- புவி தன்னுள் எத்தனை கோலங்களை உள்ளடக்கியுள்ளது?
நான்கு: நிலக்கோளம் ,வளிக்கோளம் ,நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளம்
- புவியின் மேற்பரப்பில் மொத்த பரப்பளவு எவ்வளவு ?
510 மில்லியன் சதுர கிலோமீட்டர்
- புவியின் நான்கு கோளங்களில் உயிரற்ற கோளங்கள் எது?
நிலக்கோளம், வளிக்கோளம் மற்றும் நீர்க்கோளம்
- புவியின் உள்ளமைப்பு எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
மூன்று: மேலோடு, கவசம், கருவம்
- புவியின் திடமான மேற்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நிலக்கோளம்
- புவியின் மேற்பரப்பில் உள்ள பெருங்கடல்கள், ஆறுகள் ,ஏரிகள் மற்றும் துருவப் பனிப் பாலங்கலளான நீர் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்க்கோளம்
- புவியைச் சூழ்ந்துள்ள வாயுக்களால் ஆன மெல்லிய அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வாயுக் கோளம்
- உயிரினங்கள் வாழும் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உயிர்க்கோளம்
- புவி மேலோட்டினையும் கவசத்தின் மேல் பகுதியையும் உள்ளடக்கியதற்கு பெயர் என்ன ?
பாறைக்கோளம்
- புவியின் மேலோடு எவ்வளவு கிலோமீட்டர் வரை பரவியுள்ளது ?
5 முதல் 30 கிலோ மீட்டர் வரை
- கடலடி தளத்தை விட எங்கு உள்ள புவிமேலோடானது அதிக தடிமனுடன் காணப்படுகிறது?
கண்டப்பகுதிகளில்
- புவி மேலோடு எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
இரண்டு வகை: கண்ட மேலோடு மற்றும் கடலடி மேலோடு
- புவி மேலோட்டில் எந்த தனிமங்கள் அதிகளவில் காணப்படுகிறது?
சிலிக்கா மற்றும் அலுமினியம்
- புவி மேலோடு சிலிக்கான் மற்றும் அலுமினியம் அதிக அளவில் காணப்படுவதால் இவ்வடுக்குக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
சியால் (SIAL)
- புவி மேலோட்டிற்க்கு கீழே உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
கவசம்(mantle)
- புவியின் கவசத்தின் தடிமன் எவ்வளவு ?
சுமார் 2900 கிலோ மீட்டர்
- கவசத்தின் மேற்பகுதியில் பாறைகள் என்ன நிலையில் காணப்படுகிறது?
திடமான நிலை
- கவசத்தின் கீழ் பகுதியில் பாறைகள் எந்த நிலையில் காணப்படுகிறது?
உருகிய நிலை
- புவியின் கவசத்தில் என்ன தனிமங்கள் அதிகளவில் காணப்படுகிறது?
சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
- புவியின் கவசம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிமா (SIMA)
- புவியின் உட்புறம் உருகிய நிலையில் உள்ள பாறைக்குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாக்மா
- புவியின் கவசத்திற்கு கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கருவம்
- புவியின் கருவத்தில் என்ன தனிமங்கள் அதிகளவில் காணப்படுகிறது ?
நிக்கல் மற்றும் இரும்பு
- புவியின் கருவம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நைஃப் (NIFE)
- கருவம் எத்தனை அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது?
இரண்டு: உட்கருவம் & வெளிக்கருவம்
- புவியின் உட்கருவம் என்ன நிலையில் காணப்படுகிறது?
திடநிலை
- புவியின் வெளிகருவம் என்ன நிலையில் காணப்படுகிறது?
திரவநிலை
- புவி தன் அச்சில் சுழலும் போது திட நிலையில் உள்ள உட்கருவின் மேல் திரவ நிலையில் உள்ள வெளி கருவம் சுழல்வதால் எது உருவாகிறது ?
காந்தப்புலம்
- புவி மேலோட்டின் மேல்பகுதி அடர்த்தி எவ்வளவு?
2.2 கிராம் /செ.மீ³
- புவி மேலோட்டின் அடிப்பகுதி அடர்த்தி எவ்வளவு ?
2.9கிராம் /செ.மீ³
- புவி மேலோட்டில் காணப்படும் பாறை வகைகள் என்னென்ன?
சிலிக்கா பாறை, ஆன்ட்டிசைட் ,அடிப்பகுதியில் பசால்ட், அலுமினியம்
- புவியின் மேல் கவசம் தடிமன் எவ்வளவு?
720 கி.மீ
- புவியின் மேல் கவசத்தின் மேல் பகுதி அடர்த்தி எவ்வளவு?
3.4கிராம்/ செ.மீ³
- புவியின் மேல் கவசத்தின் அடிப் பகுதி அடர்த்தி எவ்வளவு?
4.4 கிராம்/ செ.மீ³
- புவியின் மேல் கவசத்தில் காணப்படும் பாறை வகைகள் என்னென்ன?
பெரிடோடைட்,எக்லோஜைட்,ஒலிவின்,ஸ்பினல்,கார்னட்,பைராக்சின்,பேரோஸ்கைட்,ஆக்சைடு
- புவியின் கீழ் கவசத்தின் தடிமன் எவ்வளவு?
2171 கி.மீ
- புவியின் கீழ் கவசத்தின் மேல் பகுதி அடர்த்தி எவ்வளவு?
4.4 கிராம்/ செ.மீ³
- புவியின் கீழ் கவசத்தின் அடிப் பகுதி அடர்த்தி எவ்வளவு?
5.6 கிராம்/ செ.மீ³
- புவியின் கீழ் கவசத்தில் காணப்படும் பாறை வகைகள் என்னென்ன?
மெக்னீசியம் மற்றும் சிலிகான் ஆக்சைடு
- புவியின் வெளி கருவத்தின் தடிமன் எவ்வளவு?
2259 கிமீ
- புவியின் வெளி கருவத்தின் மேல் பகுதி அடர்த்தி எவ்வளவு?
9.9கிராம்/ செ.மீ³
- புவியின் வெளிக் கருவத்தின் அடிப்பகுதி அடர்த்தி எவ்வளவு?
12.2 கிராம்/ செ.மீ³
- புவியின் வெளிக் கருவத்தில் காணப்படும் பாறை வகைகள் என்னென்ன?
இரும்பு ஆக்சைடு, கந்தகம்,நிக்கல், உலோக கலவை
- புவியின் உட்கருவின் தடிமன் எவ்வளவு?
1221கி.மீ
- புவியின் உட்கருவின் மேல்பகுதி அடர்த்தி எவ்வளவு ?
12.8 கிராம்/ செ.மீ³
- புவியின் உட்கருவின் பாறை வகைகள் என்னென்ன?
இரும்பு ஆக்சைடு ,கந்தகம் ,நிக்கல் உலோக கலவை
- பாறைகள் உருவாகும் விதத்தின் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
தீப்பாறைகள்(igneous rocks), படிவுப் பாறைகள்(sedimentary rock ,உருமாறிய பாறைகள்(metamorphic rocks)
- 2011 வரை உலகிலேயே மிக ஆழமான பகுதியாக இருந்தது எது?
ரஷ்யாவின் மர்மான்ஸ்க் இல் உள்ள கோலார் சூப்பர் ஹோல்(12,262 m)
- 2012 இல் மிக ஆழமான பகுதி என்ற அந்தஸ்தை பெற்றது எது?
ரஷ்யாவின் Z-44 சாவ்யோ கிணறு(12,376 m)
- ஜோர்டானில் உள்ள எந்த மிகப்பழமையான நகரம் முழுவதும் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டது?
பெட்ரா
- இக்னிஸ் என்பது எந்த மொழிச்சொல்?
இலத்தின் மொழி சொல் ( பொருள் நெருப்பு)
- புவியின் உள் ஆழத்தில் பாறைகள் உருகிய நிலையில் காணப்படுவதற்கு பெயர் என்ன ?
பாறைக்குழம்பு/மாக்மா
- பாறைக் குழம்பானது பூமியின் மேலோட்டில் வெளிப்படுவதற்கு பெயர் என்ன?
லாவா
- பாறைக் குழம்பு வெப்பம் தணிந்து குளிர்ந்த பாறையாகின்றது. இந்தக் குளிர்ந்த பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தீப்பாறைகள்
- இந்தியாவின் எந்தப் பகுதி தீப்பாறைகளால் உருவானது ?
தக்காண பீடபூமி
- கருங்கல் ,பசால்ட் தீப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
முதன்மை பாறைகள்,தாய்ப்பாறைகள்
- செடிமெண்ட் என்பது எந்த மொழிச்சொல்?
இலத்தின் சொல் (அதன் பொருள் படிதல்)
- படிவுகளில் தாவரங்கள் ,விலங்கினங்கள் படிந்து என்னவாக மாறுகின்றன?
தொல்லுயிர் எச்ச படிமங்கள்(fossils)
- படிவுப்பாறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
மணற்பாறை, சுண்ணாம்பு பாறை, சுண்ணாம்பு, ஜிப்சம் ,நிலக்கரி மற்றும் கூட்டுப் பாறைகள் (conglomerate)
- மெட்டமார்பிக் என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது?
மெட்டமார்பிசஸ்( இதன் பொருள் உருமாறுதல்)
- கிரானைட் என்ன பாறையாக உருமாற்றம் அடைகிறது ?
நீஸ்
- பசால்ட் என்ன பாறையாக உருமாற்றம் அடைகிறது ?
சிஸ்ட்
- சுண்ணாம்பு பாறை என்ன பாறையாக உருமாற்றம் அடைகிறது ?
சலவைக் கல்
- மணற்பாறை என்ன பாறையாக உருமாற்றம் அடைகிறது ?
குவார்ட்சைட்
- தீப்பாறைகளின் பயன்கள் என்னென்ன?
கட்டிடம் கட்டுவதற்கு ,சாலைகள் அமைப்பதற்கும்
- படிவுப் பாறைகளின் பயன்கள் என்னென்ன?
சுவர் பலகை ,சிமெண்ட் மற்றும் பாரிஸ் பிளாஸ்டர் தயாரிக்கவும் ,கட்டுமான பொருள் உருக்காலைகளில் சுத்திகரிக்கவும்
- உருமாறிய பாறைகளின் பயன்கள் என்னென்ன?
ஆபரணங்கள் செய்ய ,கட்டிடம் கட்டுவதற்கு, சிற்பங்கள் செதுக்கப் பயன்படுகிறது
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்களை உருவாக்குவதிலும் ,மறுஉருவாக்கம் செய்வதிலும் எத்தனை முதன்மை செயல்கள் முக்கிய பங்காற்றுகின்றன?
2 :புவி புறசெயல்பாடுகள் & அகப்புற செயல்பாடுகள்
- பூமியின் மேற்பரப்பின் மீது அழுத்தத்தையும் புதிய நில தோற்றங்களையும் உண்டாக்கும் செயல்முறைக்கு பெயர் என்ன ?
புவி புற செயல்பாடுகள்(geomorphic process)
- பூமியின் உட்பகுதியில் இருந்து புவியின் மேற்பரப்பை நோக்கி செயல்படும் விசைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகச்செயல்முறைகள்
- புவியின் மேற்பரப்பில் செயல்படும் இயற்கை காரணிகளான ஆறுகள் ,பணியாறுகள் ,காற்று ,அலைகள் போன்ற விசைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புவிப்புறச் செயல்பாடு காரணிகள்
- பாறைக்கோளம் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
பெரிய புவித்தட்டுகள் ,சிறிய புவித் தட்டுகள்
- புவித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் எது உருவாகின்றது ?
மலைத்தொடர்கள் மற்றும் ஒழுங்கற்ற நிலத்தோற்றங்கள் நிலப்பரப்பிலும், கடல் அடித்தளத்திலும் உருவாகும்
- புவித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உருவாகும் நிலத்தோற்றங்களின் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புவித்தட்டுகளின் நகர்வு
- புவித்தட்டுகள் நகர்விற்கு எது காரணமாக உள்ளது?
கவசத்தில் காணப்படும் வெப்பசக்தி
- புவித் தட்டுகள் நகர்வு எதற்கு ஒரு காரணமாக உள்ளது?
புவி அதிர்ச்சிக்கும், எரிமலை வெடிப்பிற்க்கும்
- புவித்தட்டு விளிம்புகளின் வகைகள் என்னென்ன?
இணையும் எல்லை ,விலகும் எல்லை, பக்க நகர்வு எல்லை
- புவித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது சில நேரங்களில் கீழ்நோக்கு சொருகுதல் நிகழ்வு நடைபெறும் இப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புவித்தட்டுகள் அமிழ்தல் மண்டலம் (subduction)
- மடிப்பு மலைகள் – இமயமலை எதற்கு எடுத்துக்காட்டு?
இணையும் எல்லை
- புவித் தட்டுகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகும்போது மேக்மா எனப்படும் பாறைக்குழம்பு புவிக்கவசத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. இது எந்த விளிம்பு வகையில் நடைபெறுகிறது?
விலகும் எல்லை
- நடு அட்லான்டிக் ரிட்ஜ் எதற்கு எடுத்துக்காட்டு?
விலகும் எல்லை
- புவித்தட்டுகள் ஒன்றுக்கொன்று கிடையாக பக்கவாட்டில் நகர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பக்கவாட்டு நகர்வு
- கிடைமட்ட அழுத்த விசையின் காரணமாக புவித்தட்டுகள் மேலும் கீழும் நகர்வதால் எது உருவாகிறது?
மடிப்புகள்
- பாறைகளில் ஏற்பட்ட மடிப்பின் காரணமாக உருவாகும் மலைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
மடிப்பு மலைகள்
- மடிப்பு மலைக்கு எடுத்துக்காட்டுகள் ?
இமயமலையும், ஆல்ப்ஸ் மலையும்
- புவி தட்டுகளின் அசைவினால் பாறைகளின் மீது அழுத்தம் மற்றும் இறுக்கம் ஏற்பட்டு அவை விரிவடைகிறது.அதனால் விரிசல்கள் தோன்றுகின்றன இப்பாறை விரிசல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிளவுகள் (Faulting)
- கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பிளவு பள்ளத்தாக்கு எதற்கு எடுத்துக்காட்டு?
பிளவுகள்(Faulting)
- எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தட்டு கோண்டுவானா என்ற பெரும் கண்டத்தில் இருந்து விடுபட்டு வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்தது?
140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
- எந்த தட்டுகள் இந்திய நேபாள எல்லையில் மோதிக்கொண்டதால் மலையாக்க மண்டலம் (orogenic belt) உருவாகியது?
மலையாக்க மண்டலம்
- உலகின் மிக உயரமான பீடபூமி எது ?
திபெத் பீடபூமி
- பூமி ஓட்டில் திடீரென ஏற்படும் அதிர்வை குறிப்பது எது?
புவி அதிர்ச்சி
- புவிக்குள் புவி அதிர்வு உருவாகும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புவி அதிர்ச்சி கீழ்மையம்(focus)
- புவி அதிர்ச்சி கீழ் மையத்தின் நேர் உயரே புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள மையத்திற்கு பெயர் என்ன?
மேல் மையம் (epicentre)
- புவி அதிர்ச்சியின் தாக்கம் எங்கு அதிகமாக காணப்படும்?
புவியின் மேல் மையம்
- புவி அதிர்வலைகளின் தன்மைக்கேற்ப அவைகள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
மூன்று வகைகள்: முதன்மை அலைகள்(primary or p waves), இரண்டாம் நிலை அலைகள் (secondary or S waves),மேற்பரப்பு அலைகள்(surface waves or L waves)
- புவி அதிர்வு அளவையை கண்டுபிடித்தவர் யார்?
C.F ரிக்டர்
- இதுவரை பூமியில் பதிவான மிக உயர்ந்த புவி அதிர்ச்சி எது ?
1960 ஆண்டு, சிலி நாட்டில் பயோ -பயோ என்ற இடத்தில் பதிவான 9.5 ரிக்டர் அளவு
- எந்த புவி அதிர்வு அலைகள் மற்ற அலைகளை விட மிகவும் வேகமாக பயணிக்கக் கூடியவை?
முதன்மை அலைகள்
- முதன்மை அலைகள் எதன் வழியாக பயணிக்கும்?
திட ,திரவ வாயு பொருட்கள்
- முதன்மை அலையின் சராசரி வேகம் எவ்வளவு ?
வினாடிக்கு 5.3 கிலோ மீட்டர் முதல் 10.6 கிலோ மீட்டர் வரை வேறுபடும்
- இரண்டாம் நிலை அலைகள் என்ன பொருட்கள் வழியாக மட்டுமே பயணிக்கக் கூடியது ?
திடப் பொருட்கள்
- இரண்டாம் நிலை அலைகள் எந்த திசையில் புவியில் அசைவினை ஏற்படுத்துகின்றன ?
இவ்வலைகள் பயணிக்கும் திசைக்கு செங்குத்தாக
- இரண்டாம் நிலை அலைகளின் சராசரி வேகம் எவ்வளவு?
வினாடிக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் 8 கிலோ மீட்டர் வரை
- புவியின் மேற்பரப்பில் நீண்ட தூரம் பயணம் செய்யும் அலைகள் எது?
மேற்பரப்பு அலைகள்
- மற்ற அலைகளைவிட வேகம் குறைவான அலைகள் எது ?
மேற்பரப்பு அலைகள்
- அதிக அளவில் அழிவை ஏற்படுத்தக்கூடிய அலைகள் எது ?
மேற்பரப்பு அலைகள்
- மேற்பரப்பு அலைகளின் சராசரி வேகம் எவ்வளவு ?
வினாடிக்கு 1 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை
- புவி அதிர்வுகளை பதிவு செய்யும் கருவிக்கு பெயர் என்ன ?
நில அதிர்வு அளவை படம் (seismograph) அல்லது நில அதிர்வு மானி (seismometer)
- நில அதிர்வு பற்றிய படிப்பிற்கு என்ன பெயர்?
நில அதிர்வியல் (seismology)
- சுனாமி என்பது எந்த மொழி சொல் ?
ஜப்பானிய சொல் (பொருள்- துறைமுக அலைகள்)
- சுனாமி அலைகள் சராசரியாக மணிக்கு எவ்வளவு வேகத்தில் பயணிக்கும்?
500 கிலோமீட்டர் /மணிக்கு
- சுனாமி அலைகளின் நீளம் என்ன ?
600 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும்
- சுனாமி அலைகள் கடற் கரையை அடையும் போது எவ்வளவு மீட்டர் உயரம் வரை உயர்ந்து காணப்படும்?
15 மீட்டர்
- இந்திய பெருங்கடலில் எந்த ஆண்டு ஆழிப்பேரலை ஏற்பட்டது ?
2004, டிசம்பர் 26
- 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை இதுவரை உலகில் பேரழிவை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்களில் எத்தனையாவது இடத்தைப் பெறுகிறது?
ஆறாவது இடம்
- 2004, டிசம்பர் 26 இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலை உண்டாவதற்கு காரணம் என்ன ?
இந்தோ- ஆஸ்திரேலிய தட்டு ,யுரேசிய தட்டின் கீழே அமிழ்ந்ததே இதற்கு காரணம்
- இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை ஏற்படுத்த காரணமான புவி அதிர்வின் அளவு என்ன?
ரிக்டர் அளவில் 9
- புவியின் உட்பகுதியில் திட திரவ வாயு நிலையில் உள்ள பாறைக் குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலுக்கு பெயரென்ன ?
எரிமலை வெடிப்பு
- புவியின் மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறை குழம்பு எவ்வாறு அழைக்கப்படும்?
லாவா
- எரிமலை உச்சியில் காணப்படும் கிண்ணம் போன்ற வடிவம் உடைய பள்ளத்திற்கு பெயர் என்ன?
எரிமலை வாய் (crater)
- வல்கனோ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
இலத்தீன் மொழியில் உள்ள வல்கேன் (பொருள்- ரோமானிய நெருப்புக் கடவுள்)
- எரிமலைகள் செயல்படும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவை எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது ?
மூன்று: செயல்படும் எரிமலை (active volcano) ,உறங்கும் எரிமலை(dormant volcano), தணிந்த எரிமலை(extinct volcano)
- நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக்குழம்புகளையும் ,துகள்களையும் ,வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயல்படும் எரிமலைகள்
- செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை -அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ளது இது எதற்கு எடுத்துக்காட்டு?
செயல்படும் எரிமலை
- நீண்டகாலமாக எரிமலை செய்கைகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது ?
உறங்கும் எரிமலைகள்
- ஜப்பானில் உள்ள ஃபியூஜி எரிமலை எதற்கு எடுத்துக்காட்டு ?
உறங்கும் எரிமலை
- எந்தவித எரிமலை செயல்பாடுகளும் இன்றி காணப்படும் எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
தணிந்த எரிமலைகள்
- தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ எரிமலை எதற்கு எடுத்துக்காட்டு?
தணிந்த எரிமலை
- எரிமலைகளின் வடிவம் மற்றும் அதில் உள்ள கலவைகளின் அடிப்படையில் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
மூன்று வகைகள் :கூட்டு எரிமலை(composite volcano),கும்மட்ட எரிமலை(dome volcano) ,கேடய எரிமலை(shield volcano)
- கூட்டு எரிமலை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அடுக்கு எரிமலை (strata volcano)
- எரிமலை செய்கையின் போது வெளிவந்த சாம்பல் கடினப் பாறை குழம்புகள் மற்றும் நுரை கற்களாலான படிவுகள் அடுக்கடுக்காக அமைந்து கூம்பு வடிவில் காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படும்?
கூட்டு எரிமலை
- ஜப்பானில் உள்ள ஃபியூஜி எரிமலை எதற்கு எடுத்துக்காட்டு ?
கூட்டு எரிமலை
- சிலிக்கா அதிகம் உள்ள எரிமலை குழம்பு அதிக பிசுபிசுப்புடன் வெளியேறுவதால் நீண்ட தூரத்திற்கு பரவ முடியாமல் எரிமலை வாய் அருகிலேயே வட்ட வடிவத்தில் படிந்து சிறு குன்று போல காணப்படும் இந்த எரிமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கும்மட்ட எரிமலை
- மெக்சிகோவில் உள்ள பாரிக்கியூடின் எரிமலை எதற்கு எடுத்துக்காட்டு?
கும்மட்ட எரிமலை
- அதிக பிசுபிசுப்புடன் கூடிய பாறைக்குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்து ஓடி கேடயம் போன்ற வடிவத்தில் மென்சரிவுடன் காணப்படும் எரிமலை எவ்வாறு அழைக்கப்படும்?
கேடய எரிமலை
- ஹவாய் தீவில் உள்ள மௌனலோவா எரிமலை எதற்கு எடுத்துக்காட்டு?
கேடய எரிமலை
- பசிபிக் பெருங்கடல் பகுதியில் பசிபிக் தட்டுடன் மற்ற கண்டத் தட்டுகள் இணையும் எல்லைகளில் எரிமலை வெடிப்பு அதிகமாக நிகழ்வதால் இப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பசிபிக் நெருப்பு வளையம்
- உலகின் அதிகமான புவி அதிர்வுகளும் எரிமலை வெடிப்பு நிகழும் தீவிர மண்டலமாக எந்த பகுதி உள்ளது?
பசிபிக் நெருப்பு வளையம்
- பசிபிக் நெருப்பு வளையத்திற்கு அடுத்ததாக எந்த பகுதியில் அதிக புவி அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுகின்றன?
மத்திய கடலடி மலைத் தொடர் குன்றுப் பகுதிகள் மற்றும் மத்திய கண்டத்தட்டு மண்டலங்கள்
- எந்த எரிமலை வகைகள் சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன?
உறங்கும் எரிமலையும் ,செயல்படும் எரிமலையும்
- எரிமலையில் இருந்து வெளிவரும் பொருட்கள் எதற்கு பயன்படுகிறது?
மண்ணை வளமாக்க, கட்டிட தொழிலில்
9TH GEOGRAPHY STUDY NOTES |நிலக்கோளம் -I புவி அகச்செயல்முறைகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services