TNPSC UNIT 8 ONELINER NOTES -02| மூன்று தமிழ் சங்கம்

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]


  1. மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை யாருக்கு உரியது?

பாண்டியர்

  1. சகரக் கிளவியும் அவற்றோ டற்றே

அஐஒன என்னும் மூன்றலங் கடையே“-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

தொல்காப்பியம்

  1. சங்கம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?

மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்.

  1. சங்கம் பற்றிய குறிப்பு முதல் முதலில் எந்த நூலில் வருகிறது.?

கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தேவாரம்

  1. முதல் தமிழ் சங்கம் நிறுவிய இடம் எது?

தென்மதுரை

  1. முதல் தமிழ் சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?

பஃறுளி ஆற்றங்கரை

  1. இடைச்சங்கம் நிறுவிய இடம் எது?

கபாடபுரம்

  1. இடைச்சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?

குமரியாற்றங்கரை

  1. கடைச்சங்கம் நிறுவிய இடம் எது?

இன்றைய மதுரை

  1. கடைச்சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?

வையை ஆற்றங்கரை

  1. முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?

4440 ஆண்டுகள்

  1. இடைசங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?

3700 ஆண்டுகள்

  1. கடைச்சங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?

1850 ஆண்டுகள்

  1. முதல் சங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?

காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர்.

  1. இடைசங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?

வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர்

  1. கடைசங்கத்தை  ஆதரித்த மன்னர்கள்?

முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர்

  1. முதல் சங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?

7 பேர்

  1. இடைசங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?

5 பேர்

  1. கடைசங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?

3 பேர்

  1. முதல் சங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?

549 பேர்

  1. இடைசங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?

59 பேர்

  1. கடைசங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?

49 பேர்

  1. முதல் சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

4449 பேர்

  1. இடைசங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

3700 பேர்

  1. கடைசங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

449 பேர்

  1. முதல் சங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?

அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த வேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன்

  1. இடைசங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?

அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க்காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோன், கீரந்தை

  1. கடைசங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?

சிறு மேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

  1. முதல் சங்கத்தை சார்ந்த நூல்கள் எது?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -37|திருக்குறள்

பெரும் பரிபாடல், முதுநாரை, முது குருகு, களரியா விரை, அகத்தியம்

    1. இடைசங்கத்தை சார்ந்த நூல்கள் எது?

பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை, அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநூல் விளக்கம்

  1. கடைசங்கத்தை சார்ந்த நூல்கள் எது?

நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலி, பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை

  1. முதல் சங்கத்திற்கான இலக்கண நூல் எது ?

அகத்தியம்

  1. இடைசங்கத்திற்கான இலக்கண நூல் எது ?

அகத்தியம், தொல்காப்பியம்

  1. கடைசங்கத்திற்கான இலக்கண நூல் எது ?

அகத்தியம், தொல்காப்பியம்

  1. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், ஆலவாய் பெருமான் என அழைக்கப்படுபவர் யார் ?

சிவன்.

  1. குன்று எறிந்த வேள் என அழைக்கப்படுபவர் யார் ?

முருகன்.

  1. துவரைக் கோமான் என அழைக்கப்படுபவர் யார் ?

கண்ணன்.

  1. நிதியின் கிழவன் என அழைக்கப்படுபவர் யார் ?

குபேரன்.

  1. மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள் எண்ணிக்கை ?

197 பேர்

  1. மூன்று சங்கங்கள் இருந்த மொத்த காலம் எவ்வளவு?

9990 ஆண்டுகள்

  1. மூன்று சங்கங்களில்  இருந்த மொத்த புலவர்கள் எவ்வளவு?

8598 பேர்

  1. இடை, கடைச் சங்கத்திற்கு உரிய மன்னன் யார் ?

 முடத்திருமாறன்

  1. முச்சங்கத்திற்கும் உரிய நூல் எது?

அகத்தியம்

  1. முத்தமிழ் இலக்கண நூல் எது?

அகத்தியம்

  1. இயற்றமிழ் இலக்கண நூல் எது?

தொல்காப்பியம்

  1. இசைத்தமிழ் இலக்கண நூல் எது?

முது நாரை

  1. நாடகத்தமிழ் இலக்கண நூல் எது?

இந்திரகாளியம், பஞ்சமரபு

  1. புலவர் தலைவர் யார் ?

அகத்தியர்

  1. அகத்தியர் மாணவர்கள் எத்தனை பேர்?

12 பேர்

  1. அகத்தியர் மாணவர்களுள் சிலரை குறிப்பிடுக ?

தொல்காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார், காக்கை பாடினியார், நத்தத்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

  1. அகத்திய மாணவர்கள் 12 பேரும் சேர்ந்து எழுதிய நூல் எது?

பன்னிரு படலம்

  1. பன்னிரு படலம் நூல் எந்தத் திணை சார்ந்த நூல் ?

புற நூல்

  1. அகத்தியம் என்ற நூலை இயற்றியவர் ?

அகத்தியர்

  1. அகத்தியம் எத்தனை நூற்பாக்களைக் கொண்டது?

12000

  1. அகத்தியம் 12000 நூற்பாக்களில் தற்போது எத்தனை நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன?

103 நூற்பாக்கள்

  1. அகத்தியம் எத்தனை பகுதிகளை உடையது?

12 பகுதிகளை உடையது. அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், ஜோதிடவியல், கந்தர்வம், கூத்து.

  1. நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து”-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

தொல்காப்பியம்-பாயிரம்

  1. “தொல்லாணை நல்லாசிரியர்

புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

மதுரைக்காஞ்சி

  1. “தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின்

மகிழ் நனை மறுவின் மதுரை இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

SEE ALSO  11TH ETHICS STUDY NOTES |தமிழக பண்பாடு ஓர் அறிமுகம்| TNPSC GROUP EXAMS

சிறுபாணாற்றுப்படை

  1. “இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

புறநானூறு

  1. “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவனாக

உலகமொடு நிலை இய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக என்நிலவரை”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

புறநானூறு

  1. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

  1. “புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற்

பொதியில் தென்றல் போலாது, ஈங்கு

மதுரைத் தென்றல் வந்தது காணீர்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

  1. “தென் தமிழ் நன் நாட்டுத் தீதுதீர் மதுரை”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

  1. “தென் தமிழ் மதுரை – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

மணிமேகலை

  1. “நில நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்

புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும்

பொழுதன்றோ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

கலித்தொகை

  1. “செதுமொழி சீத்த செவி செறுவாக,

முதுமொழி நீராப், புலன் நா உழவர்

புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் மதுரை”- – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

கலித்தொகை

  1. ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன்

பாடுதமிழ் வளர்த்த கூடல்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

புறத்திரட்டு – ஆசிரியமாலை

  1. “உறைவான் உயர்மதிற் கடலில் ஆய்ந்த ஒண் தமிழன்

துறைவாய் நுழைந்தனையோ”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருவாசகம்

  1. “புகலி ஞான சம்பந்தன் உரைசெய் சங்கமலி செந்தமிழ்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

சம்பந்தர் தேவாரம்

  1. சங்கமலித் தமிழ், சங்க முகத்தமிழ்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி

  1. “வீயாத் தமிழ் உடையான், பல்வேறு கடற்றானைப் பாண்டியன்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

 பெரிய புராணம்

  1. “தலைச்சங்கப் புலவனார்தம் முன்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

பெரிய புராணம்

  1. “செந்தமிழ் நாட்டகன் பொதியிற்

திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பரேல்’’- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

கம்பராமாயணம்

  1. ’சங்கத் தமிழ் மூன்றும் தா’’ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

ஔவையார் தனிப்பாடல்

  1. ’மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத்தோடு பட்ட சான்றோர்’’- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

தொல்காப்பியம் பேராசிரியர் உரை

  1. ‘’சோமன் வழிவந்த பாண்டிய நின்

நாட்டுடைத்து நல்ல தமிழ்’’ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

SEE ALSO  12TH TAMIL IYAL 05 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரை மேற்கோள்

  1. சங்கம் பற்றிக் கூறும் வெளிநாட்டார் யார்?

 தாலமி, பிளினி, பெரிப்ளுஸ்

  1. சங்கம் பற்றிக் கூறும் வெளிநாட்டு நூல்கள்?

 மகாவம்சம், ராஜாவளி, ராஜரத்னாகிரி

  1. சங்கம் பற்றிக் கூறும் சாசனம் செப்பேடு/ பட்டயம் எது?

சின்னமனூர் செப்பேடு

  1. சின்னமனூர் செப்பேடு காலம் என்ன ?

10 நூற்றாண்டு

  1. “மகாபாரதம் தமிழ்ப் படுத்தும், மதுராபுரிச் சங்கம்

வைத்தும்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ளது எது?

சின்னமனூர் செப்பேடு

  1. மூன்று தமிழ் சங்கத்தையும் மறுத்தவர்கள் யார் ?

பி.டி. சீனிவாச ஐயங்கார்,கே.என்,சிவராஜ பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார்

  1. மூன்று தமிழ் சங்கத்தில் ஒரு சங்கத்தை மட்டும் ஏற்றவர்கள்?

டி.ஆர்.சேஷகிரி சாஸ்திரி,கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை,வி‌.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர்

  1. முச்சங்கங்களையும் ஏற்றவர்கள் யார்?

உ.வே.சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா. அப்பாதுரை, தேவநேயப்பாவாணர்


TNPSC UNIT 8 ONELINER NOTES -02| மூன்று தமிழ் சங்கம்

Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

Leave a Comment

error: