- மொத்த சங்கப்பாடல்கள் (எட்டுத்தொகை)எண்ணிக்கை எவ்வளவு?
2381
- சங்க பாடல்களில் (எட்டுத்தொகை)ஆசிரியர் பெயர் தெரியாதவைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
102
- சங்க பாடல்களில்(எட்டுத்தொகை) அகப்பாடல்கள் எத்தனை?
1861
- சங்க இலக்கியத்துள்(எட்டுத்தொகையுள்) அகப்பாடல்களில் எந்த திணை பாடல்களே மிகுதியாக உள்ளது?
பாலைத்திணை
- சங்கப் பாடல்கள் (எட்டுத்தொகை) பாடிய மொத்த புலவர்கள்?
473 பேர்
- சங்க பாடல்கள்(எட்டுத்தொகை) பாடிய புலவர்களில் பெண்பாற்புலவர்கள் எத்தனை பேர்?
30 பர்
(ஒளவையார், வெள்ளிவீதியார், காக்கைபாடினியார் நற்செள்ளையார், நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், நக்கண்ணையார், இளவெயினி, நாகையார் போன்றோர் சிலர்)
- சங்க பாடல்களில்(எட்டுத்தொகை) அரச குடும்பத்தினர் பாடியவை எத்தனை?
31 (கோப்பெருஞ்சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன், அறிவுடை நம்பி, கோப்பெரும்பெண்டு, கணைக்கால் இரும்பொறை அவருள் சிலர்)
- எட்டுத்தொகையுள் நூறு பாடல்களுக்கு மேல் பாடியவர்கள் எத்தனை புலவர்கள்?
ஐந்து பேர்
- சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) கபிலர் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?
235 பாடல்கள்
- சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) அம்மூவனார் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?
127 பாடல்கள்
- சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) ஓரம்போகியார் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?
110 பாடல்கள்
- சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) ஓதலாந்தையார் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?
107 பாடல்கள்
- சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) பேயனார் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?
105 பாடல்கள்
- கபிலர் எங்கு பிறந்தார்?
பாண்டி நாட்டுத் திருவாதவூரில் பிறந்தவர்
- மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்
- கபிலர் எந்த குலத்தைச் சேர்ந்தவர்?
அந்தணர்
- கபிலர் எதைப் பாடுவதில் சிளந்தவர்?
குறிஞ்சிபாடுவதில் வல்லவர்
- ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று கபிலரைப் பாடியவர் யார்?
நப்பசலையார்
- “பொய்யா நாவிற் கபிலன்”- என்று கபிலரைப் பாடியவர் யார்?
நப்பசலையார்
- ‘நல்லிசை வாய்மொழிக் கபிலன்’ என்று கபிலரைப் பாடியவர் யார்?
நக்கீரர்
- ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ என்று கபிலரைப் பாடியவர் யார்?
இளங்கீரனார்
- ‘வயங்கு செந்நாவின்… கபிலன்’ என்று கபிலரைப் பாடியவர் யார்?
பெருங்குன்றூர்கிழார்
- கபிலரின் நண்பர்கள்?
பரணர், இடைக்காடர், பாரிவள்ளல் .
- கபிலர் யாருடைய அவைக்களப் புலவராகவும் இருந்தவர்?
பாரி வள்ளல்
- கிளிக் கூட்டங்களைப் பழக்கி நெற்கதிர்களைக் கொண்டுவரச் செய்து பஞ்சம் தீர்த்தவர் யார்?
கபிலர்
- பாரிமகளிரை அழைத்துச் சென்று இருங்கோவேள், விச்சுவக்கோ ஆகிய மன்னர்களிடம் அப்பெண்களை மணந்து கொள்ள வேண்டியவர் யார்?
கபிலர்
- பாரியின் மகளிரைப் பார்ப்பாரிடம் அடைக்கலம் கொடுத்தவர் யார்?
கபிலர்
- கண்ணகியின் பொருட்டுப் பேகனைப் பாடியவர் யார்?
கபிலர்
- வடக்கிருந்து உயிர் விட்டவர் யார்?
கபிலர்
- கபிலர் பாடிய பாடல்கள் எதில் உள்ளன?
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என்ற மூன்றிலும் இவரது பாடல்கள் உள்ளன.
- இலக்கிய வரலாற்றில் எத்தனை கபிலர்கள் உள்ளனர்?
ஐந்து
- பாரியைப் பாடிய சங்ககால கபிலர்.
- பதினெண்கீழ்க் கணக்கில் இன்னாநாற்பது என்ற நூலைப்பாடிய கபிலர்.
- பதினோராம் திரு முறையில் இரட்டைமணி மாலை, திருவந்தாதி பாடிய பக்தி இயக்கக் காலக் கபிலர்.
- பன்னிருபாட்டியல் என்ற பாட்டியல் நூலில் சில நூற்பாக்களை இயற்றிய பிற்காலக் கபிலர்.
- கபிலர் அகவல் என்ற தத்துவ நூலின் ஆசிரியரான கபிலர்.
- ஊர்ப்பெயரும் மரபுப்பெயரும் சேர்ந்து பெயர் பெற்றவர் யார்?
கோவூர் கிழார்
- உறையூர்ச் சோழருக்கும் (நெடுங்கிள்ளி) புகார்ச் சோழருக்கும் (நலங்கிள்ளி) இடையில் போர் நிகழாமல் இருக்கத் தூது சென்றவர்?
கோவூர் கிழார்
- நெடுங்கிள்ளியின் தம்பி யார்?
நலங்கிள்ளி
- அரசுரிமைப் போரில் தோற்றுக் கதவடைத்தவன் யார்?
நெடுங்கிள்ளி
- முற்றுகையிட்டிருந்தவன் யார்?
நலங்கிள்ளி
- ‘அறமாயின் திறக்க, மறமாயின் அமர்புரிக, இருவரும் வேறல் இயற்கையும் அன்று, தோற்பது நும் குடி’ நெடுங்கிள்ளியிடம் கூறிப் போரை நிறுத்தியவர் யார்?
கோவூர் கிழார்
- நெடுங்கிள்ளி எந்தப் புலவரை ஒற்றன் என்று கருதித் தண்டிக்க முனைய அப்புலவரைக் கோவூர் கிழார் காப்பாற்றினார்?
இளந்தத்தனார்
- மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளைக் கிள்ளி வளவன் யானைக்காலில் இட்டுக் கொல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தியவர் யார்?
கோவூர் கிழார்
- சோறும் நீரும் இரு மருந்து என்று பாடியவர் யார்?
கோவூர் கிழார்
- வண்டினை அறுகாற்பறவை என்று பாடியவர் யார்?
கோவூர் கிழார்
- ‘ஈன்று புரந்தருதல் என்தலைக் கடனே’ என்று கடமைகளைப்ப பாடியவர் யார்?
பொன்முடியார்
- வரலாற்றுச் செய்திகளை மிகுதியாகப் பாடியவர் யார்?
பரணர்
- கொல்லிப்பாவை, அழிசியின் வரலாறு, பெண்கொலை புரிந்த நன்னன், அதியமான் கோவலூரை வென்றது போன்ற செய்திகளைப் பாடியவர் யார்?
பரணர்
- பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தில் கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடி உம்பற்காட்டு வருவாயையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர் யார்?
பரணர்
- ஒளவை என்பதற்குத் என்ன பொருள்?
தாய்
- ஔவையார் எந்த குடியில் பிறந்தவர்?
பாண்குடி
- ஔவையார் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?
59
- அதியமானின் அவைக்களப் புலவர் / நண்பராக இருந்தவர் யார்?
ஔவையார்
- அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்றவர்?
ஔவையார்
- “இவ்வே பீலி அணிந்து” என்ற பாடலை பாடியவர் யார்?
ஔவையார்
- “சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே பெரியகட் பெறினே
யாம்பாடத் தாம் மகிழந்து உண்ணும் மன்னே” என்ற பாடலை அதியமான் இறந்தபோது பாடியவர் யார்?
ஔவையார்
- அதியமானின் மகன் யார்?
பொகுட்டெழினி
- பொகுட்டெழினியைப்பாடியவர் யார்?
ஔவையார்
- சோழன் பெருநற்கிள்ளி, சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் சேர்ந்திருந்த காட்சியைப் பாடியவர் யார்?
ஔவையார்
- ‘நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும’
என்று நெல்லிக்கனி தந்தபோது அதியமானை வாழ்த்தியவர்?
ஔவையார்
- “அணுவைத் துளைத்து எழுகடலை உட்புகுத்திக்
குறுகத் தறித்த குறள்” என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் ?
பிற்கால ஒளவையார்.
- பாரியின் மக்களான அங்கவை, சங்கவை என்ற இரு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்தவர்?
ஔவையார்
- இலக்கிய வரலாற்றில் எத்தனை ஔவையார்கள் உள்ளனர்?
ஐந்து
- சுட்டகனி வேண்டுமா, சுடாத கனி வேண்டுமா, என்று முருகன் கேட்ட புராண ஒளவையார்
- அதியமானைப் பாடிய புறநானூற்று ஒளவையார்
- ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற சிறுவர் நீதி நூல்களைப் பாடிய சோழர்கால ஔவையார்
- தனிப்பாடல் திரட்டில் உள்ள சில பாடல்களைப் பாடிய இடைக்கால ஔவையார்.
- விநாயகர் அகவல், ஞானக்குறள் பாடிய பிற்கால ஔவையார்
- தாயோடு அறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம் என்று பாடியவர் ?
தனிப்பாடல் திரட்டு ஒளவையார்.
- மலைநாடு வேழம் உடைத்து
சோழ வளநாடு சோறுடைத்து
பாண்டி நாடு முத்துடைத்து
தொண்டைநாடு சான்றோர் உடைத்து”-என்பது? ஔவை வாக்கு
- பிசிராந்தையார் எந்த நாட்டுப் புலவர்?
பாண்டி
- பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சிறுகச்சிறுக வரி வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர் யார்?
பிசிராந்தையார்
- குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் நிலவரியை நீக்கப் பாடியவர் யார்?
வெள்ளைக்குடி நாகனார்
- தலைமுடி நரைக்காமலிக்கக் காரணம் சொன்னவர் யார்?
கோப்பெருஞ் சோழனின் நண்பர்
- காணாமலே நட்புக் கொண்டவர்கள் யார்?
கோப்பெருஞ் சோழனுடன் வடக்கிருந்து உயிர்விட்டவர்.
TNPSC UNIT 8 ONELINER NOTES -13| எட்டுத்தொகை புலவர்கள்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services