9TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. தமக்குத் தெரிந்த கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி எது?

மொழி

  1. முதலில் மனிதர்கள் தம் எண்ணங்களை எவற்றின் மூலமாக பிறருக்கு தெரிவிக்க முயன்றனர்?

மெய்ப்பாடுகள் சைகைகள் ஒலிகள் ஓவியங்கள்

  1. எவை மனிதர்களை வேறுபட்டு ஒலிப்பு முயற்சிகளை உருவாக்க தூண்டின?

மனித இனம் வாழ்ந்த இடம் அமைப்பும் இயற்கை அமைப்பும்

  1. உலகத்தில் உள்ள மொழிகள் எல்லாம் என்ன அடிப்படையில் மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?

மொழியின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு

  1. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

1300க்கும் மேற்பட்டவை

  1. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?

4

  1. இந்தியாவில் பேசப்படும் மொழி குடும்பங்கள் என்னென்ன?

இந்தோ- ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ- ஆசிய மொழிகள்,சீன-திபெத்திய மொழிகள்

  1. திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?

குமரிலபட்டர்

  1. திராவிடம் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து பிறந்ததாக மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்

தமிழ்

  1. தமிழ் தமிழா தமிலா டிரமிலா ட்ரமிலா த்ராவிடா திராவிடா என மொழி மாற்றத்தை விளக்கியவர் யார்

ஹீரோஸ் பாதிரியார்

  1. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்

அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

  1. எந்த ஆண்டில் பேராசிரியர்கள் பாப் ராஸ்க் கிரிம் முதலானோரால் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன?

 1816

  1. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்து இவை தனி ஒரு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என முதன் முதலில் கூறியவர் யார்?

பிரான்சிஸ் எல்லிஸ்

  1. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளை ஒரே இனமாக கருதி தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்?

பிரான்சிஸ் எல்லிஸ் 

  1. தென்னிந்திய மொழிகளோடு மால்தோ,தோடா,கோண்டி முதலான மொழிகளில் ஆராய்ச்சி செய்து தமிழியன் என பெயரிட்டவர் யார்?

 ஹோக்கன்

  1. ஆரிய மொழிகளில் இருந்து தமிழியன் மொழிகள் மாறுபட்டவை என்று கருதியவர்கள் யார்?

 ஹோக்கன் மற்றும் மாக்ஸ்முல்லர்

  1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார் ?

கால்டுவெல்

  1. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எப்போது எழுதினார்? 

1856

  1. திராவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்கும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டவர் யார் ?

கால்டுவெல்

  1. திராவிட மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

3

  1. திராவிட மொழிக்குடும்பம் நில அடிப்படையில் என்னென்ன பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

தென்திராவிடமொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள்

  1. தென் திராவிட மொழிகள் என்னென்ன?

தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு கோத்தா தோடா  கொரகா இருளா

  1. நடுத்திராவிட மொழிகள் என்னென்ன?

 தெலுங்கு, கூயி ,கூவி , கோண்டா, கோலாமி ,நாயக்கி ,பெங்கோ ,முண்டா, பர்ஜி, கதபா ,கோண்டி, கோயா

  1. வடதிராவிட மொழிகள் என்னென்ன?

குரூக், மால்தோ, பிராகுய்

  1. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு திராவிட மொழிகள் என்னென்ன?

தங்கா, எருகலா ,குறும்பா ,சோழிகா

  1. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை

28

  1. “தமிழ் வடமொழியின் மகள் அன்று;அது தனி குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி ;தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்” என கூறியவர் யார்?
SEE ALSO  9TH TAMIL IYAL 05 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

கால்டுவெல்

  1. கீழ்க்கண்டவற்றில் அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது எனக் குறிப்பிடுக:

கண்-தமிழ்

  1. கண்ணு- மலையாளம், கன்னடம்
  2. கன்னு-தெலுங்கு குடகு
  3. ஃகன்-குரூக்
  4. கெண்-பர்ஜி
  5. கொண்-தோடா
  6. எண்ணுப் பெயர்களின் திராவிட மொழிகளை குறிப்பிடுக

மூன்று-தமிழ்

  1. மூணு-மலையாளம்
  2. மூடு-தெலுங்கு
  3. மூரு-கன்னடம்
  4. மூஜி-துளு
  5. திராவிட மொழிகளில் உயிர் எழுத்துக்களில் உள்ள எந்த வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்த துணை செய்கின்றன?

குறில் நெடில் வேறுபாடுகள்

  1. எந்த மொழியில் உயிரற்ற பொருள்களுக்கும் கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களுக்கும் கூட ஆண் பெண் என்று பாகுபடுத்தப் படுகின்றன ?

வடமொழி

  1. வடமொழியில் கைவிரல்கள் மற்றும் கால் விரல்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன?

கைவிரல் பெண்பால் என்றும் கால் விரல்கள் ஆண்பால்

  1. எந்த மொழியில் திணை பால் எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை?

 மலையாள மொழி

  1. தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணம் நூல் எது?

சங்க இலக்கியம் தொல்காப்பியம்

  1. கன்னட மொழியின் இலக்கிய இலக்கண நூல் எது?

கவிராஜ மார்க்கம்

  1. கவிராஜ மார்க்கம் நூலின் காலம் என்ன ?

 கிபி 9 ஆம் நூற்றாண்டு

  1. தெலுங்கு மொழியின் இலக்கிய இலக்கண நூல் எது?

இலக்கியம்-பாரதம் இலக்கணம் ஆந்திரபாஷா பூஷணம்

  1. பாரதம் நூலின் காலம் என்ன?

கி பி 11ம் நூற்றாண்டு

  1. ஆந்திரபாஷா பூஷணம் நூலின் காலம் என்ன?

கிபி 12ம் நூற்றாண்டு

  1. மலையாள மொழியின் இலக்கிய இலக்கண நூல் எது?

ராமசரிதம், லீலா திலகம்

  1. ராமசரிதம் நூலின் காலம் என்ன?

கிபி 12ஆம் நூற்றாண்டு

  1. லீலாதிலகம் எனும் இலக்கண நூலின் காலம் என்ன?

கிபி 15ஆம் நூற்றாண்டு

  1. இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?

செ.வை சண்முகம்

  1. மரம் என்று சொல்லின் ஒற்றுமை எந்தெந்த திராவிட மொழிகளில் காணப்படுகிறது?

 தமிழ் மலையாளம் கன்னடம்

  1. நூறு என்ற சொல்லின் ஒற்றுமை எந்தெந்த திராவிட மொழிகளில் காணப்படுகிறது

தமிழ் மலையாளம்

  1. நீ என்ற சொல்லின் ஒற்றுமை எந்தெந்த திராவிட மொழிகளில் காணப்படுகிறது

 தமிழ் மலையாளம்

  1. தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள் எந்த விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறி இருக்கின்றன?

ஒலி இடம்பெயர்தல்

  1. எந்த நாடுகளின் பண தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?

மொரீசியஸ் இலங்கை

  1. “காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!” என தமிழை வாழ்த்தியவர் யார்?

ஈரோடு தமிழன்பன்

  1. “தமிழ் ஏந்தி வளர்த்தது தாயெனவே, சித்தர் மரபில் தீதறுக்கும்- புது சிந்தனை வீச்சுகள்  பாய்ந்தனவே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ?

தமிழோவியம்

  1. “விரலை மடக்கியவன் இசை இல்லை -எழில் வீணையில் என்று சொல்வதுபோல்”-இவ்வரிகளை எழுதியவர் யார்?

ஈரோடு தமிழன்பன்

  1. “குறைகள் சொல்வதை விட்டு விட்டு புது கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!” வரிகளை எழுதியவர் யார்?

ஈரோடு தமிழன்பன்

  1. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என கூறியவர் யார் ?
SEE ALSO  9TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

ஈரோடு தமிழன்பன்

  1. ஈரோடு தமிழன்பன் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

2004

  1. ஈரோடு தமிழன்பன் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றார்?

வணக்கம் வள்ளுவ எனும் கவிதை நூல்

  1. ஈரோடு தமிழன்பனின் எந்த நூல் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் ?

தமிழன்பன் கவிதைகள்

  1. “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்”- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

பிங்கல நிகண்டு

  1. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”இவ்வரிகளை கூறியவர் யார்?

பாரதியார்

  1. உலகத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது

பிப்ரவரி 21

  1. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை ?

இலங்கை மற்றும் சிங்கப்பூர்

  1. “தித்திக்கும் தெள்ளமுதாய் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

தமிழ்விடு தூது

  1. “என்றும் சிந்தாமணியாய் இருந்த உன்னை சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

தமிழ் விடு தூது

  1. “முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ குற்றம் இலாப் பத்துக் குணம் பெற்றாய்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

தமிழ் விடு தூது

  1. “ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

தமிழ் விடு தூது

  1. “ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு ஆன நவரசம்உண் டாயினாய்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

தமிழ் விடு தூது

  1. “அழியா வனப்பு ஒன்று அலது அதிகமுண்டோ ஒழியா வனப்பு எட்டு உடையாய்..”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

தமிழ் விடு தூது

  1. “குறம் என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு உறவுஎன்று மூன்றும்இனத்தும் உண்டோ”- இவ்வரிகளில் மூன்று இனம் என குறிப்பிடப்படுவது எவை?

துறை, தாழிசை ,விருத்தம்

  1. முக்குணங்கள் என குறிப்பிடப்படுவது எது?

சத்துவம் ,ராஜசம், தாமசம்

  1. தமிழ்விடு தூது குறிப்பிடப்படும் ஐந்து வண்ணங்கள் என்னென்ன?

வெள்ளை, சிவப்பு, கருப்பு ,மஞ்சள் ,பச்சை

  1. இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு என்ன பெயர்?

கண்ணி

  1. தமிழில் இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செயல் வகைக்கு பெயர் என்ன?

கண்ணி

  1. தமிழ் மொழி பெற்றுள்ள பத்து குணங்கள் என்னென்ன?

செறிவு ,தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி

  1. தூது சிற்றிலக்கியத்திற்க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

 வாயில் இலக்கியம் சந்து இலக்கியம்

  1. தூது சிற்றிலக்கியம் என்ன பாவகையால் இயற்றப்படுகிறது?

கலிவெண்பா

  1. தமிழ்விடு தூதுவின் பாட்டுடைத் தலைவன் யார் ?

மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்

  1. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?

268 கண்ணிகள்

  1. தமிழ் விடுதூது நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?

உ.வே.சா

  1. தமிழ்விடு தூது எந்த ஆண்டு முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது?

1930

  1. “காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்மீதொளிர் சிந்தாமணியும்…. நீதி ஒளிர் செங்கோலை திருக்குறளை தாங்குதமிழ் நீடு வாழ்க”இவ்வரிகளை எழுதியவர்

 கவியோகி சுத்தானந்த பாரதியார்

  1. கீழுள்ளவற்றின் தமிழ்ச் சொற்களை குறிப்பிடுக:

 சாப்ட்வேர்(software)-மென்பொருள்

  1. பிரவுசர்(browser)-உலவி
  2. க்ராப்(crop)- செதுக்கி
  3. கர்சர்(cursor)-ஏவி அல்லது சுட்டி
  4. சைபர்ஸ்பேஸ்(cyberspace)-இணையவெளி
  5. சர்வர்(server)-வையகவிரிவு வலை
  6. போல்டர்(folder)-உறை
  7. லேப்டாப்(laptop)-மடிக்கணினி
  8. கீழ்க்கண்டவற்றில் என்ன அளவின் தமிழ் பெயர்களை குறிப்பிடுக?
SEE ALSO  8TH STD HISTORY STUDY NOTES | ஐரோப்பியர்களின் வருகை

1/320-முந்திரி

  1. 1/160-அரைக்காணி
  2. 3/320-அரைக்காணி முந்திரி
  3. 1/80-காணி
  4. 1/64-கால் வீசம்
  5. 1/40-அரைமா
  6. 1/32-அரை வீசம்
  7. 3/80-முக்காணி
  8. 3/64-முக்கால் வீசம்
  9. 1/20-ஒருமா
  10. 1/16-மாகாணி(வீசம்)
  11. 1/10-இருமா
  12. ⅛-அரைக்கால்
  13. 3/20-மூன்றுமா
  14. 3/16-மூன்று வீசம்
  15. ⅕- நாலுமா
  16. தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பது எந்த மொழியில் நேவி என ஆகியுள்ளது ?

ஆங்கிலம்

  1. எந்த உலகின் தொன்மையான மொழியில் தமிழ் கடல் சார்ந்த சொற்கள் இடம் பெற்றுள்ளன?

கிரேக்கம்

  1. தமிழில் உள்ள பா கிரேக்க மொழியில் எந்த தொன்மையான காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இலியாத்

  1. தமிழில் உள்ள பா கிரேக்கத்தில் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

பாய்யியோனா

  1. வெண்பாவின் ஓசை என்ன?

 செப்பலோசை

  1. கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

சாப்போ

  1. சாப்போ ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது?

சேப்பிக் ஸ்டேன்சா

  1. இலக்கணத் தமிழில் துன்ப சுவையினை எவ்வாறு அழைப்பர்?

இளிவரல்

  1. கிரேக்கத்தில் துன்ப சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

இளிகியா 

  1. இலியாத் காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது?

கிமு எட்டாம் நூற்றாண்டு

  1. எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் எனும் நூல் எந்த மொழியை சார்ந்தது?

கிரேக்கம்

  1. “விறகுநான் வண்டமிழே! உன்னருள் வாய்த்த பிறகு நான் வீணையாய் போனேன்”- இவ்வரிகளை எழுதியவர் யார் ?

கவிஞர் வாலி 

  1. “ஒருவாய் உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக் கணவாய் வழி வரும் காற்று”-இவ்வரிகளை எழுதியவர் யார் ?

கவிஞர் வாலி 

  1. கால் முளைத்த கதைகள் என்னும் நூலை எழுதியவர் யார் ?

எஸ் ராமகிருஷ்ணன்

  1. மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் என்ற நூலை எழுதியவர் யார்?

மணவை முஸ்தபா

  1. மாணவர்களுக்கான தமிழ் எனும் நூலை எழுதியவர் யார்?

என் .சொக்கன்

  1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?

ராபர்ட் கால்டுவெல்


9TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service,

 

error: