திருக்குறள் | UNIT8 | TNPSC NOTES AND TEST

அதிகாரம் தலைப்பு Online Test
அதிகாரம்திருக்குறள் பற்றிய தலைப்புகுறிப்புகள் Online TestCLICK HERE
FACTS ABOUT திருக்குறள்
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புகடவுள் வாழ்த்து Online TestCLICK HERE
கடவுள் வாழ்த்தாவது, கடவுளை வாழ்த்துதல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புவான் சிறப்பு Online TestCLICK HERE
வான் சிறப்பாவது மழையினது தலைமை கூறுதல். இது கடவுட் செய்கைத்தாதலான் அதன்பிற் கூறப்பட்டது. இஃதீண்டுக் கூறியதென்னையெனின், பின்னுரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமுமினிது நடப்பது மழையுண்டாயினென்றற்குப் போலும்; அன்றியும், காலத்தின் பொருட்டுக் கூறினாரெனினும் அமையும்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புநீத்தார் பெருமை Online TestCLICK HERE
நீத்தார் பெருமையாவது, துறந்த முனிவரது பெருமையைக் கூறல். இது, கடவுளரை வணங்கினாற்போல் முனிவரையும் வணங்கவேண்டும் என்பதனாலும், அவர் அதை அடையத்தக்கவர் என்ற கருத்தினாலும், அவையிற்றின் பின் கூறப்பட்டது.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஅறன் வலியுறுத்தல் Online TestCLICK HERE
அறன் வலியுறுத்தலாவது அறன் வலிமையுடைத்து என்பதனை அறிவித்தல். இதனானே அறத்துப்பால் முற்கூறுதற்குக் காரணம் சொன்னாருமாம். இது மேற்கூறிய முனிவரால் கொண்டு உய்க்கப்படுதலின் பிற்கூறப்பட்டது.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஇல்வாழ்க்கை Online TestCLICK HERE
அவற்றுள், இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழும் திறன் கூறுதல்.மேல் அறஞ் செய்கவென்றார் இது முதலாக அறஞ் செய்யுமாறு கூறுகின்றாராதலின், இது பிற்கூறப்பட்டது.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புவாழ்க்கைத் துணைநலம் Online TestCLICK HERE
வாழ்க்கைத் துணைநலமாவது வாழ்க்கைக்குத் துணையாகிய மனையாளது பெண்மை இலக்கணம் கூறுதல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புபுதல்வரைப் பெறுதல Online TestCLICK HERE
புதல்வரைப் பெறுதலாவது புதல்வரைப் பெற்றதனாலாய பயன் கூறுதல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஅன்புடைமை Online TestCLICK HERE
அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார்மாட்டுக் காதலுடையவன் ஆதல்
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புவிருந்தோம்பல் Online TestCLICK HERE
விருந்தோம்பலாவது உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டும் என்பது கூறல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஇனியவை கூறல் Online TestCLICK HERE
இனியவை கூறலாவது கேட்டார்க்கு மனமகிழும் சொற்களைக் கூறுதல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புசெய்ந்நன்றி அறிதல் Online TestCLICK HERE
செய்ந்நன்றி யறிதலாவது பிறர் செய்த தீமையை மறந்து நன்மையை மறவாமை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புநடுவுநிலைமை Online TestCLICK HERE
நடுவுநிலைமையாவது நட்டார்மாட்டும் பகைவர் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஅடக்கமுடைமை Online TestCLICK HERE
அடக்கமுடைமையாவது மன மொழி மெய்களால் அடங்கி ஒழுகுதல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஒழுக்கமுடைமை Online TestCLICK HERE
ஒழுக்கமுடைமையாவது தத்தம் குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஏற்ற ஒழுக்கமுடையாராதல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புபிறனில் விழையாமை Online TestCLICK HERE
பிறனில் விழையாமையாவது பிறனுடைய மனையாளது தோள் நலம் விரும்பாமை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புபொறையுடைமை Online TestCLICK HERE
பொறையுடைமையாவது தமக்குத் துன்பம் செய்தாரைத் தாமும் துன்பம் செய்யாது அவர்மாட்டுச் சென்ற வெகுளியை மீட்டல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஅழுக்காறாமை Online TestCLICK HERE
அழுக்காறாமையாவது பிறர் ஆக்கம் முதலாயான கண்டு பொறாமையால் வருகின்ற மனக்கோட்டத்தைச் செய்யாமை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புவெஃகாமை Online TestCLICK HERE
வெஃகாமையாவது பிறர் பொருளை விரும்பாமை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புபுறங்கூறாமை Online TestCLICK HERE
புறங்கூறாமையாவது யாவரையும் இகழ்ச்சியானவற்றைப் புறத்து உரையாமை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புபயனில சொல்லாமை Online TestCLICK HERE
பயனில சொல்லாமையாவது கேட்டார்க்கும் தனக்கும் நற்பயன்படாத சொற்களைக் கூறாமை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புதீவினையச்சம் Online TestCLICK HERE
தீவினை அச்சமாவது தீவினைகளைப் பிறர்க்குச் செய்யாமை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஒப்புரவறிதல் Online TestCLICK HERE
ஒப்புரவறிதலாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்கும் ஆற்றல் இலர் எனினும் தம் அளவிற்கும் தம் வருவாய் அளவிற்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கன அறிந்து கொடுத்தல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஈகை Online TestCLICK HERE
ஈகையாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வரையாது கொடுத்தல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புபுகழ் Online TestCLICK HERE
புகழாவது புகழ்பட வாழ்தல்
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஅருளுடைமை Online TestCLICK HERE
அருளுடைமைமயாவது யாதானும் ஓருயிர் இடர்ப்படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல வருந்தும் ஈரமுடைமை
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புபுலால் மறுத்தல் Online TestCLICK HERE
புலான் மறுத்தலாவது புலால் தின்றால் அருள் இல்லையாம் என்பதனால் புலாலை விடுகை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புதவம் Online TestCLICK HERE
தவமாவது ஊணும் உறக்கமும் குறைத்தலும், வெயிலும் பனியும் தாங்கலும். தேவர் வழிபாடு முதலாயினவும் மேற்கொண்டு முயறல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புகூடாவொழுக்கம் Online TestCLICK HERE
கூடாவொழுக்கமாவது மேற்கூறிய தவத்திற்குப் பொருந்தாத ஒழுக்கம்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புகள்ளாமை Online TestCLICK HERE
கள்ளாமையாவது யாதொரு பொருளையும் களவிற் கொள்ளாராதல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புவாய்மை Online TestCLICK HERE
வாய்மையாவது பொய் சொல்லாமை.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புவெகுளாமை Online TestCLICK HERE
வெகுளாமையாவது வெகுளுதற்குக் காரணம் உள்ள இடத்தும் வெகுளாராதல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஇன்னா செய்யாமை Online TestCLICK HERE
இன்னா செய்யாமையாவது தமக்கு இன்னாதவற்றைப் பிறர்க்குச் செய்யாமை. இது வெகுளி மறந்து நிகழ்வது ஒன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புகொல்லாமை Online TestCLICK HERE
கொல்லாமையாவது யாதோர் உயிரையும் கொல்லாமை. இது வெகுளி முதிர்ந்துழி நிகழ்வதொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புநிலையாமை Online TestCLICK HERE
நிலையாமையாவது மயக்கத்தினால் தான் என்று நினைத்திருக்கின்ற யாக்கையும் தனது என்று நினைத்திருக்கின்ற பொருளும் நிலை நில்லாமையைக் கூறல்.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புதுறவு Online TestCLICK HERE
துறவாவது ஒருவன் தவம் பண்ணாநின்ற காலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும், அதனைப் பற்றறத் துறத்தல். இது மயக்கம் அற்றார்க்கு வருவது ஒன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புமெய்யுணர்தல் Online TestCLICK HERE
மெய்யுணர்தலாவது எக்காலத்தினும் எவ்விடத்தினும் அழியாதுநிற்கும் பொருள் இதுவென உணர்தல். இது பற்றறத் துறந்தாரது உள்ள நிகழ்ச்சியாதலான், அதன்பின் கூறப்பட்டது
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஅவா அறுத்தல் Online TestCLICK HERE
அவாவறுத்தலாவது பொய்ப்பொருள்கள்மேற்செல்லும் ஆசையைத் தவிர்த்தல். முத்திக்குக் காரணமாக மெய்யுணர்தலே அமையுமாயினும், பின்னும் உடம்போடு நிற்றலின் தான் விட்ட பொருள்கள்மாட்டு ஆசை செல்லின், மீண்டும் பிறப்பிற்குக் காரணமாம்; ஆதலான், இதனைத் தவிர வேண்டும் என்று எல்லாவற்றினும் பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்அறத்துப்பால் தலைப்புஊழ் Online TestCLICK HERE
ஊழாவது முன்பு செய்தவினை பின்பு விளையும் முறை. மேற்கூறிய அறப் பகுதியும் இனிக் கூறுகின்ற பொருட் பகுதியும் இன்பப் பகுதியும் முன்செய்த நல்வினையால் வருதலையும், இவற்றிற்கு மாறான பாவமும் வறுமையும் துன்பமும் தீவினையால் வருதலையும் அறியாதே அவை உலகத்தில் மக்கள்பலர் தமது முயற்சியால் வந்தன என்பரன்றே ! அதற்காக இது கூறப்பட்டது. ஒருவன் செய்த வினை தனது பயனை வழுவின்றிப் பயத்தல் அறத்தின் ஆகும் ஆதலான், இஃது அறத்தின் இறுதிக்கண் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புஇறைமாட்சி Online TestCLICK HERE
இதனுள், இறைமாட்சியாவது இறைவனது உண்மை கூறுதல். இவ்வதிகாரத்துள் உரைக்கின்ற பொருள் அரசரை நோக்கிற்றாதலானும் அரசன் மக்களிற் சிறந்தானாதலானும் இவ்வதிகாரம் கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புகல்வி Online TestCLICK HERE
கல்வியாவது கல்வி ஆமாறும் அதனான் ஆகிய பயனும் கூறுதல். இது முதலாகப் பொருள் வரவு இயற்றும் திறங்கூறுகின்றார் ஆதலின், அஃது இயற்றுங்கால் கல்வி முந்துறவேண்டும்; அதனால் இது முன் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புகல்லாமை Online TestCLICK HERE
கல்லாமையாவது கல்வி இல்லாமையால் உளதாகும் குற்றம் கூறுதல். மேற் கல்வி வேண்டும் என்றார் அஃது இலாதார்க்கு உளதாகும் குற்றம் என்னை என்றார்க்குக் கூறியது ஆதலான், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புகேள்வி Online TestCLICK HERE
கேள்வியாவது கேள்வியாமாறும் அதனானாகிய பயனும் கூறுதல். நூல்களைக் கற்கமாட்டாதார் அவற்றைக் கற்றார்மாட்டுக் கேட்டலும் அறிவுக்குக் காரணமாம் என்பதனால், அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புஅறிவுடைமை Online TestCLICK HERE
அறிவுடைமையாவது அறிவாவது இன்னது என்பதும், அதனாலாகிய பயனும் கூறுதல். இது கல்வியும் கேள்வியும் உடையாராயினும் கேட்ட பொருளை உள்ளவாறு உணர்ந்தறிதல் வேண்டுமாதலான், அதன்பின் கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புகுற்றங்கடிதல் Online TestCLICK HERE
குற்றம் கடிதலாவது காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் என்னும் ஆறு குற்றமும் கடிந்து ஒழுகுதல். இஃது அறிவுடையாராயினும் குற்றம் கடிதல் வேண்டும் என்று அதன்பின் கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புபெரியாரைத் துணைக்கோடல் Online TestCLICK HERE
பெரியாரைத் துணைக்கோடலாவது தம்மின் முதிர்ந்த அறிவுடையாரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல். அரசன் குற்றம் அற்றானாயினும், தன்னின் முதிர்ந்த அறிவுடையாரைத் துணையாகக் கொண்டு வினைசெய்ய வேண்டுதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புசிற்றினஞ் சேராமை Online TestCLICK HERE
சிற்றினஞ் சேராமையாவது காமுகரையும், சூதாடிகளையும், பெண்டிர் முதலாயினோரையும் சேர்ந்தொழுகினால் வருங் குற்றமும், சேரமையால் வரும் நன்மையும் கூறுதல், பெரியார் துணையாயினாலும் சிறியாரினத்தாரோடு ஒழுகின், அது தீமை பயக்கும் என்று அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புதெரிந்து செயல்வகை Online TestCLICK HERE
தெரிந்து செயல் வகையாவது வினை செய்யுங்கால் அதனை எண்ணிச் செய்ய வேண்டுமென்று கூறுதல். அறிவுடையவனாய்க் குற்றங் கடிந்து, மந்திரி புரோகிதரைத் துணையாகக் கொண்டு, சிற்றினஞ் சேராதொழுகும் அரசனும் வினை செய்யுங்காலத்து முன்பே எண்ணிச் செய்ய வேண்டுதலின், அவையிற்றின்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புவலியறிதல் Online TestCLICK HERE
வலி அறிதலாவது தனக்கு உள்ள வலியும் பிறர்க்கு உள்ள வலியும் அறிதல். செய்யத்தக்க வினையை எண்ணினாலும் அதனைச் செய்து முடிக்குங்கால் வலி அறிந்து செய்யவேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புகாலமறிதல் Online TestCLICK HERE
காலம் அறிதலாவது வினை செய்தற்கு ஆம்காலம் அறிதல். வலியறிந்தாலும் வினை செய்யும் காலமும் அறிந்து செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புஇடனறிதல் Online TestCLICK HERE
இடனறிதலாவது வினை செய்யும் இடம் அறிதல். காலம் அறிந்தாலும் இடன்அறிந்து வினை செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புதெரிந்து தெளிதல் Online TestCLICK HERE
தெரிந்து தெளிதலாவது அமாத்தியரை ஆராய்ந்து தெளிதல், காரியம் தப்பாமல் எண்ணி, அதற்காம் காலமும் இடமும் அறிந்தாலும், அது செய்து முடிக்கும் அமாத்தியரையும் எண்ணிக்கொள்ள வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புதெரிந்து வினையாடல் Online TestCLICK HERE
தெரிந்து வினையாடலாவது வினை செய்வாரால் செய்யப்படும் வினையும் பலவாதலின், அவரால் செய்யப்படும் வினைகளை அறிந்து அவரை விட்டுச் செய்வித்தல்.
அதிகாரம்பொருட்பால் தலைப்புசுற்றந்தழால் Online TestCLICK HERE
சுற்றந் தழாலாவது அரசன் தன் கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத்தல். மேல் அமாத்தியர்மாட்டு அரசன் ஒழுகும் திறம் கூறினாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புபொச்சாவாமை Online TestCLICK HERE
பொச்சாவாமையாவது மறவியின்றி ஒழுகுதல். அது தனது சோர்வு பார்த்துப் பிறர் வஞ்சகம் செய்யுமிடங்களினும், அறம் பொருள் இன்பங்கள் செய்ய வேண்டுமிடங்களினும் மறத்தலின்மை. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும்
அதிகாரம்பொருட்பால் தலைப்புசெங்கோன்மை Online TestCLICK HERE
செங்கோன்மையாவது செவ்விதாகிய முறைசெய்தல் உடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலால் கோல் என்றார்; அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று. மேல் அமாத்தியர்மாட்டும் சுற்றத்தார்மாட்டும் தன்மாட்டும் செய்யும் திறம் கூறினார் உலகத்தார்மாட்டும் செய்யும் திறம் கூறுகின்றார் ஆதலான், அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புகொடுங்கோன்மை Online TestCLICK HERE
கொடுங்கோன்மையாவது கொடுங்கோன்மையால் வரும் குற்றங் கூறுதல். அது முறைமை செய்யாமையும். அருள் செய்யாமையும், பிறர் நலியாமற் காவாமையும், முறைகெடச் செய்தலும் குடிகளுக்குத் தண்டனை ஆராயாது செய்தலும், அல்லவை செய்தலும், குடிகளை இரத்தலும் எனப் பலவகைப் படும். இது கூறிய செங்கோன்மையின் மாறுபட்டு வருதலின், அதன்பின் கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புவெருவந்த செய்யாமை Online TestCLICK HERE
வெருவந்த செய்யாமையாவது பிறர்க்கு ஐயம் வருவன செய்யாமையும், தனக்கு அச்சம் வருவன செய்யாமையும் கூறுதல். தான் முறை செய்வாரைப் போன்றிருந்து அதனை உலகத்தார் வெருவுமாறு செய்வனாயின், அதுவும் கொடுங்கோலோடு ஒக்கும் என்று அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புகண்ணோட்டம் Online TestCLICK HERE
கண்ணோட்டமாவது கண்ணால் காணப்பட்டாரை அருள் செய்தல். குற்றம் செய்தாரை ஒறுக்குங்கால் உலகத்தார் இசைய ஒறுக்கவேண்டும் என்றாராயினும் அவ்வாறு செய்தவரைத் தமது கண்முன்னாகக் கண்டால் அதனைப் பொறுத்தலும் வேண்டும் என்று அதன்பின் இது கூறப்பட்டது. இது பெரும்பான்மையும் முன்பு கண்டு பழகினார் மேற்று
அதிகாரம்பொருட்பால் தலைப்புஒற்றாடல் Online TestCLICK HERE
ஒற்றாடலாவது ஒற்றரை ஆளவேண்டும் என்பதும், அவ்வொற்றர் திறனும் கூறதல். பெரியாரைத் துணைக் கோடல் முதலாகக் கண்ணோட்டம் ஈறாகத் தன் வாசலிலிருந்து செய்ய வேண்டுவன கூறினார், அது செய்யுங்கால் அவரவர் செய்தியை ஒற்றரான் ஒற்றி அறிய வேண்டுதலானும், இனிப் பிறர்நாடு கொள்ளுங்கால் செய்யவேண்டுவன கூறுகின்றாராதலின் அந்நாட்டு இயல்பறிந்து வினை செய்யவேண்டுதலானும், இவ்வதிகாரம் வேண்டப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புஊக்கமுடைமை Online TestCLICK HERE
ஊக்கமுடைமையாவது அதனைச்செய்யுமிடத்துக் காலத்து அருமையை ஓராது இவ்வாறு செய்யக்கடவேனென்று கருதுங் கருத்துடைமை. பிறர்நாடு கொள்ளுங்காலத்து அவ்விடத்துள்ள செய்தியை ஒற்றரால் அறிந்த பின்பு அதனையே அறிந்து கொள்ளக்கடவேனென்று நினைக்குங்கருத்து வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புமடிஇன்மை Online TestCLICK HERE
மடியின்மையாவது சோம்பலில்லாது செய்யும் காரியம். உயர்வு நினைத்தாலும் அதனைச் செய்து முடிக்குங்கால், சோம்பாமை வேண்டும் என்று அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புஆள்வினை உடைமை Online TestCLICK HERE
ஆள்வினை யுடைமையாவது முயற்சியுடைமை. செய்யும் காரியம் உயர நினைத்துச் சோம்புதல் இல்லாதிருந்தாலும் அது முடியுமாறு முயலவேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புஇடுக்கண் அழியாமை Online TestCLICK HERE
இடுக்கண் அழியாமையாவது யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை. வினை செய்யும் காலத்தினை முடிவு செய்வதன் முன்னர்ச் சில இடையூறு வந்தால் அவற்றைப் பொறுத்துச் செய்கின்ற வினையை முற்ற முயல வேண்டும் என்று அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புஅமைச்சு Online TestCLICK HERE
அமைச்சாவது அமைச்சர் செய்யும் திறம் கூறுதல்.
அதிகாரம்பொருட்பால் தலைப்புசொல்வன்மை Online TestCLICK HERE
சொல்வன்மையாவது வார்த்தை சொல்ல வல்லவன் ஆதல். அரசர்க்குக் கல்வி இன்றியமையாததுபோல அமைச்சர்க்கு இஃது இன்றியமையாதது ஆதலின், அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புவினைத்துய்மை Online TestCLICK HERE
வினைத்தூய்மையாவது செய்யும் வினையைக் குற்றம் பயவாமல் செய்தல். மேல் சொல்லுங்கால் சொல்வதையும் பிறர் விரும்புமாறு சொல்லல் வேண்டும் என்றார்; செய்வினையையும் அவ்வாறு செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புவினைத்திட்பம் Online TestCLICK HERE
வினைத்திட்பமாவது வினையின்கண் திண்ணியராதல். மேல் நல்வினையைச் செய்யவேண்டும் என்றார். அது செய்யுங்கால் திண்ணியராகிச் செயல்வேண்டும் ஆதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புவினைசெயல்வகை Online TestCLICK HERE
வினைசெயல்வகையாவது வினைசெய்யுமாறு கூறுதல்.மேல் வினை செய்யுங்கால் திண்ணியராக வேண்டும் என்று கூறினார். திண்ணியார் வினைசெய்யும் வண்ணம் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புதூது Online TestCLICK HERE
தூதாவது மாற்றரசர் மாட்டுச் சந்து செய்யும் அமாத்தியர் இலக்கணம் கூறுதல். இனிப் பகைவர்மாட்டு அமாத்தியர் செய்யும் திறம் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புமன்னரைச் சேர்ந்து ஒழுகல் Online TestCLICK HERE
மன்னரைச் சேர்ந்து ஒழுகலாவது அரசர்மாட்டு அமாத்தியர் ஒழுகும் திறம் கூறுதல். இது முதலாக அவை அஞ்சாமை ஈறாகக் கூறுகின்றவை தம் அரசர்மாட்டு வேண்டுமாயினும், மாற்றரசர்மாட்டும் வேண்டுதல் இன்றியமையாத சிறப்புடைத்தாதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புகுறிப்பு அறிதல் Online TestCLICK HERE
குறிப்பறிதலாவது அரசர் உள்ளக் கருத்தை அமைச்சர் அறிதல். இஃது அமைச்சியலாதலின் அமைச்சர் குறிப்பறிதல் கூறியது என்னையெனின், குறிப்பறிதல் அரசர்க்கும் வேண்டுமாதலின், 'இறந்தது காத்தல்' என்னும் தந்திர உத்தியால் கூறப்பட்டது என்க. இது பெரும்பான்மையும் அரசர்க்கும் வேண்டுமாதலின், மன்னரைச் சேர்ந்தொழுகலின் பின் கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புஅவை அறிதல் Online TestCLICK HERE
அவை அறிதலாவது இருந்த அவை அறிந்து அதற்குத் தக்க சொல்லுதல். அரசன் குறிப்பு அறிந்தாலும் அவை அறிந்து சொல்ல வேண்டும் ஆதலின், அதன் பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புஅவை அஞ்சாமை Online TestCLICK HERE
அவை அஞ்சாமையாவது அவையின்கண் அஞ்சாமற் சொல்லுதல். அவையறிந்தாலும் அஞ்சாது சொல்லுதல் வேண்டுமாதலின்,அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புநாடு Online TestCLICK HERE
அவற்றுள், நாடாவது நாட்டு இலக்கணம் கூறுதல்.
அதிகாரம்பொருட்பால் தலைப்புஅரண் Online TestCLICK HERE
அரணாவது அரண் இலக்கணம் கூறுதல். மேல், நாட்டு இலக்கணம் கூறினார் நகர் இலக்கணம் கூறுகின்றார் ஆதலின் அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புபொருள் செயல் வகை Online TestCLICK HERE
பொருள் செயல் வகையாவது பொருள் தேடுமாறும் அதனால் பயன்கொள்ளுமாறும் கூறுதல். இது மேற்கூறிய நாடும் நகரமும் உடையார்க்கு உளதாவது ஒன்றாதலின், அதன் பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புபடை மாட்சி Online TestCLICK HERE
படைமாட்சியாவது படையினது நன்மை கூறுதல். படை மேற்கூறிய பொருளினால் உண்டாமாதலானும், அதனை ஈட்டுதற்கும் நுகர்தற்கும் படை வேண்டுமாதலானும், அதன் பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புபடைச் செருக்கு Online TestCLICK HERE
படைச்செருக்காவது படையினது வீரியம் கூறுதல். இது படைக்கு இன்றியமையாமையின், அதன்பின் கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புநட்பு Online TestCLICK HERE
நட்பாவது நட்பாமாறு கூறுதல். அமைச்சு,நாடு,அரண்,பொருள்,படை ஐந்தும் கூறினார்; இனி நட்பாமாறு கூறுகின்றார். மன்னருள் படையும் பொருளும் உள்ளிட்டன நிலை நின்று வளர்வதும் இனநலன் அழிவு பெறாத நட்பையுடைவனுக்கு அல்லது கூடாது ஆதலின், அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புநட்பு ஆராய்தல் Online TestCLICK HERE
நட்பு ஆராய்தலாவது நட்பிற்கு ஆவாரை ஆராய்ந்து கொள்ளுமாறு கூறுதல். நட்குங்கால் ஆராய்ந்து நட்க வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புபழைமை Online TestCLICK HERE
பழைமையாவது நட்டோரது உரிமை கூறுதல். இஃது அவர் உரிமையால் செய்தனவற்றிற்குப் பொறுக்க வேண்டும் என்று அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புதீ நட்பு Online TestCLICK HERE
தீநட்பாவது தீயகுணத்தாராகிய மாந்தரோடு நட்டதனால் வரும் குற்றம் கூறுதல்.
அதிகாரம்பொருட்பால் தலைப்புகூடா நட்பு Online TestCLICK HERE
கூடாநட்பாவது சுற்றத்தாராயினும் பிறராயினும் மனத்தினால் நள்ளாது, நட்டாரைப்போல் ஒழுகுவாரது இயல்பும், அவர் மாட்டு ஒழுகும் திறமும் கூறுதல். தமக்கு இனமின்றிக் கருமம் காரணமாக நட்பாரும், பகைவராய் நட்பாரும் என அவ்விருவகையாரையும் தீநட்புப் போலக் கடிய வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புபேதைமை Online TestCLICK HERE
பேதைமையாவது கேட்டிற்குக் காரணமாகியவற்றை அறியாதார் இயல்பு கூறுதல். இறைமாட்சி முதலாகக் கூடா நட்பு ஈறாகப் பொருட்பகுதியாகிய அமைச்சும், நாடும், அரணும், பொருளும், படையும், நட்பும் என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்பும் கூறினார்
அதிகாரம்பொருட்பால் தலைப்புபுல்லறிவாண்மை Online TestCLICK HERE
புல்லறிவான்மையாவது சிற்றறிவின் இயல்பும் அதனால் வரும் குற்றமும் கூறுதல். இதுவும் பேதைமையோடு ஒத்த இயல்பிற்று ஆதலான், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புஇகல் Online TestCLICK HERE
இகலாவது பிறரோடு மாறுகொண்டால் வரும் குற்றம் கூறுதல். இஃது அறியாதார்க்கு உளதாமாதலின், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புபகை மாட்சி Online TestCLICK HERE
பகைமாட்சியாவது பகைகொள்ளுங்கால் தனக்கு நன்மை பயக்குமாறு கொள்ளுதல். மேல் பகைகொள்ளலாகாது என்றார்; பகைகொள்ளுங்கால் நன்மை பயக்குமாயின் கொள்க என்றமையால், அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புபகைத்திறம் தெரிதல் Online TestCLICK HERE
பகைத்திறன் தெரிதலாவது பகையின்கண் செய்யும் திறம் ஆராய்தல். மேல் பகை கொண்டால் வெல்வாரையும் தோற்பாரையும் கூறினார். இனி அப்பகைவர்மாட்டுச் செய்யும் திறம் எண்ணிச் செய்யவேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புஉட்பகை Online TestCLICK HERE
உட்பகையாவது உடனே வாழும் பகைவர் செய்யும் திறம் கூறுதல். அஃதாவது புறம்பு நட்டார் போன்றும் சுற்றத்தாராயும் ஒழுகி, மனத்தினால் பகைத்திருப்பார் செய்யும் திறம் கூறுதல். இதுவும் ஆராய்ந்து காக்கவேண்டுமாதலின், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புபெரியாரைப் பிழையாமை Online TestCLICK HERE
பெரியாரைப் பிழையாமையாவது தம்மில் பெரிய அரசரையும், முனிவரையும், அறிஞரையும் பிழைத்து ஒழுகாமை. மேல் பகையும் பகையின்கண் செய்யும் திறமும் கூறினார். தம்மிற் பெரியார் தம்மைப் பகையாகக் கொள்ளாராயினும், தமது இகழ்ச்சி அவரால் தீமை பயக்குமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புபெண்வழிச் சேறல் Online TestCLICK HERE
பெண்வழிச் சேறலாவது இன்பம் காரணமாக மனையாள்வழி ஒழுகுதலும், கணிகையரோடு கூடி ஒழுகுதலும், நறவுண்டு களித்தலும், சூதாடலும், தீயனவன்றி மிக உண்டலும் என ஐந்து வகைப்படும்; அவற்றுள் பெண்வழிச் சேறலாவது மனைவியர் வழியொழுகுதலினால் வரும் குற்றம் கூறுதல்
அதிகாரம்பொருட்பால் தலைப்புவரைவின் மகளிர் Online TestCLICK HERE
வரைவின் மகளிராவது கணிகையரோடு கலந்தொழுகினால் வரும் குற்றம் கூறுதல். முயக்கத்தில் வரைவின்மையால்,வரைவின் மகளிர் என்று கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புகள் உண்ணாமை Online TestCLICK HERE
கள்ளுண்ணாமையாவது கள்ளுண்டலைத் தவிரவேண்டும் என்று கூறுதல். இது கணிகையர் கூட்டத்தினால் வருதலின், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புசூது Online TestCLICK HERE
சூதாவது, சூதாடினால் வரும் குற்றம் கூறுதல். இது மேற்கூறியவற்றோடு ஒத்த இயல்பிற்று ஆதலின், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புமருந்து Online TestCLICK HERE
மருந்தாவது யாக்கை நோயுறாமற் செய்யும் திறம் கூறுதல். மேல் கடியப்படுவன கூறினார். இனிக் கடியப் படாத உணவும் தன் அளவில் மிகுமாயின் துன்பம் பயக்கும் ஆதலான், அதுவும் அளவு அறிந்து உண்ண வேண்டும் என்று அதன்பின் இது கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புகுடிமை Online TestCLICK HERE
குடியியலாவது அரசரும், அமைச்சரும், வீரரும் அல்லாத மக்கள் தமது இயல்பு கூறுதல். கூறிய அம்மூன்றினும் முற்படக் குடிப்பிறந்தார் இலக்கணம் கூறுவர்.
அதிகாரம்பொருட்பால் தலைப்புமானம் Online TestCLICK HERE
மானமாவது எக்காலத்தினும் தமது நிலைமையில் திரியாமை. இது குடிப்பிறந்தார்க்கு இன்றியமையாமையின் அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புபெருமை Online TestCLICK HERE
பெருமையாவது, சிறியார் செயல் செய்யாமை. அது பின்பு காணப்படும்
அதிகாரம்பொருட்பால் தலைப்புசான்றாண்மை Online TestCLICK HERE
சான்றான்மையாவது நற்குணங்கள் பலவற்றாலும் அமைந்தார் இலக்கணம் கூறுதல். இது பெரும்பான்மையும் அறத்தினால் தலையளி செய்தொழுகுவாரை நோக்கிற்று.
அதிகாரம்பொருட்பால் தலைப்புபண்பு உடைமை Online TestCLICK HERE
பண்புடைமை யாவது பெருமை, சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகல்.
அதிகாரம்பொருட்பால் தலைப்புநன்றியில் செல்வம் Online TestCLICK HERE
நன்றியில் செல்வமாவது அறத்தையும் இன்பத்தையும் பயவாத செல்வத்தின் இயல்பு கூறுதல். இது பண்பிலாதார்க்கு உளதாவது ஒன்று ஆதலின், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புநாண் உடைமை Online TestCLICK HERE
நாணுடைமையாவது அறம் பொருள் இன்பங்களில் பிறர் பழியாமல் ஒழுகுதல்.
அதிகாரம்பொருட்பால் தலைப்புகுடி செயல்வகை Online TestCLICK HERE
குடி செயல் வகையாவது குடியோம்புதல் வேண்டும் என்று கூறுதல். இது நாணமுடையார் செயலாதலின், அதன் பின் கூறப்பட்டது
அதிகாரம்பொருட்பால் தலைப்புஉழவு Online TestCLICK HERE
உழவாவது உழவின் திறனும் அதனால் வரும் பயனும் கூறுதல்
அதிகாரம்பொருட்பால் தலைப்புநல்குரவு Online TestCLICK HERE
நல்குரவாவது பொருளில்லாதார்க்கு உளதாகும் குற்றங் கூறுதல். இஃது உழவில்லாதார்க்கு உளதாவது ஒன்று ஆதலின், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புஇரவு Online TestCLICK HERE
இரவாவது பிறர்மாட்டுச் சென்று இரந்துகோடல். இது நல்கூர்ந்தார் செயல் ஆதலான், அதன்பின் கூறப்பட்டது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புஇரவு அச்சம் Online TestCLICK HERE
இரவச்சமாவது இரத்தலைத் தவிரவேண்டும் என்று கூறுதல். மேல் நல்கூர்ந்தார் ஈவார்மாட்டே இரத்தல் அமையும் என்று பொதுப்படக் கூறினாராயினும், மேலாயினார்க்கு அது தகுதியன்று என்பது குறித்து இவ்வதிகாரம் கூறப்பட்டது. மேலதனோடு இயைபும் இது.
அதிகாரம்பொருட்பால் தலைப்புகயமை Online TestCLICK HERE
கயமையாவது இழிகுணத்தாராகிய மாந்தர் இயல்பு கூறுதல். இவர் மேற்கூறப்பட்ட எல்லாரினும் இழிந்தாராதலின், இது பின் கூறப்பட்டது

Post a Comment