- புவிக்கோளத்தில் நீர் வளம் மிகுந்து காணப்படுவதால் இது எவ்வாறு அழைக்கப்படும்?
நீல கோளம்
- புவியின் மேற்பரப்பில் எத்தனை சதவீத நீரானது கடல் நீராக உள்ளது?
97%
- புவியின் மேற்பரப்பில் எத்தனை சதவீத நீரானது பனிப்பாறைகளாகவும், பனிமுகடுகளாகவும், ஆறுகள் ,ஏரிகள் மற்றும் குளங்களாகவும் ,நிலத்தடி நீராகவும், ஒரு சிறுபகுதி காற்றில்
நீராவியாகவும் காணப்படுகிறது?
3%
- புவியின் மீது நீரின் இயக்கமானது மேலும் கீழும் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு பெயரென்ன?
நீரியல் சுழற்சி
- நீரியல் சுழற்சியின் முக்கிய செயல்பாடுகள் என்னென்ன?
3 :ஆவியாதல், நீர் சுருங்குதல் மற்றும் மழை பொழிவு
- புவியில் காணப்படும் நீர் வளம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு நன்னீர் மற்றும் உவர் நீர்
- எது தூய்மையான நீராக கருதப்படுகிறது?
மழைநீர்
- நன்னீரின் பெரும்பகுதி என்ன நிலையில் காணப்படுகிறது ?
உறைந்த நிலையில் பனிக்கவிகைகளாகவும் (Icecap),பனியாறுகளாகவும் (Glaciers) காணப்படுகிறது
- நன்னீரின் எத்தனை சதவீத நீரானது ஆறுகள், நீரோடைகள் ,ஏரிகள் மற்றும் குளங்களில் நீர்ம நிலையில் காணப்படுகிறது?
1 %
- புவியின் மேற்பரப்பில் உள்ள நீரானது நீர்க்கொள் பாறைகள் வழியாக ஊடுருவி சென்று நிலத்தின் அடியில் சேமிக்கப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலத்தடிநீர்
- ஆயிரம் ஏரிகளின் நிலம் என அழைக்கப்படும் நாடு எது ?
பின்லாந்து
- பின்லாந்து நாட்டில் எத்தனை ஏரிகள் காணப்படுகின்றன?
1,87,888 ஏரிகள்
- நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல் மட்ட நிலைக்குப் பெயர் என்ன ?
நிலத்தடி நீர்மட்டம் (water table)
- நீர் நீர்கொள் பாறைகளின் வழியாக ஊடுருவி சென்று நீர் உட்புகாப் பாறையின் மேல் பகுதியில் தேங்கி நிற்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்க்கொள் படுகை (Aquifers)
- புவியின் வட அரைக்கோளம் எத்தனை சதவீத நிலப்பரப்பை கொண்டுள்ளது?
61%
- புவியின் தென் அரைக்கோளம் எத்தனை சதவீத நீர்ப்பரப்பை கொண்டுள்ளது?
81%
- நிலம் மற்றும் நீர் பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நில அரைக்கோளம்
- நிலம் மற்றும் நீர் பரவலின் அடிப்படையில் தென் அரைக்கோளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர் அரைக்கோளம்
- அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களை கொண்டிருப்பதால் எவை புவிக் கோளத்தின் வளக்கிண்ணமாகக் கருதப்படுகிறது?
கடல்களும் பெருங்கடல்களும்
- புவி எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது?
71%
- கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக யார் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி ‘தி டைம் இதழ்’ , “கோளத்தின் கதாநாயகன்” என்ற பட்டத்தை முதன்முதலில் வழங்கி சிறப்பித்துள்ளது?
சில்வியா ஏர்ல்
- சில்வியா ஏர்ல் எந்த நாட்டைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணர் ?
அமெரிக்கா
- பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சியாளரான ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் எந்த ஆண்டு ‘போரின் சிலுவை’ விருதை வென்றார்?
1945
- பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சியாளரான ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் எந்த ஆண்டு ‘அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம்’ விருதை வென்றார்?
1985
- கடலடி பரப்பில் என்னென்ன நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றது?
கண்டத்திட்டு (continental shelf),கண்டச் சரிவு(continental slope), கண்ட உயர்ச்சி(continental rise) ,கடலடி சமவெளிகள் அல்லது ஆபிசல் சமவெளிகள்(deep sea flair/ abyssal flyer), கடல் பள்ளம் அல்லது அகழிகள்(ocean deep), கடலடி மலைத் தொடர்கள்(oceanic ridge)
- நிலத்திலிருந்து கடலை நோக்கி மென் சரிவுடன் கடலில் மூழ்கி உள்ள ஆழமற்ற பகுதிக்குப் பெயர் என்ன?
கண்டத்திட்டு
- கண்டத்திட்டு எதற்கு புகழ் பெற்ற இடம்?
செழிப்பான மீன்பிடித் தளங்கள்
- நியூபவுண்ட்லாந்திலுள்ள கிராண்ட் பாங்க் (The Grand Bank)எதற்கு எடுத்துக்காட்டு ?
கண்டத்திட்டு
- எது ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவி சென்று கடல் புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்கு சாதகமாக உள்ளது?
கண்டத்திட்டு
- எந்தப் பகுதி ஆழ்துளை கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கும், சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சிறந்த இடமாக விளங்குகின்றது?
கண்டத்திட்டு
- இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுகளையும் உற்பத்தியையும் மேற்கொண்டு வரும் மிகப்பெரிய நிறுவனம் எது?
ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்
- கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன் சரிவுடன் ஆழ் கடலை நோக்கி சரிந்து காணப்படும் பகுதியின் பெயரென்ன?
கண்டச் சரிவு
- கண்ட மேலோட்டிற்க்கும் கடலடி மேலோட்டிற்க்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குவது எது?
கண்டச் சரிவு
- கடலடி பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுவது எந்தப் பகுதியின் சிறப்பம்சம்?
கண்டச் சரிவு
- கண்ட சரிவிற்கும் கடலடி சமவெளிக்கும் இடையில் காணப்படும் நில தோற்றத்திற்கு பெயரென்ன ?
கண்ட உயர்ச்சி
- கடலடியில் வண்டல் விசிறிகளை கொண்டுள்ள பகுதி எது?
கண்ட உயர்ச்சி
- கண்ட உயர்ச்சியிலிருந்து மத்திய கடலடி மலைத் தொடர்கள் வரை பரவியுள்ள பகுதிக்கு பெயர் என்ன?
ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி
- ஆழ்கடல் சமவெளியின் தனித்துவம் வாய்ந்த நிலத்தோற்றங்கள் என்னென்ன ?
அபிசல் குன்றுகள் ,கடல் குன்றுகள்,கடல் மட்ட குன்றுகள் , பவளப் பாறைகள் மற்றும் பவள திட்டுகள் (Atolls)
- பெருங்கடலின் மிக ஆழமான பகுதி எது?
அகழி
- அகழிகள் மொத்த கடலடி பரப்பில் எத்தனை சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறது?
7%
- பெரும்பாலான வலிமையான நில அதிர்வுகள் ,நிலநடுக்கம் மேல்மையப்புள்ளி (Epicentre) பெரும்பாலும் எந்த பகுதியில் காணப்படுகிறது?
கடலடி பள்ளம் / அகழிகள்
- உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித் துளைக்கு பெயர் என்ன?
ட்ராகன் துளை
- அப்பகுதியில் வாழும் மீனவர்களால் டிராகன் துளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தென்சீனக் கடலின் கண்
- கடல் அடியில் காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கடலடி மலைத் தொடர்கள்
- கடலடி மலைத் தொடர்கள் எவ்வாறு உருவாகின்றது ?
இரண்டு நிலத்தட்டுக்கள் விலகி செல்வதனால்
- கடலடி மலைத் தொடர் என்ன பாறைகளினால் ஆனது?
இளம் பசால்ட் பாறைகள்
- கடலின் ஆழத்தை அளவிடக்கூடிய ஓர் அலகு எது?
பாத்தோம்கள் (Fathoms)
- ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில் இணைக்கும் கற்பனை கோட்டிற்கு பெயர் என்ன?
சம ஆழக்கோடு (Isobath)
- ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை வரைபடத்தில் இணைக்கும் கற்பனை கோட்டிற்கு பெயர் என்ன?
சம உவர்ப்புக்கோடு (Isohaline)
- பெருங்கடல் நீரின் இயக்கங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு காரணமாக இருப்பவை எவை?
வெப்பநிலை ,உவர்ப்பியம் ,அடர்த்தி, சூரியன் ,நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும் காற்று
- கடல்நீர் இயக்கங்களில் மிகவும் வலிமை வாய்ந்ததாக கருதப்படுவது எது?
அலைகள்
- அலைகளின் உயரம் எதனை பொறுத்து அமையும்?
காற்றின் வேகம் ,அது நீடிக்கும் காலம் மற்றும் அதன் திசை
- காற்று கடலின் மேற்பரப்பில் வீசும் போது என்ன அலைகள் உருவாகின்றன?
சிற்றலைகள்
- அலை ஆற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவில் எங்கு நிறுவப்பட்டுள்ளன?
கேரளக் கடற்கரையில் உள்ள விழிஞ்சியம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல் நீர் உயர்ந்து தாழ்வது எவ்வாறு அழைக்கப்படும்?
ஓதங்கள்
- ஓதங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
இரண்டு: உயர் ஓதங்கள் (Spring tides) மற்றும் தாழ் ஓதங்கள்(neap tides)
- உயர் ஓதங்கள் எப்போது ஏற்படும் ?
பூமி ,சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது (அமாவாசை மற்றும் முழுநிலவு தினங்களில்)
- தாழ் ஓதங்கள் எப்போது ஏற்படும்?
பூமி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்து கோணத்தில் வரும்போது
- இந்தியாவில் எந்த பகுதிகளில் ஓதசக்தி உற்பத்தி செய்ய சாத்தியக்கூறுகள் நிறைந்த மண்டலங்களாக அறியப்பட்டுள்ளன?
காம்பே வளைகுடா, கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவன சதுப்பு நிலப் பகுதிகள்
- நாடுகளின் கடல் எல்லை என்பது அவற்றின் கடற்கரையில் இருந்து எவ்வளவு தொலைவில் கணக்கிடப்படுகிறது?
12 கடல் மைல்கள்
- கடல் சட்டத்தின் மீதான மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
2013
- பெருங்கடல்களின் மேற்பரப்பிலும் அதன் அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கடல் நீரோட்டம்
- பெருங்கடல் நீரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் என்ன திசையில் நகருகின்றன ?
கடிகார திசை
- பெருங்கடல் நீரோட்டங்கள் தென் அரைக்கோளத்தில் என்ன திசையில் நகருகின்றன ?
எதிர்க் கடிகார திசை
- கடல்நீரோட்டங்களை உருவாக்கும் காரணிகள் என்னென்ன?
புவியின் சுழற்சி ,வீசும் காற்று, கடல் நீரின் வெப்பம் மற்றும் உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு
- கடல் நீரோட்டங்கள் வெப்பத்தின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
வெப்ப நீரோட்டம் மற்றும் குளிர் நீரோட்டம்
- தாழ் அட்சக்கோடு பகுதிகளிலிருந்து உயர் அட்சக்கோடு பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வெப்ப நீரோட்டங்கள்
- உயர் அட்சப்பகுதிகளிலிருந்து தாழ் அட்சப் பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
குளிர் நீரோட்டங்கள்
- அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கல்ஃப் வளைகுடா நீரோட்டம் மற்றும் பசுபிக் பெருங்கடலின் வட பசுபிக் புவியிடைக்கோட்டு நீரோட்டம் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு ?
வெப்ப நீரோட்டங்கள்
- அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள லாப்ராடர் நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் பெருவியன் நீரோட்டம் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு ?
குளிர் நீரோட்டங்கள்
- இந்தியாவில் கடல்சார் அம்சங்கள் ,பெருங்கடல் பொறியியல் ,கடல் அகழாய்வு போன்றவற்றை பற்றி அறிந்துகொள்ள ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை எந்த நிறுவனம் மேற்கொள்கிறது ?
தேசிய கடல்சார் நிறுவனம் (NIO)
- NIO ன் விரிவாக்கம் என்ன?
National institute of oceanography
- தேசிய கடல்சார் நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
01.01.1996
- தேசிய கடல்சார் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?
கோவாவிலுள்ள டோனா பௌலா
- கடல் நீர் மற்றும் கடலின் அடிப்பகுதியில் காணப்படக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை நாம் எவ்வாறு அழைக்கின்றோம் ?
கடல்வளங்கள்
- உலகின் மிக நீளமான பவளப்பாறை திட்டு எது?
தி கிரேட் பேரியர் ரீப் (The great barrier reef)
- தி கிரேட் பேரியர் ரீப் (The great barrier reef) எவ்வளவு நீளம் பரவிக் காணப்படுகிறது?
2,000 கிலோ மீட்டர் நீண்டு காணப்படுகிறது (3,50,000 சதுர கிலோமீட்டர் பரவிக் காணப்படுகிறது)
- தி கிரேட் பேரியர் ரீப் (The great barrier reef) எங்கு அமைந்துள்ளது ?
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் அருகே உள்ள பவளக்கடல்
- உலகின் ஏழு இயற்க்கை அதிசயங்களில் ஒன்றாக தி கிரேட் பேரியர் ரீப் (The great barrier reef) எதனால் அடையாளங்கண்டுள்ளது?
CNN
- நமீபியா கடற்கரையோர பகுதிகளில் பனி மூட்டமாக இருக்க செய்து, நமீபியா மற்றும் கல்காரி பாலைவனங்கள் வளர்ச்சியடைய உதவும் நீரோட்டம் எது?
பென்குலா நீரோட்டம்
- பென்குலா நீரோட்டம் எந்த பெருங்கடலில் காணப்படுகின்றது ?
தென் அட்லாண்டிக் பெருங்கடல்
- பென்குலா நீரோட்டம் எந்த வகை நீரோட்டம்?
குளிர் நீரோட்டம்
- எந்த நீரோட்டம் லேப்ரடார் கடல் நீரோட்டத்தின் இணைவதன் விளைவாக நியூபவுண்ட்லாந்து கடற்கரையோர பகுதிகளில் அதிக பனிமூட்டம் உருவாகின்றது?
வளைகுடா நீரோட்டம்
- எந்த நீரோட்டம் கடல் வழிப் பயணத்திற்கு தடையாகவும் மற்றும் மிகப்பெரிய மீன்பிடி தளங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது?
வளைகுடா நீரோட்டம்
- வளைகுடா நீரோட்டம் எந்தக் பெருங்கடலில் காணப்படுகிறது?
வட அட்லாண்டிக் பெருங்கடல்
- வளைகுடா நீரோட்டம் எந்தவகை நீரோட்டம் ?
வெப்ப நீரோட்டம்
- எந்த நீரோட்டம் உயர் அட்ச பகுதிகளிலுள்ள துறைமுகங்களில் ஆண்டு முழுவதும் பனி உறையாமல் இருக்க உதவுகின்றது?
வட அட்லாண்டிக் நீரோட்டம்
- வட அட்லாண்டிக் நீரோட்டம் எந்தப் பெருங்கடலில் காணப்படுகிறது?
வட அட்லாண்டிக் பெருங்கடல்
- வட அட்லாண்டிக் நீரோட்டம் எந்தவகை நீரோட்டம் ?
வெப்ப நீரோட்டம்
- எந்த நீரோட்டம் வளைகுடா நீரோட்டத்துடன் இணைவதன் விளைவாக பனி மூட்டத்தினை உருவாக்கி கடல் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்துகிறது?
லேப்ரடார் நீரோட்டம்
- லேப்ரடார் நீரோட்டம் எந்த கடல் பகுதியில் காணப்படுகிறது?
வட அட்லாண்டிக் பெருங்கடல்
- லேப்ரடார் நீரோட்டம் எந்தவகை நீரோட்டம்?
குளிர் நீரோட்டம்
- சகாரா பாலைவனத்தின் விரிவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நீரோட்டம் எது?
கேனரி நீரோட்டம்
- கேனரி நீரோட்டம் எந்த பகுதிகளில் காணப்படுகிறது?
வட அட்லாண்டிக் பெருங்கடல்
- கேனரி நீரோட்டம் எந்த வகை நீரோட்டம் ?
குளிர் நீரோட்டம்
- அட்டகாமா பாலைவனமாகவே இருப்பதற்கு காரணமாக உள்ள நீரோட்டம் எது?
பெருவியன் நீரோட்டம்
- பெருவியன் நீரோட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன ?
ஹம்போல்டு நீரோட்டம்
- தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் எல்நினோவினால் வானிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் நீரோட்டம் எது ?
பெருவியன் அல்லது ஹம்போல்ட் நீரோட்டம்
- இந்தியாவில் பருவ காற்று சரியான நேரத்தில் தொடங்குவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நீரோட்டம் எது?
பெருவியன் அல்லது ஹம்போல்ட் நீரோட்டம்
- பெருவியன் அல்லது ஹம்போல்ட் நீரோட்டம் எந்த பகுதியில் காணப்படுகிறது?
தென் பசிபிக் பெருங்கடல்
- பெருவியன் அல்லது ஹம்போல்ட் நீரோட்டம் என்ன வகை நீரோட்டம் ?
குளிர் நீரோட்டம்
- குரோஷியா நீரோட்டம் எந்த பகுதியில் காணப்படுகிறது?
வட பசுபிக் பெருங்கடல்
- குரோஷியா நீரோட்டம் எந்தவகை நீரோட்டம்?
வெப்ப நீரோட்டம்
- எந்த நீரோட்டம் குரேஷியா நீரோட்டத்துடன் இணைவதால் ஹொக்கைடோ தீவில் அதிக பனி மூட்டத்தினை உருவாக்குவதுடன் கடல் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது?
ஒயோஷியோ நீரோட்டம்
- ஒயோஷியோ நீரோட்டம் எங்கு காணப்படுகிறது ?
வட பசுபிக் பெருங்கடல்
- ஒயோஷியோ நீரோட்டம் எந்த வகை நீரோட்டம்?
குளிர் நீரோட்டம்
- அலாஸ்காவின் துறைமுகங்களை ஆண்டு முழுவதும் செயல்பட உதவும் நீரோட்டம் எது?
அலாஸ்கா நீரோட்டம்
- அலாஸ்கா நீரோட்டம் எங்கு காணப்படுகிறது?
வட பசுபிக் பெருங்கடல்
- அலாஸ்கா நீரோட்டம் எந்தவகை நீரோட்டம்?
வெப்ப நீரோட்டம்
- அரிசோனா மற்றும் சொனாரன் பாலைவனங்கள் உருவாக காரணமாக உள்ள நீரோட்டம் எது?
கலிபோர்னியா நீரோட்டம்
- கலிபோனியா நீரோட்டம் எங்கு காணப்படுகிறது?
வட பசுபிக் பெருங்கடல்
- கலிபோர்னியா நீரோட்டம் எந்த வகை நீரோட்டம்?
குளிர் நீரோட்டம்
- எந்த நீரோட்டம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் மேகமூட்டத்தினை உருவாக்குகின்றது மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனம் உருவாக காரணமாக உள்ளது?
மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்
- மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம் எங்கு பகுதியில் காணப்படுகிறது?
இந்திய பெருங்கடல்
- மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம் எந்த வகை நீரோட்டம்?
குளிர் நீரோட்டம்
9TH GEOGRAPHY STUDY NOTES |நீர் கோளம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services