- ஒளியை கதிர்கள் வடிவில் கருதுவது எவ்வாறு அழைக்கப்படும்?
கதிர் ஒளியில் அல்லது வடிவ ஒளியியல்
- ஒளியை அலை வடிவில் கருதுவது எவ்வாறு அழைக்கப்படும்?
அலை ஒளியியல்
- ஒளி செல்லும் ஒரு குறிப்பிட்ட திசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒளிக்கதிர்
- குத்துக்கோட்டுடன் படுகதிர் ஏற்படுத்தும் கோணம் எவ்வாறு அழைக்கப்படும்?
படுகோணம்
- குத்துக்கோட்டுடன் எதிரொளிப்பு கதிர்கள் ஏற்படுத்தும் கோணம் எவ்வாறு அழைக்கப்படும்?
எதிரொளிப்பு கோணம்
- படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் படுபுள்ளிக்கு வரையப்படும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைகின்றன இது எவ்வாறு அழைக்கப்படும்?
எதிரொலிப்பு விதி
- இடவலத்தைக் குறிப்பிடும் lateral என்ற வார்த்தையானது என்ன மொழியில் இருந்து பெறப்பட்டது?
இலத்தீன் ,latus
- Latus என்ற வார்த்தையானது என்ன பொருள்படும்?
பக்கம்
- பளபளப்பான கரண்டி ஒன்றின் வளைந்த பரப்பு எதற்கு எடுத்துக்காட்டு?
வளைவு ஆடி
- எதிரொளிக்கும் பகுதியானது கோள வடிவில் உள்ள ஆடிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
கோளக ஆடிகள்
- எதிரொளிக்கும் பகுதியானது கோளத்தின் மையத்தை நோக்கி பார்த்தபடி இருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
குழியாடிகள்
- எதிரொளிக்கும் பகுதியானது கோளத்தின் வெளிப்பகுதியில் இருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
குவியாடிகள்
- கோளக ஆடி எந்த உள்ளீடற்ற கோளத்தின் ஒரு பகுதியாக அமைகிறதோ அது என்ன ?
வளைவு மையம்
- கோளக ஆடியின் வடிவியல் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆடி மையம்
- ஆடி மையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் செங்குத்துக் கோடு எவ்வாறு அழைக்கப்படும்?
முதன்மை அச்சு
- ஆடி மையத்திற்கும் வளைவு மையத்திற்கும் இடையே உள்ள தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
வளைவு ஆரம்
- முதன்மை அச்சிற்கு இணையாக வரும் கதிர்கள் கோளக ஆடியில் பட்டு எதிரொளிக்கப்பட்டபின் ,எந்த புள்ளியில் குவிகின்றனவோ அல்லது எந்தப் புள்ளியில் இருந்து விரிந்து செல்வது போல் உள்ளதோ அந்த புள்ளி எவ்வாறு அழைக்கப்படும்?
முக்கியக் குவியம்
- ஆடி மையத்திற்கும் முதன்மை குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
குவியத்தொலைவு
- வளைவு ஆரத்திற்கும் குவியத் தொலைவிற்கும் இடையே உள்ள தொடர்பின் சமன்பாடு என்ன?
R=2f
- பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள் ,எதிரொளிப்புக்குப்பின் உண்மையாகவே சந்தித்தால் ,அதனால் உருவாகும் பிம்பம் எவ்வாறு அழைக்கப்படும்?
மெய்பிம்பம்
- பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப் பின் சந்திக்காமல் பின்னோக்கி நீட்டப்படும் போது சந்தித்தால் அதனால் உருவாகும் பிம்பம் எவ்வாறு் அழைக்கப்படும் ?
மாயபிம்பம்
- கார்ட்டீசியன் மரபின்படி பொருள் எப்போதும் ஆடிக்கு எந்த பக்கம் வைக்கப்படவேண்டும் ?
இடதுபுறம்
- பொருளின் தொலைவு ,பிம்பத்தின் தொலைவு ,குவியத்தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு எவ்வாறு அழைக்கப்படும்?
ஆடிச் சமன்பாடு
- ஆடிச் சமன்பாடு என்ன?
1/f=(1/u)+(1/v)
- பொருளின் அளவை விட பிம்பத்தின் அளவு எவ்வளவு மடங்கு பெரியதாக உள்ளது என்பதை குறிக்கும் அளவீடு என்ன?
கோளக ஆடியின் உருப்பெருக்கம்
- பிம்பத்தின் அளவிற்கும் பொருளின் அளவிற்கும் இடையேயான தகவு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
உருப்பெருக்கம்
- குழி ஆடியின் பயன்கள் என்னென்ன?
மருத்துவர் பயன்படுத்த, ஒப்பனை செய்ய ,கை மின் விளக்கு ,வாகனங்களின் முகப்பு விளக்கு மற்றும் தேடு விளக்கு அறை சூடேற்றி, சூரிய சூடேற்றிஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது
- குவி ஆடியின் பயன்கள் என்னென்ன?
வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடியாக
- கலிலியோ கலிலி எந்த நாட்டைச் சேர்ந்த வானியல் அறிஞர்?
இத்தாலி
- வியாழன் கோளின் 12 நிலவுகளில் ஒன்றை அவதானித்து அதன்மூலம் ஒளியின் திசைவேகத்தை தோராயமாகக் கணக்கிட்ட வானியலாளர் யார்?
ஒலே ரோமர் (1665)
- வியாழனின் நிலவுகள் வியாழனைச் சுற்றி வர எத்தனை மணி நேரம் ஆகும்?
42 மணி நேரம்
- ஒலே ரோமர் அளந்த கணக்கீட்டின் படி ஒளியின் வேகம் கிட்டத்தட்ட எவ்வளவாக அறியப்பட்டிருந்தது?
2,20000 கி.மீ/வி
- முதன் முதலில் பூமியில் ஒளியின் வேகம் எப்போது கணக்கிடப்பட்டது?
1849
- முதன் முதலில் பூமியில் ஒளியின் வேகத்தை கணக்கிட்டவர் யார்?
அர்மண்ட் ஃபிஷே
- ஒளியின் திசைவேகம் எதை பொறுத்து மாறுபடும்?
ஊடகத்தின் தன்மை
- என்ன ஊடகத்தில் ஒளியின் திசை வேகம் அதிகமாக இருக்கும்?
அடர் குறை ஊடகம்
- அடர்மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் என்னவாக இருக்கும்?
குறைவாக
- இரு ஊடகங்களுக்கு குறிப்பிட்ட நிற ஒளியின் படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு மாறிலி இது எவ்வாறு் அழைக்கப்படும்?
ஒளிவிலகலின் ஸ்நெல் விதி
- தண்ணீர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் என்ன?
2.25×10⁸ (m/s)
- தண்ணீரின் ஒளிவிலகல் எண் என்ன?
1.33
- கண்ணாடி ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் என்ன?
2×10⁸ (m/s)
- கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன?
1.5
- வைரம் ஊடகத்தில்ஒளியின் திசைவேகம் என்ன?
1.25×10⁸ (m/s)
- வைரத்தின் ஒளிவிலகல் எண் என்ன?
2.41
- காற்று ஒளியின் திசைவேகம் என்ன?
3×10⁸ (m/s)
- காற்றின் ஒளிவிலகல் எண் என்ன?
1.00
- ஒளிவிலகல் எண்ணை எவ்வாறு வரையறுக்கலாம்?
காற்று அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் /ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்
- ஊடகத்தின் அடர்த்தி அதிகமானால் ஒளிவிலகல் எண் என்னவாகும்?
அதிகமாகும்
- வைரம் காற்று இடைமுகத்தின் மாறுநிலை கோணம் எவ்வளவு?
24.4°
- ஒளியிழைகள் என்ன அடிப்படையில் செயல்படுகின்றன ?
முழு அக எதிரொளிப்பு
- இழை ஒளியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் கபானி
- ஒளியியல் இழைகளைப் பயன்படுத்தி ஒளிப்படங்களை அனுப்பவும் நல்ல தரமான முறையில் அவற்றை பெறவும் செய்து சாதனை புரிந்தவர் யார்?
இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் கபானி
- இழை ஒளியியல் என்ற பெயர் உருவாக காரணமாக இருந்தவர் யார்?
நரிந்தர் கபானி
9TH PHYSICS STUDY NOTES |ஒளி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services