- எலக்ட்ரான்கள் என்ன மின்னூட்டத்தை பெற்றுள்ளன ?
எதிர் மின்னோட்டம்
- புரோட்டான்கள் என்ன மின்னூட்டத்தை பெற்றுள்ளன ?
நேர் மின்னோட்டம்
- ஓர் அணுவிலிருந்து எலக்ட்ரான் நீக்கப்பட்டால் அவ்வணு நேர் மின்னோட்டத்தை பெறும். இது எவ்வாறு அழைக்கப்படும்?
நேர் அயனி
- ஓர் எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் அவ்வணு எதிர் மின்னூட்டத்தை பெறும் அது எவ்வாறு அழைக்கப்படும்?
எதிர் அயனி
- மின்னூட்டம் என்ன அலகினால் அளவிடப்படுகிறது ?
கூலூம்
- மின்னூட்டம் என்ன குறியீட்டினால் அளவிடப்படுகிறது?
C
- மின்னூட்டத்தின் அடிப்படை அலகாக கருதப்படுவது எது ?
எலக்ட்ரானின் மின்னூட்டம்
- எலக்ட்ரான் மின்னூட்டத்தின் மதிப்பு என்ன?
e=1.6×10-¹⁹C
- 1C மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்?
6.25×10-¹⁸ எலக்ட்ரான்கள்
- இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலைமின்னியல் விசை எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது?
நியூட்டனின் மூன்றாவது விதி
- மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் மின் விசை எத்தனை வகைப்படும்?
இரண்டு : கவர்ச்சி விசை, விலக்கு விசை
- மின்னூட்டங்களுக்கிடையில் உருவாகும் விசை எவ்வாறு அழைக்கப்படும் ?
மின்விசை
- மின்விசை எந்த வகையைச் சார்ந்தது?
தொடுகையில்லா விசை
- ஒரு மின்னூட்டத்தைச் சுற்றி அதன் மின்விசையை உணரக்கூடிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்புலம்
- மின்புலத்தைக் குறிக்கும் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்விசை கோடுகள்
- ஒரு ஓரலகு நேர் மின்னூட்டம் மின்புலம் ஒன்றில் நகர முற்படும் திசையில் வரையப்படும் நேர் அல்லது வளைவுக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
மின்விசை கோடுகள்
- ஒரு புள்ளியில் வைக்கப்படும் ஓரலகு நேர் மின்னூட்டத்தினால் உணரப்படும் விசை எவ்வாறு அழைக்கப்படும்?
மின்புலம்
- அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை எவ்வாறு அழைக்கப்படும்?
மின்னழுத்தம்
- நேர் மின்னூட்டங்களின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மரபு மின்னோட்டம்
- எலக்ட்ரான்களின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் மின்னோட்டம்
- மின்சுற்றின் ஒருபுள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
மின்னோட்டம்
- மின்னோட்டத்தின் SI அலகு என்ன?
ஆம்பியர்
- ஆம்பியர் குறிக்கப்படும் குறியீடு என்ன?
A
- கம்பி ஒன்றின் குறுக்குவெட்டு பரப்பை ஒரு வினாடியில் ஒரு கூலூம் அளவிலான மின்னூட்டம் கடக்கும் போது உருவாகும் மின்னோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒரு ஆம்பியர்
- ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி என்ன?
அம்மீட்டர்
- மின்னியக்கு விசையின குறியீடு என்ன?
ε
- ஓர் அலகு மின்னூட்டமனது மின்சுற்றை ஒருமுறை சுற்றி வர செய்யப்படும் வேலை எவ்வாறு அழைக்கப்படும்?
ஒரு மின்னாற்றல் மூலத்தின் மின்னியக்கு விசை
- மின்னியக்கு விசையின் SI அலகு என்ன ?
ஜீல்/கூலூம் அல்லது வோல்ட்
- மின்னாற்றல் மூலம் ஒன்று ஒரு கூலூம் மின்னூட்டத்தை மின் சுற்றை சுற்றி அனுப்ப ஒரு ஜூல் வேலையை செய்தால் அதன் மின்னியக்கு விசை என்பது?
ஒரு வோல்ட்
- மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னியக்கு விசை இவை இரண்டிற்குமான அலகு என்ன?
வோல்ட்
- மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி எது ?
வோல்ட் மீட்டர்
- ஒரு மின் கருவியின் வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவி அளிக்கும் எதிர்ப்பின் அளவு எவ்வாறு
அழைக்கப்படுகிறது ?
மின்தடை(R)
- மின்தடை புறக்கணிக்கத் தக்க அளவில் இருக்கும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நற்கடத்திகள்
- மின்னோட்டத்திற்கு அதிக மின் தடையை அளிக்கும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மின்கடத்தாப் பொருள்கள்
- சிறிதும் மின்னோட்டத்தைக் கடத்தாத பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மின் காப்புகள்
- மின்தடையின் SI அலகு என்ன?
ஓம்
- மின்தடையின் குறியீடு என்ன?
Ω
- ஒரு கடத்தியின் வழியாக ஒரு ஆம்பியர் மின்னோட்டம் பாயும்போது அதன் முனைகளுக்கிடையிலான மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் எனில் அந்த கடத்தியின் மின்தடை எவ்வளவு?
ஒரு ஓம்
- மின்தடையை அளிக்கும் பொருட்களுக்கு என்ன பெயர் ?
மின் தடையங்கள்
- மின்னாற்றல் மூலம் ஒன்று மின்சுற்றில் வழியே மின்னோட்டத்தை செலுத்தாத நிலையில் அதன் முனைகளுக்கு குறுக்கே காணப்படும் மின்னழுத்த வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்னியக்கு விசை
- மின்னாற்றல் மூலமானது மின் கருவிகளின் வழியாகவோ அல்லது ஒரு மின் சுற்றிலோ மின்னோட்டத்தைச் செலுத்தும் நிலையில் அதன் முனைகளுக்கு குறுக்கே காணப்படும் மின் அழுத்தங்களின் வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்னழுத்த வேறுபாடு
- ஒரு மின்சுற்றுப் படத்தின் நான்கு முக்கிய கூறுகள் என்ன?
மின்கலம் ,இணைப்பு கம்பி ,சாவி ,மின் தடை அல்லது மின் பளு
- ஒரு மின் சுற்றில் மின்னோட்டம் பாயும்போது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது ?
வெப்ப விளைவு,வேதி விளைவு மற்றும் காந்த விளைவு
- மின்னோட்டத்தின் பாய்வு எதிர்க்கப்படும் போது என்ன உருவாகிறது?
வெப்பம்
- மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜூல் வெப்பமேறல் அல்லது ஜூல் வெப்ப விளைவு
- கரைசல்களில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மின்னாற்பகுப்பு
- மின்னோட்டம் பாயும் கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்பகு திரவம்
- கரைசலில் அமிழ்த்தப்படும் நேர்மின்வாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஆனோடு
- கரைசலில் அமிழ்த்தப்படும் எதிர்மின்வாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கேத்தோடு
- மின்னோட்டம் தாங்கிய கடத்தி அதற்கு குத்தான திசையில் ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது இதற்கு என்ன பெயர் ?
மின்னோட்டத்தின் காந்த விளைவு
- நமது அன்றாட வாழ்வில் எத்தனை விதமான மின்னோட்டங்களை பயன்படுத்துகின்றோம்?
இரண்டு :நேர்திசை மின்னோட்டம் மற்றும் மாறுதிசை மின்னோட்டம்
- மின்தடையைத்திலோ அல்லது மின் பொருளிலோ மின்னோட்டத்தின் திசை மாறி மாறி இயங்கினால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
மாறுதிசை மின்னோட்டம்
- ஒரு வினாடியில் மாறு மின்னோட்டத்தில் ஏற்படும் முழு சுழற்சி எவ்வாறு அழைக்கப்படும்?
அதிர்வெண்
- நம் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்னோட்டம் என்ன திசை மின்னோட்டம்?
மாறுதிசை
- மாறுதிசை மின்னோட்டத்தை நேர் திசை மின்னோட்டம் ஆக மாற்ற பயன்படும் கருவி என்ன பெயர்?
திருத்தி (மின்கல திருத்தி அல்லது இணக்கி)
- மாறுதிசை மின்னோட்டத்தின் நன்மைகள் என்னென்ன?
மின்னோட்டத்தை அனுப்பும்போது ஆற்றல் இழப்பு வெகுவாக குறைகிறது, நேர்திசை மின்னோட்டத்தை உருவாக்குவதை விட மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்குவது எளிது
- என்ன வடிவில் மட்டுமே மின்சாரத்தை சேமிக்க இயலும் ?
நேர் மின்னூட்டம்
- இந்தியாவில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் என்ன?
220V, 50 Hz
- அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் என்ன?
110V, 60 Hz
9TH PHYSICS STUDY NOTES |மின்னூட்டமும் மின்னோட்டமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services