TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- புவியை சூழ்ந்து காணப்படும் காற்று படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வளிமண்டலம்
- வளி மண்டலத்தில் நைட்ரஜன் சதவீதம் எவ்வளவு?
78%
- வளிமண்டலத்தில் ஆக்சிஜன் சதவீதம் எவ்வளவு?
21%
- வளிமண்டலத்தில் மீதமுள்ள ஒரு சதவீதத்தில் காணப்படும் வாயுக்களின் என்னென்ன?
ஆர்கான் ,கார்பன்-டை-ஆக்சைடு ,நியான் ,ஹீலியம் ,ஓசோன் மற்றும் ஹைட்ரஜன் (கிரிப்டான் செனான் மற்றும் மீத்தேன் ஆகியவை வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவில் காணப்படுகிறது)
- வளிமண்டலத்தில் ஆர்கானின் சதவீதம் என்ன?
0.93%
- வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் சதவீதம் என்ன?
0.03%
- வளிமண்டலத்தில் நியானின் சதவீதம் என்ன?
0.0018%
- வளிமண்டலத்தில் ஹீலியத்தின் சதவீதம் என்ன?
0.0005%
- வளிமண்டலத்தில் ஓசோனின் விகிதம் என்ன ?
0.00006 %
- வளிமண்டலத்தில் ஹைட்ரஜனின் சதவீதம் என்ன?
0.00005%
- வளிமண்டலத்தில் நீராவியின் சதவீதம் எவ்வளவு காணப்படுகிறது?
0- 0.4%
- வாயுக்களை தவிர வளிமண்டலத்தில் காணப்படும் பிற திடப்பொருட்கள் என்னென்ன?
தூசு துகள்கள் ,உப்புத் துகள்கள், மகரந்தத் துகள்கள், புகை சாம்பல் ,எரிமலை சாம்பல் போன்றவை
- வளி மண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளது என்பதை கண்டறிந்தவர் யார்?
டேனியல் ரூதர்போர்டு (1772)
- வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உள்ளதென்பதை கண்டறிந்தவர் யார் ?
ஜோசப் பிரிஸ்ட்லி 1774
- சூரியக் கதிர்வீச்சில் மற்றும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து வரும் வெப்பத்தினை ஈர்ப்பு வளிமண்டலத்தில் வெப்பமாக வைத்துக் கொள்ள உதவும் வாயு எது?
கார்பன்-டை-ஆக்சைடு
- ரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் ஒரு செறிவூட்டும் வாயுவாக உள்ளது எது?
நைட்ரஜன்
- சூரியனிலிருந்து வரும் கேடு விளைவிக்கும் கதிர்வீச்சில் இருந்து எந்த வாயுப் படலம் பாதுகாக்கின்றது?
ஓசோன்
- வளிமண்டலம் எத்தனை அடுக்குகளாக காணப்படுகிறது?
ஐந்து: வளிமண்டல கீழடுக்கு ,மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு மற்றும் வெளி அடுக்கு
- வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படும்?
Troposphere
- Troposphere என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
ட்ரோபோஸ் -கிரேக்கச் சொல் (பொருள்- மாறுதல்)
- வளிமண்டல கீழ் அடுக்கு (Troposphere) துருவப்பகுதியில் எவ்வளவு கிலோ மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது?
8 கிலோமீட்டர்
- வளிமண்டல கீழ் அடுக்கு (Troposphere) நிலநடுக்கோட்டுப் பகுதியில் எவ்வளவு கிலோ மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது?
18கி.மீ
- எந்த வளிமண்டல அடுக்கில் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன?
வளிமண்டல கீழ் அடுக்கு (Troposphere)
- வளிமண்டல கீழ் அடுக்கு (Troposphere) வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வானிலையை உருவாக்கும் அடுக்கு
- வளிமண்டல கீழ் அடுக்கின் (Troposphere) மேல் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ட்ரோபோபாஸ் (Tropopause)
- வளிமண்டல கீழ் அடுக்குக்கு மேல் அமைந்துள்ள அடுக்கு எது ?
மீள் அடுக்கு (Stratosphere)
- மீள் அடுக்கு (Stratosphere) வளிமண்டலத்தில் எவ்வளவு தூரம் வரை பரவியுள்ளது?
50 கிலோமீட்டர்
- எந்த அடுக்கில் உயரம் செல்லச் செல்ல வெப்பநிலை குறையும்?
வளிமண்டல கீழ் அடுக்கு (Troposphere) ,இடையடுக்கு (mesosphere),
- எந்த அடுக்கில் உயரம் செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரிக்கும்?
மீள் அடுக்கு (Stratosphere), வெப்ப அடுக்கு(Thermosphere)
- ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால் மீள் அடுக்கு (Stratosphere) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓசோனோஸ்பியர்
- எந்த அடுக்கு ஜெட் விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது?
மீள் அடுக்கு (Stratosphere)
- மீள் அடுக்கின் மேல் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஸ்ரேடோபாஸ்(Stratopause)
- இடையடுக்கு (mesosphere) என்பது வளிமண்டலத்தில் எவ்வளவு உயரம் வரை காணப்படுகிறது?
50 கிலோ மீட்டர் முதல் 80 கிலோமீட்டர் உயரம் வரை
- எந்த அடுக்கில் புவியை நோக்கி வரும் விண்கற்கள் அந்த அடுக்கில் நுழைந்ததும் எரிக்கப்படுகின்றன?
இடையடுக்கு (mesosphere)
- இடையடுக்கின் மேல் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மீசோபாஸ் (mesopause)
- இடை அடுக்கிற்க்கு மேல் காணப்படும் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படும்?
வெப்ப அடுக்கு (Thermosphere)
- வெப்ப அடுக்கு (Thermosphere) எவ்வளவு உயரம் வரை பரவி காணப்படுகிறது?
600 கிலோமீட்டர்
- வெப்ப அடுக்கின் கீழ் பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹோமோஸ்பியர் (Homosphere)
- வெப்ப அடுக்கின் மேல் பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
ஹெட்ரோஸ்பியர் (heterosphere)
- அயனோஸ்பியர்(Ionosphere) எந்த அடுக்கு பகுதியில் அமைந்திருக்கிறது?
வெப்ப அடுக்கு பகுதி
- புவியில் இருந்து பெறப்படும் வானொலி அலைகள் எந்த அடுக்கில் இருந்து புவிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது?
அயனோஸ்பியர்(Ionosphere)
- புவியின் காந்த மண்டலம் எந்த அடுக்கிற்கு அப்பால் அமைந்துள்ளது?
வெளிஅடுக்கு
- புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் எவ்வளவு கிலோமீட்டர் வரை காந்த மண்டலம் பரவியுள்ளது?
64 ஆயிரம் கிலோ மீட்டர்
- வளிமண்டல அடுக்குகளின் மேலடுக்கு எவ்வாறு அழைக்கப்படும் ?
வெளி அடுக்கு
- வெளி அடுக்கில் நிகழும் வினோத ஒளி நிகழ்வுகள் என்னென்ன?
அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் (Aurora Australis) மற்றும் அரோரா பொரியலிஸ்(Aurora borealis)
- சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் காந்த புயலின் காரணமாக வெளியேற்றப்படும் மின்னணுக்களால் துருவப் பகுதிகளில் ,நள்ளிரவு நேரத்தில் வானத்தில் பல வண்ண ஒளி சிதறல் உருவாகும் இது எவ்வாறு அழைக்கப்படும்?
அரோராஸ்
- வளிமண்டலத்தில் ஒருநாளில் ஓரிடத்தில் நடைபெறும் வளிமண்டல நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
வானிலை (weather)
- நீண்டகால வானிலையின் சராசரி எவ்வாறு அழைக்கப்படும்?
காலநிலை (Climate)
- வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்ன?
நிலநடுக்கோட்டிலிருந்து தூரம், கடல் மட்டத்திலிருந்து உயரம்,கடலிலிருந்து தூரம், வீசும் காற்றின் தன்மை, மலைகளின் இடையூறு, மேகமூட்டம், கடல் நீரோட்டங்கள் ,இயற்கை தாவரங்கள்
- வானிலை பற்றிய படிப்புக்கு பெயர் என்ன ?
வானிலையியல்
- காலநிலையை பற்றிய படிப்பிற்கு பெயர் என்ன ?
காலநிலையியல் (Climatology)
- ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் எவ்வளவு வெப்பநிலை குறையும்?
6.5°C
- ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் 6.5°C வெப்பநிலை குறையும் இயல்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பு குறைவு விகிதம் (normal lapse rate)
- ஓரிடத்தின் காலநிலை எதனை பொறுத்து அமைகிறது?
அவ்விடம் கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை பொறுத்து
- கடலிலிருந்து வீசும் காற்றின் தாக்கத்தினால் கடலோரப் பகுதிகளில் என்ன காலநிலை நிலவும்?
சமமான காலநிலை
- கடலிலிருந்து தொலைவில் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் கடல் காற்றின் தாக்கம் இல்லாத காரணத்தினால் என்ன காலநிலை நிலவுகிறது?
கண்ட காலநிலை
- கடலிலிருந்து காற்றில் மதிய (பகல்) வேளைகளில் நிலத்தை நோக்கி வீசுவதற்கு பெயர் என்ன ?
கடற்காற்று (Sea breeze)
- இரவு நேரங்களில் நிலத்திலிருந்து காற்று கடல் பகுதியை நோக்கி வீசும் இது எவ்வாறு அழைக்கப்படும்?
நிலக்காற்று (Land breeze)
- வீசும் காற்றின் எதிர் திசையில் உள்ள மலைப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
காற்று மோதும் பக்கம் (windward side)
- மலையின் எந்தப் பக்கத்தில் அதிக மழைப்பொழிவு கிடைக்கிறது?
காற்று மோதும் பக்கம்(windward side)
- மலையின் எந்தப் பக்கத்தில் குறைந்த மழைப்பொழிவு கிடைக்கிறது?
காற்று மோதா பக்கம்(leeward side)
- அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் வெப்பநிலை குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன?
தாவரங்களில் நடைபெறும் நீராவிப்போக்கினால் வளிமண்டல காற்று குளிர்விக்கப்படுகிறது
- புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
காற்று
- வளிமண்டலத்தில் காற்று செங்குத்தாக அசையும் நிகழ்விற்கு பெயரென்ன?
காற்றோட்டம் (Air current)
- காற்றின் வேகத்தை அளக்க என்ன கருவி பயன்படுகிறது?
காற்று வேகமானி (Anemometer)
- காற்றின் திசையை அறிய பயன்படும் கருவி?
காற்று திசைகாட்டி (wind vane)
- காற்றினை அளக்க பயன்படுத்தப்படும் அலகு ?
கிலோமீட்டர் /மணி அல்லது கடல்மைல் (knots)
- காற்றின் வகைகள் என்னென்ன ?
நான்கு: கோள் காற்றுகள்(planetary winds), கால முறை காற்றுகள்(periodic winds), மாறுதலுக்கு உட்பட்ட காற்றுகள்(variable winds), தலக்காற்றுகள் (local winds)
- வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
கோள் காற்று
- கோள் காற்று வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
நிலவும் காற்று(prevailing winds)
- கோள் காற்றுகள் என்னென்ன ?
வியாபார காற்றுகள்(trade winds) மேலைக் காற்றுகள்(westerlies) மற்றும் துருவக் கீழைக்காற்றுகள்(polar easterlies)
- வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களில் இருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படும் ?
வியாபார காற்று
- எந்த காற்றுகள் தொடர்ச்சியாகவும், அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசும் ?
வியாபார காற்றுகள் (Trade winds)
- வட தென் அரைக்கோளங்களின் வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் காற்று எது?
மேலைக்காற்று (westerlies)
- மேலைக்காற்று (westerlies) வட அரைக்கோளத்தில் என்ன திசையில் வீசும் ?
தென்மேற்கில் இருந்து வடகிழக்காக
- மேலைக்காற்று (westerlies) தென் அரைக்கோளத்தில் என்ன திசையில் வீசும் ?
வட மேற்கில் இருந்து தென்கிழக்காக
- மேலைக் காற்று, தென் கோளத்தில் 40° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படும்?
கர்ஜிக்கும் நாற்பதுகள்
- மேலைக் காற்று, தென் கோளத்தில் 50° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படும்?
சீறும் ஐம்பதுகள்
- மேலைக் காற்று, தென் கோளத்தில் 60° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படும்?
கதறும் அறுபதுகள்
- துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த, வறண்ட காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
துருவ கீழைக்காற்றுகள்
- புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசுவதற்கு பெயர் என்ன?
கொரியாலிஸ் விளைவு
- கொரியாலிஸ் விளைவின் காரணமாக காற்று வட அரைக்கோளத்தில் என்ன திசையில் விலகி வீசுகின்றன?
வலப்புறம்
- கொரியாலிஸ் விளைவின் காரணமாக காற்று தென் அரைக்கோளத்தில் என்ன திசையில் விலகி வீசுகின்றன?
இடப்புறம்
- காற்று வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் ,தென் அரைக்கோளத்தில் இடப்புறமும் விலகி வீசுவது என்ன விதி எனப்படுகிறது?
ஃபெரல்ஸ் விதி
- ஃபெரல்ஸ் விதியை முன்மொழிந்தவர் யார்?
வில்லியம் பெரல்
- பருவத்திற்கு ஏற்ப தன் திசையை மாற்றிக் கொள்ளும் தன்மையுடைய காற்று எவ்வாறு அழைக்கப்படும்?
காலமுறைக் காற்றுகள்
- காற்று தன் திசையை பருவத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கு என்ன பெயர்?
பருவகாற்று (மான்சூன்)
- சைக்ளோன் (cyclone) என்பது எந்த மொழி சொல்?
கிரேக்கம் (பொருள் – சுருண்ட பாம்பு)
- அதிக அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்தம் உள்ள பகுதிக்கு சூழல் வடிவத்தில் குவியும் காற்று எவ்வாறு அழைக்கப்படும்?
சூறாவளி
- புவியின் சுழற்சியினால் சூறாவளி வட அரைக்கோளத்தில் என்ன திசையில் வீசும்?
கடிகார சுற்றுக்கு எதிர் திசை
- புவியின் சுழற்சியினால் சூறாவளி தென் அரைக்கோளத்தில் என்ன திசையில் வீசும்?
கடிகார திசை
- சூறாவளிகளின் வகைகள் என்னென்ன?
வெப்பச் சூறாவளிகள் ,மிதவெப்ப சூறாவளிகள், கூடுதல் வெப்ப சூறாவளிகள்
- வெப்ப சூறாவளிகள் இந்திய பெருங்கடல் பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படும்?
சூறாவளிகள் (cyclone)
- வெப்ப சூறாவளிகள் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படும்?
டைஃபூன்கள் (TYPHOONS)
- வெப்ப சூறாவளிகள் கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படும்?
ஹரிக்கேன்கள் (HURRICANES)
- வெப்ப சூறாவளிகள் பிலிப்பைன்ஸ் பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படும்?
பேக்யூஸ்(Baguios)
- வெப்ப சூறாவளிகள் ஜப்பானில் எவ்வாறு அழைக்கப்படும்?
டைஃபூன்
- வெப்ப சூறாவளிகள் ஆஸ்திரேலியாவில் எவ்வாறு அழைக்கப்படும்?
வில்லி வில்லி(wily wily)
- இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் கடற்கரையோரப் பகுதிகளை தாக்கிய சூப்பர் சைக்கிளோன் எந்த ஆண்டு நிகழ்ந்தது?
அக்டோபர் 29, 1999
- இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக வங்கதேசம், இந்தியா ,மாலத்தீவுகள், மியான்மர், ஓமன் ,பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் எந்த ஆண்டு நடத்தப்பட்டது?
2000
- எந்த ஆண்டு முதன் முதலில் இந்திய கடற்கரையோரத்தில் உள்ள நாடுகள் சூறாவளிக்கான பெயர் பட்டியலை வழங்கின?
2004
- மிதவெப்ப சூறாவளிகள் எந்தப் பகுதிகளில் உருவாகின்றது?
35° முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு அட்சப் பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர் காற்றுத்திரள்கள் சந்திக்கும் பகுதிகளில்
- மிதவெப்ப சூறாவளிகள் பொதுவாக எந்த பகுதிகளில் உருவாகின்றது?
வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி ,வட மேற்கு ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில்
- மிதவெப்ப சூறாவளிகள் இந்தியாவை அடையும்போது இக்காற்று எவ்வாறு அழைக்கப்படும்?
மேற்கத்திய இடையூறு காற்று ( Western disturbance)
- வெப்பக்காற்று திரளையும் குளிர்காற்று திரளையும் பிரிக்கும் எல்லை எவ்வாறு அழைக்கப்படும்?
வளிமுகம் (Front)
- கூடுதல் வெப்ப சூறாவளிகள் (extratropical cyclones) என்பது எந்த பகுதிகளில் வீசுகின்றன ?
30° முதல் 60° வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப்பகுதிகளில்
- கூடுதல் வெப்ப சூறாவளிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
மைய அட்ச சூறாவளிகள் (mid latitudes cyclones)
- எதில் உயர் அழுத்த மண்டலம் மையத்திலும் ,தாழ்வழுத்தம் அதனை சூழ்ந்தும் காணப்படுகிறது?
எதிர் சூறாவளி
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படும்?
தலக்காற்று
- தலக்காற்று, ஃபான் காற்று (Foehn) என்று எங்கு அழைக்கப்படுகிறது?
ஆல்ப்ஸ் -ஐரோப்பா
- தலக்காற்று, சிராக்கோ (Sirocco) என்று எங்கு அழைக்கப்படுகிறது?
ஆபிரிக்காவின் வட கடற்கரை பகுதி
- தலக்காற்று, சின்னூக்(Chinnook) என்று எங்கு அழைக்கப்படுகிறது?
ராக்கி மலைத்தொடர் வட அமெரிக்கா
- தலக்காற்று, லூ (Loo)என்று எங்கு அழைக்கப்படுகிறது?
தார் பாலைவனம் -இந்தியா
- தலக்காற்று, மிஸ்ட்ரல் (Mistral) என்று எங்கு அழைக்கப்படுகிறது?
மத்திய தரைக்கடல் பகுதி ,பிரான்ஸ்
- தலக்காற்று, போரா (Bora)என்று எங்கு அழைக்கப்படுகிறது?
மத்திய தரைக்கடல் பகுதி – இத்தாலி
- உயரத்தின் அடிப்படையில் மேகங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
மூன்று: மேல் மட்ட மேகங்கள்(high clouds), இடை மட்ட மேகங்கள்(middle clouds),கீழ் மட்ட மேகங்கள்(low clouds)
- எவ்வளவு உயரம் வரை உள்ள மேகங்கள் மேல் மட்ட மேகங்கள்(high clouds) என்று அழைக்கப்படும்?
6 -20 கி.மீ உயரம் வரை
- எவ்வளவு உயரம் வரை உள்ள மேகங்கள் இடை மட்ட மேகங்கள்(middle clouds) என்று அழைக்கப்படும்?
2.5-6 கி.மீ உயரம் வரை
- எவ்வளவு உயரம் வரை உள்ள மேகங்கள் கீழ் மட்ட மேகங்கள்(low clouds) என்று அழைக்கப்படும்?
புவியின் மேற்பரப்பில் இருந்து 25 கிலோ மீட்டர் உயரம் வரை
- வளிமண்டலத்தில் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் மெல்லிய வெண்ணிற இழை போன்ற தோற்றத்தில் காணப்படும் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கீற்று மேகங்கள் (cirrus)
- முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்கள் எவை?
கீற்று மேகங்கள்
- வெண்மையான திட்டுகளாகவோ, விரிப்பு போன்றோ ,அடுக்கடுக்காக அமைந்திருக்கும் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கீற்று திரள் மேகங்கள் (cirro cumulus)
- மென்மையாக பால் போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கீற்றுப்படை மேகங்கள் (cirro stratus)
- பெண்குதிரை வால்கள்(Mare’s Tails) என்று அழைக்கப்படும் மேகங்கள்?
கீற்று மேகங்கள்
- சாம்பல் அல்லது நீல நிறத்தில் சீராக மெல்லிய விரிப்பு போன்று காணப்படும் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இடைப்பட்ட படை மேகங்கள் (alto status)
- இடைப்பட்ட திறல் மேகங்கள் ,அலைத்திரள் அல்லது இணைக்கற்றைகள் போன்ற அமைப்புடன் காட்சியளிக்கும் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
செம்மறியாட்டு மேகங்கள்(sheep clouds) அல்லது கம்பளி கற்றை மேகங்கள் (wool pack clouds)
- புவியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கார்படை மேகங்கள் (nimbo stratus)
- வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் மட்டும் அனைத்து வகையான மேகங்களும் காணப்படும்?
வளிமண்டல கீழ் அடுக்கு (Troposphere)
- 2500 மீட்டர் முதல் 3000 மீட்டர் உயரத்தில் சாம்பல் மற்றும் வெண்மை நிறத்தில் வட்ட திட்டுகளாக காணப்படும் தாழ் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
படைத்திரள் மேகங்கள் (Strato cumulus)
- மிகவும் அடர்த்தியாக கீழ்மட்டத்தில் பனிமூட்டம் போன்று காணப்படும் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
படை மேகங்கள் (stratus)
- தட்டையான அடிப்பாகமும் ,குவிமாடம் போன்ற மேல் தோற்றமும் கொண்டு காலிப்ளவர் போன்ற வடிவத்தில் காணப்படும் மேகம் எவ்வாறு அழைக்கப்படும்?
திரள் மேகங்கள் (cumulus)
- தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகங்கள் எது?
திரள் மேகங்கள் (cumulus)
- மிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன் இடியுடன் கூடிய மழை தரும் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கார்திரள் மேகங்கள் (cumulo- nimbus)
- சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடையும் நிகழ்விற்கு பெயர் ?
பொழிவு (precipitation)
- பொழிவினை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்ன?
வெப்பநிலை(temperature), உயரம்(altitude), மேகத்தின் வகை (clouds type),வளிமண்டல நிலைபாடுகள்(atmospheric conditions ) ,பொலிவு செயல்முறை (precipitation process)
- பொழிவின் பல்வேறு விதங்கள் என்னென்ன?
சாரல் ,மழை, பனிப்பொழிவு ,பனிப்படிவு, ஆலங்கட்டி மழை
- எவ்வளவுக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும் பொழுது அவை சாரல் என்றழைக்கப்படுகிறது?
0.5 மில்லி மீட்டருக்கும் குறைவாக
- மழைத்துளியின் விட்டம் எவ்வளவு ?
5 மில்லி மீட்டருக்கு மேல்
- முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் (pellets) கூடிய மழைப்பொழிவு எவ்வாறு அழைக்கப்படும் ?
ஆலங்கட்டி மழை (sleet)
- உறையும் நிலைக்குக் கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது எது ஏற்படும்?
பனிப்பொழிவு
- பகுதியாகவோ ,முழுமையாகவோ ஒளிபுகா தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பனி
- பனிப் படிகங்கள் ஒன்றோடொன்று மோதி என்னவாக உருப்பெறுகின்றன ?
பனிச்சீவல்கள் (snowflakes)
- இடியுடன் கூடிய புயல் மற்றும் மழையுடன் கூடிய புயலின் போதும் எவ்வளவு விட்டம் உள்ள பனிக்கட்டிகள் கல்மாரி மழை(Hail) என்று அழைக்கப்படுகிறது?
2 செ.மீட்டருக்கு மேல்
- இடியுடன் கூடிய கல்மாரி மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கல்மாரி புயல்
- மழைப் பொழிவின் பல்வேறு வகைகள் என்னென்ன?
வெப்பச்சலன மழை பொழிவு(conventional rainfall) ,புயல் சூறாவளி மழை பொழிவு (or) வளிமுக மழைப்பொழிவு (cyclonic rainfall or frontal rainfall) ,மலை தடுப்பு மழை பொழிவு(orographic rainfall)
- வெப்பப் சலன மழைப்பொழிவு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4 மணி மழைப்பொழிவு
- சூரிய கதிர்வீச்சினால் புவியின் மேற்பரப்பிலுள்ள காற்று வெப்பமடைவதால் விரிவடைந்து மேலெழும்புகிறது அதனால் உருவாகும் காற்றோட்டம் எது?
வெப்ப சலனக் காற்றோட்டம்
- வெப்ப சலனம் காற்றோட்டத்தால்,மேலே சென்ற காற்று குளிர்ச்சியடைந்து சுருங்கி மேகங்களாக உருவெடுத்து மழையாகப் பொழிகிறது இது எவ்வாறு அழைக்கப்படும்?
வெப்பச்சலன மழை
- வெப்ப சலனம் மழை எங்கு அடிக்கடி நிகழ்கிறது?
புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் மாலை நேரங்களில்
- அடர்த்தியான காற்று திரள்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட பின்பு மேல் நோக்கி சென்று வெப்பம் மாறா நிலையினால் குளிர்ச்சியடைந்து பொழியும் மழைக்கு பெயரென்ன?
சூறாவளி மழை பொழிவு
- எந்த இடங்களில் சூறாவளி மழை பொழிவு கிடைக்கின்றது ?
வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில்
- வெப்பக் காற்றும், குளிர் காற்றும் சந்திக்கும் எல்லையில் நீராவி சுருங்கி மழைப்பொழிவை தருகின்றது. இது மித வெப்பப் பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படும் ?
வளிமுக மழை
- மலை தடுப்பு மழை வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
நிலத்தோற்ற மலை
- காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காற்று மோதும் பக்கம் (windward side)
- காற்று வீசும் திசைக்கு மறுபக்கம் உள்ள மலைச்சரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காற்று மோதாப் பக்கம் (leeward side)
- மலையின் எந்தப் பகுதி அதிக மழை பெறும் ?
காற்று மோதும் பக்கம்
- காற்று மோதா பக்கம் மிகக் குறைந்த அளவே மழையைப் பெறுகிறது .இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மழை மறைவு பிரதேசம்
- இந்தியாவில் அதிக மழையை பெறும் இடம் எது?
மௌசின்ராம்
- மௌசின்ராம் எந்த மலையின் காற்று மோதும் பக்கத்தில் அமைந்துள்ளது ?
பூர்வாஞ்சல் மலை
- பூர்வாஞ்சல் மலையின் காற்று மோதா பக்கம் அமைந்துள்ள இடம் எது?
ஷில்லாங்
- வளிமண்டலத்திலுள்ள நீராவியின் அளவு எவ்வாறு அழைக்கப்படும்?
ஈரப்பதம்
- வளி மண்டலத்தில் உள்ள மொத்த நீராவியின் அளவு எவ்வாறு அழைக்கப்படும்?
முழுமையான ஈரப்பதம் (absolute humidity)
- வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் அளவிற்கும் அதன் மொத்த கொள்ளளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் எவ்வாறு அழைக்கப்படும்?
ஒப்பு ஈரப்பதம்(relative humidity)
- காற்றின் ஒப்பு ஈரப்பதம் 100 சதவீதமாக இருக்கும் போது காற்று என்ன நிலையை அடைகிறது?
பூரித நிலை
- என்ன நிலையில் காற்று நீராவியை உறிஞ்சாது?
பூரித நிலை
- காற்று நீராவியை உறிஞ்சாத நிலை எவ்வாறு அழைக்கப்படும் ?
பனி விழும் நிலை (Dew point)
- ஈரப்பதத்தை அளவிடுவதற்கு பயன்படும் கருவி எது?
ஈரப்பதமானி(Hygrometer) அல்லது ஈர உலர்க்குமிழ் வெப்பமானி(wet and dry bulb)
- ஒவ்வொரு கனமீட்டர் காற்றிலும் எத்தனை கிராம் நீராவி உள்ளது என்பதற்கு பெயர் என்ன ?
முழுமையான ஈரப்பதம் (absolute humidity)
9TH GEOGRAPHY STUDY NOTES |வளிமண்டலம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services