- “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த..” வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
தொல்காப்பியம்
- மனமொத்த இருவருக்கிடையே தோன்றும் காதல் நிலைபேறு உடையதாக அமையும் என குறிப்பிடுவது?
தொல்காப்பியம்
- ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் காதல் வயப்படும் போது செம்புலப் பெயல் நீர் போல அன்புடைய நெஞ்சங்கள் கலந்தவர்களாக இருந்துள்ளனர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?
குறுந்தொகை
- “நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர் என்றும் என்தோள் பிரிவு அறியலரே”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நற்றினை
- “உயிர்ஓர் அன்ன செயிர் தீர் நட்பின்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நற்றிணை
- “…யாக்கைக்கு உயிர் இயைந்து அன்ன நட்பின்..”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
- “புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத் துரனுடை யாளர் கேண்மை யோடு இயைந்த வைகல் உளவா கியரோ..” எனக் கூறும் நூல் எது?
புறநானூறு
- “உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய்சேண் நீங்கிய வாய்நட்பினையே” இவ்வரிள் இடம் பெற்ற நூல் எது?
மதுரைக்காஞ்சி
- “பெறற்கரிய பெரும் பேறு கிடைப்பதாக இருந்தாலும் பொய்மை கலந்த நட்புப் பழியோடு முடியும் எனவே வாய்மை நிறைந்த நட்பே தூய்மையானது, சிறந்தது ,தகுதியானது என கூறியவர் யார் ?
மாங்குடி மருதனார்
- “பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன் ” எனக் குறிப்பிடும் நூல் எது ?
கலித்தொகை
- “பிறர் துன்பத்தை தன் துன்பம் கருதி உதவுதல்” பற்றி கலித்தொகையில் குறிப்பிடுபவர் யார்?
நல்லந்துவனார்
- உண்மையான செல்வம் என்பது “பிறர் துன்பம் தீர்ப்பதுதான்” எனக் கூறுபவர் யார் ?
நல்வேட்டனார்
- “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் என்பதுவே” எனக் குறிப்பிடும் நூல் எது?
நற்றினை
- உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும் எனக் கூறுபவர் யார்?
பெருங்கடுங்கோ
- “பொய்யா செந்நா” என குறிப்பிடும் நூல் எது?
புறநானூறு
- “பொய்படுபு அறியா வயங்குசெந் நாவின்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பதிற்றுப்பத்து
- “பிழையா நன்மொழி” என்று வாய்மையையும் பொய்மையை “பொய் பொதி கடுஞ்சொல்” என்றும் குறிப்பிடும் நூல் எது ?
நற்றிணை
- “நிலம்திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பதிற்றுப்பத்து
- “நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ இலரே” எனக் குறிப்பிடும் நூல் எது?
நற்றிணை
- “அல்லல் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நற்றிணை
- உணவிடுவதற்காக ஒருவன் தன் வீர வாளையும் ஈடுவைத்த செய்தி எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
புறநானூறு
- விருந்தினரின் தொடர்ச்சியான வருகையாலும் அவர்களுக்கு விருந்தோம்புவதாலும் ஒரு தலைவிக்கு ஊடல் கொள்ள நேரமில்லாமல் போனதாக எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
நற்றிணை
- விருந்தோம்பல் கைகூடாத வாழ்க்கையை “விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை” என கூறும் நூல் எது?
புறநானூறு (பெருங்குன்றூர் கிழார்)
- “மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லை தாம வாழும் நாளே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு, ஔவையார்
- எந்த பாடலின் வழியாக பசுக்களும் பார்ப்பனரும் பெண்களும் நோயுற்றவர்கள் மக்கட்பேறு இல்லாதவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு போர் தொடங்குவதற்கு முன்னர் அறிவுறுத்தினர் என்ற செய்தி புலப்படுகிறது?
புறநானூறு
- பழந்தமிழ் வேந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரத்தை தன் வெற்றியை சிறப்பிக்கும் மரமாக போற்றி வந்துள்ளனர் இது எவ்வாறு அழைக்கப்படும் ?
காவல் மரம் அல்லது கடிமரம்
- “வான்மீன் பல பூப்பினும் ஆனாது மன்னே” எனக் கூறுபவர் யார்?
முடமோசியார்
- அரசர்களின் வள்ளல் தன்மையை பாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட நூல்கள் என்ன?
ஆற்றுப்படை நூல்கள்
- “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என கூறுவது எது?
புறநானூறு
- “நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே தள்ளா தோர் இவண் தள்ளாதோரே…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- ஏழைப் பெண்ணின் மானம் காக்க தன் கையையே வெட்டிக் கொண்டவன் யார் ?
பொற்கைப் பாண்டியன்
- அடைக்கலம் புகுந்த புறாவினை காக்க தன்னையே தராசுத் தட்டில் ஏற்றிய மன்னன் யார்?
சிபி மன்னன்
- கன்றிழந்த ஆவின் கண்ணீருக்கு நீதி வழங்கி தன் மகனையே தேர்க்காலில் இட்ட அரசன் யார் ?
மனுநீதிச் சோழன்
- “மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
புறநானூறு
- தீயவழியில் செல்லாமல் மனத்தை நேர் வழிப்படுத்துவதே அறிவு எனக் கூறுபவர் யார்?
திருவள்ளுவர்
- “மன்னுயிரின் துன்பத்தை தன் தன்னுயிர்த் துன்பமாகக் கருதுவதே அறிவுடைமையாகும்” எனக் கூறுபவர் யார் ?
வள்ளுவர்
- நாலடியார் சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்டு யாரால் தொகுக்கப்பட்டது?
பதுமனார்
- “கலர் நிலத்து பிறந்த உப்பினை சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்” என கூறும் நூல் எது?
நாலடியார்
- ஆத்திசூடி ,கொன்றைவேந்தன், மூதுரை ,நல்வழி ஆகியவை யாருடைய நூல்கள்?
அவ்வையார்
- நன்னூல் எந்த இலக்கண நூலின் வழி நூலாகக் கருதப்படுகிறது ?
தொல்காப்பியம்
- நன்னூல் யாரால் இயற்றப்பட்டது ?
பவணந்தி முனிவர்
- நன்னூலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
இரண்டு :எழுத்து, சொல்
- “யானோ அரசன் யானே கள்வன்” எனக் கூறி உயிரைவிட்ட மன்னன் யார் ?
பாண்டிய நெடுஞ்செழியன்
- “நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பீங்கில்லை” எனக் கூறும் நூல் எது ?
சிலப்பதிகாரம்
- மணிமேகலையை பின்தொடர்ந்த உதயகுமாரன் யாரால் கொல்லப்படுகின்றார்?
காயசண்டிகையின் கணவன் காஞ்சனன்
- “மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” எனக் கூறும் நூல் எது?
மணிபல்லவமடைந்த காதை, மணிமேகலை
- தமிழில் விருத்தப்பாவில் தோன்றிய முதல் காப்பியம்?
சீவக சிந்தாமணி
- சீவக சிந்தாமணி எந்த சமய கருத்துக்களை தொகுத்து கூறுகிறது ?
சமண சமயம்
- சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
திருத்தக்கதேவர்
- சோழப் பேரரசு எழுச்சி பெற்ற காலத்தில் தோன்றிய காப்பியம் எது?
கம்பராமாயணம்
- நீதி வழங்குவதற்கான அறங்கூறு அவையம் இருந்ததைப் பற்றி கூறும் இலக்கியங்கள் எது?
பத்துப்பாட்டு,மதுரைக் காஞ்சி
- “அறன்நிலை திரியா அன்பின் அவையம் ” எனக் கூறும் நூல் எது?
புறநானூறு
- “மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெட அறியா தாங்கு” எனக் கூறும் நூல் எது?
நற்றிணை
- “அறங்கெழு நல்லவை” எனக் கூறும் நூல் எது?
அகநானூறு
- “முறையுடை அரசன் செங்கோல் அவையத்து ” எனக் கூறும் நூல் எது?
குறுந்தொகை
- “அரைசுகோல் கோடினும் அறங்கூறு அவையம் ” எனக் கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
11TH ETHICS STUDY NOTES |தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services