TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- நற்றிணை எந்தத் திணை சார்ந்த நூல் ?
அகநூல்
- பழந்தமிழர்தம் வாழ்வைப் பல்வேறு நிலையில் அறிந்து கொள்வதற்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாக எந்நூல் திகழ்கின்றது?
நற்றிணை
- இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர் எப்படி எல்லாம் இயற்கையைப் போற்றி மகிழ்ந்தார்கள் என்பதை எந்தநூல் வழி அறியலாம்?
நற்றிணை
- நற்றிணை எத்தனை பாடல்களை கொண்டது?
400 பாடல்கள்
- நற்றிணை பாடல்கள் எத்தனை புலவர்கள் பாடியுள்ளனர்?
275 புலவர்கள்
- நற்றிணையின் அடிவரையறை என்ன?
சிற்றெல்லை 9 அடி, பேரெல்லை 12 அடி
- நற்றிணையில் எந்த பா வகையில் பாடல்கள் அமைந்துள்ளன?
ஆசிரியப்பா வகையில்
- நற்றிணையில் எத்தனை பாடல்கள் மட்டும் 13 அடிகளை கொண்டுள்ளது?
இரண்டு பாடல்கள் (110, 379) மட்டும் பதின்மூன்று அடிகளைக் கொண்டுள்ளன.
- நற்றிணையை தொகுத்தவர்?
பெயர் தெரியவில்லை
- நற்றிணையை தொகுப்பித்தவர்?
தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
- நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
- நற்றிணைக் கடவுள் வாழ்த்துத் எந்த தெய்வத்தை பற்றியது?
திருமாலைப் பற்றியது
- வணிகர்களுக்குக் கொடுக்கும் பட்டம் காவிதி, எட்டி பற்றி குறிப்பிடும் நூல் எது?
நற்றிணை
- தொண்டி எந்த நாட்டினுடைய துறைமுகம்?
சேரநாட்டுத் துறைமுகம்
- கொற்கை எந்த நாட்டினுடைய துறைமுகம்?
பாண்டி நாட்டுத் துறைமுகம்
- மாந்தை எந்த நாட்டைச் சார்ந்தது?
சேரநாட்டுக் கடற்கரை ஊர்
- மருகூர்ப்பட்டினம் எந்த நாட்டைச் சார்ந்தது?
பாண்டி நாட்டுக் கடற்கரை நகரம்
- மருத்துவன் எவ்வாறு அழைக்கப்பட்டதாக நற்றிணை குறிப்பிடுகிறது?
அறவோன்
- கணியன் என்பதற்குச் என்ன பொருள்?
சோதிடன்
- இந்நாலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?
பின்னத்தார் நாராயணசாமி ஐயர்
சில மேற்கோள்கள் :
- “நீரின்றி அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம்நயந்து அருளி”- கபிலர்
- “நாடி நட்பின் அல்லது நாடு நட்டு நாடார் தம் ஓட்டினோர் திறத்தே – கபிலர்
- பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் (திருக். 580) திருக்குறளின் இக்கருத்துக்கு அடிப்படையாக இருந்தவை கீழ்காணும் நற்றிணைப் பாடல் அடிகளாகும்.
- “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் தஞ்சம் உண்பர் நனிநாகரிகர்‘– பெயர்தெரியவில்லை
- “ஒருமுலை அறுத்த திருமா உன்னி”-மதுரை மருதன் இளநாகனார்
- “நும்மினும் சிறந்ததன்று,நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினன் புன்னையது சிறப்பே
அம்ம நானுதும் நும்மோடு நகையே” – பெயர் இல்லை
- “இளமையிற் சிறந்த வளமையும் இல்லை “- பெயர் இல்லை
- “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு “-கருவூர்கோசனார்
- “சாதல் அஞ்சேன்,அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிது ஆகுவாதாயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே”- பெயர் இல்லை
-
- “கொண்ட கொழுதன் குடிவரன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளான்“- போதனார்
TNPSC UNIT 8 ONELINER NOTES -05| நற்றிணை
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services