- மைக்ரோ பயாலஜி எனும் வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
கிரேக்க வார்த்தை மைக்ரோஸ்
- கிரேக்க வார்த்தை மைக்ரோஸ் என்பதன் பொருள் என்ன?
நுண்ணிய (பயோஸ் என்பது உயிருள்ள என்றும், லாஜி என்பது படிப்பு என்றும் வழங்கப்படுகிறது)
- நுண்ணுயிரிகளின் வகைகள் என்னென்ன?
பாக்டீரியாக்கள் ,வைரஸ்கள் ,பூஞ்சைகள் ,நுண்ணோக்கியில் காணக்கூடிய பாசிகள் மற்றும் புரோடிஸ்டுகள்
- நுண்ணிய, ஒரு செல் உடைய ,உட்கரு மற்றும் பிற செல் நுண்ணுறுப்புகள் அற்ற புரோகேரியாட்டிக் உயிரினங்கள் எது?
பாக்டீரியா
- பாக்டீரியங்களின் நீளம் எவ்வளவு?
1 முதல் 10 மைக்ரோ மீட்டர்
- பாக்டீரியங்களின் அகலம் எவ்வளவு?
0.2 முதல் 1 மைக்ரோ மீட்டர்
- சில பாக்டீரியங்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு என்ன சிறப்பான அமைப்பு செல்லின் மேற்பரப்பில் காணப்படுகிறது?
கசையிழை
- வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் என்ன பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
கோள வடிவம், கோல் வடிவம் ,திருகு வடிவம்
- கோள வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
காக்கைகள்
- ஒரு செல் மட்டும் உள்ள கோள வடிவ பாக்டீரியா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காக்கஸ்
- கோல் அல்லது குச்சி வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பேசில்லைகள்
- திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஸ்பைரில்லா
- முதன் முதலில் நுண்ணோக்கியை வடிவமைத்தவர் யார்?
ஆன்டன் வான் லூவன்ஹூக்
- எந்த ஆண்டு ஆன்டன் வான் லூவன்ஹூக் தனது நுண்ணோக்கியில் தனது பல்லிலிருந்து சிதைவுற்ற பகுதியை எடுத்து அதில் நுண்ணிய உயிரிகள் இருப்பதை கண்டுபிடித்தார்?
1647
- சில பாக்டீரியங்களின் செல் சுவரை சுற்றி பல கூட்டு சர்க்கரைகளால் உருவான கூடுதலான மெல்லிய படலம் போன்ற அமைப்பு பாதுகாப்பிற்காக காணப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கேப்ஸ்யூல்
- பாக்டீரியத்தின் பிளாஸ்மா படலம் எவற்றை உள்ளடக்கியுள்ளது?
சைட்டோபிளாசம், தெளிவற்ற உட்கரு ,ரைபோசோம்கள் மற்றும் மரபணு பொருளாகிய டிஎன்ஏ
- பாக்டீரியத்தில் புரத உற்பத்திக்கான மையங்களாக காணப்படுபவை ?
ரைபோசோம்கள்
- வைரஸ் என்பது எந்த மொழிச் சொல் ?
இலத்தீன் (பொருள்- நச்சு அல்லது விஷத் தன்மையுடைய திரவம்)
- செல் அமைப்பற்ற தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் ஒட்டுண்ணிகள் எவை?
வைரஸ்
- ஒரு எளிய வைரஸ் துள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வீரியான்
- வைரஸின் உருவ அளவு எவ்வளவு?
18 முதல் 400 நேனோ மீட்டர்
- வைரஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
தாவர வைரஸ்கள், விலங்கு வைரஸ்கள், பாக்டீரியா வைரஸ்கள்
- தாவர வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு?
புகையிலை மொசைக் வைரஸ், காலிஃப்ளவர் மொசைக் வைரஸ், உருளைக்கிழங்கு வைரஸ்
- விலங்கு வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு ?
அடினோ வைரஸ் ,ரெட்ரோ வைரஸ் ,இன்ஃப்ளூயன்சா வைரஸ் ,போலியோ வைரஸ்
- வைரஸில் உள்ள புரத உரையாற்ற தீங்களிக்கும் ஆர்.என்.ஏ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வீராய்டு
- பாக்டீரியா அழிப்பு வைரஸ் (T4) எதற்கு எடுத்துக்காட்டு?
பாக்டீரியா வைரஸ் அல்லது பாக்டீரியோபேஜ்கள்
- உயிருள்ள ஓம்புயிரிகளில் வாழும் பூஞ்சைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஒட்டுண்ணிகள்
- உயிரற்ற இறந்துபோன கழிவு பொருட்களில் வாழும் பூஞ்சைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
சாறுண்ணிகள்
- பூஞ்சைகளின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாலஸ்
- பல நுண்ணிய நூல் வடிவ ஹைஃபே என்ற இழைகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
மைசீலியம்
- ஒவ்வொரு ஹைஃபாக்களும் எவ்வளவு அகலமுடையவை?
5 முதல் 10 மைக்ரோ மீட்டர்
- பூஞ்சைகளின் செல்சுவரானது எதனால் ஆனது?
செல்லுலோஸ் அல்லது கைட்டின்
- பூஞ்சைகளின் உணவுப் பொருளானது எங்கு சேமிக்கப்படுகிறது ?
கிளைக்கோஜன் அல்லது கொழுப்பு குமிழிகள் (குளோபுயூல்ஸ்)
- பூஞ்சைகள் என்ன முறைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன ?
உடல் வழி இனப்பெருக்கம் (வெஜிடேட்டிவ்),(இரண்டாக பிளத்தல்,மொட்டுவிடுதல்,துண்டாதல்), பாலிலா இனப்பெருக்கம் (கொனிடிய வித்துக்கள் உருவாதல்),பால் இனப்பெருக்கம் (ஆந்த்ரிடியம் ஊகோனியம் என்று அழைக்கப்படும் ஆண் மற்றும் பெண் கேமிட்டான்ஜியம்)
- பிரீயான் என்ற பதம் எப்போது உருவாக்கப்பட்டது?
1982
- பிரீயான் என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?
ஸ்டான்லி பி.ப்ரூய்ஸ்னர்
- பிரீயான்கள் எவற்றை மட்டுமே கொண்டுள்ள வைரஸ்கள் துகள் ஆகும்?
புரதங்கள்
- நியூரான்களில் காணப்படும் பிரீயான்கள் என்ன வடிவத்தில் இருக்கின்றன?
கோல் வடிவம்
- நுண்ணுயிரிகள் கார்பன் ,நைட்ரஜன், ஆக்சிஜன், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களின் சுழற்சியில் முக்கிய பங்காற்றுகின்றன எனவே நுண்ணுயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயிரியல் துப்புரவாளர்கள்
- நிலத்தில் உள்ள மண்ணின் சத்து மிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயிரி உரங்கள்
- உயிரி உரங்களின் முக்கிய ஆதாரங்கள் எவை ?
பாக்டீரியா ,சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சை
- தனித்த நிலையில் வாழும் நுண்ணுயிரிகள் எவை?
அசட்டோபாக்டர் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நாஸ்டாக்
- கூட்டுயிரி வாழ்க்கைமுறையுடைய நுண்ணுயிரிகளை?
ரைசோபியம்,ஃப்ரான்கியா
- தாவரங்களுக்கு தீங்குவிளைவிக்கும் அல்லது நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நுண்ணுயிரிகள் பயனுள்ளதாக இருப்பதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் அல்லது உயிரிப் பூச்சிக்கொல்லிகள்
- பேசில்லஸ் துரின்சியென்சிஸ் என்ற பாக்டீரியா சிற்றினத்திலிருந்து என்ன புரதம் உற்பத்தியாகிறது?
க்ரை புரதம்
- திராட்சை ரசங்கள் (வைன்) போன்ற பானங்கள் திராட்சைப் பழத்தை எந்த நுண்ணுயிரி கொண்டு நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகின்றன?
சாக்கரோமைசிஸ் செரிவிசே
- காபி மற்றும் கொக்கோ தாவரத்தின் விதைகள் தேயிலை செடி மற்றும் புகையிலைச் செடியின் இலைகள் ஆகியவை எந்த நுண்ணுயிரி பாக்டீரியாவை பயன்படுத்தி நொதிக்க வைக்கப்படுகின்றன ?
ஃபேசில்லஸ் மெகாடெரியம்
- எந்த நுண்ணுயிரி சிற்றினங்கள் பாலினை தயிராக மாற்றுகின்றன?
லாக்டோபேசில்லஸ்
- ஆக்சாலிக் அமிலம் ,அசிட்டிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க எந்த பூஞ்சை பயன்படுத்தப்படுகிறது?
ஆஸ்பர்ஜிலஸ் நைகர்
- என்ன நொதிகள் நுண்ணுயிரிகளில் இருந்து பெறப்படுகின்றன?
லிப்பேஸ் இன்வர்ட்டேஸ்,புரோட்டியேஸ், மற்றும் குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ்
- ஈஸ்ட்கள் என்ன கூட்டுப் பொருளை அதிகம் உற்பத்தி செய்யும் ஆதாரங்களாக உள்ளன?
வைட்டமின் பி கூட்டுப் பொருட்கள்
- தட்டம்மை ,பொன்னுக்கு வீங்கி ,ரூபெல்லா போன்ற நோய்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பான்கள் பெயர் என்ன?
MMR
- காச நோய்க்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பானின் பெயர் என்ன?
BCG(பேசில்லஸ் கால்மெட் குய்ரின்)
- MMR,BCG போன்றவை எந்த வகை தடுப்பான்கள்?
உயிருள்ள நோய் உண்டாகும் வீரியம் குறைக்கப்பட்டவை
- இளம்பிள்ளை வாதம் (போலியோ) நோய்க்கு உருவாக்கப்பட்ட தடுப்பானின் பெயர் என்ன ?
செயல்படாத போலியோ வைரஸ்(IPV)
- இளம்பிள்ளை வாதம் (போலியோ) நோய்க்கு உருவாக்கப்பட்ட தடுப்பான்கள் எந்தவகை ?
செயல்படாத தடுப்பான்கள் (ஆண்டிஜன் நீக்கப்பட்ட)
- ஹெப்படைட்டிஸ் B நோய்க்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பான் எந்தவகை ?
துணையலகு தடுப்பான்கள் (தூய்மைப்படுத்தப்பட்ட ஆண்டிஜன்)
- டெட்டனஸ்க்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பான் எது?
டெட்டனஸ் டாக்சாய்டு(TT)
- தொண்டை அடைப்பான் நோய்க்கு (டிப்தீரியா) எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பான் எது?
டிப்தீரியா டாக்சாய்டு
- டெட்டனஸ் டாக்சாய்டு(TT),டிப்தீரியா டாக்சாய்டு ஆகியவை எந்த வகை தடுப்பான்?
வீரியம் இழந்த நச்சு (டாக்சாய்டு) (செயல்படாத ஆன்டிஜன்)
- நுண்ணுயிர் எதிர் பொருளினை முதன்முதலில் தயாரித்தவர் யார்?
அலெக்சாண்டர் ஃபிளமிங், 1929
- முதன் முதலில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர் பொருள் எது ?
பென்சிலின்
- ஸ்ட்ரெப்டோமைசின் என்ற எதிர்ப்பொருள் எந்த நுண்ணுயிரி லிருந்து உருவாக்கப்படுகிறது?
ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரிசியஸ்
- எரித்ரோமைசின் என்ற எதிர்ப்பொருள் எந்த நுண்ணுயிரி லிருந்து உருவாக்கப்படுகிறது?
ஸ்ட்ரெப்டோமைசிஸ் எரித்ரியஸ்
- பேசிட்ரசின் என்ற எதிர்ப்பொருள் எந்த நுண்ணுயிரி லிருந்து உருவாக்கப்படுகிறது?
ஃபேசில்லஸ் சப்டிலிஸ்
- ஸ்ட்ரெப்டோமைசின், எரித்ரோமைசின், பேசிட்ரசின் ஆகிய எதிர்ப்பொருள் எந்த நுண்ணுயிரி வகை நுண்ணுயிரிகள் இருந்து பெறப்படுகிறது?
பாக்டீரியா
- பெனிசிலின் என்ற எதிர்ப்பொருள் எந்த நுண்ணுயிரிலிருந்து உருவாக்கப்படுகிறது?
பெனிசிலியம் நோடேட்டம்
- செபலோஸ்போரின் என்ற எதிர்ப்பொருள் எந்த நுண்ணுயிரிலிருந்து உருவாக்கப்படுகிறது?
செபலோஸ்போரியம் அக்ரிமோனியம்
- பெனிசிலின்,செபலோஸ்போரின் ஆகிய எதிர்ப்பொருள் எந்த நுண்ணுயிரி வகை நுண்ணுயிரிகள் இருந்து பெறப்படுகிறது?
பூஞ்சை
- ஓர் உயிரியின் சாதாரண நிலையை குலைத்தோ அல்லது மாற்றியோ, உடலின் முக்கிய பணிகளை செய்ய விடாமல் பழுதடைய வைக்கும் அல்லது தவறாக வேலை செய்ய வைக்கும் நிலைக்கு என்ன பெயர்?
நோய்
- பரவியிருக்கும் நிலையைக் கொண்டு நோய்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
வட்டார நோய் (என்டெமிக்),கொள்ளைநோய்(எபிடெமிக்), பெரும் கொள்ளை நோய்(பான்டெமிக்) மற்றும் தொடர்பற்ற நோய் (ஸ்போராடிக்)
- பரவும் நிலையைக் கொண்டு நோய்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
தொற்றும் தன்மை உடையவை மற்றும் தொற்றும் தன்மையற்ற நோய்கள்
- நோய்க் கிருமியின் வகைகளை கொண்டு நோய்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
பாக்டீரியா ,வைரஸ் ,பூஞ்சை அல்லது புரோட்டோசோவவால் தோற்றுவிக்கப்படும் நோய்கள்.
- நோயினை கடத்தும் காரணிகளைக் கொண்டு நோய்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
காற்றின் மூலம், நீரின் மூலம் மற்றும் கடத்திகளின் மூலம் பரவும் நோய்கள்
- உலக சுகாதார தினம் எப்போது ?
ஏப்ரல் 7
- உலக மலேரியா தினம் எப்போது ?
ஏப்ரல் 25
- உலக எய்ட்ஸ் தினம் எப்போது ?
டிசம்பர் 1
- உலக காசநோய் எதிர்ப்பு தினம் எப்போது?
மார்ச் 24
- புவிப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறைவான மக்களை மட்டும் தாக்கும் நோய் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வட்டார நோய்
- வட்டார நோய்க்கு எடுத்துக்காட்டு எது?
இமயமலை பிரதேசத்தில் அடிவார பகுதியில் உள்ள மக்களுக்கு வரும் முன் கழுத்து கழலை நோய்
- புவியின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரே நேரத்தில் தோன்றிய அதிகமான மக்களை பாதிக்கும் வகையைச் சார்ந்த நோய் எது ?
கொள்ளைநோய்
- இன்ஃப்ளூயன்சா எந்த வகை நோய்க்கு எடுத்துக்காட்டு?
கொள்ளைநோய்
- உலகம் முழுவதும் பரவி அதிக சேதத்தை ஏற்படுத்தும் நோய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெருங்கொள்ளை நோம்
- எப்போதாவது தோன்றும் நோய் எந்த வகையான நோய்?
தொடர்ச்சியற்ற நோய்
- நோய்க் கிருமிகள் நோயை பரப்பாமல் நல்ல முறையில் வளமுடன் தங்கி பல்கிப்பெருகும் குறிப்பிட்ட சூழ்நிலையை குறிப்பதற்கு என்ன பெயர் ?
நோய்த்தொற்றின் தேக்கம்
- நோயின் முதல் அறிகுறி வெளிப்படும் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்கும் உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நோய் அடைகாக்கும் அல்லது நோயரும்பும் காலம்
- மனித உடலில் அல்லது விலங்குகளில் நோயை உருவாக்கும் காரணியானது நுழைந்து, வளர்ச்சி அடைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நோய்த்தொற்று
- எத்தனை வழிகளில் தீங்கு உயிரிகள் நோயை ஏற்படுத்துகின்றன?
இரண்டு :திசுக்கள் பாதித்தல் மற்றும் நஞ்சு சுரத்தல்
- காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் என்ன செல்களை சேதப்படுத்துகின்றன ?
நுரையீரல்
- மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் வைரஸ்கள் என்ன திசுக்களை அழிக்கின்றன ?
கல்லீரல் திசுக்கள்
- பாக்டீரியாவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
ராபர்ட் கோஃ
- செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோய் எந்த உயிரிகளால் உருவாகிறது?
பேசில்லஸ் ஆந்திராசிஸ்
- எந்த ஆண்டு செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது பேசில்லஸ் ஆந்திராசிஸ் என்ற உயிரியால் உருவாகியது என்பதை சுட்டிக்காட்டினார்?
1876
- வைரஸால் ஏற்படுத்தப்படும் காற்றுவழி நோய்கள் என்னென்ன ?
சாதாரண சளி ,இன்ஃப்ளூயன்சா, தட்டம்மை ,பொன்னுக்கு வீங்கி ,சின்னம்மை
- சாதாரண சளி நோயை உண்டாக்கும் காரணி எது?
ரைனோ வைரஸ்
- சாதாரண சளி நோய்த் தொற்றும் முறை எது?
நோய்த்தொற்றுத் துளிகள்
- சாதாரண சளி நோயினால் பாதிக்கப் படுபவை எவை?
மேல் சுவாச குழாய் பகுதி
- சாதாரண சளி நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், இருமல் ,மூக்கிலிருந்து ஒழுகுதல், தும்மல் மற்றும் தலைவலி
- இன்ஃப்ளூயன்சா நோயை உண்டாக்கும் காரணி எது?
மிக்சோ வைரஸ்
- இன்ஃப்ளூயன்சா நோய்த் தொற்றும் முறை எது?
நோய்த்தொற்று துளிகள்
- இன்ஃப்ளூயன்சா நோயினால் பாதிக்கப் படுபவை எவை?
சுவாசக்குழாய்
- இன்ஃப்ளூயன்சா நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், உடல் வலி ,இருமல், தொண்டை வலி,நாசியிலிருந்து வெளியேற்றம், மூச்சுத்திணறல்
- தட்டம்மை நோயை உண்டாக்கும் காரணி எது?
ரூபெல்லா வைரஸ்
- தட்டம்மை நோய்த் தொற்றும் முறை எது?
நோய்த்தொற்று துளிகள், நோய்த்தொற்று கருக்கள் மற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டவருடனான நேரடி தொடர்பு
- தட்டம்மை நோயினால் பாதிக்கப் படுபவை எவை?
சுவாசக்குழாய்
- தட்டம்மை நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
சிவப்பு புள்ளி போன்ற வீக்கம் உடைய தோற்றம் அல்லது தோலில் தடிப்புகள் தோன்றும், இருமல் ,தும்மல் ,கண் சிவத்தல்
- பொன்னுக்கு வீங்கி நோயை உண்டாக்கும் காரணி எது?
மிக்சோ வைரஸ் ப்ரோடிடிஸ்
- பொன்னுக்கு வீங்கி நோய்த் தொற்றும் முறை எது?
நோய்த்தொற்று துளிகள், நோய்த்தொற்று கருக்கள் மற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டவருடனான நேரடி தொடர்பு
- பொன்னுக்கு வீங்கி நோயினால் பாதிக்கப் படுபவை எவை?
மேல் சுவாசக் குழாய்
- பொன்னுக்கு வீங்கி நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
கன்ன உமிழ்நீர் சுரப்பி பெரியதாகுதல் தாடையை அசைத்தலில் சிரமம்
- சின்னம்மை நோயை உண்டாக்கும் காரணி எது?
வாரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ்
- சின்னம்மை நோய்த் தொற்றும் முறை எது?
நோய்த்தொற்று துளிகள், நோய்த்தொற்று கருக்கள் மற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டவருடனான நேரடி தொடர்பு
- சின்னம்மை நோயினால் பாதிக்கப் படுபவை எவை?
சுவாசக்குழாய்
- சின்னம்மை நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
தோலில் ஏற்படும் வீக்கம், காய்ச்சல் ,அசதி
- பாக்டீரியாவால் ஏற்படும் காற்று வழி நோய்கள் என்னென்ன?
காசநோய் ,தொண்டை அழற்சி நோய்(டிப்தீரியா), கக்குவான் இருமல்
- காசநோயை உண்டாக்கும் காரணி எது?
மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
- காசநோய்த் தொற்றும் முறை எது?
பாதிக்கப்பட்ட நபரின் சளியில் உள்ள நோய் தொற்று
- காசநோயினால் பாதிக்கப் படுபவை எவை?
நுரையீரல்
- காசநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
தொடர் இருமல் ,நெஞ்சு வலி ,உடல் எடை குறைவு மற்றும் பசியின்மை
- தொண்டை அழற்சி (டிப்தீரியா) நோயை உண்டாக்கும் காரணி எது?
கோர்னிபாக்டீரியம் டிஃப்தீரியே
- தொண்டை அழற்சி (டிப்தீரியா) நோய்த் தொற்றும் முறை எது?
நோய்த்தொற்று துளிள்,துளி உட்கருக்கள்
- தொண்டை அழற்சி (டிப்தீரியா) நோயினால் பாதிக்கப் படுபவை எவை?
மேல் சுவாச குழாய் பகுதிகள் ,மூக்கு, தொண்டை
- தொண்டை அழற்சி (டிப்தீரியா) நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல் ,தொண்டை வலி, காற்று வழியில் அடைப்பு
- கக்குவான் இருமல் நோயை உண்டாக்கும் காரணி எது?
போர்டெடெல்லா பெர்டுசிஸ்
- கக்குவான் இருமல் நோய்த் தொற்றும் முறை எது?
நோய்தொற்று துளிகள், நேரடியான தொடர்பு
- கக்குவான் இருமல் நோயினால் பாதிக்கப் படுபவை எவை?
சுவாசக்குழாய் பகுதிகள்
- கக்குவான் இருமல் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
மிதமான காய்ச்சல் ,அதிக இருமல் இறுதியில் கூச்சல் போன்ற உரத்த குரலில் மூச்சுவாங்குதல்
- வைரசால் ஏற்படுத்தப்படும் நீர்வழி நோய்கள் என்னென்ன ?
போலியோமைலிடிஸ்,ஹெப்பாடைட்டிஸ் ஏ அல்லது நோய்த்தொற்றக்கூடிய ஹெப்பாடைடிஸ், அதீத வயிற்றுப்போக்கு
- போலியோ மைலிடிஸ் நோய்க் காரணி எது ?
போலியோ வைரஸ்
- போலியோ மைலிடிஸ் நோய் பரவும் முறைகள் எவை?
நோய்த்தொற்று துளிகள், மூக்கு தொண்டையில் இருந்து சளி வருதல், மாசடைந்த நீர் ,உணவு பால்
- போலியோ மைலிடிஸ் நோயினால் பாதிக்கப்படுபவை எவை?
மத்திய நரம்பு மண்டலம்
- போலியோ மைலிடிஸ் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
கை கால்களில் வாதம் ஏற்படும் செயல் இழத்தல்
- போலியோ மைலிடிஸ் நோயை தவிர்த்தல் மற்றும் தடுக்கும் முறைகள் என்னென்ன?
சால்க் என்ற தடுப்பு மருந்து அல்லது வாய்வழி போலியோ தடுப்பு மருந்து
- ஹெப்பாடைட்டிஸ் ஏ அல்லது நோய்த்தொற்றக்கூடிய ஹெப்பாடைடிஸ் நோய்க் காரணி எது?
ஹெப்பாடைட்டிஸ் ஏ வைரஸ்
- ஹெப்பாடைட்டிஸ் ஏ அல்லது நோய்த்தொற்றக்கூடிய ஹெப்பாடைடிஸ் நோய் பரவும் முறைகள் எவை?
மாசடைந்த நீர் ,உணவு மற்றும் வாய்வழி பாதிப்பு
- ஹெப்பாடைட்டிஸ் ஏ அல்லது நோய்த்தொற்றக்கூடிய ஹெப்பாடைடிஸ் நோயினால் பாதிக்கப்படுபவை எவை?
கல்லீரல் வீக்கம்
- ஹெப்பாடைட்டிஸ் ஏ அல்லது நோய்த்தொற்றக்கூடிய ஹெப்பாடைடிஸ் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
குமட்டல், பசியின்மை, அதீத காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை
- ஹெப்பாடைட்டிஸ் ஏ அல்லது நோய்த்தொற்றக்கூடிய ஹெப்பாடைடிஸ் நோயை தவிர்த்தல் மற்றும் தடுக்கும் முறைகள் என்னென்ன?
உணவு கெடுதலை தடுத்தல், உணவினை சரியாக கையாளுதல், குளோரின் ஏற்றப்பட்ட கொதிக்க வைக்கப்பட்ட நீரைப் பருகுதல் ,தனிமனித சுகாதாரம்
- அதீத வயிற்றுப்போக்கு நோய்க் காரணி எது ?
ரோட்டோ வைரஸ்
- அதீத வயிற்றுப்போக்கு நோய் பரவும் முறைகள் எவை?
மாசடைந்த நீர் ,உணவு மற்றும் வாய் வழியாக பாதிப்பு
- அதீத வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்படுபவை எவை?
குடல்
- அதீத வயிற்றுப்போக்கு நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
நீர்ம நிலையில் சளி போன்ற மலம் கழிதல், வாந்தி ,காய்ச்சல்
- அதீத வயிற்றுப்போக்கு நோயை தவிர்த்தல் மற்றும் தடுக்கும் முறைகள் என்னென்ன?
சரியான சுத்தமும் சுகாதாரமும்
- பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படும் நீர்வழி நோய்கள் என்னென்ன?
காலரா ,டைபாய்டு (குளிர்சார் காய்ச்சல்)
- காலரா நோய்க் காரணி எது ?
விப்ரியே காலரே
- காலரா நோய் பரவும் முறைகள் எவை?
சுகாதாரமற்ற உணவு மற்றும் நீர் ,வாய் வழியாக உட்செல்லல், வீட்டு ஈக்களால் பரவுதல்
- காலரா நோயினால் பாதிக்கப்படுபவை எவை?
குடல் பகுதி
- காலரா நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
நீர்மமாக கழிவு வெளியேற்றம் ,வாந்தி, தசைப்பிடிப்பு ,தலைசுற்றல், நீர்சத்து வெளியேற்றம்
- காலரா நோயை தவிர்த்தல் மற்றும் தடுக்கும் முறைகள் என்னென்ன?
சுகாதாரம் துப்புரவு, வாய்வழி நீர்ச்சத்தை தரும் (ORS)நீர்மத்தை உட்கொள்ளல்
- டைபாய்டு நோய்க் காரணி எது ?
சால்மோனெல்லா டைஃபி
- டைபாய்டு நோய் பரவும் முறைகள் எவை?
இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் கழிவு கலந்த நீர் மற்றும் உணவு, வீட்டு ஈக்கள் மூலம் பரவுதல்
- டைபாய்டு நோயினால் பாதிக்கப்படுபவை எவை?
சிறுகுடல்
- டைபாய்டு நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
அதிக காய்ச்சல் ,பலவீனம் ,அடிவயிற்றில் வலி ,தலைவலி பசியின்மை ,நெஞ்சு பகுதி மற்றும் மேல் வயிற்று பகுதியில் அரிப்பு
- டைபாய்டு நோயை தவிர்த்தல் மற்றும் தடுக்கும் முறைகள் என்னென்ன?
பூச்சிகள் மற்றும் தூசுகள் மூலமாக உணவானது கெட்டுப் போவதை தவிர்த்தல் ,பாலினை பதப்படுத்துதல் பொதுவான சுகாதாரத்தை அதிகரித்தல் எதிர் உயிரி மருந்துகளை கொண்டு மருத்துவம் பார்த்தல்
- நோய்க்கிருமியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தும் இடையிட்டு வேலையைச் செய்பவை ?
கடத்திகள்
- மலேரியா எந்த ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது ?
பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவா சார்ந்த ஒட்டுண்ணி
- மலேரியாவை பரப்பும் பிளாஸ்மோடியத்தின் வகைகள் என்னென்ன?
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ், பிளாஸ்மோடியம் மலேரியா, பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் மற்றும் பிளாஸ்மோடியம் ஓவேல்
- எந்த பிளாஸ்மோடியத்தின் வகை கொடியதும், உயிரைப் பறிக்க கூடியதுமாகும்?
பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம்
- ஒவ்வொரு வருடமும் தோராயமாக எவ்வளவு மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகின்றனர்?
30 கோடி
- மலேரியா நோய் எதனால் உருவாகிறது?
அனோபிலஸ் பெண் கொசு
- எந்த மாத்திரைகள் பயன்பாடு மலேரியா ஒட்டுண்ணிகளை கொல்கிறது?
குயினைன்
- மலேரியா பரவும் விதம் பற்றிய தனது கண்டுபிடிப்புக்காக எந்த ஆண்டு சர் ரொனால்டு ராஸ் நோபல் பரிசு பெற்றார்?
1902
- சிக்கன்குனியா என்ற நோயானது எதனால் ஏற்படுத்தப்படுகிறது?
ஒற்றை இழை ஆர்.என்.ஏ என்ற வைரஸ்
- சிக்கன் குனியா நோய் எந்த கொசுவால் ஏற்படுகிறது?
ஏடிஸ் ஏஜிப்டி
- சிக்கன்குனியாவின் அறிகுறிகள் என்னென்ன ?
கடுமையான மற்றும் தொடர்ச்சியான மூட்டுவலி ,உடலில் அரிப்பு, தலைவலி மற்றும் காய்ச்சல்
- சிக்கன்குனியா நோயை ஏற்படுத்தும் வைரஸின் அடைகாக்கும் காலம் எவ்வளவு?
இரண்டு முதல் பன்னிரண்டு நாட்கள்
- எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் அழைக்கப்படும் நோய் எது?
டெங்கு நோய்
- டெங்கு நோய் எந்த கொசுவினால் பரவுகிறது?
ஏடிஸ் ஏஜிப்டி
- டெங்கு நோய்க்கான வைரஸ் அடைகாக்கும் காலம் எவ்வளவு?
ஐந்து முதல் ஆறு நாட்கள்
- டெங்கு நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன ?
அதிகமான காய்ச்சல் ,கடுமையான தலைவலி ,தசைநார் மற்றும் மூட்டுகளில் வலி ,அரிப்பு மற்றும் ரத்தப் போக்கினை வெளிப்படுத்துதல் ,ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைவு படுதல்
- பப்பாளி இலைகளின் கொழுந்தில் இருந்து எடுக்கப் பட்டு வடிகட்டப்பட்ட திரவம் மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவை எதனை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது ?
இரத்த தட்டுகளின் எண்ணிக்கை
- ஃபிலேரியா என்ற நோய் எந்த புழுவினால் ஏற்படுகிறது?
உச்சரேரியா பான்கிராப்டீ
- உச்சரேரியா பான்கிராப்டீ என்ற புழுக்கள் பொதுவாக மனிதனின் உடலில் எங்கு காணப்படுகிறது?
நிணநீர் மண்டலம்
- ஃபிலேரியா நோய் எந்த கொசு இனம் கடிப்பதன் மூலம் கடத்தப்படுகிறது ?
கியூளக்ஸ்
- ஃபிலேரியா புழுவின் அடைகாக்கும் நாட்கள் எவ்வளவு?
8 முதல் 16 மாதங்கள்
- ஃபிலேரியா நோயின் அறிகுறிகள் என்னென்ன?
கடுமையான தொற்று, காய்ச்சல் மற்றும் நிணநீர் சுரப்பிகள் வீக்கமடைதல் ,யானைக்கால் நோய்
- பன்றிக்காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக உள்ளவை வைரஸ் எது?
இன்ஃப்ளூயன்சா வைரஸ் H1N1
- பன்றி காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?
தும்மல் மற்றும் இருமல் மூலம் வெளியேறும் நோய்க்கிருமி கலந்த திவலைகளை சுவாசித்தல் அல்லது உள்ளிழுத்தல் மூலம்
- எப்போது பன்றிகாய்ச்சல் கண்டறியப்பட்டது?
ஏப்ரல் மாதம் 2009
- பறவைக் காய்ச்சல் நோய் எந்த வைரஸால் ஏற்படுகிறது?
இன்ஃப்ளூயன்சா வைரஸ் H5N1
- பறவைக் காய்ச்சல் வைரஸின் அடைகாக்கும் காலம் எவ்வளவு ?
இரண்டு முதல் ஏழு நாட்கள்
- பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், இருமல் ,தொண்டை வலி ,வழிந்தோடும் மூக்கு சளி ,தசைநார்கள் மற்றும் உடலில் வலி ,களைப்பு ,தலைவலி ,கண்கள் சிவப்பு நிறமாதல் (விழிவெண்படல அழற்சி) மற்றும் சுவாசிக்க சிரமப்படுதல்
- பறவைக்காய்ச்சல் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது ?
1996
- பறவை காய்ச்சல் முதன் முதலில் எங்கு தோன்றியதாக கண்டறியப்பட்டது?
தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்
- பறவை காய்ச்சல் உண்டாக்கும் வைரஸானது முதன் முதலில் உலக சுகாதார நிறுவனத்தால் எந்த ஆண்டு மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது?
1997
- முதன்முதலில் பறவைக்காய்ச்சல் நோயின் வெளிப்பாடு எந்த ஆண்டு அறியப்பட்டது?
டிசம்பர் 2003
- எய்ட்ஸ் என்ற நோய் தன்மையானது எந்த வைரசால் ஏற்படுத்தப்படுகிறது?
ரெட்ரோ வைரஸ்
- எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ரெட்ரோ வைரஸ் மனிதனின் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது?
இரத்த வெள்ளையணுக்களை அல்லது லிம்போசைட்டுகளைத் தாக்கி உடலை பலவீனமடையச் செய்கிறது ,உடலில் நோய் எதிர்க்கும் திறனை குறைக்கிறது
- எய்ட்ஸ் நோயின் முக்கிய அறிகுறிகள் எவை?
எடை குறைவு, நீண்ட நாட்களாக காய்ச்சல் ,இரவில் வியர்த்தல், கடுமையான வயிற்றுப்போக்கு
- எய்ட்ஸ் நோயானது முதன் முதலில் எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
அமெரிக்காவில் ,ஹட்டாய் என்ற இடத்தில் 1981
- இந்தியாவில் முதன்முதலில் எங்கு எய்ட்ஸ் பாதிப்பு ஆதாரத்துடன் தெளிவாக கண்டறியப்பட்டது?
தமிழ்நாடு, ஏப்ரல் 1986
- எய்ட்ஸ் பாதிப்புக்கு எய்ட்ஸ் தடுப்பூசி ஆர்.வி.144 தாய்லாந்து நாட்டில் எந்த ஆண்டு சோதனைக்காக வழங்கப்பட்டது ?
2003
- ஹெப்பாடைட்டிஸ் நோய் எதனால் ஏற்படுகிறது ?
எண்டிரோ வைரஸ் எனப்படும் ஹெப்பாடைடிஸ் பி வைரஸ
- ஹெப்பாடைட்டிஸ் நோயை பரப்பும் வைரஸ் ஆனது எதனை பாதிக்கிறது?
கல்லீரல் செல்கள்
- ஹெப்பாடைட்டிஸ் நோய் எவ்வாறு பரவுகிறது ?
பாதிக்கப்பட்டவரின் எச்சில் ,வியர்வை ,கண்ணீர் ,தாய்ப்பால் மற்றும் ரத்தத்தோடு தொடர்பு கொள்ள நேரிடும்போது
- கொனேரியா நோயை பரப்பும் காரணி எது?
பேக்டீரியா
- கொனேரியா நோயைப் பரப்பும் நுண்ணுயிரி எது?
நீயஸ்செரியா கொனெர்ரியா
- கொனேரியா நோய் பரவும் முறை எது?
நேரடி பாலியல் தொடர்பு
- கொனேரியா நோயினால் பாதிக்கப் படுபவை எவை?
சிறுநீர்ப் புறவழி குழாய் பாதிப்பு
- கொனேரியா நோயின் அறிகுறிகள் என்னென்ன?
பாலுறுப்பு வழியாக திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும் போது வலி
- சிஃபிலிஸ் நோயை பரப்பும் காரணி எது?
பாக்டீரியா
- சிஃபிலிஸ் நோயைப் பரப்பும் நுண்ணுயிரி எது?
டாரெப்போநிமா பல்லிடம்
- சிஃபிலிஸ் நோய் பரவும் முறை எது?
நேரடி பாலியல் தொடர்பு
- சிஃபிலிஸ் நோயினால் பாதிக்கப் படுபவை எவை?
பிறப்பு உறுப்பின் தோல் மட்டும் முக்கோசா பகுதியில் தேய்மானம்
- சிஃபிலிஸ் நோயின் அறிகுறிகள் என்னென்ன?
பிறப்புறுப்பில் புண் ,தோலில் வீக்கம்
- பிறப்புறுப்பில் கொப்பளம் (அக்கி)நோயை பரப்பும் காரணி எது?
வைரஸ்
- பிறப்புறுப்பில் கொப்பளம் (அக்கி) நோயைப் பரப்பும் நுண்ணுயிரி எது?
ஹெர்பஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ்,மனித பாப்பிலோமா வைரஸ்
- ஹைப்பாடைட்டிஸ் நோயின் அறிகுறிகள் என்னென்ன?
மயக்கம், வாந்தி, கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாதல் ,வெளிரிய நிறக் கழிவு தோலில் அரிப்பு, தலைவலி மற்றும் மூட்டுக்களில் வலி
- ஆன்ட்டிஜென்களையோ அல்லது ஆன்டிபாடிகளையோ கொடுத்து நோய்க்கு எதிராக தடுப்பினை ஏற்படுத்தும் செயல் எவ்வாறு அழைக்கப்படும்?
நோய் எதிர்ப்பு திறனூட்டல்
- உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ அல்லது அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் அல்லது சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தடுப்பூசி மருந்துகள்
- தடுப்பூசி மருந்துகள் எத்தனை வகைப்படும்?
உயிருள்ள மருந்துகள் மற்றும் கொல்லப்பட்ட தடுப்பூசி மருந்துகள்
- தடுப்பூசியிடுதல் நிகழ்வை அறிமுகப்படுத்தியவர் யார்?
எட்வர்டு ஜென்னர்
- எந்த நோயானது தடுப்பூசி மூலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது?
பெரியம்மை
- உயிரிகளின் நோய் பரப்பும் தன்மையானது வலுவிழக்க செய்யப்பட்டு எந்த மருந்துகள் தயாரிக்கப்படுகிறது?
உயிருள்ள தடுப்பூசி மருந்துகள்
- உயிருள்ள தடுப்பூசி மருந்துகள் எடுத்துக் காட்டு எவை ?
பிசிஜி தடுப்பூசி ,வாய்வழி போலியோ சொட்டு மருந்து
- வெப்பத்தினாலோ அல்லது வேதிப்பொருட்களாலோ நுண்ணுயிரிகளானவை கொல்லப்பட்டு அவற்றின் மூலம் உருவாக்கப்படும் மருந்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொல்லப்பட்ட அல்லது செயலிழக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள்
- எந்த வகையான தடுப்பூசி களுக்கு ஒரு முதன்மையான ஊட்டமும் மற்றும் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வலுவூட்டும் ஊட்டமும் வழங்கப்படவேண்டும்?
கொல்லப்பட்ட தடுப்பூசிகள்
- கொல்லப்பட்ட தடுப்பூசிகள் எடுத்துக்காட்டு?
டைபாய்டு தடுப்பூசி ,காலரா தடுப்பூசி ,கக்குவான் தடுப்பூசி
- லூயிஸ் பாய்ஸ்டர் எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ?
பிரான்ஸ் நாடு
- லூயிஸ் பாஸ்டர் எந்த நோய்களுக்கு மருந்தை உருவாக்கினார்?
காலரா ,ஆந்த்ராக்ஸ் மற்றும் பிற நோய்களுக்கு
- எந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்டல் அட்டவணையை வழங்கியுள்ளது?
1970
- பிறந்த குழந்தைக்கு போடப்படும் தடுப்பு மருந்து ?
பிசிஜி 1வது ஊட்டம்
- 15ஆம் நாளில் போடப்படும் தடுப்பு மருந்து?
வாய்வழி போலியோ மருந்து-1வது ஊட்டம்
- ஆறாவது வாரம் போடப்படும் தடுப்பு மருந்து?
டிபிடீ மற்றும் போலியோ-1வது ஊட்டம்
- 10வது வாரம் போடப்படும் தடுப்பு மருந்து ?
டிபிடீ மற்றும் போலியோ-1வது ஊட்டம்
- 14-வது வாரம் போடப்படும் தடுப்பு மருந்து?
டிபிடீ மற்றும் போலியோ-1வது ஊட்டம்
- 9 முதல் 12 ஆவது மாதங்களில் போடப்படும் தடுப்பு மருந்து?
தட்டம்மை-1வது ஊட்டம்
- 18 முதல் 24 மாதங்களில் போடப்படும் தடுப்பு மருந்து?
டிபிடீ மற்றும் போலியோ-1வது ஊட்டம்
- 15 மாதங்கள் முதல் 2 வருடங்களில் போடப்படும் தடுப்பு மருந்து?
எம்.எம்.ஆர்-1வது ஊட்டம்
- இரண்டு முதல் மூன்று வருடங்களில் போடப்படும் தடுப்பு மருந்து ?
டீஏபி-இரண்டு ஊட்டங்கள் ஒரு மாத இடைவெளியில்
- நான்கு முதல் ஆறு வருடங்களில் போடப்படும் தடுப்பு மருந்து?
டிடீ மற்றும் போலியோ-2வது கூடுதல் தடுப்பூசியூட்டம்
- 10 ஆவது வருடத்தில் போடப்படும் தடுப்பு மருந்து ?
டிடீ மற்றும் டீஏபி-1வது ஊட்டம்
- 16வது வருடத்தில் போடப்படும் தடுப்பு மருந்து?
டீடீ மற்றும் டீஏபி-2வது கூடுதல் தடுப்பூசியூட்டம்
- பிசிஜி யாரால் உருவாக்கப்பட்டது?
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்மெட்டே மற்றும் குயிரின் 1908 முதல் 1921 வரை பதிமூன்று ஆண்டுகளின் முடிவில்உருவாக்கப்பட்டது
- டிபிடீ என அழைக்கப்படும் தடுப்பு மருந்து என்ன ?
மூன்று நோய் தடுப்பு மருந்து: டிப்தீரியா (தொண்டை அடைப்பான் ), பெர்டூசிஸ் (கக்குவான் இருமல் ) மற்றும் டெட்டனஸ் மூன்று நோய்களைத் தடுக்க இம்மருந்து பயன்படுத்தப்படுகிறது.
- எம்.எம்.ஆர் எதற்கான தடுப்பு மருந்து?
பொன்னுக்கு வீங்கி(mumps), தட்டம்மை(Measles) மற்றும் ரூபெல்லா தடுப்பு மருந்துகள்
- டி.டீ என்ற இந்த தடுப்பு மருந்து எதற்காக பயன்படுகிறது ?
இரட்டை ஆண்டிஜன் அல்லது ஒருங்கிணைந்த ஆண்டிஜென் எனப்படும் .இது டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் போன்ற நோய்க்கு எதிராக பாதுகாப்பை தருகிறது
- டீ.டீ என்பது என்ன?
டெட்டனஸ் டாக்சாய்டு (இது டெட்டனஸ் பாக்டீரியாவின் நச்சு)
- டீ.ஏ.பி(TAB) என்பது என்ன?
டைபாய்டு,பாராடைஃபி மற்றும் பாராடைஃபி B போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்து
9TH ZOOLOGY STUDY NOTES |நுண்ணுயிரிகளின் உலகம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services