- கனிகள் காய்கறிகள் மற்றும் அழகு தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது எவ்வாறு அழைக்கப்படும்?
தோட்டக்கலை (ஹார்டிகல்சர்)
- ஹார்ட்டிகல்ச்சர் எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
லத்தின் (ஹார்டஸ் – தோட்டம்,கலரே- வளர்ப்பு)
- தோட்டக்கலையில் எத்தனை பிரிவுகள் உண்டு ?
நான்கு :பழவியல்(pomology), காய்கறி பண்ணை(olericulture) ,பூந்தோட்ட பண்ணை(floriculture) மற்றும் நில அமைவு தோட்டங்கள்(landscape gardening)
- போமாலஜி என்பது எந்த மொழி சொல்?
இலத்தீன் (போமம்-பழம்,லாஜி-படிப்பு)
- காய்கறி வளர்ப்பு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
சமையல் அறை அல்லது உணவு தோட்டங்கள், வணிகத் தோட்டங்கள் மற்றும் செயற்கை காய்கறி தோட்டங்கள்
- தமிழக அரசு மூலம் வழங்கும் விவசாய மானியங்கள், விவசாய உபகரணங்கள் பயிர் காப்பீட்டுத் தகவல்கள் மற்றும் காலநிலை ஆகியவை பற்றிய தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ள எந்த செயலி மூலம் பெறமுடியும் ?
உழவன் செயலி
- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
பிப்ரவரி 18 ,2016
- தொழு பண்ணை உரம் என்னென்ன சத்துக்களை கொண்டுள்ளது?
சராசரியாக 0.5%,நைட்ரஜன் 0.2% பாஸ்பேட் மற்றும் 0.5 % பொட்டாசியம்
- செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு சாண உரங்கள் என்னென்ன?
3% நைட்ரஜன்,1%பாஸ்பரஸ் பென்டாக்சைடு,2% பொட்டாசியம் ஆக்சைடு
- பச்சை இலைகள், மரக்கிளைகள், புதர் செடிகள் ,தேவையற்ற நிலங்களில் வளரும் செடிகள், வயல்வெளி நீர்த்தேக்கங்களில் வளரும் தாவரங்கள் இன்னும் பலவற்றையும் சேர்த்து மக்க செய்து தயாரிக்கப்படும் உரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பசுந்தாள் உரம்
- பசுந்தாள் உரத்தின் பயனென்ன?
மண்ணின் காரத்தன்மையை சீர்படுத்துவது களைச்சடிகள் உருவாவதை கட்டுப்படுத்துகிறது
- லெகுமினஸ் தாவரங்களின் வேர்களில் கூட்டுயிர் வாழ்க்கையை நடத்தும் உயிரி எது?
ரைசோபியம் பாக்டீரியம்
- ரைசோபியம் பாக்டீரியாவின் பணி என்ன?
வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி அவற்றை அமோனியாவாக மாற்றும்
- எந்த வகை பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை பயன்படுத்தி அவற்றை தாவரங்களுக்கு கடத்துகின்றனர்?
அசோஸ்பைரில்லம்
- அசோஸ்பைரில்லம் பாக்டீரியா பயிர்களில் எவ்வளவு சதவீதம் தானிய உற்பத்தியை அதிகப்படுத்துகிறது ?
தானியங்களில் 5 முதல் 20 சதவீதமும், சிறுதானியங்களில் 30 சதவீதமும், தீவனப் பயிர்களில் 50 சதவீதமும்
- எந்தப் பூஞ்சைகள் வாஸ்குலர் தாவரங்களின் வேறுகளுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்கின்றனர் ?
மைக்கோரைசா
- மைக்கோரைசா பூஞ்சைகள் தாவரத்தின் எந்த திறனை அதிகரிக்கிறது?
பாஸ்பரஸ் ஊட்டச்சத்தினை எடுத்துக்கொள்ளும் திறன்
- நைட்ரஜனை நிலைநிறுத்துவது ,பூஞ்சை எதிர்ப்பு பொருள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் போன்ற கூட்டுப் பொருளை உற்பத்தி செய்து தாவரங்களுக்கு வழங்கும் நுண்ணுயிரிகள் எவை?
அசட்டோபேக்டர்
- நீலப்பச்சைப்பாசியான அனபினாவுடன் சேர்ந்து பாக்டீரிய கூட்டுயிர் வாழ்க்கை நடத்தும் நுண்ணுயிரி எது?
அசோலா
- மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என அழைக்கப்படுவது எது?
அசோலா
- கற்றாழையின் தாவரவியல் பெயர் என்ன?
அலோ விரா
- கற்றாழையின் தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
ஆந்த்ராக்குயினோன்
- கற்றாழையின் தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
இலைகள்
- கற்றாழையின் தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
காயங்களை சரி படுத்துதல், தோல் நோய் ,புற்றுநோய்
- துளசியின் தாவரவியல் பெயர் என்ன?
ஆசிமம் சாங்கடம்
- துளசியின் தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
பயன்பாட்டு எண்ணெய்
- துளசியின் தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
இலைகள்
- துளசி தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
சளி ,காய்ச்சல் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்
- நன்னாரியின் தாவரவியல் பெயர் என்ன?
ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ்
- நன்னாரியின் தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
டெர்பீன்
- நன்னாரி தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
வேர்கள்
- நன்னாரி தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
பாக்டீரியா தொற்று ,வயிற்றுப்போக்கு
- நிலவேம்பு தாவரவியல் பெயர் என்ன?
ஆன்ட்ரோ கிராபிஸ் பேனிகுளேட்டா
- நிலவேம்பு தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
டெர்பினாய்டுகள்
- நிலவேம்பு தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
அனைத்து பாகங்களும்
- நிலவேம்பு தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
டெங்கு காய்ச்சல் ,நீரிழிவு நோய் சிக்கன்குனியா
- வெட்பாலை தாவரவியல் பெயர் என்ன?
ரைட்டியா டிங்டோரியா
- வெட்பாலை தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
பிளவினாய்டுகள்
- வெட்பாலை தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
மரப்பால் ,இலைகள்
- வெட்பாலை தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
படர்தாமரை ,வயிற்றுப்போக்கு ,வீக்கம்
- சின்கோனா தாவரவியல் பெயர் என்ன?
சின்கோனா அபிசினாலிஸ்
- சின்கோனா தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
குயினைன்
- சின்கோனா தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
மரப்பட்டைகள்
- சின்கோனா தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
மலேரியா நிமோனியா காய்ச்சல்
- சிவன அவல் பொறி -தாவரவியல் பெயர் என்ன?
ரவுல்பியா செர்பன்டினா
- சிவன அவல் பொறி தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
ரிசெர்பைன்
- சிவன அவல் பொறி தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
வேர்கள்
- சிவன அவல் பொறி-தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
ரத்த அழுத்தம் குறைய பாம்பின் விஷம் முறிவுக்கு
- தைலமரம் தாவரவியல் பெயர் என்ன?
யூக்கலிப்டஸ் குளோபுலஸ்
- தைலமரம் தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
யூக்கலிப்டஸ் எண்ணெய்
- தைலமரம் தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
இலைகள்
- தைலமரம் தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
காய்ச்சல், தலைவலி
- பப்பாளி தாவரவியல் பெயர் என்ன?
காரிகா பப்பாயா
- பப்பாளி தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
பாப்பைன்
- பப்பாளி தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
இலைகள் ,விதைகள்
- பப்பாளி தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
டெங்கு காய்ச்சல்
- நித்திய கல்யாணி தாவரவியல் பெயர் என்ன?
கேத்தராந்தஸ் ரோஸியஸ்
- நித்திய கல்யாணி தாவரத்தில் இருந்து பெறப்படும் மருந்து எது?
அல்கலாய்டுகள்
- நித்திய கல்யாணி தாவரத்தின் எந்தப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகிறது?
அனைத்து பகுதிகள்
- நித்திய கல்யாணி தாவரம் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன?
ரத்தம் புற்றுநோய் (லுயுக்கேமியா)
- கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் என அழைக்கப்படுவது எது?
காளான் வளர்த்தல்
- காளான்கள் என்ற பூஞ்சைகள் பிரிவை சார்ந்தவை?
பெசிடியோமைசிட்ஸ்
- எத்தனைக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன?
3000
- பட்டன் காளானின் அறிவியல் பெயர் என்ன ?
அகாரிகஸ் பைஸ்போரஸ்
- வைக்கோல் காளானின் அறிவியல் பெயர் என்ன ?
வால்வோரியெல்லா வாலவேசி
- காளான் விதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்பான்
- காளான்கள் எந்த வெப்ப நிலையில் நன்றாக வளரும்?
15 முதல் 23 டிகிரி செல்சியஸ்
- காளான்கள் ஒரு வாரத்தில் எவ்வளவு உயரம் வளரக்கூடியது?
3 சென்டிமீட்டர்
- மண்ணற்ற சூழலில் நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களை கொண்டு தாவரங்கள் வளர்த்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மண்ணிலா நீர் ஊடக தாவர வளர்ப்பு முறை அல்லது ஹைட்ரோபோனிக்ஸ்
- ஹைட்ரோபோனிக்ஸ் தாவர வளர்ப்பு முறை எப்போது யாரால் உருவாக்கப்பட்டது?
1980, ஜெர்மன் தாவரவியலாளர் ஜூலியஸ் வான் சாக்ஸ்
- தாவரத்தின் வேர்கள் தொங்கவிடப்பட்டு ஊட்டச்சத்துக்கள் காற்றில் பனிபோல தூவிவிடப்பட்டு வளர்க்கப்படும் தாவர வளர்ப்பு முறைக்கு பெயர் என்ன?
ஏரோபோனிக்ஸ்
- தாவரங்களை நீரில் வளர்க்கும் பழமையான முறையையும் ,மண்ணில்லா வேளாண் முறையையும் சேர்த்து இணைத்து உருவாக்கப்பட்ட புதிய முறைக்கு என்ன பெயர்?
அக்வாபோனிக்ஸ்
- இந்தியாவில் பசு மாடுகளும் எருமை மாடுகளும் என்ன வகை சிற்றினங்களாக காணப்படுகின்றன ?
போஸ் இண்டிகஸ் ( இந்திய பசுக்களும் காளைகளு)ம் மற்றும் போஸ் புபாலிஸ் (எருமைகள்)
- கால்நடை விலங்குகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன ?
மூன்று வகைகள்: பால் உற்பத்தி இனங்கள், இழுவை இனங்கள் மற்றும் இரு பயன்களையும் தரும் இனங்கள்
- பால் உற்பத்திகாக பயன்படும் உள்நாட்டு இனங்கள் என்னென்ன?
சாகிவால், சிவப்பு சிந்தி, ஜியோனி மற்றும் கிர்
- பால் உற்பத்திகாக பயன்படும் அயல்நாட்டு இனங்கள் என்னென்ன?
ஜெர்ஸி,ப்ரௌன் ஸ்விஸ்,ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன்
- இழுவை இனங்களாக அறியப்படும் மாடுகள் என்னென்ன?
அம்ரித்மகால்,காங்கேயம்,உம்பளச்சேரி,மாலவி,சிரி மற்றும் ஹல்லிகார்
- இழுவை மற்றும் பால் தரும் இன மாடுகள் என்னென்ன?
அர்யானா மாடுகள்,ஓங்கோல்,நான்கரேஜ்,தார்பார்கர்
- புலிக்குளம் மாடுகள் தமிழ்நாட்டில் எங்கு காணப்படுகிறது ?
மதுரை மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில்
- கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனங்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு :தவிடு அல்லது சக்கை மற்றும் செறியூட்டமிக்க உணவு
- தேசிய பால்பண்ணை வளர்ச்சி கழகம் யாரால் உருவாக்கப்பட்டது ?
வர்கீஸ் குரியன்
- நவீன இந்தியாவின் பால் பண்ணை தொழில் சிற்பி, வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
வர்கீஸ் குரியன்
- நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Aquaculture
- தமிழ்நாட்டின் கடல்வாழ் மீன்களின் வளமானது எவ்வளவாக உள்ளது?
0.719 மில்லியன் டன்
- தமிழ்நாட்டின் நன்னீர் மீன் வளர்ப்பு எவ்வளவு உள்ளது?
4.5 லட்சம் மெட்ரிக் டன்கள்
- கடலோர மீன் வளர்ப்பில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது ?
6ஆவது இடம்
- நீர்வாழ் உயிரிவளர்ப்பானது எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
நன்னீர் வாழ் உயிரி வளர்ப்பு, உவர் நீர் வாழ் உயிரி வளர்ப்பு
- நன்னீர் வாழ் உயிரி வளர்ப்பில் வளர்க்கப்படும் மீன்கள் என்னென்ன?
கட்லா, ரோகு ,மிர்கால் ,கெளுத்தி மீன்கள் ,ஜிலேபி மீன்கள் மற்றும் காற்றை சுவாசிக்கும் மீன்கள்
- கடல் நீர் வாழ் உயிரி வளர்ப்பு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாரி வளர்ப்பு அல்லது கடல் பண்ணைகள்
- கடல் நீர் வாழ் உயிரி வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் உயிரினங்கள் என்னென்ன?
கூனி இறால்கள், முத்து சிப்பிகள் ,உண்ணதகுந்த சிப்பிகள் சங்குகள்,தாடுப்புடைய மீன்களான சால்மன் மீன்கள் ,ட்ரௌட் மீன்கள்,கொடுவாய் மீன்கள் , மொறவை மீன்கள், பால் கெண்டை மீன்கள் மற்றும் மடவை மீன்கள்
- மீன் வளர்ப்பு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Pisciculture
- CMFRI- விரிவாக்கம் என்ன?
The central Marine fisheries research institute
- மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் கொச்சியில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1947
- CIBA- விரிவாக்கம் என்ன?
Central institute of brackishwater aquaculture
- மத்திய உவர் நீர் வாழ் உயிரி வளர்ப்பு நிறுவனமானது 1987 ஆம் ஆண்டு எங்கு தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது?
சென்னை
- மீன்கள் என்ன ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன?
அமினோ அமிலங்களான லைசின் மற்றும் மெத்தியோனைன்கள், நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் ,கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்பு ,சோடியம் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள் ,கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகிய A,Dவைட்டமின்களும் ,நீரில் கரையும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான பைரிடாக்சின் ,சயனாகோபலமின் மற்றும் நியாசின்.
- என்ன வகை இறால் வளர்ப்பு கடல் நீர் இறால் வளர்ப்பு என அழைக்கப்படுகிறது?
பினேயட இறால்கள்.(பினேயஸ் இண்டிகஸ் மற்றும் பினேயயஸ் மோனோடான்)
- என்ன வகை இறால்கள் நன்னீரில் வளர்க்கப்படுகின்றன?
மேக்ரோபிராகியம் ரோசென்பெர்கி மற்றும் மேக்ரோபிராகியம் மால்கோம்சோனி
- நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பொக்காலி வளர்ப்பு
- பொக்காலி வளர்ப்பு முறை எங்கு பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும் ?
கேரளா
- மண்புழு உரம் தயாரிப்பில் பயன்படக்கூடிய மண்புழுக்கள் என்னென்ன?
பெரியோனிக்ஸ் எஸ்கவேடடஸ்(இந்திய நீல வண்ண மண்புழு),எஸ்செனியா பெடிடா(சிவப்பு மண்புழு) மற்றும் யூட்ரலஸ் யூஜினியே (இரவில் ஊர்ந்து செல்லும் ஆப்பிரிக்க மண்புழு)
- தேன் கூட்டில் எத்தனை வகையான தேனீக்கள் காணப்படுகிறது?
மூன்று: ராணித் தேனீ, ஆண் தேனீ மற்றும் வேலைக்கார தேனீ
- தேன் கூட்டில் முட்டையிடுவது யாருடைய பொறுப்பாகும் ?
ராணித்தேனீ
- ராணித்தேனீ இடக்கூடிய முட்டையை கருவுறச் செய்தல் இதனுடைய முக்கிய பணி ?
ஆண் தேனீ (ட்ரோன்கள்)
- இனப்பெருக்கத் திறன் அற்ற பெண் தேனீக்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
வேலைக்கார தேனீ
- வேலைக்கார தேனீக்களின் வேலைகள் என்னென்ன?
தேன் சேகரித்தல், சிறிய தேனீக்களை பராமரித்தல், தேனடையை சுத்தம் செய்தல் ,தேன்கூட்டை பாதுகாத்தல் மற்றும் தேன்கூட்டின் வெப்பத்தை பராமரித்தல்
- உள்நாட்டு தேனி வகைகள் என்னென்ன ?
பாறை மற்றும் காட்டு தேனீ(ஏபிஸ் டார்கேட்டா), குட்டி தேனீ(ஏபிஸ் புளோரியா), இந்திய தேனீ (ஏபிஸ் இண்டிகா)
- வெளிநாட்டு வகை தேனீக்கள் வகைகள் என்னென்ன?
ஏபிஸ் மெல்லிஃபரா( இத்தாலிய தேனீ), ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)
- தேனில் உள்ள ஊட்டச் சத்துக்கள் என்னென்ன?
அமினோ அமிலங்கள் ,அஸ்கார்பிக் அமிலம் ,பி விட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவை
- தேனை கெட்டுப்போகாமல் பாதுகாப்பது எது ?
பார்மிக் அமிலம்
- தேனில் என்ன நொதி உள்ளது?
இன்வர்ட்டேஸ்
- சராசரியாக ஒரு தேனீ தனது வாழ்நாளில் எவ்வளவு தேனை சேகரிக்கிறது ?
அரைத்தேக்கரண்டி
- ஒரு கிலோ கிராம் தேனில் எவ்வளவு கலோரி ஆற்றல் உள்ளது?
3200
- தேனின் பயன்கள் என்னென்ன?
இரத்தத்தை தூய்மையாக்க ,ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ,இருமல் சளி காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்க, நாக்கு வயிறு மற்றும் குடல் புண்களை குணப்படுத்த, செரிமானத்திற்கும் பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.
9TH ZOOLOGY STUDY NOTES |பொருளாதார உயிரியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services