- எந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஓடும் ரயிலிலிருந்து மகாத்மா காந்தி தள்ளி விடப்பட்டார்?
ஜூன் மாதம் 7 ,1893
- மகாத்மா காந்தி எந்த இடத்தில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார்?
பீட்டர்மரிட்ஸ்பர்க் ,தென்ஆப்பிரிக்கா
- “இன, பாலின, தேசிய ,இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையை பொறுத்து மாறுபடாமல் மனிதர்களாக பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையை மனித உரிமை” என மனித உரிமை பற்றி வரையறுப்பது எது?
ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணையம்
- மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு வருடமும் எப்போது கொண்டாடப்படுகிறது ?
டிசம்பர் 10
- ஐ.நா சபை எப்போது தொடங்கப்பட்டது?
அக்டோபர் 24 ,1945
- ஐ.நா சபை நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
அக்டோபர் 24
- மண்டேலா தென் ஆப்பிரிக்கா இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடி எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார் ?
27 ஆண்டுகள்
- நெல்சன் மண்டேலா எந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்?
1990
- யாரின் கடும் முயற்சியினால் இன ஒதுக்கல் கொள்கை தென்ஆப்பிரிக்காவில் முடிவுக்கு வந்தது ?
மண்டேலா மற்றும் டி கிளார்க்
- எப்போது நடந்த தேர்தலில் மண்டேலா தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று,நெல்சன் மண்டேலா அந்த நாட்டின் தலைவரானார் ?
1994
- உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை எப்போது எங்கு ஐநா சபையால் நிறைவேற்றப்பட்டது?
டிசம்பர் 10, 1948 ,பாரிஸ்
- மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் எத்தனை உறுப்புகள் (articles) உள்ளன?
30 உறுப்புகள்(articles)
- ஒரு சமூகத்தில் முழுமையாக பங்காற்ற தேவைப்படும் உரிமைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
சமூக உரிமைகள்
- ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை நிறைவேற்றக் கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை எவ்வாறு அழைக்கப்படும்?
பொருளாதார உரிமைகள்
- ஒவ்வொருவரும் தமது பண்பாட்டை கடைபிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை எவ்வாறு அழைக்கப்படும்?
பண்பாட்டு உரிமைகள்
- ஒவ்வொரு மனிதனுக்கும் இன ,தேசிய, நிற ,பால் ,வயது ,சமய போன்ற பாகுபாடுகள் இன்றி அரசின் சட்டத்தால் தரப்படும் உரிமைகளை குறிப்பது ?
குடிமை உரிமைகள்
- அரசாங்கம் அமைக்கவும் நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தப்படும் உரிமைகள் ?
அரசியல் உரிமைகள்
- ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான உரிமைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அடிப்படை உரிமைகள்
- இந்தியாவில் காணப்படும் அடிப்படை உரிமைகள் என்னென்ன?
சமத்துவ உரிமை ,சுதந்திர உரிமை ,சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய மற்றும் மதச் சார்பு சுதந்திரத்திற்கான உரிமை ,சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் ,அரசியமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
- சட்டத்தின் முன் அனைவரும் சமம் , சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பது என்ன உரிமை?
சமத்துவ உரிமை
- இந்திய அரசிலமைப்பில் எத்தனை வகையான சுதந்திரங்கள் தரப்பட்டுள்ளன ?
ஆறு :பேச்சுரிமை ,ஆயுதமின்றி கூடும் உரிமை ,சங்கங்கள் அமைக்கும் உரிமை, இந்தியாவில் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை, இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமை, எந்த தொழிலையும் வணிகத்தையும் செய்யும் உரிமை
- எத்தனை வயதுக்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள் அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும்?
14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்
- ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ,நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு என்ன?
நீதிப்பேராணை(writ)
- ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம் ,நீதிமன்றம் அவருக்கு உரிய உரிமையை மீட்டு அளிக்குமாறு அரசுக்கு ஆணை இடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நீதிப்பேராணை
- எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் இந்திய அரசமைப்பில் இணைக்கப்பட்டது ?
42-வது சட்டத்திருத்தம்
- எந்த ஆண்டு 42-வது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது?
1976
- இந்திய அரசிலமைப்பு எத்தனை அடிப்படை கடமைகளை குறிப்பிடுகின்றது ?
11
- மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன் பராமரிப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2007
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?
அக்டோபர் 12, 1993
- இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வகை செய்யும் வகையுரை எந்த சட்டத்தில் உள்ளது?
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993, பிரிவு 21
- ஐக்கிய நாடுகள் சபை எத்தனை வயது வரை உள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது?
18
- எப்போது ஐநா சபை குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது ?
நவம்பர் 20 1989
- இந்திய அரசமைப்பின் எந்த பிரிவின் படி 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வகை செய்துள்ளது?
சட்டப் பிரிவு 21 A
- இந்திய நாடாளுமன்றம் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தினை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது ?
2009
- பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது?
போக்சோ சட்டம்
- POCSO-விரிவாக்கம் என்ன?
The protection of children from sexual offences act,2012)
- 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போது வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்குவதோடு கடுமையான தண்டனைகள் விதிக்க வகை செய்யும் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
ஏப்ரல் மாதம் ,2018
- உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவ இந்தியாவின் முதல் 24 மணி நேர கட்டணமில்லா அவசர தொலைத்தொடர்பு சேவை எண் என்ன?
1098
- பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்று இயக்கம் ) குழந்தைகள் உரிமை அமைப்பின் தலைவர் யார்?
கைலாஷ் சத்யார்த்தி
- எந்த ஆண்டு கைலாஷ் சத்தியார்த்தி உலக மக்களின் கவனத்தை குழந்தை உழைப்பு முறை மீது திசைதிருப்ப 80,000 கிலோ மீட்டர் நீள குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை முன்னின்று நடத்தினார்?
1998
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு 14 வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் செயல்படுத்தக் கூடாது என கூறுகிறது?
பிரிவு 24
- இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப் பிரிவு 14 வயது நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அனைத்தும் குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது?
சட்டப்பிரிவு 45
- தமிழ்நாடு எந்த சட்டத்தை நிறைவேற்றி மூதாதையரின் சொத்துக்களில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது ?
தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சட்டம், 1989
- மத்திய அரசு எந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமை அளித்தது?
இந்து வாரிசுரிமை சட்டம் ,2005
- தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது?
69%
- தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு ?
26.5 சதவீதம்
- தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு?
3.5%
- தமிழகத்தில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினருக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு ?
20%
- தமிழகத்தில் ஆதிதிராவிடருக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு?
18%
- தமிழகத்தில் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு?
1%
- ஒவ்வொரு பிரிவின் கீழும் பெண்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?
பெண்களுக்கு 30% ,மாற்றுத்திறனாளிகளுக்கு 4%
- தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவின் கீழும் முன்னுரிமை அடிப்படையில் எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
20%
- தகவல் அறியும் உரிமை சட்டம் இந்தியாவில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
அக்டோபர் 2005
- தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தகவல்கள் எத்தனை நாட்களுக்குள் தகவல் கோரப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும்?
30 நாட்கள்
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவை ?
நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையான எல்லை பாதுகாப்பு படை, மத்திய சேமக் காவல் படை மற்றும் உளவுத்துறை பணியகம் ஆகிய அமைப்புகள்
- இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு இருபாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது?
சட்டப்பிரிவு 39 பி
- “ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது ” எனக் கூறியவர் யார் ?
ஜான் எஃப் கென்னடி
9TH POLITY STUDY NOTES |மனித உரிமைகள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services