- மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியது என்ன?
சுற்றுச்சூழல்
- மனிதன் தொன்று தொட்டு ஒன்றி வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சூழல்
- சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
என்விரோன்(environ) என்ற பிரெஞ்சு சொல்
- என்விரோன்(environ) என்ற பிரெஞ்சு சொல்லின் பொருள் என்ன ?
சுற்றுப்புறம்
- எந்த மாநாட்டில் மனிதன் “சுற்று சூழலை உருவாக்கி வடிவமைக்கிறான்” என அறிவிக்கப்பட்டது?
ஸ்டாக்ஹோம் மாநாடு
- ஸ்டாக்ஹோம் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1972
- எந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு என்று அழைக்கப்பட்டது ?
1992
- UNCEDன் விரிவாக்கம் என்ன?
United Nations conference on environment and development
- சுற்றுச்சூழலின் வகைப்பாடு என்னென்ன?
இயற்கை சுற்றுச்சூழல், மனித சுற்றுச்சூழல் ,மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல்
- சுற்றுச்சூழலின் இயற்கை கூறுகளான நிலக்கோளம் நீர் கோளம் ,வளிக்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகியவற்றைப் பற்றி விளக்குவது?
இயற்கை சுற்றுச்சூழல்
- ஒரு மனிதன் அவனது குடும்பம் ,தொழில் மற்றும் சமூகம், கல்வி ,மதம் பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்றவற்றோடு கொண்டுள்ள தொடர்புகளை விளக்குவது ?
மனித சுற்றுச்சூழல்
- மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் தன் வாழ்க்கையை ஏதுவானதாக எளிதானதாகவும் அமைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது?
மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல்
- மக்கள் தொகை (populous)என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
இலத்தீன் (பொருள்- மக்கள்)
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மக்கள் தொகை
- (Demography) மக்கள் தொகையியல் என்பது எந்த மொழிச்சொல்?
கிரேக்கம் (Demos – மக்கள், Graphs- கணக்கிடுதல்)
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
மக்கள்தொகை வளர்ச்சி
- பிறப்பு விகிதத்திற்க்கும் இறப்பு விதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படும் ?
மக்கள்தொகை வளர்ச்சி
- உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது எங்கு நடந்தது ?
பாபிலோன் கிமு 3800
- நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு எது ?
டென்மார்க்
- இந்தியாவில் முதன்முதலில் எந்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?
கிபி 1872
- இந்தியாவில் எந்த ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது ?
1881
- மக்கள் தொகை வளர்ச்சியை குறைக்கும் காரணிகள் என்னென்ன?
பஞ்சம் ,நிலச்சரிவு ,பூமியதிர்ச்சி, ஆழிப்பேரலை போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதனால் ஏற்படும் அழிவுகளான போர் போன்றவைகள்
- மக்களின் எண்ணிக்கை ஓரிடத்தில் வளர்ச்சி அதிகரிப்பு அல்லது குறைவது என்பது என்ன?
மக்கள் தொகையில் மாற்றம்
- எதன் காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது ?
பிறப்பு மற்றும் குடியிறக்கம் (IMIGIRATION)
- எதன் காரணமாக மக்கள் தொகை குறைகிறது?
இறப்பு மற்றும் குடியேற்றம் (emigration)
- புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவி காணப்படுகிறார்கள் என்பதை பற்றி குறிப்பிடுவது எது?
மக்கள்தொகை பரவல்
- மக்கள் தொகை பரவலை பாதிக்கும் காரணிகள் என்னென்ன?
இயற்கை காரணிகள், வரலாற்று காரணிகள் ,பொருளாதார காரணிகள்
- மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் என்னென்ன ?
வெப்பநிலை ,மழை ,மண் ,நிலத்தோற்றம் ,நீர் ,இயற்கை தாவரங்கள் ,கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு
- மக்கள் தொகை பரவலை பாதிக்கும் வரலாற்று காரணிகள் என்ன?
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரீகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள்
- பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிளேக் என்ற கொள்ளை நோயினால் எத்தனை சதவீத மக்கள் இறந்தனர் என கணக்கிடப்பட்டுள்ளது ?
30 முதல் 60 சதவீத மக்கள்
- மக்கள்தொகை பரவலை பாதிக்கும் பொருளாதார காரணிகள் என்னென்ன?
கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்புகள், உற்பத்தி தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள் ,வியாபாரம் ,வணிகம் மற்றும் பிற வசதிகள்
- உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜூலை 11
- ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட அமைப்பு உலக மக்கள் தொகை தினத்தை எந்த ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது?
1989
- ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மக்களடர்த்தி
- மிகப் பரந்த நிலப்பரப்பில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும் ?
குறைந்த மக்கள் அடர்த்தி
- குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
அதிக மக்கள் அடர்த்தி
- உலக மக்கள் அடர்த்தி எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது?
3 : அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள் ,மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள், குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்
- ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் எவ்வளவு மக்கள் வாழ்வதை அதிக மக்கள் அடர்த்தி பகுதி என அழைக்கப்படுகிறது?
50க்கும் மேற்பட்ட மக்கள்
- அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள் எவை?
கிழக்கு ஆசியா ,தெற்கு ஆசியா ,வட மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி
- ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் எவ்வளவு மக்கள் வாழ்வதை மிதமான மக்கள் அடர்த்தி பகுதி என அழைக்கப்படுகிறது?
10ல் இருந்து 50 பேர்
- மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள் எவை?
மிதவெப்ப மண்டல பகுதியில் உள்ள அங்கோலா, காங்கோ, நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள சாம்பியா
- ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் எவ்வளவு மக்கள் வாழ்வதை குறைந்த மக்கள் அடர்த்தி பகுதி என அழைக்கப்படுகிறது?
10க்கும் குறைவான மக்கள்
- குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள் எவை?
மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியா ,வடக்கு ரஷ்யா மற்றும் கனடா
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் ஐந்து மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டங்கள் என்னென்ன ?
சென்னை ,காஞ்சிபுரம், வேலூர் ,திருவள்ளூர் ,சேலம்
- எந்த ஆண்டு இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான மக்கள் தொகை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது?
1952
- மக்கள் தொகை கொள்கையை முதன் முதலில் அறிவித்த நாடு எது?
இந்தியா
- மக்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ ஓரிடத்தில் தங்கி வேலை செய்து ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு பெயர் என்ன?
குடியிருப்பு
- குடியிருப்புகள் அங்கு நடைபெறும் பணிகளின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
கிராமம் மற்றும் நகரம்
- முதன்மை தொழில்களான வேளாண்மை, வனத்தொழில் ,கனிம தொழில் மற்றும் மீன் பிடித்தல் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
கிராம குடியிருப்புகள்
- உலகின் பெரும்பாலான குடியிருப்புகள் எந்த வகையைச் சார்ந்தது?
கிராம குடியிருப்புகள்
- கிராம குடியிருப்பு வகைகள் என்னென்ன?
செவ்வக வடிவ குடியிருப்புகள் ,நேர்கோட்டு குடியிருப்புகள், வட்ட வடிவ குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள், நட்சத்திர வடிவ குடியிருப்புகள், முக்கோண வடிவ குடியிருப்புகள்,Tவடிவ , Y வடிவ ,சிலுவை வடிவ (அ) குறுக்கு வடிவக் குடியிருப்புகள்,மூலக்கரு வடிவக் குடியிருப்புகள்
- சமவெளிப் பகுதிகளிலும் ,பள்ளத்தாக்கு பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்பு வகை எது?
செவ்வக வடிவ குடியிருப்பு
- சாலை, தொடர்வண்டிப் பாதை ,ஆற்றங்கரை மற்றும் அணைக்கட்டு ஓரங்களில் காணப்படும் குடியிருப்பு வகை ?
நேர்கோட்டு குடியிருப்புகள்
- ஏரிகள் ,குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை சுற்றி வட்டமாக அல்லது அரைவட்டமாக காணப்படும் குடியிருப்பு வகை எது ?
வட்ட வடிவ குடியிருப்பு அல்லது அரை வட்ட வடிவ குடியிருப்பு
- ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் ?
முக்கோண வடிவ குடியிருப்புகள்
- மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள்?
Tவடிவ குடியிருப்புகள்
- இரண்டு சாலைகள் மூன்றாவது சாலையுடன் சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்பு?
Y வடிவ குடியிருப்பு
- நகரமயமாதலின் முக்கிய காரணிகள் என்னென்ன?
வேலை வாய்ப்பு வசதிகள் ,வியாபாரம் செய்வதற்கான ஆரோக்கியமான சூழல் ,கல்வி வசதி மற்றும் போக்குவரத்து
- நகர்ப்பகுதிகள் அதன் பரப்பு கிடைக்கும் சேவைகள் மற்றும் நடைபெறும் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
நகரம்,பெருநகரம், மாநகரம், மீப்பெருநகரம் ,நகரங்களின் தொகுதி
- ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்டிருக்கும் மற்றும் கிராமத்தை விட பெரியதாகவும், பெரு நகரத்தை விட சிறியதாக இருப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
நகரம்
- ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
பெருநகரம்
- 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரையிலான மக்கள் தொகையை கொண்டிருப்பது எவ்வாறு் அழைக்கப்படும் ?
மாநகரம்
- ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டிருப்பது எவ்வாறு அழைக்கப்படும் ?
மீப்பெருநகரம்
- பல நகரங்களையும் ,பெரு நகரங்களையும், பிற நகர்ப்புறப் பகுதிகளையும் கொண்டிருப்பது எவ்வாறு அழைக்கப்படும் ?
நகரங்களின் பகுதி (Conurbation)
- உலகின் மிகப் பழமையான மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் நகரம் எது ?
டமாஸ்கஸ்
- டமாஸ்கஸில் மக்கள் எப்போதிலிருந்து வாழ்ந்து வருகின்றனர்?
11,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து
- உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது ?
டோக்கியோ
- டோக்கியோ நகரம் எவ்வளவு மக்கள் தொகை கொண்டது?
38 மில்லியன்
- புவியில் இருந்து மூலப் பொருட்களை பெறும் தொழில் எவ்வாறு அழைக்கப்படும்?
முதல் நிலை தொழில்கள்
- முதல்நிலை தொழில்கள் என்னென்ன?
உணவு சேகரித்தல் ,வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ,கால்நடைகளை மேய்த்தல் ,கனிமங்களை வெட்டி எடுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவை
- மூலப் பொருட்களை முடிவுற்ற பொருளாக மாற்றும் தொழில் எது?
இரண்டாம் நிலை தொழில்கள்
- இரண்டாம் நிலை தொழில்கள் என்னென்ன?
இரும்பு ,எக்கு ,தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள்
- எந்த நிலை தொழில்கள் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை, மாறாக உற்பத்தி செயலுக்கு துணைபுரிகின்றன?
மூன்றாம் நிலை தொழில்கள்
- மூன்றாம் நிலை தொழில்கள் என்னென்ன?
போக்குவரத்து ,தகவல் தொடர்பு, வங்கிகள் மற்றும் சேமிப்பு கிடங்கு வணிகம்
- ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ,அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகள், என்ன நிலை தொழில்கள் என அழைக்கப்படுகிறது?
நான்காம் நிலை தொழில்கள்
- நான்காம் நிலை தொழில்கள் என்னென்ன?
ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சார்ந்த சேவைகள்
- உருவாக்குதல், மறுகட்டமைப்பு செய்தல் பயன்பாட்டில் உள்ள பழைய கருத்துக்கள் மற்றும் புதிய கருத்துக்கள் விவரணம் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளை உள்ளடக்கியது என்ன நிலை தொழில்கள்?
ஐந்தாம் நிலை தொழில்கள்
- ஐந்தாம் நிலை தொழில்கள் என்னென்ன ?
வணிக அமைப்புகளின் தலைமை அதிகாரிகள், அறிவியலறிஞர்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளில் முடிவு எடுப்பவர்கள்
- உலக சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு எந்த ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் கூட்டப்பட்டது?
1992
- எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதற்கு பெயர் என்ன?
வளம் குன்றா வளர்ச்சி
- எந்த ஆண்டு பிரண்டலேண்ட் குழு வளங்குன்றா வளர்ச்சி என்ற சொல்லுக்கான விளக்கத்தை அளித்தது?
1987
- வளம் குன்றா வளர்ச்சி அடைவதற்கு என்ன மூன்று முக்கியமான அடிப்படை காரணிகளை ஒன்றிணைப்பது அவசியமாகும்?
பொருளாதார வளர்ச்சி, சமுதாயக் கூறுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
9TH GEOGRAPHY STUDY NOTES |மனிதனும் சுற்றுச்சூழலும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services