TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- நானோ பொருட்களை நானோ தொழில்நுட்பத்திறகுப் பயன்படுத்தும் வேதியியல் பயன்பாடு பற்றிய பிரிவு எது ?
நானோ வேதியியல்
- நானோ என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது ?
கிரேக்க வார்த்தை நானோஸ்
- நானோ என்பது எதைக் குறிக்கிறது?
ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி
- ஒரு நானோ மீட்டர் என்பது எவ்வளவு மீட்டர்?
10-⁹ மீட்டர்
- ஒரு வினாடியில் நகம் வளரும் நீளம் எவ்வளவு?
ஒரு நானோ மீட்டர்
- சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் எவ்வளவு விட்டம் உடையது ?
30 நானோமீட்டர்
- செல் சவ்வானது எவ்வளவு நானோமீட்டர் பரவியுள்ளது?
9 நானோமீட்டர்
- டிஎன்ஏவின் இரட்டை சுருள் எவ்வளவு விட்டத்தில் இருக்கும்?
இரண்டு நானோமீட்டர்
- ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் எவ்வளவு நானோமீட்டர் ஆகும்?
0.2 நானோமீட்டர்
- SEM ன் விரிவாக்கம் என்ன?
Scanning electron microscope
- TEM ன் விரிவாக்கம் என்ன?
Transmission electron microscope
- AFM ன் விரிவாக்கம் என்ன?
Atomic force microscope
- நானோ துகள்கள் எதனுடன் தொடர்பு கொள்ளும்போது உறுதியற்ற தன்மையை அடைகிறது?
ஆக்சிஜன்
- நானோ துகள்கள் ஆக்சிஜனுடன் என்ன வினைபுரிந்து வெடித்து சிதற வாய்ப்புள்ளது?
வெப்ப உமிழ் எரிதல் வினை
- மருந்துப் பொருள்களின் வேதியியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மருந்தாக்க வேதியியல்
- டிரக்(drug) என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
ஃபிரெஞ்சு வார்த்தை டிரக்யூ
- டிரக்யூ என்ற ஃபிரெஞ்சு வார்த்தைக்கு என்ன பொருள்?
காய்ந்த மூலிகை
- “உட்கொள்பவரின் நலனுக்காக அவரது உடலியல் அமைப்பை பற்றி அறிவதற்காக அல்லது நோயியல்நிலை குறித்து ஆராய்வதற்காக பயன்படுத்தப்படும் பொருள் அல்லது தயாரிப்பு மருந்து ஆகும்” என எது வரையறுத்துள்ளது?
உலக சுகாதார அமைப்பு
- குயினைன்,மார்ஃபின் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
தாவரங்கள்
- ஆஸ்பிரின், பாராசிட்டமால் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
இரசாயன தொகுப்பு
- இன்சுலின்,ஹெபாரின் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
விலங்கு
- திரவ பாரஃபின் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
கனிமம்
- பென்சிலின் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
நுண்ணுயிர்
- மனித வளர்ச்சி ஹார்மோன் எதிலிருந்து பெறப்படுகிறது?
மரபுப் பொறியியல்
- மருந்துகள் பொதுவாக எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன?
குணமாக்க பயன்படும் மருந்துகள் மற்றும் மனித உடலில் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை உள்ளவை
- உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மயக்க மருந்துகள்
- மயக்கம் மருந்துகளில் எத்தனை வகைகள் உண்டு?
இரண்டு: பொது மயக்கமூட்டிகள் மற்றும் குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்
- எல்லா வகையான உணர்வுகளையும் இழக்கச் செய்யும் மயக்கமூட்டிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
பொது மயக்கமூட்டிகள்
- குறிப்பிட்ட இடத்தை உணர்விழக்கச் செய்யும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்
- மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய வேதிப் பொருட்கள் என்னென்ன?
நைட்ரஸ் ஆக்சைடு (N2O),குளோரோபார்ம்(CHCL3) ,ஈதர்(C2H5-O-C2H5)
- மயக்க மருந்தாக பயன்படும் நிறமற்ற, மணமற்ற கனிமவாயு எது ?
நைட்ரஸ் ஆக்சைடு
- நைட்ரஸ் ஆக்சைடு எந்த பொது மயக்க மருந்துகளுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது?
ஈதர்
- இனிமையான மணம் மற்றும் இனிப்பு சுவை கொண்ட எளிதில் ஆவியாகும் மயக்க மருந்து எது?
குளோரோஃபார்ம்
- குளோரோபார்ம் ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து நச்சுத்தன்மையுள்ள எதனை உருவாக்குகிறது ?
கார்போனையில் குளோரைடு
- டைஎத்தில் ஈதர் எத்தனை சதவீதம் புரொப்பைல் ஹாலைடுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது?
0.002%
- உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல் எல்லாவகையான வலிகளிலும் இருந்து நிவாரணம் அளிக்கும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வலிநிவாரணிகள்
- வலி நிவாரணிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வலி நீக்கிகள் அல்லது வலி மருந்துகள்
- பொதுவான வலி நிவாரணிகள் எவை ?
ஆஸ்பிரின் மற்றும் நோவால்ஜின்
- காய்ச்சல் நிவாரணியாக மிகவும் அதிகமாக பயன்படும் மருந்துகள் என்னென்ன ?
ஆஸ்பிரின்,ஆன்ட்டிபைரின் ஃபினாசிடின் மற்றும் பாராசிட்டமால்
- நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு எது பயன்படுகிறது?
புரைத்தடுப்பான்கள்
- புரைதடுப்பானாக பயன்படுவை எவை?
அயோடோபார்ம்,ஃபீனால் கரைசல், ஹைட்ரஜன் பெராக்சைடு
- அயோடோபார்மின் எத்தனை சதவீத கரைசல் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது ?
ஒரு சதவீதம்
- ஃபீனால் கரைசலின் எத்தனை சதவீதம் புரைல்தடுப்பானாக செயல்படுகிறது?
0.2%
- ஃபீனால் கரைசலின் எத்தனை சதவீதம் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது ?
ஒரு சதவீதம்
- வெளிக் காயங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருள் எது?
ஹைட்ரஜன் பெராக்சைடு
- மலேரியாவானது உடலின் வெப்பநிலையை எவ்வளவுக்கு அதிகரிக்கின்றது?
103 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை
- மலேரியா என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும்?
கல்லீரலைப் பாதித்து ரத்தசோகை நோயை ஏற்படுத்தும்
- மலேரியா நோய் நிவாரணியாக பயன்படுவது எது?
குயினைன்
- குயினைன் என்ற மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
சின்கோனா எனும் மரப்பட்டை
- இறுதியாக மலேரியா நிவாரணி மருந்து எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது ?
அதன் பெயர் என்ன? 1961 ,பைரத்தமீத்தமின்
- சிறந்த மலேரியா நிவாரணியாக பயன்படும் மருந்துகள் என்னென்ன?
குயினைன்,பிரைமாகுயின்,குளோரோகுயின்
- குளோரோகுயின் எதனை கட்டுப்படுத்த அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?
பிளாஸ்மோடியம் ஓவேல் மற்றும் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
- பாக்டீரியா பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் சில வேதிப்பொருட்களை வெளிப்படுத்துகின்றன அந்த வேதிப் பொருட்கள் மற்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும் வளர்சிதை மாற்றத்தையும் தடுக்கும் தன்மை பெற்றவை இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
நுண்ணுயிர் எதிரிகள்
- முதன்முதலில் உருவாக்கப்பட்ட நுண்ணுயிர் எதிரி எது?
பென்சிலின் 1929
- பெனிசிலினை உருவாக்கியவர் யார் ?
அலெக்சாண்டர் ஃபிளமிங்
- பெனிசிலின் எந்த பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது?
பென்சிலியம் நோடேட்டம்
- பெனிசிலின் எதற்கு பயன்படுகிறது?
மூட்டுகளில் ஏற்படும் நோய் இதயக் கோளாறுகள் சுருங்குதல் ,மூச்சுக்குழாய் நோய்கள் மற்றும் நிமோனியா போன்ற நோய்களை குணமாக்க
- நுண்ணுயிர் எதிரி பொருள்களுக்கு எத்தனை வகையான மூலங்கள் உள்ளன?
மூன்று: பாக்டீரியா, பூஞ்சை & ஆக்டினோமைசடிஸ்
- நுண்ணுயிரி எதிர்ப்புத் தன்மையை பெற்றுள்ள உணவுகள் & தாவரங்கள் என்னென்ன?
தேன், பூண்டு ,இஞ்சி ,இலவங்கம், வேம்பு மற்றும் மஞ்சள்
- அமில நீக்கிகளாக பயன்படுபவை எவை?
மெக்னீசியம் அல்லது அலுமினியம் ஹைட்ராக்சைடுகள்
- மின்ஆற்றல் மற்றும் வேதி ஆற்றலுக்கு இடையேயான தொடர்பை பற்றி கற்பிக்கும் வேதியியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மின்வேதியியல்
- வேதி ஆற்றலை மின்னாற்றலாகவோ அல்லது மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றக் கூடிய சாதனங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வேதி மின்கலன்கள்
- வேதி மின்கலன்களின் இரண்டு முக்கிய கூறுகள் எவை ?
மின் முனைகள் மற்றும் மின்பகுளி
- மின்சாரத்தை கடத்தக் கூடிய அயனிகள் அல்லது உருகிய உப்புக்கரைசலால் ஆனவை எவ்வாறு அழைக்கப்படும்?
மின்பகுளி
- வேதி மின்கலங்களில் இரண்டு வேதிவினைகள் ஒன்றாக நடைபெறுகின்றன அவை என்னென்ன?
ஆக்சிஜனேற்றம்& ஒடுக்கம்
- எலக்ட்ரானை இழக்கும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆக்சிஜனேற்றம்
- எலக்ட்ரானை ஏற்கும் நிகழ்வு எவ்வாறு் அழைக்கப்படுகிறது ?
ஒடுக்கம்
- நீர்த்த அல்லது உருகிய நிலையில் உள்ள மின் பகுளியின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது மின்பகுளியானது பிரிகை அடைந்து அதன் தனிமங்கள் ஆக மாறும் செயல் முறைக்கு என்ன பெயர் ?
மின்னாற்பகுப்பு
- வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளனரா என்பதை எந்த வினையின் மூலம் கண்டறியலாம்?
எத்தனாலின் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை
- ஐசோடோப்புகள் கதிர்வீச்சு வடிவில் தங்களது ஆற்றலை இழந்து நிலையான ஐசோடோப்புகளாக மாற்றமடைகின்றன.இந்த நிகழ்வுக்கு என்ன பெயர் ?
கதிரியக்கச் சிதைவு
- கதிரியக்க சிதைவுக்கு உட்படும் ஐசோடோப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கதிரியக்க ஐசோடோப்பு அல்லது ரேடியோ ஐசோடோப்பு
- கதிரியக்க ஐசோடோப்புகள் மற்றும் கதிரியக்க தன்மையற்ற ஐசோடோப்புகள் ஆகியவற்றின் வேதியியலை பற்றிய பாடப் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கதிரியக்க வேதியியல்
- என்ன ஐசோடோப்பை பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதை தீர்மானிக்க முடிகிறது?
C14
- மூளைக்கட்டி, தைராய்டு சுரப்பியின் சீர்குலைவு ஆகியவற்றை அடையாளம் கண்டு அவற்றின் இடத்தை கண்டறிவதற்கு என்ன ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது?
அயோடின் 131
- இரத்த உறைவு மற்றும் இரத்த சுழற்சி சீர்குலைவுகள் இதயத்தின் செயல்பாடு ஆகியவற்றை கண்டறிவதற்கு என்ன ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது ?
சோடியம் 24
- ரத்தசோகை நோய், கருவுறுதல் சம்பந்தமான குறைபாடுகள் கண்டறிவதற்கு என்ன ஐசோடோப்புகள் படுத்தப்படுகிறது?
இரும்பு 59
- புற்று நோயைக் கண்டறிவதற்கு என்ன ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது?
கோபால்ட்- 60
- மனித உடலில் உள்ள நீரின் அளவை அறிவதற்கு என்ன ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது ?
ஹைட்ரஜன் 3
- பூமியில் உள்ள யுரேனியமானது சிதைவடைந்து மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்ன வாயுவை வெளியிடுகிறது ?
ரேடான்
- கதிரியக்க ஐசோடோப்புகள் பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.இந்த வகையான சிகிச்சை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கதிரியக்க சிகிச்சை
- புற்றுநோயை குணப்படுத்தும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
தங்கம் 198, கோபால்ட் 60
- ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் புற்று நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் ஐசோடோப்பு?
அயோடின் 131
- இரத்த கோளாறு மற்றும் தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் ஐசோடோப் ?
பாஸ்பரஸ் 32
- பழங்காலத்தில் இயற்கை நிறமூட்டிகள் ஆக பயன்படுத்தப்பட்டவை?
புகைக்கரி, மெக்னீசியம் ஆக்சைடு மற்றும் ஹேமடைட்
- நிலக்கரி தாரில் இருந்து பெறப்பட்ட கரிம சேர்மங்களலிருந்து தயாரிக்கப்படும் சாயங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
நிலக்கரி தார் சாயங்கள்
- விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளை சாயம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சாயங்கள்?
அமிலங்கள்
- பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு?
அமில சாயங்கள்
- தாவர மற்றும் விலங்கு நூல் இழைகளை சாயம் ஏற்ற பயன்படுபவை?
காரச்சாயங்கள்
- எந்தவகை சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது ?
மறைமுக சாயம்
- நிறமூன்றிகள்(mordants) எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
லத்தின் மொழி வார்த்தை மார்டரே
- மார்டரே என்ற லத்தின் மொழி சொல்லுக்கு என்ன பொருள்?
கடிப்பதற்கு
- நிறமூன்றிகளாகப் பயன்படுபவை எவை?
அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள்
- அலிசரின் எதற்கு எடுத்துக்காட்டு?
மறைமுக சாயம்
- பருத்தி,ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக ஈர்ப்புத் தன்மையுடைய சாயங்கள் எது?
நேரடி சாயங்கள்
- காங்கோ சிவப்பு சாயம் எதற்கு எடுத்துக்காட்டு?
நேரடிச்சாயம்
- பருத்தி இலைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடிய சாயவகை எது?
தொட்டி சாயம்
- அமைப்பின் அடிப்படையில் சாயங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன ?
அசோ சாயம், டைபினல் மீத்தேன் சாயம் ,டிரைபினல் மீத்தேன் சாயம் ,தாலியன் சாயம்,ஆந்த்ரோ குயனோன் சாயம், இண்டிகோ சாயம் , தாலோசயனின் சாயம்,நைட்ரோ மற்றும் நைட்ரசோ சாயம்
- உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்?
40%
- ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை வகையான உணவுகள் தேவைப்படுகின்றன?
மூன்று: உடல் வளர்ச்சி உணவுகள் ,ஆற்றல் அளிக்கும் உணவுகள் ,பாதுகாப்பு அளிக்கும் உணவுகள்
- உணவு பதப்படுத்திகளாக பயன்படுத்தப்படுபவை?
வினிகர் ,சோடியம் பென்சோயேட் ,பென்சாயிக் அமிலம் ,சோடியம் நைட்ரேட்
- நிறமிகளாக பயன்படுத்தப்படுபவை?
கரோட்டினாய்டுகள் ,ஆந்தோசயனின், குர்குமின்
- செயற்கை இனிப்பூட்டிகளாக பயன்படுத்தப்படுபவை ?
சாக்கரீன்,சைக்லமேட்
- சுவையூட்டிகளாக பயன்படுத்தப்படுபவை?
மோனோசோடியம் குளூட்டமேட் ,கால்சியம் குளூட்டமேட்
- எதிர் ஆக்சிஜனேற்றிகளாக பயன்படுத்தப்படுபவை எவை ?
வைட்டமின் சி ,வைட்டமின்-இ ,கரோட்டின்
- மறைக்கப்பட்ட கைரேகைகள் என்ன பயன்பாட்டினால் காணமுடிகிறது?
நின்ஹைட்ரின்
- நின்ஹைட்ரின் வியர்வையில் உள்ள அமினோ அமிலங்களுடன் வினைபுரிந்து என்ன நிறமாக மாறுகிறது?
ஊதா நிறம்
- என்ன சுவாலையை ஒளிரும் வண்ண சாயத்துடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது கைரேகைகள் வெளிப்படுத்தப்படுகின்றன?
சயனோ அக்ரிலேட்
- மது அருந்தியவர்களை என்ன வேதிப்பொருட்களை கொண்டுள்ள குழாயினுள் வாயினால் ஊத செய்து கண்டுபிடிக்கின்றனர் ?
சல்பியூரிக் அமிலம் ,பொட்டாசியம் டை குரோமேட், நீர் மற்றும் வெள்ளி நைட்ரேட்
- மதுவில் உள்ள ஆல்கஹால் ஆக்சிஜனேற்றம் அடைந்து டை குரோமேட்டை என்னவாக ஒடுக்குகிறது?
குரோமிக் அயனியாக
- ஆல்கஹால் பரிசோதனையில் ஆரஞ்சு நிற அயனியானது என்ன நிறமாக மாறுகிறது?
பச்சை நிறம்
9TH ZOOLOGY STUDY NOTES |பயன்பாட்டு அறிவியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services