக்கநாதப் புலவர்

கவிஞர்கள்/ஆசிரியர்கள் – காலம்

 1. இராமலிங்க அடிகளார் 5.10. 1823 -30.01.1874
 2. உ.வே.சா 19.2.1 855 -28.4.1942
 3. பாரதியார் காலம் 11.12.1882- 11.09.1921
 4. தந்தை பெரியார் – 17.9.1879 – 24.12.1973
 5. கவிஞர் தாராபாரதி 26.2.1947 -13.5.2000
 6. பசும்பொன் முத்துராமலிங்கர் அக்டோபர் 30 1908-அக்டோபர் 30,1930
 7. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 13.04.1930-08.10.1959
 8. மேரி கியூரி – போலந்து 1867-1934
 9. உடுமலை நாராயணகவி 25.09.1899-23.05.1981
 10. அழகிய சொக்கநாதப் புலவர் – கிபி 19ஆம் நூற்றாண்டு

  நூல்கள் –ஆசிரியர்

 1. என் சரிதம் -உ.வே.சா
 2. டென் லிட்டில் பிங்கர்ஸ் – அரவிந்த குப்தா
 3. அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்- ஜானகி மணாளன்
 4. பாண்டியன் பரிசு அழகின் சிரிப்பு குடும்பவிளக்கு கவிதை நூல்கள் பாரதிதாசன்
 5. போரும் அமைதியும் -டால்ஸ்டாய்
 6. -புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு ,தாராபாரதி கவிதைகள் – கவிஞர் தாராபாரதி
 7. ஊரும்-பேரும் – ரா.பி.சேதுபிள்ளை
 8. ஜீவகாருண்ய ஒழுக்கம் மனுமுறை கண்ட வாசகம், திருவருட்பா இராமலிங்க அடிகளார்

நூல்கள் –வேறு பெயர்

 1.           நாலடியார் -நாலடி நானூறு

கவிஞர்கள்/ஆசிரியர்கள் – இயற்பெயர்கள்

 1. உ.வே.சா இயற்பெயர் வேங்கட ரத்தினம்
 2. பாரதிதாசன் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்

சிறப்பு / புனைபெயர்கள் – கவிஞர்கள்/ஆசிரியர்கள்

 1. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன்
 2. தேசியம் காத்த செம்மல் -முத்துராமலிங்க தேவர் ,பாராட்டியவர் திருவிக
 3. மக்கள் கவிஞர்- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 4. பகுத்தறிவுக் கவிராயர் -உடுமலை நாராயணகவி

கவிஞர்கள்/ஆசிரியர்கள் இடம்

 1. இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் மருதூர்
 2. உ.வே.சா உத்தமதானபுரம்
 3. பசும்பொன் முத்துராமலிங்கர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்
 4. அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர்

பெற்றோர் கவிஞர்கள்/புலவர்கள்

 1. இராமலிங்க அடிகளார் பெற்றோர் இராமையா சின்னம்மையார்
 2. ஈவே ராமசாமி பெற்றோர் வெங்கடப்பர்- சின்னத்தாயம்மாள்
 3. பசும்பொன் முத்துராமலிங்கர் பெற்றோர் உக்கிரபாண்டி தேவர் இந்திராணி

நூல்கள் – பிரிவுகள்/பாடல்கள் பாவகை

 1. நாலடியார் 400 பாடல்கள்
 2. பழமொழி நானூறு 400 பாடல்கள்

இதர :

 1. உ.வே.சா ஆசிரியர் பெயர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
 2. மீனாட்சிசுந்தரம் பிள்ளை உ.வே.சா விற்க்கு வைத்த பெயர் சாமிநாதன்
 1.   விளம்பிநாகனார் விளம்பி ஊர்பெயர், நாகனார் புலவரின் இயற்பெயர்
 2. முன்றுரை அரையனார் முன்றுறை என்பது ஊர்ப்பெயர், அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்
 3. முத்துராமலிங்கரின் ஆசிரியர் குறைவற வாசித்தான் பிள்ளை

TNPSC SAMACHEER NOTES | சமச்சீர் 6 தமிழ் மேற்கோள்கள் – நூல்கள் -ஆசிரியர்

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page