- அரசாங்கங்களின் வகைகள் என்னென்ன?
உயர் குடியாட்சி ,முடியாட்சி ,தனிநபர் ஆட்சி, சிறு குழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி ,மக்களாட்சி மற்றும் குடியரசு
- உயர்குடியாட்சி (Aristocracy)காணப்படும் நாடுகள் என்னென்ன?
இங்கிலாந்து ,ஸ்பெயின்
- ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
முடியாட்சி (monarchy)
- முடியாட்சி காணப்படும் நாடுகள் ?
பூட்டான் ,ஓமன், கத்தார்
- முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தனிநபர் ஆட்சி (Autocracy)
- தனிநபர் ஆட்சி (Autocracy) எங்கு காணப்படுகிறது?
வடகொரியா ,சவுதி அரேபியா
- மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ அமைப்பையோ கட்டுப்படுத்துவதற்கு பெயர் என்ன?
சிறு குழு ஆட்சி (Oligarchy)
- சிறு குழு ஆட்சி (Oligarchy) எங்கு காணப்படுகிறது?
முன்னாள் சோவியத் யூனியன், சீனா ,வெனிசுலா, வடகொரியா
- மதகுருமார்கள் தம்மை கடவுளாகவோ அல்லது கடவுளின் பெயரால் மதகுருமார்களால் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மதகுருமார்களின் ஆட்சி (Theocracy)
- மதகுருமார்களின் ஆட்சி (Theocracy) எங்கு காணப்படுகிறது?
வாட்டிகன்
- ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
மக்களாட்சி(Democracy)
- மக்களாட்சி(Democracy) காணப்படும் நாடுகள் என்னென்ன?
இந்தியா ,அமெரிக்கா ஐக்கிய நாடுகள் ,பிரான்ஸ்
- மக்களிடமோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடமோ உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறைக்குப் பெயர் என்ன ?
குடியரசு(republic)
- குடியரசு(republic) காணப்படும் நாடுகள் என்னென்ன?
இந்தியா ,ஆஸ்திரேலியா
- எந்த நாட்டில் முதன் முதலில் குடியரசு எனும் சொல் வடிவமைக்கப்பட்டது?
ரோம்நாடு ,கிமு 500
- குடியரசு(republic) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
res publica இலத்தின் மொழி
- res publica என்ற இலத்தின் மொழி சொல்லின் பொருள் என்ன ?
பொது விவகாரம் (public matter)
- இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
நவம்பர் 26, 1949
- இந்திய அரசியலமைப்பு எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ?
ஜனவரி 26, 1950
- இந்தியா எப்போது குடியரசு நாடாக மாறியது?
ஜனவரி 26 1950
- மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஆட்சி முறைக்கு பெயர் என்ன ?
மக்களாட்சி
- மக்களாட்சி (Democracy) எனும் சொல் எதிலிருந்து பெறப்பட்டது?
இரு கிரேக்க சொற்கள் (Demos-மக்கள் & Cratia-அதிகாரம்)
- ஒரு நாட்டில் மக்களின் உயர்ந்த அதிகாரங்களைப் பெற்று அமைக்கும் ஆட்சி முறைக்கு பெயர் என்ன?
மக்களாட்சி
- மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?
நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம்
- “ஒரு உண்மையான மக்களாட்சியை 20 பேர் கொண்ட குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது. இது கீழ்நிலையில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களாலும் செயல்படுத்தப்படுவதாகும் எனக் கூறியவர் யார்?
மகாத்மா காந்தி
- “மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி “என கூறியவர் யார் ?
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன்
- 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றிய இடங்கள்?
ஏதென்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒருசில நகர அரசுகளில்
- இந்தியாவில், உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள் பண்டைய காலத்திலிருந்தது எனும் செய்திகள் எந்த நூலில் கூறப்படுகிறது ?
சாணக்கியன் அர்த்த சாஸ்திரம்
- எந்த அரசர்கள் காலத்தில் குடவோலை முறை இருந்தது ?
பிற்கால சோழர்கள்
- மக்களாட்சி எத்தனை வகைப்படும்?
இரண்டு :நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி (பிரதிநிதித்துவ மக்களாட்சி)
- பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக் கூடிய ஒரு அரசு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நேரடி மக்களாட்சி
- நேரடி மக்களாட்சி எங்கு காணப்படுகிறது?
பண்டைய கிரேக்க நகர அரசுகளில் ,சுவிட்சர்லாந்து
- பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் முறைக்கு பெயரென்ன ?
மறைமுக மக்களாட்சி
- மறைமுக மக்களாட்சி காணப்படும் நாடுகள் ?
இந்தியா,அமெரிக்க ஐக்கிய நாடுகள் ,இங்கிலாந்து
- இந்தியா என்ன ஆட்சி முறையை கொண்டுள்ள நாடு ?
நாடாளுமன்ற மக்களாட்சி முறை
- இந்திய நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கிய கூறுகளாக விளங்குவது எது ?
நாட்டிற்கு தேவையான சட்டங்களை உருவாக்குவது ,கொள்கை முடிவு எடுப்பதில் மக்கள் பங்கு பெறுவதும் ,ஒப்புதல் அளிப்பதும்
- உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு எது ?
இந்தியா
- இந்தியாவில் மக்களாட்சி எத்தனை முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகின்றது?
ஐந்து :இறையாண்மை, சமதர்மம் ,மதச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசு
- இந்தியாவில் எத்தனை வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருக்கிறார்கள் ?
18 வயது
- இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் எங்கு உள்ளது?
புதுடெல்லி
- இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் எப்போது வடிவமைக்கப்பட்டது?
1912 -1913
- இந்தியாவின் பாராளுமன்ற கட்டிடத்தை கட்டியவர்கள் யார்?
எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் (பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர்கள்)
- இந்திய நாடாளுமன்ற கட்டிடம் எந்த ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது?
1921
- இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது ?
1927
- இந்தியாவில் எந்தெந்த நிலைகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
நடுவன் அரசு (நாடாளுமன்றம்), மாநில அரசு (சட்டமன்றம்), உள்ளாட்சி அமைப்புகள் (ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி)
- இந்தியாவின் பொதுத் தேர்தல் யாரால் நடத்தப்படுகிறது?
இந்திய தேர்தல் ஆணையம்
- இந்திய அரசின் தலைவர் யார்?
குடியரசுத் தலைவர்
- பிரதம அமைச்சரை நியமிப்பவர் யார் ?
குடியரசுத் தலைவர்
- நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
- எத்தனை ஆங்கிலோ இந்தியர்களை குடியரசுத் தலைவர் மக்களவைக்கு நியமனம் செய்கிறார்?
இரண்டு
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் என்னென்ன ?
ராஜ்யசபா ,லோக்சபா
- ராஜ்ய சபாவின் வேறு பெயர் என்ன?
மேல் அவை/மாநிலங்களவை
- லோக்சபாவின் வேறு பெயர் என்ன?
கீழ் அவை /மக்களவை
- நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம்
- கலை, இலக்கியம் ,அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த எத்தனை பேரை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் ?
12 நபர்கள்
- இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மக்களவையின் முதல் பொதுத்தேர்தல் எப்போது நடைபெற்றது?
அக்டோபர் 25 ,1951 முதல் பிப்ரவரி 21, 1952 வரை
- இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின்போது இருந்த தேர்தல் தொகுதிகள் எத்தனை?
489
- இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின்போது எத்தனை இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது?
364
- சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் ?
ஜவகர்லால் நேரு
- இந்திய வரலாற்றின் முதல் பொதுத்தேர்தல் அல்லது பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது?
1920
- பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் எதற்காக நடந்தது?
இம்பீரியல் கவுன்சில் எனும் மத்திய சட்டசபைக்கும், மாகாண சட்டசபைக்கும் தேவையான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க
9TH POLITY STUDY NOTES |அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services