- ஒரு ஒலி அலையை எதனை கொண்டு முழுமையாக வரையறுக்க முடியும்?
வீச்சு ,அதிர்வெண், அலைவுக் காலம் அலைநீளம் மற்றும் வேகம் அல்லது திசைவேகம்
- ஒரு ஒலி அலையானது ஒரு ஊடகத்தின் வழியே செல்லும்போது அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?
வீச்சு
- வீச்சு எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
A
- வீச்சின் SI அலகு என்ன?
மீட்டர்
- அதிர்வடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படும்?
அதிர்வெண்
- அதிர்வெண் எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
n
- அதிர்வெண்ணின் SI அலகு என்ன?
ஹெர்ட்ஸ் (Hz) அல்லது வி-1
- எத்தனை ஹெர்ட்ஸ் வரை உள்ள அதிர்வெண்கள் கொண்ட ஒளி அலைகளை மட்டுமே மனிதனின் செவிகள் கேட்டு உணர முடியும் ?
20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை
- 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
குற்றொலிகள்
- 20,000 ஹெர்ட்ஸ்க்கும் அதிகமான ஒலி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மிகையொலி அல்லது மீயொலி
- அதிர்வுறும் துகள், ஒரு முழுமையான அதிர்விற்கு எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அலைவுக் காலம்
- அலைவுக் காலம் என்ன எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
T
- அலைவுக் காலத்தின் SI அலகு என்ன?
வினாடி
- அதிர்வுறும் துகள், ஒரு அதிர்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் ஊடகத்தில் அலை பரவும் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அலைநீளம்
- ஒரு ஒலி அலையில் இரண்டா நெருக்கங்கள் மற்றும் நெகிழ்வுகளின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அலைநீளம்
- அலைநீளம் என்ன எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
λ
- அலைநீளத்தின் SI அலகு என்ன?
மீட்டர்
- ஒரு வினாடி நேரத்தில் ஒலி அலை கடக்கும் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திசைவேகம் அல்லது வேகம்
- திசைவேகத்தின் SI அலகு என்ன?
மீ.வி-1
- ஒலிகளை எந்த காரணிகளை கொண்டு ஒன்றிலிருந்து மற்றொன்றாக வேறுபடுத்தலாம் ?
ஒளி உரப்பு மற்றும் ஒலிச்செறிவு, சுருதி, தரம்
- ஒரே அதிர்வெண் கொண்ட இரண்டு ஒலிகள் எந்தப் பண்பின் மூலம் வேறு படுத்தப்படுகின்றன ?
உரப்பு பண்பு
- ஒரு ஒலியானது உரத்ததா அல்லது மென்மையானதா என்பது எதனை பொறுத்து அமையும்?
அதன் வீச்சு
- ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பின் வழியே அலை பரவும் திசைக்கு செங்குத்தாகச் செல்லும் ஆற்றலின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
செறிவு
- ஒலியின் செறிவானது எந்த காரணிகளை சார்ந்திருக்கும்?
ஒலி மூலத்தின் வீச்சு, ஒலி மூலத்திற்கும் கேட்பவருக்கும் இடையே உள்ள தொலைவு, ஒலி மூலத்தின் பரப்பு, ஊடகத்தின் அடர்த்தி ,ஒலிமூலத்தின் அதிர்வெண்
- ஒலியின் செறிவானது என்ன அலகால் அளவிடப்படுகிறது?
டெசிபல்
- டெசிபல் என்பது யாருடைய நினைவாக வழங்கப்படுகிறது?
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்
- ஒரு ஒலியானது கணத்ததா அல்லது கிச்சலானதா என்பதை அறிய உதவும் ஒலியின் பண்பு எது ?
சுருதி
- இரண்டு வெவ்வேறு இசைக்கருவிகளில் எழுப்பப்பட்ட ஒரே மாதிரியான உரப்பு மற்றும் சுருதியை கொண்ட இரண்டு ஒலிகளை வேறு படுத்துவதற்கு என்ன பண்பு பயன்படுகிறது?
தரம்
- ஒரே ஒரு அதிர்வெண்ணை கொண்ட ஒலியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தொனி(tone)
- பல்வேறு தொனிகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இசைக்குறிப்பு (note)
- தொனி என்பதை வேறு படுத்தக் கூடிய பண்பு எது?
சுரம்(Timre)
- மீட்சி தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் பொழுது ஒலியானது ஓரலகு காலத்தில் கடந்த தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஒலியின் வேகம்
- ஒலியின் வேகமானது திடப் பொருள்களை விட எதில் மிகக் குறைவாக இருக்கும்?
வாயு
- காற்றில் 0°C வெப்பநிலையில் ஒலியின் வேகம் எவ்வளவு?
330மீவி-¹
- எந்த வெப்பநிலையில் காற்றில் ஒலியின் வேகம் 342மீவி-¹ இருக்கும்?
25°C
- கண்ணாடியில் ஒலியின் வேகம் எவ்வளவு?
3980 மீவி-¹
- நீர்(கடல் நீரில்) ஒலியின் வேகம் எவ்வளவு?
1531 மீவி-¹
- நீர்(தூய நீரில்) ஒலியின் வேகம் எவ்வளவு?
1498 மீவி-¹
- ஹீலியத்தில் ஒலியின் வேகம் எவ்வளவு?
965 மீவி-¹
- ஆத்ஸிஜனில் ஒலியின் வேகம் எவ்வளவு?
316 மீவி-¹
- கந்தகடை ஆக்சைடில் ஒலியின் வேகம் எவ்வளவு?
213 மீவி-¹
- ஒலியானது காற்றை விட எத்தனை மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும்?
5 மடங்கு(5500கிமீ/மணி)
- ஒரு பொருளின் வேகமானது காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிகமாகும் போது அது என்ன வேகத்தில் செல்கிறது?
மீயொலி வேகம்
- உடலில் உண்டாகும் ஒலிகளைக் கற்க உதவும் மருத்துவ கருவியின் பெயர் என்ன?
இதயத்துடிப்பளவி (stethoscope)
- ஒலியானது தொடர்ந்து மூளையில் எவ்வளவு காலத்திற்கு உணரப்படுகிறது ?
ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு
- எதிரொலிக்கப்பட்ட ஒலியை தெளிவாக கேட்க வேண்டும் எனில் ஒலி மற்றும் எதிரொலிக்கு இடைப்பட்ட காலம் குறைந்தது எவ்வளவு ஆக இருக்கவேண்டும் ?
0.1 வினாடி
- எதிரொலியை தெளிவாக கேட்க வேண்டுமானால் எதிரொலிக்கும் பரப்பு குறைந்தபட்சம் எவ்வளவு தொலைவில் இருக்கவேண்டும் ?
17 மீட்டர்
- பன்முக எதிரொலிப்பு காரணமாக ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிர் முழக்கம்
- மீயொலி அலைகளின் முக்கியமான பயன் என்ன?
மனித உடலின் உறுப்புகளை ஆராய்வதற்கு பயன்படுகிறது
- மீயொலயின் பயன்கள் என்னென்ன?
தூய்மையாக்கும் தொழில்நுட்பத்தில் பயன்படுகின்றன ,உலோகத்தில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை மீயொலி அலைகளை கொண்டு கண்டறிய ,இதயத்தின் பிம்பத்தை ஏற்படுத்த, சிறுநீரகத்தில் உள்ள கற்களை சிறு சிறு துகள்களாக உடைக்க
- SONAR- என்பதன் விரிவாக்கம் என்ன?
Sound navigation and ranging
- சோனார் கருவிகளை பயன்படுத்தி பொருள்களின் அளவை கண்டறியும் முறைக்கு என்ன பெயர்?
எதிரோலி நெடுக்கம்
- கேட்கப்படும் ஒலிகள் நடுச் செவியில் உள்ள எந்த மூன்று எலும்புகளால் பலமுறை பெருக்கம் அடைகிறது ?
சுத்தி பட்டை மற்றும் அங்கவடி
- உட்செவியினுள் கடத்தப்பட்ட அழுத்த வேறுபாடானது எதன் மூலம் மின் சைகைகளாக மாற்றி மூளைக்கு செலுத்தப்படுகிறது?
காக்ளியா
9TH PHYSICS STUDY NOTES |ஒலி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services