9TH ZOOLOGY STUDY NOTES |சுத்தம் சுகாதாரம்| TNPSC GROUP EXAMS

 


  1. ஒரு உயிரினம் எந்த ஒரு பொருளை ஊட்டச்சத்திற்காக உட்கொள்கிறதோ அந்தப் பொருள் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

உணவு

  1. எந்த ஒரு ஊட்டப்பொருள் சக்தியையும், திசுக்கள் உருவாவதற்கும் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கும் துணை நிற்கிறதோ அது எவ்வாறு அழைக்கப்படும்?

ஊட்டச்சத்துகள்

  1. ஊட்டச்சத்துக்கள் எத்தனை தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

ஆறு :கார்போஹைட்ரேட்டுகள் ,புரதங்கள், கொழுப்புகள் ,வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் ,நீர்

  1. உணவில் காணப்படும் முக்கிய கார்போஹைட்ரேட்டுகள்  வகைகள் என்னென்ன?

மோனோசாக்கரைடகள் ( ஒற்றைச் சர்க்கரைகள் ) ,டைசாக்கரைட்கள் (இரட்டை சர்க்கரைகள்), பாலிசாக்கரைடுகள் (கூட்டுச்சர்க்கரைகள்)

  1. மோனோசாக்கரைட்களில் அடங்கியுள்ள பொருட்கள் என்னென்ன?

 குளுக்கோஸ், ,பிரக்டோஸ், கேலாக்டோஸ்

  1. டைசாக்கரைட்களில அடங்கியுள்ள பொருட்கள் என்னென்ன?

  சுக்ரோஸ், ,மால்டோஸ்,லாக்டோஸ்

  1. பாலிசாக்கரைடுகளில் அடங்கியுள்ள பொருட்கள் என்னென்ன?

அமைலோஸ்,அமைலோபெக்டின்,ஸ்டார்ச்சுகள்,செல்லுலோஸ்,ஹெமிசெல்லுலோஸ்,கிளைக்கோஜன்

  1. கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை 1:2:1 என்ற விகிதத்தில் கொண்ட அங்ககக் கூட்டுப் பொருள்களை கொண்டது எது?

கார்போஹைட்ரேட்டுகள்

  1. குளுக்கோஸ் எந்த சர்க்கரைக்கு எடுத்துக்காட்டு?

ஒற்றை சர்க்கரை

  1. உண்ணும் சர்க்கரை எதற்கு எடுத்துக்காட்டு ?

இரட்டை சர்க்கரை

  1. காய்கறிகளில் காணப்படும் செல்லுலோஸ் எதற்கு எடுத்துக்காட்டு?

கூட்டுச்சர்க்கரை

  1. தேனிலும் கரும்பிலும் மற்றும் கனிகளிலும் காணப்படும் சர்க்கரை எது?

சுக்ரோஸ்

  1. கிளைக்கோஜென் மனித உடலில் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது?

கல்லீரல் மற்றும் தசைகள்

  1. மனித உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து எது?

புரதங்கள்

  1. புரதங்கள் எதற்கு தேவைப்படுகிறது?

உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு தேவையான அடிப்படை பொருளாகவும், எரிபொருளாகவும்

  1. ஊட்டச்சத்தின் அடிப்படையில் புரதங்களின் தனிப்பட்ட மிக முக்கிய பண்புகளை தீர்மானிப்பது அவற்றில் அடங்கியுள்ள எது?

 அமினோ அமிலங்கள்

  1. புரதங்களானது பல அமினோ அமிலங்களால் ஒன்றோடு ஒன்று என்ன இணைப்பால் இணைந்து உருவான ஒரு பாலி பெப்டைடா தொடர் ?

பெப்டைட்

  1. புரதங்கள் இரப்பை மற்றும் சிறுகுடல் பகுதிகளில் எதனால் சிதைக்கப்பட்டு எளிய மூலக்கூறுகளாக மாறுகின்றன ?

புரோட்டியேசஸ்களால்

  1. EAA என்பதன் விரிவாக்கம் என்ன?

 Essential amino acids

  1. நம் உடலில் எத்தனை அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன ?

 ஒன்பது

  1. நம் உடலில் உள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் என்னென்ன?

ஃபினைல்அலனைன்,வேலைன்,திரியோனைன்,டிரிப்டோஃபேன்,மெத்தியோனைன்,லுசைன்,ஐசோலுசைன்,லைசின் மற்றும் ஹிஸ்டிடைன்

  1. கொழுப்புகள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

முக்கிளிசரைடுகள் அல்லது மூன்று கிளிசரைடுகள்

  1. கொழுப்புகள் சிறுகுடலில் செரிமானம் அடையும் போது என்ன நொதியால் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசராலாக விடுவிக்கப்படுகின்றன?

லிப்பேஸ்

  1. EFA என்பதன் விரிவாக்கம் என்ன?

Essential fatty acids

  1. எத்தனைவிதமான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மனித உணவூட்டத்தில் காணப்படுகிறது?

இரண்டு: ஆல்பா-லினோலியிக் அமிலம் (ஒமேகா -3 கொழுப்பு அமிலம்), மற்றும் லினோலினிக் அமிலம் (ஒமேகா-6 கொழுப்பு அமிலம்)

  1. சிறிய அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்து எது?

 வைட்டமின்கள்

  1. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்ன?

வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் E, வைட்டமின் K

  1. நீரில் கரையும் வைட்டமின்கள் என்ன?

வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B3, வைட்டமின் B6,வைட்டமின் B12, வைட்டமின் C

  1. வேதிப்பொருள் குயினோனிலிருந்து பெறப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் K

  1. வைட்டமின் A விற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

ரெட்டினால்

  1. வைட்டமின் D விற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

கால்சிஃபெரால்

  1. வைட்டமின் E விற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

டோகோஃபெரால்

  1. வைட்டமின் B1 விற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

தயமின்

  1. வைட்டமின் B2 விற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

ரிபோஃபிளேவின்

  1. வைட்டமின் B3 விற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

நியாசின்

  1. வைட்டமின் B6 விற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

பைரிடாக்ஸின்

  1. வைட்டமின் B12 விற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

சையனோகோபாலமைன்

  1. வைட்டமின் C விற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

அஸ்கார்பிக் அமிலம்

  1. வைட்டமின் A குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

உலர்ந்த கார்னியா மற்றும் இரவில் பார்க்க முடியாத நிலை, செதில் போன்ற தோல்

  1. வைட்டமின் A குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

சீரோப்தால்மியா (தோல் நோய்கள்) நிக்டலோபியா (மாலைக்கண் நோய்)

  1. வைட்டமின் D குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
SEE ALSO  9TH ZOOLOGY STUDY NOTES |பொருளாதார உயிரியல்| TNPSC GROUP EXAMS

 கவட்டை கால்கள் ,குறைபாடுடைய மார்பு எலும்புகள்,புறா போன்ற மார்பு வளர்ச்சி

  1. வைட்டமின் D குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

ரிக்கெட்ஸ் (குழந்தைகளிடம் காணப்படுகிறது)

  1. வைட்டமின் E குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

மலட்டுத்தன்மை

  1. வைட்டமின் E குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

இனப்பெருக்க கோளாறுகள்

  1. வைட்டமின் K குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

 தாமதமாக ரத்தம் உறைதலின் காரணமாக அதிக ரத்தம் வெளியேறுதல்

  1. வைட்டமின் K குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

இரத்தப் போக்கு

  1. வைட்டமின் B1 குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

தசைகள் வலிமையற்று போதல் ,பக்கவாதம் நரம்புகளில்   சிதைவுறும் மாற்றங்கள்

  1. வைட்டமின் B1 குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

பெரி பெரி

  1. வைட்டமின் B2 குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

கண்களில் எரிச்சல் ,வறட்சியான தோல், உதடுகளில் வீக்கம் ,வாயின் ஓரங்களில் பிளவு

  1. வைட்டமின் B2 குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

எரிபோபிளாவினோஸிஸ்(கீலியாசிஸ்)

  1. வைட்டமின் B3 குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

 வாயின் ஓரங்களில் பிளவு, தோல் தடித்தல், ஞாபகமறதி ,வயிற்றுப்போக்கு

  1. வைட்டமின் B3 குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

பெலாக்ரா

  1. வைட்டமின் B6 குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

செதில்கள் போன்ற தோல், நரம்பு குறைபாடுகள்

  1. வைட்டமின் B6 குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

 டெர்மாடிட்ஸ்

  1. வைட்டமின் B12 குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

அதிக அளவிலான இரத்த சோகை, தண்டுவட நரம்பு குறைபாடுகள்

  1. வைட்டமின் B12 குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

 உயிரைப் போக்கும் ரத்த சோகை

  1. வைட்டமின் C குறைபாடுடைய நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

ஈறுகள் வீக்கம் அடைந்து ரத்தம் வடிதல், புண்கள் குணமாவது தாமதம், பற்கள் மற்றும் எலும்பு குறைபாடுகள்

  1. வைட்டமின் C குறைபாட்டினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

ஸ்கர்வி

  1. விட்டமின் என்ற வார்த்தை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ?

டாக்டர் ஃபன்க்

  1. எந்த வைட்டமின் கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதால் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது?

வைட்டமின் D

  1. இறைச்சியில் உள்ள இரும்புச்சத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஹீம் உள்ள இரும்புச்சத்து

  1. தாவர மூலப்பொருள்களில் உள்ள இரும்புச்சத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

ஹீம் இல்லாத இரும்புச்சத்து

  1. ஹீம் இல்லாத இரும்புச்சத்து உறிஞ்சுவதற்கு என்ன வைட்டமின் தேவைப்படுகிறது ?

 வைட்டமின் C

  1. சூரிய கதிர்கள் தோலின்மேல் விழும்போது என்ன பொருள் வைட்டமின் D ஆக மாறுபாடு அடைகிறது?

டிஹைடிரோ கோலஸ்ட்ரால்

  1. சூரிய ஒளி வைட்டமின் என அழைக்கப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் D

  1. மனித உடலுக்கு அதிகமாகத் தேவைப்படும் ஐந்து பெரும் தனிமங்கள் எவை ?

கால்சியம் ,பாஸ்பரஸ் ,பொட்டாசியம் ,சோடியம் மற்றும் மெக்னீசியம்

  1. மனித உடலுக்கு குறைவான தேவையுடைய தனிமங்கள் என அழைக்கப்படுபவை எவை?

 கந்தகம் ,குளோரின் ,கோபால்ட் ,தாமிரம் ,துத்தநாகம் ,மாங்கனீஸ் ,மாலிப்டினம் ,அயோடின் மற்றும் செலினியம்

  1. அதிகப்படியான புரத குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?

 குவாஷியோர்கர் ,மராஸ்மஸ்

  1. குவாஷியோர்கர் நோய் எந்த வயது வரை உள்ள குழந்தைகளை தாக்குகிறது?

 1 முதல் 5 வரை

  1. ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் புரத குறைபாடு நோய் என்ன?

மராஸ்மஸ் 

  1. ஒரு குழந்தைக்கு தினசரி தேவையான கார்போஹைட்ரேட் எவ்வளவு?

150 முதல் 200 கிராம்

  1. ஒரு குழந்தைக்கு தினசரி தேவையான புரதங்கள் எவ்வளவு?

40 கிராம்

  1. ஒரு குழந்தைக்கு தினசரி தேவையான கொழுப்புகள் எவ்வளவு?

35 கிராம்

  1. உலக அயோடின் குறைபாடு தினம் எது?

அக்டோபர் 21

  1. வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வைட்டமினோசிஸ்

  1. மேக்ரோ தனிம சத்துக்கள் என அழைக்கப்படுபவை எவை?

கால்சியம், சோடியம் ,பொட்டாசியம்

  1. மைக்ரோ தனிம சத்துக்கள் என அழைக்கப்படுபவை எவை ?

இரும்பு,அயோடின்

  1. கால்சியம் தாது உப்பு வின் செயல்பாடு என்னென்ன?

எலும்புகளின் வளர்ச்சி, பற்களின் எனாமல், ரத்தம் உறைதல் ,தசைச்சுருக்க செயல்பாடு கட்டுப்படுத்துதல்

  1. கால்சியம் தாது உப்பு குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் என்னென்ன?

எலும்பு வளர்ச்சி குன்றுதல், மிகக் குறைவான எலும்பு சட்டக வளர்ச்சி, எலும்புத்துளை நோய்

  1. சோடியம் தாது உப்பு வின் செயல்பாடு என்னென்ன?
SEE ALSO  9TH ZOOLOGY STUDY NOTES |நுண்ணுயிரிகளின் உலகம்| TNPSC GROUP EXAMS

அமில கார சமநிலையை சீராக வைத்தல், நரம்பு உணர்திறன் கடத்தல்

  1. சோடியம் தாது உப்பு குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் என்னென்ன?

 தசைப்பிடிப்பு, நரம்பு தூண்டல்கள் கடத்த இயலாமை

  1. பொட்டாசியம் தாது உப்பு வின் செயல்பாடு என்னென்ன?

நரம்பு மற்றும் தசைகளின் செயல்திறனை ஒழுங்குபடுத்துதல்

  1. பொட்டாசியம் தாது உப்பு குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் என்னென்ன?

 தசை சோர்வு, நரம்பு தூண்டல்கள் கடத்த இயலாமை

  1. இரும்பு தாது உப்பு வின் செயல்பாடு என்னென்ன?

ஹீமோகுளோபினின் முக்கிய கூறாக செயல்படுதல்

  1. இரும்பு தாது உப்பு குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் என்னென்ன?

 ரத்தசோகை

  1. அயோடின் தாது உப்பு வின் செயல்பாடு என்னென்ன?

தைராய்டு ஹார்மோன் உருவாக்குதல்

  1. அயோடின் தாது உப்பு குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் என்னென்ன?

முன்கழுத்துக் கழலை

  1. எத்தனை காரணிகளால் உணவு கெட்டுப் போகிறது ?

உள் காரணிகள் ,வெளி காரணிகள்

  1. உணவிலிருந்து நீரை அல்லது ஈரப்பதத்தை வெளியேற்றுவதற்கு என்ன பெயர்?

உலர்த்தல்

  1. கதிரியக்க முறையில் உணவானது ஒரு குறிப்பிட்ட அளவிலான எக்ஸ் கதிர்கள் காமா கதிர்கள் அல்லது புற ஊதாக் கதிர்களால் தாக்கப்பட்டு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகளை கொண்டு பாதுகாக்கப்படுகிறது.இந்த கதிரியக்க முறை சில நேரங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குளிர்பன பாஸ்டர் பதன முறை

  1. அதிகக் குளிர் முறை பாதுகாப்பு முறையில் உணவுப் பொருட்கள் எந்த வெப்பநிலையில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது? 

23°Cமுதல் 30°C வெப்பநிலை வரை

  1. இதர உணவு பொருட்கள் அடைக்கப்பட்ட காற்றுப்புகாத பைகளில் என்ன வாயு நிரப்பப் படுவதன் மூலம் அதில் பூஞ்சை மற்றும் பூச்சிகள் வளர்வது தடுக்கப்படுகிறது?

நைட்ரஜன் வாயு

  1. அழுகும் காய்கறிகள், கனிகள் மற்றும் கனியினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பால் மற்றும் பால் பொருட்கள் முதலியவை குறைந்த வெப்பநிலையில் குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கும் முறைக்கு என்ன பெயர் ?

குளிர்சாதன முறையில் பாதுகாத்தல்

  1. பாஸ்டுரைசேஷன் என்ற முறையில் பால் எந்த வெப்பநிலையில் எத்தனை நிமிடங்கள்  குளிரூட்டப்பட்டு பாதுகாக்கபடுகிறது?

 63°C வெப்பநிலையில் நிலையில் 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கப்பட்டு உடனே குளிரூட்டப்படுகிறது

  1. அறிவியலின் ஒரு பிரிவான நுண்ணுயிரியலைத் தோற்றுவித்தவர் யார்?

 லூயிஸ் பாஸ்டர்

  1. லூயிஸ் பாஸ்டர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

 பிரான்ஸ் நாடு

  1. நொதித்தல் மற்றும் நோய்களுக்கு நுண்ணியிரிகளே காரணம் என கண்டறிந்தவர் யார்?

லூயிஸ் பாஸ்டர்

  1. பாஸ்டர் பதனமுறை, வெறிநாய்க்கடி மற்றும் ஆந்தராக்ஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர் யார் ?

லூயிஸ் பாஸ்டர்

  1. ஆப்ரேஷன் பிளட் என்ற நடவடிக்கை எந்த ஆண்டு வெண்மை புரட்சியை இந்தியாவில் தொடங்கியது?

 1970

  1. ஆனந்த் பால் கூட்டுறவு சங்கத்தை (Amul) நிறுவியவர் யார்?

வர்கீஸ் குரியன்

  1. கரந்த மற்றும் பதப்படுத்துதல் செய்யப்பட்ட பாலில் உள்ள நுண்ணுயிரிகளின் அளவை மதிப்பீடு செய்வதற்கு பெருமளவில் என்ன சோதனை பயன்படுத்தப்படுகிறது?

மெத்திலன் சாய ஒடுக்க சோதனை

  1. உணவைப் பாதுகாக்க உப்பு ஏன் சேர்க்கப்படுகிறது?

உப்பினை சேர்க்கும் போது உணவில் உள்ள ஈரப்பதம் சவ்வூடுபரவல் மூலம் நீக்கப்படுகிறது

  1. உணவைப் பாதுகாக்க ஏன் சர்க்கரை அல்லது தேன் சேர்க்கப்படுகிறது?

ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையானது உணவில் உள்ள நீரின் அளவை குறைப்பதற்கும் மற்றும் கனிகள் ஆக்சிஜனேற்றம் அடைவதை குறைப்பதற்கும் உதவுகிறது

  1. ஊறுகாயில் எண்ணெய் சேர்ப்பதற்கான காரணம் என்ன ?

காற்றில் உள்ள நுண்ணுயிரிகளோடு தொடர்பு கொள்வது தவிர்க்கப்படுவதற்காக

  1. உணவை பாதுகாக்கும் செயற்கை வேதிப் பொருட்கள் என்னென்ன?

 சோடியம் பென்சோயேட், சிட்ரிக் அமிலம் ,வினிகர்,சோடியம் மெட்டாபைசல்பேட் மற்றும் பொட்டாசியம் பை சல்பேட்

  1. உலக உணவு தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

 அக்டோபர் 16

  1. உணவில் வேறு ஏதேனும் பொருட்களை சேர்ப்பதோ அல்லது உணவில் இருந்து நீக்குவதோ எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 கலப்படம்

  1. உணவில் சேர்க்கப்படும் கலப்பட பொருள்களின் தன்மையை பொறுத்து எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

மூன்று வகைகள்: இயற்கையான கலப்பட பொருட்கள், தெரியாமல் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் ,தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள்

  1. ஆப்பிள் விதைகளில் காணப்படும் அமிலம் எது ?
SEE ALSO  9TH BOTANYSTUDY NOTES |தாவர செயலியியல்| TNPSC GROUP EXAMS

புரூசிக் அமிலம்

  1. வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் என்ன?

கால்சியம் கார்பைடு

  1. பச்சைக் காய்கறிகள் பாகற்காய் பச்சை பட்டாணி போன்றவற்றில் பசுமை நிறத்தை கொடுப்பதற்கும் வாடிய நிலை தோன்றாமல் இருக்கவும் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?

உலோகக் காரியம்

  1. ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற கனிகளின் மேல் பளபளப்பான தோற்றத்தை கொடுப்பதற்காக பூசப்படுவது எது?

செயற்கையான செல்லாக் அல்லது கார்னோபா மெழுகு

  1. பாலின் தூய தன்மையை கண்டறியும் சோதனையில் அயோடின் கரைசல் சேர்க்கும் பொழுது என்ன நிறமாக தோன்றுவது?

பாலில் ஸ்டார்ச் இருப்பதை குறிக்கும் நீலநிறம் 

  1. உலக சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஏப்ரல் மாதம் 7

  1. இந்திய அரசாங்கம் எந்த ஆண்டு உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியது?

1954

  1. எந்த ஆண்டு உணவு கலப்பட தடுப்பு விதிகள் சட்டம் இயற்றப்பட்டது?

1955

  1. FCI எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1965

  1. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மின் உபயோகப் பொருட்களுக்கு எது தரச்சான்று அளிக்கிறது  ?

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்(ISI)

  1. ISI வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Bureau of Indian standard

  1. விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களுக்கு தரக்குறியீடு வழங்குவது எது?

அக்மார்க்-AGMARK  வேளாண் பொருட்களுக்கான தரக்குறியீடு

  1. பழ உற்பத்திப் பொருட்களுக்கு தரச்சான்று அளிக்கப்படுவது எது?

 FPO

  1. உணவு பாதுகாப்பை கண்காணிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது எந்த ஆணையத்தின் பொறுப்பு?

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

  1. உணவுகள் உணவு உற்பத்தி பொருட்கள் செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிர்ணயங்கள் விதிமுறைகள் வழிமுறைகள் மற்றும் இதர பரிந்துரைகள் அடங்கிய ஒரு தொகுப்பு எது?

கோடக்ஸ் அலிமென்டாரியஸ்


9TH ZOOLOGY STUDY NOTES |சுத்தம் சுகாதாரம்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: