- விண்வெளியை கூர்ந்து நோக்கி சூரிய மைய மாதிரியை வெளியிட்டவர் யார்?
போலந்து நாட்டைச் சேர்ந்த வானியலாளர் நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
- தொலைநோக்கி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
நெதர்லாந்து 1608
- அண்டத்தின் அடிப்படைக் கூறுகள் எது?
கோடிக்கணக்கான விண்மீன்களை உள்ளடக்கிய ஒளி வீசக்கூடிய விண்மீன் திரள்
- புவி கோள்கள் விண்மீன்கள் வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி அமைப்பிற்கு பெயர் என்ன?
அண்டம்
- மனிதனால் பார்க்கக்கூடிய அண்டத்தின் தொலைவு என்ன?
93 பில்லியன் ஒளி ஆண்டுகள்
- அண்டத்தில் உள்ள அனைத்து அணுக்களையும் ஒன்று சேர்த்தால் தற்போதுள்ள அண்டத்தில் எத்தனை சதவீதம் மட்டுமே வரும்?
4%
- பெருவெடிப்பு எப்போது நிகழ்ந்தது?
ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
- அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பெருவெடிப்பின் போது தோன்றிய என்ன அடிப்படை தனிமங்களால் ஆனவை?
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
- வாயு ,தூசு,கோடிக்கணக்கான விண்மீன்கள் மற்றும் சூரிய மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பிற்கு என்ன பெயர்?
விண்மீன் திரள்
- பார்க்கக்கூடிய அண்டத்தில் எவ்வளவு விண்மீன் திரள்கள் உள்ளன?
நூறு பில்லியன்
- விண்மீன் திரள்களை அதன் வடிவத்தை பொருத்து எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன ?
சுருள் திரள் ,நீள்வட்டதிரள் மற்றும் வடிவமற்ற திரள்
- நமக்கு அருகில் உள்ள விண்மீன் திரளின் பெயர் என்ன?
ஆண்ட்ரோமீடா விண்மீன்திரள்
- ஆண்ட்ரோமீடா விண்மீன்திரள் என்ன வடிவத்தைக் கொண்டது?
சுருள் வடிவம்
- நமது பால்வீதியில் உள்ள விண்மீன்கள் எவ்வளவு?
சுமார் 100 பில்லியன் விண்மீன்கள்
- பால்வீதி மண்டலத்தின் விட்டம் எவ்வளவு?
ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள்
- பால்வீதி மண்டலத்தின் மையத்தில் இருந்து எத்தனை ஒளி ஆண்டுகள் தொலைவில் நம் சூரிய மண்டலம் அமைந்துள்ளது?
சுமார் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள்
- பால்வீதி மண்டலத்தின் மையத்தை சுற்றி வர சூரியன் எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது ?
250 மில்லியன் ஆண்டுகள்
- நமக்கு அருகாமையில் உள்ள ஆண்ட்ரோமீடா விண்வெளித் திரளின் தொலைவு எவ்வளவு?
2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள்
- வெப்பமான விண்மீன்கள் என்ன நிறத்தில் தோன்றும்?
வெண்மை அல்லது நீலம்
- குளிர்வான விண்மீன்கள் என்ன நிறத்தில் தோன்றும் ?
ஆரஞ்சு அல்லது சிவப்பு
- இதுவரை மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்சத்திரக் கூட்டங்கள் எவ்வளவு?
88
- சூரியனில் முக்கால் பகுதி என்ன வாயுவால் நிரம்பியுள்ளது?
ஹைட்ரஜன்
- சூரியனில் கால் பகுதி என்ன வாயுவால் நிரம்பியுள்ளது ?
ஹீலியம்
- சூரியனின் வயது என்ன?
4.6 பில்லியன் ஆண்டுகள்
- சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு கோள்கள் எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சுற்றுக்காலம்
- கோள்கள் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தற்சுழற்ச்சிக் காலம்
- பூமியின் சுழற்சி காலம் எவ்வளவு ?
23 மணி 56 நிமிடங்கள்
- புதனின் தற்சுழற்சி காலம் எவ்வளவு?
58.65 நாட்கள்
- வெள்ளியின் தற்சுழற்சி காலம் எவ்வளவு?
243 நாட்கள்
- செவ்வாயின் தற்சுழற்சி காலம் எவ்வளவு?
24.62 மணி
- வியாழனின் தற்சுழற்சி காலம் எவ்வளவு?
9.92 மணி
- சனியின் தற்சுழற்சி காலம் எவ்வளவு?
10.23 மணி
- யுரேனஸின் தற்சுழற்சி காலம் எவ்வளவு?
17 மணி
- நெப்டியூனின் தற்சுழற்சி காலம் எவ்வளவு?
18 மணி
- உட்புற கோள்கள் என அழைக்கப்படுபவை?
புதன் வெள்ளி பூமி மற்றும் செவ்வாய்
- உட்புற கோள்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
நிலம் சார் கோள்கள் அல்லது பாறைக்கோள்கள்
- வெளிப்புற கோள்கள் என அழைக்கப்படுபவை ?
வியாழன் சனி யுரேனஸ் மற்றும் நெப்டியூன்
- வெளிப்புறக் கோள்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வாயு கோள்கள்
- சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக் கோள் எது ?
புதன்
- பூமியின் அளவை ஒத்த ஒரு சிறப்புக்குரிய கோள் எது?
வெள்ளி
- நம் சூரிய மண்டலத்தில் காணப்படும் கோள்களில் அதிக வெப்பநிலை கொண்டது எது ?
வெள்ளி
- விண்ணில் இருந்து பார்க்கும்போது பூமி என்ன நிறத்தில் காணப்படும்?
நீலம் கலந்த பச்சை
- சிவப்புக் கோள் என அழைக்கப்படும் கோள் எது?
செவ்வாய்
- செவ்வாய்க்கு உள்ள இரு இயற்கை துணைக் கோள்கள் எவை ?
டீமோஸ் மற்றும் போபோஸ்
- வியாழன் கோள் பூமியை விட எவ்வளவு பெரியது?
பதினோரு மடங்கு
- வியாழன் கோளுக்கு எத்தனை வளையங்களும் நிலவுகள் உள்ளன ?
மூன்று வளையங்கள் அறுபத்தைந்து நிலவுகள்
- வியாழன் கோளில் உள்ள நிலவுகளில் மிகப்பெரியது எது?
கானிமீடு
- நம் சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவு எது?
கானிமீடு
- சனிக்கிரகம் என்ன நிறத்தில் காணப்படுகிறது ?
மஞ்சள் நிறம்
- நம் சூரிய மண்டலத்தில் காணப்படும் இரண்டாவது மிகப்பெரிய கோள் எது?
சனிக்கிரகம்
- குறைந்த பட்சம் சனிக்கு எத்தனை நிலவுகள் இருப்பதாக கூறப்படுகிறது?
60 நிலவுகள்
- சனி கிரகத்தின் பெரிய நிலவு எது ?
டைட்டன்
- நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு எது?
டைட்டன்
- சனியின் அடர்த்தி புவியின் அடர்த்தியை விட எவ்வளவு குறைவு?
30 மடங்கு
- நம் சூரிய குடும்பத்திலேயே மிகவும் சாய்ந்த சூழல் அச்சைக் கொண்டுள்ள கிரகம் எது?
யுரேனஸ்
- யுரேனஸ் கிரகத்தில் குளிர் காலமும் கோடை காலமும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்?
42 ஆண்டுகள்
- பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும் கிரகம் எது?
நெப்டியூன்
- மிகவும் காற்று வீசக்கூடிய கோள் எது ?
நெப்டியூன்
- நெப்டியூனுக்கு எத்தனை நிலவுகள் உள்ளன ?
பதிமூன்று நிலவுகள்
- நெப்டியூன் நிலவுகளில் மிகப் பெரியது எது?
டிரைட்டன்
- நம் சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர் திசையில் சுற்றும் ஒரே நிலவு எது?
டிரைட்டன்
- சிறுகோள்கள் எந்த இரு கிரகங்களுக்கு இடையே சுற்றுகின்றன?
செவ்வாய் மற்றும் வியாழன்
- சிறு கோள்களில் மிகப்பெரியது எது?
செரஸ்
- எவ்வளவு ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் பூமியின் மீது சிறுகோள் விழும்?
50 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை
- 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியும் விண்மீன் எது?
ஹாலி விண்மீன்
- சூரிய மண்டலத்தில் எந்த கோள்களை தவிர மற்ற அனைத்திற்கும் நிலவுகள் உண்டு ?
புதன் மற்றும் வெள்ளி
- நொடிக்கு எவ்வளவு வேகத்தில் பால்வெளி வீதியை சூரியமண்டலம் சுற்றிவருகிறது ?
250 கிலோமீட்டர்/ வினாடி
- பால்வெளி வீதியை சுற்றி வர பூமி எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காஸ்மிக் ஆண்டு
- ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது எத்தனை ஆண்டுகளுக்கு சமம் ?
225 மில்லியன் ஆண்டுகள்
- முதன் முதலாக எப்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட துணைக்கோள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டது ?
ஸ்புட்னிக் ,1956
- இந்தியாவின் முதல் செயற்கைகோள் எது ?
ஆரியபட்டா
- ஆரியபட்டா எந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது?
ஏப்ரல் 19 ,1975
- கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைகோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றி வருவதற்கு அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுற்றியக்க திசைவேகம்
- புவியை பொருத்து ஒரே நிலையில் இருக்கும் செயற்கைக்கோள்களுக்கு என்ன பெயர் ?
புவிநிலை செயற்கை கோள்கள்
- எந்த வாய்ப்பாட்டைக் கொண்டு சுற்றியக்கத் திசைவேகம் கணக்கிடப்படுகிறது?
v=√(GM)/(R+h)
- பொருள்கள் அல்லது மனிதர்கள் எடையற்று இருப்பதுபோல் தோன்றும் நிலைக்கு என்ன பெயர்?
நுண் ஈர்ப்பு
- புவியை ஒருமுறை முழுமையாக சுற்றி வர ஒரு செயற்கைக்கோள் எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுற்றுக்காலம்
- கோள்களின் இயக்கத்திற்கான மூன்று விதிகளை வெளியிட்டவர் யார்?
ஜொகனஸ் கெப்ளர், 1600
- சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு நீள்வட்டப்பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன இது கெப்ளரின் என்ன விதி ?
முதல் விதி அல்லது நீள் வட்டங்களின் விதி
- கோளின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலங்களில் சம பரப்புகளை கடக்கும்.இது கெப்ளரின் என்ன விதி?
இரண்டாவது விதி அல்லது சமபரப்புகளின் விதி
- எந்த இரு கோள்களுக்கும் சுற்றுக்காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்கு சமமாகும்-இது கெப்ளரின் என்ன விதி?
மூன்றாவது விதி அல்லது ஒத்திசைவுகளின் விதி
- பன்னாட்டு விண்வெளி மையம் பூமியில் இருந்து எவ்வளவு கிலோமீட்டர் தொலைவில் இயங்குகிறது?
400 கிலோமீட்டர்
- பன்னாட்டு விண்வெளி மையத்தின் முதல் பகுதி எந்த ஆண்டு தனது சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது ?
1998
- பன்னாட்டு விண்வெளி மையத்தின் கட்டுமானம் எந்த ஆண்டு முடிக்கப்பட்டது?
2011
- விண்ணில் உள்ள பொருள்களில் வெறும் கண்களால் பார்க்கக் கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய பொருள் எது ?
பன்னாட்டு விண்வெளி மையம்
- பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு முதன்முதலில் எந்த ஆண்டு மனிதர்கள் சென்றனர்?
2000
- தற்போதைய திட்டப்படி எந்த ஆண்டு வரை பன்னாட்டு விண்வெளி மையமானது இயங்கும்?
2024(தேவைப்பட்டால் 2028 வரை)
- பன்னாட்டு விண்வெளி மையத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு எந்த நாட்டில் சுத்தமான குடிநீர் இல்லை என்பதால் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தை காப்பாற்றி மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது?
ஈராக்
- பன்னாட்டு விண்வெளி மையத்தினை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் எத்தனை வெவ்வேறு நாடுகளில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது?
16 வெவ்வேறு நாடுகளின் ஐந்து விண்வெளி நிறுவனங்களின் ஒத்துழைப்பு (NASA,Roskosmos,ESA,JAXA,&CSA)
9TH PHYSICS STUDY NOTES |அண்டம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services