TNPSC UNIT 8 ONELINER NOTES -09| புறநானூறு 

 


  1. புறநானூறு எந்த திணை சார்ந்த நூல்?

புறநூல்

  1. புறநானூறு எத்தனை பாடல்கள் கொண்டது?

400 பாடல்கள்

  1. புறநானூறு நூலின் பாவகை?

அகவற்பா

  1. புறநானூற்றில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை?

158 புலவர்கள்

  1. புறநானூற்றை தொகுத்தவர் யார்?

பெயர் தெரியவில்லை

  1. புறநானூற்றை தொகுப்பித்தவர் யார்?

பெயர் தெரியவில்லை

  1. புறநானூற்றிற்க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்?

புறம், புறப்பாட்டு, புறம்பு, தமிழ்க் கருவூலம்

  1. புறநானூறு கடவுள் வாழ்த்துப் பாடியவர் யார்?

பாரதம் பாடிய பெருந்தேவனார்

  1. புறநானூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?

சிவன்

  1. அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பாடும் நூல் எது?

புறநானூறு

  1. புறநானூற்றில் பெண்களின் வீரத்தைக் கூறும் துறை எது?

மூதின் முல்லை

  1. பெண்கள் உடன் கட்டை ஏறினர் – பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு உடன்கட்டஏறினாள் என்ற செய்திகளை கூறும் நூல் எது?

புறநானூறு

  1. பெண்கள் கைம்மை நோன்பு இருந்ததாக கூறும் நூல் எது?

புறநானூறு

  1. சேரர்களின் அடையாளப் பூ எது?

போந்தை (பனை)

  1. சோழர்களின் அடையாளப் பூ எது?

ஆர் (அத்தி)

  1. பாண்டியர்களின் அடையாளப் பூ எது?

வேம்பு

  1. சேரர்களின் அடையாளக் கொடி எது?

வில்

  1. சோழர்களின் அடையாளக் கொடி எது? 

புலி

  1. பாண்டியர்களின் அடையாளக் கொடி எது?

கெண்டை (மீன்)

  1. சேரர்களின் தலை நகரம் எது?

வஞ்சி

  1. சோழர்களின் தலை நகரம் எது?

உறையூர் (உறைந்தை)

  1. தஞ்சாவூர்(தஞ்சை) உறையூருக்கு வேறு என்ன பெயர் இருந்தது?

கோழி

  1. பாண்டியர்களின் தலை நகரம் எது?

 மதுரை

  1. பல்லவர்களின் தலை நகரம் எது?

காஞ்சிபுரம் (காஞ்சி)

  1. சேரர்களின் துறைமுகம் எது?

முசிறி, தொண்டி (ஐங்குறுநூறு)

  1. சோழர்களின் துறைமுக நகரம் எது?

 காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார், புகார்)

  1. பாண்டியர்களின் துறைமுகம் எது?

கொற்கை, தொண்டி (அகநானூறு)

  1. பல்லவர்களின் துறைமுகம் எது?

மாமல்லபுரம் (மல்லை )

  1. சேரர்களின் வேறுபெயர்கள் என்னென்ன?

குட்டுவன், கடுங்கோ , வானவன், வானவரம்பன், கோதை, கோக்கோதை, இரும்பொறை

  1. சோழர்களின் வேறுபெயர்கள் என்னென்ன?

வளவன், கிள்ளி, செம்பியன்

  1. பாண்டியர்களின் வேறுபெயர்கள் என்னென்ன?

செழியன், மாறன், வழுதி, மீனவன், தமிழர் பெருமான், கவுரியர்

  1. கரிகாலன் போர்செய்த இடம் எது?

வெண்ணிப் பரந்தலை

  1. நெடுஞ்செழியன் போர் செய்த இடம் எது?

தலையாலங் உள்ளகானம்.

  1. மாந்தை எந்த நாட்டைச் சார்ந்தது?

சேரநாடு

  1. நந்தர்களின் ஊர் எது?

 பாடலிபுத்திரம்

  1. பல்யானை செல்கெழு குட்டுவனுக்குக்குரியது எதா?

உம்பர்க்காடு

  1. பாரதப் போரில் சோறு கொடுத்தவன் யார்?

உதியஞ்சேரல்

  1. சோழர்கள் மௌரியர்களைத் தோற்கடித்த இடம் எது?

வல்லம்

  1. பாரிக்கு உரியது ?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -05| நற்றிணை 

பரம்புமலை

  1. பேகனுக்கு உரியது ?

பழனிமலை

  1. ஓரிக்கு உரியது ?

கொல்லிமலை

  1. ஆய்க்கு உரியது ?

பொதிகைமலை

  1. அதியமானுக்கு உரியது?

 தகடூர்

  1. நன்னனுக்கு உரியது ?

நவிரமலை

  1. கபிலரை ஆதரித்தவர்?

 பாரி

  1. ஔவையாரை ஆதரித்தவன்?

 அதியமான்

  1. பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன்?

குமணன்

  1. மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் ?

நெடுஞ்செழியன்

  1. பிசிராந்தையாரிடம் நட்புக் கொண்டவன்?

 கோப்பெருஞ்சோழன்

  1. அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றவர்?

ஒளவையார்

  1. கோப்பெருஞ் சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர்?

புல்லாற்றூர் எயிற்றியனார்

  1. நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர்?

கோவூர்கிழார்.

  1. கண்ணகிக்காகப் பேகனைப் பாடியவர்கள் யார்?

அரிசில் கிழார், கபிலர், பரணர், பெருங்குன்றூர்கிழார்

  1. இளங்குமணனின் மனத்தை மாற்றியவர் யார்?

பெருந்தலைச் சாத்தனார்

  1. சேரனுக்கும் சோழனுக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்தவர் யார்?

முடமோசியார்

  1. கழாத்தலையார் என்ற புலவரைப் பாடியவர் யார்?

கபிலர்

  1. கபிலரைப்பாடிய புலவர் யார்?

நப்பசலையார்

  1. பொத்தியார் என்ற புலவரைப் பாடியவர் யார்?

பிசிராந்தையார்

  1. மோசி என்ற புலவரைப் பற்றிப் பாடிய புலவர் யார்?

பெருஞ்சித்திரனார்

  1. புறநானூறு காட்டும் நான்கு பெருந்தெய்வங்கள் யார்?

சிவன் – கண்ணன், பலதேவன், முருகன்

  1. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்வி செய்தமை குறித்து எந்த செப்பேடு கூறுகிறது?

வேள்விக்குடிச் செப்பேடுகள்

  1. ஆநிரைகளைக் கவர்வோர் குடும் பூ எது?

வெட்சிப்பூ

  1. ஆநிரைகளை மீட்போர் குடும் பூ எது?

 கரந்தைப்பூ

  1. மண்ணாசை கொண்டு போர் எடுப்போர் சூடும் பூ எது?

வஞ்சிப்பூ

  1. போர் தடுப்போர் சூடும் பூ எது?

காஞ்சிப்பூ

  1. மதிலைக்காப்பர் சூடும் பூ எது?

நொச்சிப்பூ

  1. மதிலை முற்றுகையிடுவோர் சூடும் பூ எது?

உழிஞைப்பூ

  1. பெரும்போரில் இருபெரு வேந்தரும் சூடும் பூ எது?

தும்பைப்பூ

  1. நிலையாமையைக் கூறும் திணை எது?

 காஞ்சித்திணை

  1. நடுகல்லைப் பற்றிக் கூறும் தொல்காப்பியத் திணை எது?

வெட்சி

  1. நடுகல்லைப் பற்றிக் கூறும் புறப்பொருள் வெண்பா மாலையின் திணை எது?

பொதுவியல்.

 

மேற்கோள்

  1. “இறைஞ்சுக பெருமதின் சென்னி, சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே – காரிகிழார்

 

  1. ‘வழிபடுவோரை வல்லறி தீயே

பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே

-பன்பொதி பசுங்குடையார்

 

  1. ‘அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்

மறவை ஆயின் போரொடு திறத்தல்

-கோவூர்கிழார்

 

  1. ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

-மதுரை இளநாகனார்

 

  1. ‘ஒருவளை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை’-இடைக்குன்றூர்க் கிழார்

 

  1. ‘வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்

ஈதல் எனிது

-கபிலர்

 

  1. ‘புற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே

-ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

SEE ALSO  9TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS

 

  1. ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே”-குடபுலவியனார்

 

  1. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா’-கணியன் பூங்குன்றனார்

 

  1. “செல்வக் காலை நிற்பினும்

அல்லற் காலை நில்லலன் மன்னே

-கோப்பெருஞ் சோழன்

 

  1. சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் வேந்தற்குக் கடனே

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

-பொன்முடியார்

 

  1. உண்பது நாழி உடுப்பவை இரண்டே – நக்கீரர்

 

  1. செல்வத்துப் பயனே ஈதல் – நக்கீரர்

 

  1. ‘வாழச் செய்த நல்வினை அல்லது ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை”-ஔவையார்

TNPSC UNIT 8 ONELINER NOTES -09| புறநானூறு

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  12TH BOTANY STUDY NOTES | சூழல் மண்டலம் | TNPSC GROUP EXAMS

 

 

Leave a Comment

error: