TNPSC UNIT 8 ONELINER NOTES -37|திருக்குறள்

 


  1. திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் என்ன?

முப்பால்,உத்திரவேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை, திருவள்ளுவப் பயன், திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

  1. திருக்குறள் நூலின் ஆசிரியர்?

 திருவள்ளுவர்

  1. திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் என்ன?

வள்ளுவநாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகன், ம தாநுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவன்

  1. திருக்குறள் நூலில் உள்ள அதிகாரம் எண்ணிக்கை எவ்வளவு?

 133 அதிகாரம்

    1. திருக்குறள் நூலில் உள்ள மொத்த பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?

1330. அனைத்தும் குறள் வெண்பாக்கள்

  • திருக்குறள் அறத்துப்பால் எத்தனை அதிகாரங்களை உடையது ?

 

38 அதிகாரங்கள் (பாயிரஇயல், இல்லறவியல்,துறவியல், ஊழியல்)

  1. திருக்குறள் அறத்துப்பால், பாயிரயலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

4

  1. திருக்குறள் அறத்துப்பால் ,இல்லறவியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

20

  1. திருக்குறள் அறத்துப்பால் துறவியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

13

  1. திருக்குறள் அறத்துப்பால் ,ஊழியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

1

  1. திருக்குறள் பொருட்பால் எத்தனை அதிகாரங்களை உடையது ?

 70 அதிகாரங்கள்(அரசியல் 25, அங்கவியல் 32, குடியியல் 13)

  1. திருக்குறள் பொருட்பால், அரசியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

25

  1. திருக்குறள் பொருட்பால், அங்கவியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

32

  1. திருக்குறள் பொருட்பால், குடியியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

13

  1. திருக்குறள் காமத்துப்பாலில் எத்தனை அதிகாரங்களை உடையது ?

25 அதிகாரங்கள்

  1. திருக்குறள் காமத்துப்பாலில், களவியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

7

  1. திருக்குறள் காமத்துப்பாலில், கற்பியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

18

  1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் எது?

திருக்குறள்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக அறங்களைச் சொல்லும் நூல் எது?

திருக்குறள்

  1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் செய்யுளால் (பாவால்) பெயர்பெற்ற ஒரே நூல் எது?

திருக்குறள்

  1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் (1 3/4 அடி) ஆன ஒரே நூல் எது?

திருக்குறள்

  1. ‘அ’கரத்தில் தொடங்கி ‘ன’கரத்தில் முடியும் நூல் எது?

திருக்குறள்

  1. திருக்குறளின் சிறப்பை எடுத்துக்கூறும் நூல் எது?

திருவள்ளுவமாலை

  1. தமிழ்மாதின் உயிர் என்று போற்றப்படும் நூல் எது?

திருக்குறள்

  1. திருவள்ளுவரின் உருவத்தை முதன்முதலாக ஓவியமாக வரைந்தவர் ?

வேணுகோபால சர்மா [இவ் ஓவியத்தில் திருவள்ளுவர் அமர்ந்த நிலை ஒரு கையில் ஏடும், மறுகையில் எழுத்தாணியைக் கொண்டு தாடியுடன் இருக்கின்றார்.]

  1. குறளின் சிறப்பை கூறும் வேறு நூல்கள் என்ன?

சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, குமரேச வெண்பா போன்றனவும்

  1. திருக்குறளை முதல் முதலாகப் பதிப்பித்தவர் யார்?
SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| திருக்குறள்-1

மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம், 1812. அம்பலவாணத்தம்பிரான் என்றும் சிலர் கூறுவர்.

  1. பரிமேலழகர் உரையுடன் முதல் முதலாகத் திருக்குறளைப் பதிப்பித்தவர் யார்?

இராமாநுஜ கவிராயர், 1840

  1. திருக்குறளுக்கு முதலில் உரை கண்டவர்கள் ?

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் என்ற பத்துப்பேரும் முதலில் உரை கண்டவர்கள் ஆவர்

  1. திருக்குறளுக்கு முதலில் உரை கண்டவர்களுள் எந்த உரையே மிகச் சிறந்தது ஆகும்?

பரிமேலழகர்

  1. திருக்குறளுக்கு முதலில் உரை கண்டவர்களுள் தற்போது எத்தனை மட்டும் கிடைத்துள்ளது ?

 மணக்குடவர், பரிமேலழகர், பரிதி, பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய ஐவரின் உரை மட்டுமே கிடைத்துள்ளது

  1. திருக்குறளுக்கு பிற்காலத்தே உரை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ?

இராமானுஜக் கவிராயர், திரு.வி.க., நாமக்கல் ராமலிங்கனார், சரவண பெருமாள் ஐயர், தண்டபாணி தேசிகர் அரசஞ் சண்முகனார், புலவர் குழந்தை, பாரதிதாசன், மு.வரதராசனார், நாவலர் நெடுஞ்செழியன், போன்றோர் பிற்காலத்தே உரை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

  1. திருக்குறள் உரைவளம் – தருமபுர ஆதீன வெளியீடு, ஐவரின் பழைய உரை
  2. திருக்குறள் உரைக் கொத்து – திருப்பனந்தாள் வெளியீடு, ஐவரின் பழைய உரையுடன் ஆங்கில மொழி பெயர்ப்பும் சேர்ந்தது
  3. திருக்குறள் உரைக்களஞ்சியம் – மதுரைப் பல்கலைக் கழக வெளியீடு.
  4. திருக்குறள் உரைவளம் – தண்டபாணி தேசிகர்
  5. திருக்குறள் உரைக்களஞ்சியம் – தண்டபாணிதேசிகர்
  6. திருக்குறள் நுண்பொருள் மாலை-காரிரத்தினக் கவிராயர்
  7. திருவள்ளுவ மாலை – பலர் பாடியது
  8. திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு – கி.வா. ஜகந்நாதன்
  9. வள்ளுவம் – வ.சுப. மாணிக்கம்
  10. வாழும் வள்ளுவம் – வ.செ. குழந்தைசாமி
  11. வள்ளுவர் கண்ட நாடும் காமமும் – தெ.பொ.மீ.
  12. திருக்குறள் மணிவிளக்க உரை (பெரு விளக்க நூல்) – க. அப்பாதுரையார்
  13. திருக்குறள் நடையியல் – இ. சுந்தரமூர்த்தி
  14. சொல்வலை வேட்டுவர் – இ. சுந்தரமூர்த்தி

 

  1. திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் ?

 வீரமா முனிவர்

  1. திருக்குறளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தவர் ?

கிரால்

  1. திருக்குறளை ஆங்கிலம் மொழியில் மொழிபெயர்த்தவர் ?

ஜி.யு. போப்

  1. திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர் ?

ஏரியல்

  1. திருக்குறளை வடமொழி மொழியில் மொழிபெயர்த்தவர் ?

அப்பா தீட்சதர்

  1. திருக்குறளை இந்தி மொழியில் மொழிபெயர்த்தவர் ?

பி.டி. ஜெயின்

  1. திருக்குறளை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தவர் ?

வைத்யநாத பிள்ளை

  1. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர்?

கே.எம்.பாலசுப்பிரமணியம்

 

 

மேற்கோள்

  • அறத்தான் வருவதே இன்பம்

 

  • மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்

 

  • திருவேறு தெள்ளியராதலும் வேறு

 

  • பெண்ணிற் பெருந்தக்க யாவுள

 

  • ஊழிற் பெருவலி யாவுள

 

 

  • முயற்சி திருவினை யாக்கும்

 

  • செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய் கலாதார்

 

  • இடுக்கண் வருங்கால் நகுக

 

  • ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்

பின்சாரப் பொய்யாமை நன்று

 

  • கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

 

  • பண்புடையார் பட்டுண்டு உலகு

 

  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

 

  • அறிவு அற்றம் காக்கும் கருவி

 

  • ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்

 

  • *அறிதோறும் அறியாமை கண்டற்றால்

 

  • யானையால் பானையாத்தற்று

TNPSC UNIT 8 ONELINER NOTES -37|திருக்குறள்

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -18|பெரும்பாணாற்றுப்படை 

 

 

Leave a Comment

error: