TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
FOR TEST: CLICK HERE
- இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (centre for monitoring Indian ECONOMY-CMIE) தரவுகளின் படி இந்தியாவின் வேலையின்மை விகிதம் டிசம்பர் 2022 ல் 8.30% சதவீதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 16 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- கன்சர்வேஷன் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு இந்தியாவில் நீலகிரி உயிர்கோள காப்பகத்தில்( Nilgiri biosphere reserve-NBR )மனித குடியிருப்புகள் அதிகரிக்கும் காரணத்தால் ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.NBRஐ உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சுமார் 6000 காட்டு யானைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு(United Nations food and agriculture organisation-FAO) ஜனவரி 6 என்று வெளியிட்ட அறிக்கையின் படி 2022 இல் உணவு விலை குறியீடு சராசரியாக 143.7 புள்ளிகள் ஆக உயர்ந்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் பதிவானதை விட 14.3% அதிகமாக உள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- பாதுகாப்பு தீர்வுகள் நிறுவனமான பராக்குடா (Barracuda) சமீபத்தில் 2023 ஆம் ஆண்டில் இணைய அச்சுறுத்தலுக்கான தனது கணிப்புகளை பகிர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பூஜ்ஜிய நாள் பாதிப்புகள் (zero day vulnerabilities )மற்றும் விநியோக சங்கிலிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் என கணித்துள்ளது 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 21,000 தாக்குதல்கள் (common vallarabilities and exposures -CVEs) பதிவு செய்யப்பட்டுள்ளன.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- சிறியம் வான் போக்குவரத்து மதிப்பீட்டு (Cirium aviation analytics) நிறுவனம் 2022-உலகில் சிறப்பாக செயல்படும் விமான நிலையங்களின் பட்டியல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. முதலிடம் ஹனேடா விமான நிலையம் – டேக்கியோ ஜப்பான்
- இரண்டாம் இடம் -கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் – பெங்களூரு இந்தியா
- மூன்றாமிடம்- சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையம் உட்டா அமெரிக்கா
- ஏழாம் இடம்- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்- டெல்லி இந்தியா
- உலக அளவில் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிறுவனங்கள் பட்டியலையும் சிறியம் நிறுவனம் வெளியிட்டுள்ளது .அதன்படி பிரேசிலை சார்ந்த அசூல் ஏர்லைன்ஸ் முதலிடத்தில் உள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- 2021 ஆம் ஆண்டில் ஐந்து மில்லியன் குழந்தைகள் தனது ஐந்து வயதினை அடையும் முன்பே இறந்துள்ளனர்.என குழந்தைகள் இறப்பு விகிதம் 2022 அறிக்கை குறிப்பிடுகிறது.
- 2021 ஆம் ஆண்டில் உலக அளவில் பதிவான ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 38 இறப்புகளாக இருந்தது.சகாரா பாலைவனப் பகுதிகளில் இது அதிகபட்சமாக 74 என்றளவில் உள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- இந்திய ரிசர்வ் வங்கி அதன் ஒம்புட்ஸ்மேன் திட்டங்களின் ஒரு பகுதியாக 2021-22 நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மூன்று ஒம்புட்ஸ்மேன் திட்டங்களின் செயல்பாடுகளை உள்ளடக்கியது.(banking ombudsman scheme 2006, the ombudsman scheme for non banking financial companies 2018 , the ombudsman scheme for digital Transactions 2019).
- ஒம்புட்ஸ்மேன் திட்டங்கள் மற்றும் நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் மூலம் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 9.31% அதிகரித்துள்ளது. மொத்த புகார்கள் – 4,18,184
- பெறப்பட்ட அனைத்து புகார்களில் டிஜிட்டல் முறை மற்றும் பரிவர்த்தனை புகார்கள் 42.12%
- ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் அலுவலகங்கள் மூலம் புகார் தீர்க்கும் விகிதம் 2021-22 இல் 97.97%
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின்படி ஓசோன் படலம் அடுத்த 40 ஆண்டுக்குள் முழுவதுமாக தன்னை சரி செய்து கொள்ளும் என கண்டறிந்துள்ளனர்.1987 மேற்கொண்ட மாண்ட்ரியல் உடன்படிக்கையின் படி இது சாத்தியமானதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வறிக்கையின் படி அண்டார்டிகா மீது ஏற்படுத்தப்பட்டுள்ள ஓசோன் படல துளை 2040 ஆம் ஆண்டுக்குள் சரியாகிவிடும் எனவும், மேலும் ஆர்டிக் பிரதேசத்தில் ஓசோன் படலம் தனது இயல்பான அளவை 2045குள்ளும், அண்டார்டிகா பகுதியில் ஓசோன் படலம் தனது இயல்பான அளவு 2066 ஆம் ஆண்டுகுள்ளும் சரி செய்து கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (centre for monitoring Indian ECONOMY-CMIE) தரவுகளின் படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத் முன்னிலையில் உள்ளது. குஜராத் 2022-ம் நிதியாண்டில் ரூ.3.98 ட்ரில்லியன் மதிப்புள்ள புதிய முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இரண்டாவது மாநிலம் ராஜஸ்தான் -ரூ. 2.37 ட்ரில்லியன்
- கச்சா எண்ணெய் உற்பத்தியில் குஜராத் இரண்டாம் இடத்திலும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் நான்காம் இடத்திலும் உள்ளது மேலும் உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஜாம்நகர் குஜராத்தில் உள்ளது. இந்தியாவின் ரசாயன உற்பத்தியில் குஜராத் முன்னணியில் உள்ளது இந்தியாவின் முதல் பெட்ரோலியம் கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் முதலீட்டுப் பகுதி குஜராத்தில் உள்ளது.
- வெளிநாட்டு நிதி சந்தை முதலீட்டாளர்களை ஈர்க்க இந்தியாவின் முதல் சர்வதேச நிதி சேவை மையம்(IFSC) குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் சிட்டியில்(GIFT CITY) அமைக்கப்பட்டுள்ளது.
SEE ALSO FEBRUARY 2023 REPORT,INDICES NOTES AND TEST| பிப்ரவரி நடப்பு நிகழ்வுகள் 2023
Powered by Inline Related Posts
- ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசை படி இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறி 85 ஆவது இடத்தில் உள்ளது.இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் இப்பொழுது 59 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற முடியும்.
- உலகின் மிக வலிமையான பாஸ்போர்ட் -ஜப்பான்(193 புள்ளிகள்)(தொடர்ந்து 5வது முறை)
- இரண்டாம் இடம் சிங்கப்பூர் தென் கொரியா (192 புள்ளிகள்)
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- OAG நிறுவனம் வெளியிட்ட நேரம் தவறாமை செயல்திறன் மதிப்பீட்டில் ஜப்பானிய விமான நிலையங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.மேலும் உலகின் முதல் 12 இடங்களில் ஒன்பது இடங்களை ஜப்பானிய விமான நிலையங்கள் பிடித்துள்ளன.முதலிடத்தில் ஒசாகா விமான நிலையம்,இரண்டாமிடம் மட்சுயாமா,மூன்றாமிடம் மியாசாகி. இந்தியாவிலிருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் 13-வது இடத்தை பிடித்துள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி உலக பொருளாதாரம் 2023ல் 1.7% மற்றும் 2024ல் 2.7% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் உள்ள தனிநபர் வருமான வளர்ச்சி ஆனது சராசரியாக 2.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர அறிக்கையின்படி (World economic forum global risk report) வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உலகம் எதிர் கொள்ளும் குறுகிய மற்றும் நீண்ட கால அபாயங்களாக குறிப்பிடுகிறது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின்படி உலகின் சராசரி உலக வெப்பநிலை இப்போது தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட 1.1°C முதல் 1.2°C வரை அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.1880ல் பதிவு செய்வதில் தொடங்கியதிலிருந்து 2022 ஆம் ஆண்டை ஆறாவது வெப்பமான ஆண்டாக அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 0.2 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை அதிகரித்து வருவதாக நாசா அறிவித்துள்ளது .புவி வெப்பமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் ஆக கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்ட உடன்படிக்கை 2015 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- (The ministry of health and family welfare-MoHFW) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் 2021-22 கிராமப்புற சுகாதார புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- மார்ச் 31, 2022 கிராமப்புற சுகாதார மதிப்பின் படி ஒவ்வொரு துணை மையமும்(Sub centres) சராசரியாக 5691 பேருக்கும் ,ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில்(Primary Health Centres)இருந்தும் 36049 பேருக்கும் ஒவ்வொரு சமூக சுகாதார மையத்திலும்(community Health Centres) 164027 பேருக்கும் சேவை வழங்கப்பட்டுள்ளது . ஆனால் விதிமுறைகள் எப்படி ஒவ்வொரு துணை மையமும்(Sub centres) 3000- 5000 மக்கள் தொகைக்கும், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமும்(Primary Health Centres) 20,000-30,000 மக்கள் தொகைக்கும் ஒவ்வொரு சமூக சுகாதார மையம்(Community Health Centres) 80,000 -1,20,000 மக்கள் தொகைக்கும் வழங்க வேண்டும் என கூறுகிறது.
- தேசிய ஊரக சுகாதார இயக்கம் 2005ல் (National rural Health mission) தொடங்கப்பட்டதிலிருந்து உள்ள அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமூக சுகாதார மையங்களில் தேவைப்படும் நிபுணர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.இந்தியா முழுவதும் 6064 CHCகள் உள்ளன. இந்த மையங்களில் பெரும்பாலானவற்றில் சிறப்பு மருத்துவர்களின்தேவை ,அறுவை சிகிச்சை நிபுணர்கள்(surgeons)(83.2%), மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர்கள்(Obstetricians and gynecologist )(74.2%) , மருத்துவர்கள் (physicians)(79.1%) மற்றும் குழந்தை மருத்துவர்கள் (pediatrician)(81.6%). கிராமப்புற சுகாதார புள்ளி விபர அறிக்கை 1992 ஆம் ஆண்டு முதல் வருடாந்திரம் வெளியிடப்படுகிறது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்ட பணக்காரர்களின் பட்டியலில்(survival of the richest) இந்தியாவிலுள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேர் நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம் மக்கள் தொகையில் அடிமட்டத்தில் மூன்று சதவீதம் செல்வத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஆண் தொழிலாளி சம்பாதிக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் பெண் தொழிலாளி 63 பைசா மட்டுமே சம்பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- பிரதம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆண்டு கல்வி நிலை அறிக்கை 2022ல் மாணவர் சேர்க்கை 98.4% அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளது.
SEE ALSO 10TH ECONOMICS STUDY NOTES |உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து| TNPSC GROUP EXAMS
Powered by Inline Related Posts
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை(united Nations department of economic and social affairs) வெளியிட்ட “உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள்” அறிக்கையில் உலக பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது .அதில் 2022ல் 3 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2023 1.9 சதவீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி விகிதம் 2023 5.8% ஆகவும் 2024 6.7 சதவீதமாகவும் இருக்கும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- உயர்கல்விக்கான அகில இந்திய ஆய்வு அறிக்கை 2020-21AISHE (all India survey on higher education).
- உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2019 20 உடன் ஒப்பிடும்பொழுது 7.5% அதிகரித்துள்ளது.
- உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 2019-20 ஆம் ஆண்டை விட 13 லட்சம் அதிகரித்துள்ளது. எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகமாக இருந்தது
- 2014-15 ஆம் ஆண்டை விட உயர்கல்வி பெறும் பட்டியல் சாதி மாணவர்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது.
- 2014-15 ஆம் ஆண்டை விட உயர்கல்வி பெறும் பெண் பட்டியல் சாதி மாணவர்களின் எண்ணிக்கை 38% அதிகரித்துள்ளது.
- 2014-15 ஆம் ஆண்டை விட உயர்கல்வி பெறும் ST மாணவர்களின் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. பெண்களில், அதிகரிப்பு 63.4% ஆகும்.
- OBC மாணவர்களின் எண்ணிக்கை: 2014-15 உடன் ஒப்பிடுகையில் 32% அதிகரித்துள்ளது; பெண்களில், அதிகரிப்பு 39% ஆகும்.
- 2019-20 ஆம் ஆண்டை விட நாட்டின் மொத்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 70 அதிகரித்துள்ளது. கல்லூரிகளின் எண்ணிக்கை 1,453 அதிகரித்துள்ளது
- பாலின சமத்துவக் குறியீடு 1.05 ஆக அதிகரித்துள்ளது. 2017-18ல் 1 ஆக இருந்தது
- 2019-20 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டில் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 47,914 அதிகரித்துள்ளது.
- சேர்க்கை எண்ணிக்கையில் முதல் மாநிலங்கள்
- உத்திரப்பிரதேசம்,தமிழ்நாடு,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா
வடகிழக்கு மாநிலங்கள்
- 2020-21ல் மொத்தப் பதிவு 12.06 ஆக இருந்தது. இது 2014-15ல் 9.36 லட்சமாக இருந்தது. 2020-21ல் பெண்களின் எண்ணிக்கை 6.14 லட்சமாக இருந்தது. இது ஆண்களை விட அதிகமாக இருந்தது! ஆண்கள்: 5.92 லட்சம்.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- ஜிஎஸ்டி இழப்பீடு பெறும் மாநிலங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது இதன்படி நாட்டிலேயே ஜிஎஸ்டி இழப்பீடு பெறும் ஐந்து மாநிலங்கள் தமிழகம் கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத் மற்றும் உத்தரகாண்ட்.
- ஜிஎஸ்டி இழப்பீடு முடிவடையும் போது அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்: பஞ்சாப் டெல்லி புதுச்சேரி இமாச்சல் பிரதேசம் கோவா மற்றும் உத்தரகாண்ட்.
- அனைத்து மாநிலங்களையும் விட வட கிழக்கு மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டின் அதிகபட்ச பலன்களைப் பெற்றன. 2015-16ஆம் ஆண்டு அடிப்படையா ஆண்டாக கொண்டு 2023 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டில் இருந்து பெறப்பட்ட வருவாயின் ஆண்டு வளர்ச்சி 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- தேசிய புள்ளியியல் அலுவலகம், NSO ,சமீபத்தில் TPP பற்றிய முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, 2022-23 இல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 41% மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. 125,000 கிலோமீட்டர் சாலை அமைப்பதே நோக்கமாக இருந்தது. ஆனால் 45,945 கி.மீ மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசாங்கம் 1975 இல் TPP[Twenty Point Programme ] ஐ அறிமுகப்படுத்தியது. இது தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டு முறை திருத்தப்பட்டது, 1982 இல் ஒரு முறை மற்றும் பின்னர் 1986 இல். திட்டத்தின் முக்கிய நோக்கம் வறுமையை ஒழிப்பது மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது.
- 2022-23 பட்ஜெட்டின் போது, மத்திய அரசு திட்டத்திற்கான பட்ஜெட்டை 36% அதிகரித்து 19,000 கோடி ஒதுக்கப்பட்டது.
- சாலை கட்டுமானம் மட்டுமின்றி, சுயஉதவி குழுக்களுக்கு நிதி திரட்டும் பணியிலும் TPP செயல்படுகிறது.தற்போது, TPP 50க்கும் மேற்பட்ட திட்டங்களில் செயல்படுகிறது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- சமீபத்தில் “உலகளாவிய டிரான்ஸ் – கொழுப்பு நீக்கம்”[Global Trans – Fat Elimination] பற்றிய அறிக்கையை வெளியிட்டது.WHO 2018 இல் டிரான்ஸ் கொழுப்பு நீக்குதலைத் தொடங்கியது. 2023 என்பது டிரான்ஸ் கொழுப்புகளை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டாகும்.WHO இரண்டு கொள்கைகளை பின்பற்ற பரிந்துரைக்கிறது. 100 கிராம் கொழுப்பு உணவுகளில் இரண்டு கிராம் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்க வேண்டும் மற்றும் பகுதி ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களின் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும்.கொழுப்புகளில் மூன்று வகைகள் உள்ளன. அவை டிரான்ஸ் கொழுப்புகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் நிறைவுறா கொழுப்புகள். டிரான்ஸ் கொழுப்புகளின் நுகர்வு அதிகரிப்பது நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- தேசிய சட்டப் பல்கலைக்கழகம் 2007 ஆம் ஆண்டின் NLUA சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. திட்டம் 39A[Project 39A] என்பது பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய குழுவாகும், மேலும் இது சமீபத்தில் வருடாந்திர மரண தண்டனை அறிக்கை, 2022 என்ற அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, இந்தியாவில் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 2022 இல் 539 ஆக உயர்ந்தது. இது 2022 இல் 490 ஆக இருந்தது.
- அனைத்து குற்றங்களிலும், பாலியல் வன்முறைக்கு அதிகபட்ச மரண தண்டனை கிடைத்தது. மரண தண்டனைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாலியல் வன்முறைக்காக இருந்தது
- ஜம்மு & காஷ்மீர் , டெல்லி , தெலுங்கானா மற்றும் மணிப்பூர் நீதிமன்றங்களில் மரண தண்டனைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை
- ஒவ்வொரு 165 மரண தண்டனைகளில் இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டது.
- மரண தண்டனைகளில் அதிகபட்சமாக உத்திரபிரதேசம் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் குஜராத் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் உள்ளன.
- International Monetary Forum சர்வதேச நாணய மன்றம் சமீபத்தில் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தை வெளியிட்டது. அறிக்கையின்படி, இந்தியாவில் பணவீக்கம் மார்ச் 2023 இல் 6.8% ஆக குறையும். மேலும் 2023 இறுதியில் பணவீக்கம் 5% ஆக குறையும். 2024ல் இந்திய பணவீக்கம் 4% ஆக இருக்கும். உலகளாவிய பணவீக்கம் 2023 இல் 6.6% ஆக குறையும் 2024 இல், அது மேலும் 4.3% ஆக குறையும் என்றும் கணித்துள்ளது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- Nine charts அறிக்கை என்பது உலக வங்கியினால் வெளியிடப்படுகிறது இது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் , 1970 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவிய வறுமையை விட மிக அதிக அளவிளான மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளது. தற்பொழுது 685 மில்லியன் மக்கள் கடுமையான வறுமை நிலையில் இருப்பதாகவும் இது 2020 ஆம் ஆண்டுக்கு அடுத்தபடியாக கடந்த 20 ஆண்டுகளில் பதிவான வறுமை குறைப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு இரண்டாவது மோசமான ஆண்டாக 2022 ஆம் ஆண்டு உள்ளது என குறிப்பிடுகிறது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது 2023 ஆம் ஆண்டிற்கான உலக சமூக அறிக்கையினை வெளியிட்டது இந்த அறிக்கையின் கருத்துரு முதுமை அடைந்து வரும் உலகில் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதாகும். இந்த அறிக்கையின்படி உலக அளவில் 65 வயது முதல் அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களின் எண்ணிக்கையானது அடுத்த 30 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதியோர்களின் எண்ணிக்கையானது உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் 2050 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள முதியோர் எண்ணிக்கை 324 மில்லியனை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- 2023 ஆம் ஆண்டு உலக ஆயுத ஆற்றல் குறியீட்டில் 145 நாடுகளில் முதலிடம் வகிக்கும் நாடு அமெரிக்கா இரண்டாம் இடம் ரஷ்யா, மூன்றாமிடம் சீனா, நான்காம் இடம் இந்தியா. இந்திய ஆயுத ஆற்றல் குறியீடு -0.1025. கடைசி இடம் பூட்டான்.
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- முன்னணி பிராண்ட் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் பைனான்ஸ் இன் “உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் 500- 2023″(brand finance global 500 2023) அறிக்கையின் படி உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக ,இந்த ஆண்டு 15% சரிந்து 299.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் அமேசான் முதலிடம் பிடித்துள்ளது.ஆப்பிள் இரண்டாமிடம் பிடித்துள்ளது, இந்தியாவில் டாட்டா குழுமம் 78 இடத்திலிருந்து முன்னேறி 69 ஆக உயர்ந்துள்ளது. இன்போசிஸ் 150 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் உலகின் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் 2023 அறிக்கையின்படி Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜங்ஷன் ஹு வாக் முதலிடம் பெற்றுள்ளார் உலக அளவில் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தில் இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்திய நாதெள்ளா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் அடாப் நிறுவனத்தின் சாந்தனு நாராயணன் நான்காம் இடமும் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஐந்தாம் இடத்தில் உள்ளனர்
⚜️ ⚜️ ⚜️ ⚜️ ⚜️
- சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டத்தின் போக்குகள் 2023 (world employment and social Outlook trends 2023) அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உலகளாவிய வேலை வாய்ப்பு வளர்ச்சி ஆனது 2023 ஆம் ஆண்டில் ஒரு சதவீதம் இருக்கும் எனக் கணித்துள்ள நிலையில் உலகளாவிய வேலையின்மை அளவானது 2023 ஆம் ஆண்டில் சுமார் 28 மில்லியனாக இருக்கும் என கணித்துள்ளது.