- உயரிக்கோளம் எந்தெந்த கோளங்களை உள்ளடக்கியது ?
பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளம்
- உயிர்க்கோளம் எது வரை பரவியுள்ளது?
கடல் மட்டத்திலிருந்து வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு வரை சுமார் 20 கிலோமீட்டர் உயரம் வரை
- பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்விடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயிரினபன்மை (Bio diversity)
- பல்வேறு உயிரினங்களின் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சூழ்நிலை மண்டலம்
- சூழ்நிலை மண்டலத்தைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவுக்கு பெயர் என்ன?
சூழலியல் (ecology)
- சூழலியல் பற்றி படிப்பவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
சூழலியலாளர்
- சூழ்நிலை மண்டலம் எத்தனை அடிப்படை கூறுகளை கொண்டுள்ளது?
மூன்று : உயிரற்ற கூறுகள் ,உயிருள்ள கூறுகள் மற்றும் ஆற்றல் கூறுகள்
- சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
உற்பத்தியாளர்கள்
- சூழ்நிலை மண்டலத்தில் காணப்படும் உற்பத்தியாளர்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுவர்?
தற்சார்பு ஊட்ட உயிரி (Autotrophs)
- சூழ்நிலை மண்டலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களை சார்ந்து இருக்கும் உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
நுகர்வோர்கள் (Consumers)
- சூழ்நிலை மண்டலத்தில் நுகர்வோர்கள் (Consumers) எவ்வாறு அழைக்கப்படுவர்?
பிறச்சார்பு ஊட்ட உயிரி (Heterotrophs)
- நுகர்வோரின் பொதுவான பிரிவுகள் என்னென்ன?
முதல்நிலை நுகர்வோர் ,இரண்டாம் நிலை நுகர்வோர் ,மூன்றாம் நிலை நுகர்வோர்
- உணவிற்காக உற்பத்தியாளர்களை சார்ந்து இருக்கும் தாவர உண்ணிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
முதல்நிலை நுகர்வோர் (primary consumers)
- தாவர உண்ணிகளை உணவாக உட்கொள்ளும் ஊனுண்ணிகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
இரண்டாம் நிலை நுகர்வோர் (secondary consumers)
- தாவர உண்ணிகளையும் ஊனுண்ணிகளையும் உணவாக உட்கொள்ளக் கூடியவை எவ்வாறு அழைக்கப்படும்?
மூன்றாம் நிலை நுகர்வோர்
- தங்களுக்கு தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாமல் இறந்து ,அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை எவ்வாறு அழைக்கப்படும் ?
சிதைப்போர்கள் / சாறுண்ணிகள் (Saprotrophs)
- உயிர்க்கோளம் முழுவதற்கும் எது ஆற்றலை வழங்க கூடியதாக உள்ளது ?
சூரியன்
- சூழ்நிலை மண்டலத்தில் உள்ள கரிமமற்ற மற்றும் கரிம பொருட்களின் பரவலுக்கும் , சுழற்சிக்கும் உதவி செய்வது எது ?
ஆற்றல் ஓட்டம்
- சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் ஆற்றல் ஓட்டம் நடைபெறுகிறது இந்நிலைகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
ஆற்றல் மட்டும்
- உயிரினங்களில் ஒரு குழுவில் இருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாக தொடர்ச்சியாக நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உணவுச்சங்கிலி
- உணவுசங்கிலியிகள் ஒன்றினை ஒன்று சார்ந்து பிணைக்கப்பட்ட அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உணவு வலை
- புவியின் சூழல் மண்டலத்தில் பல்வேறு வகையான தாவரங்களும் விலங்கினங்களும் இணைந்து வாழும் மிகப்பரந்த சூழ்நிலையில் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பல்லுயிர்த் தொகுதி (Biomes)
- பல்லுயிர் தொகுதி எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
இரண்டு: நிலவாழ் பல்லுயிர் தொகுதி மற்றும் நீர்வாழ் பல்லுயிர் தொகுதி
- ஒரு சூழலியல் பிரதேசத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக ஓரினம் சுயமான வாழ்விடத்தை இழந்துவிடுமேயானால் அவ்விடம் என்னவாக கருதப்படும் ?
கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை மையங்கள் (Hotspots)
- உலகில் எத்தனை இடங்கள் உயிரின பன்மை தகுதி வளமையங்களாக கருதப்படுகிறது?
34
- ஒரு குழுவாக வாழும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழும் நிலச்சூழலுக்கு ஏற்றவாறு வாழ்தல் எவ்வாறு அழைக்கப்படும்?
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி (Terrestrial biomes)
- உலகின் முக்கிய நிலவாழ் பல்லுயிர் தொகுதிகள் என்னென்ன ?
வெப்பமண்டல காடுகள் பல்லுயிர்த் தொகுதி ,வெப்பமண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி, பாலைவனப் பல்லுயிர் தொகுதி ,மிதவெப்ப மண்டல புல்வெளி பல்லுயிர் தொகுதி, தூந்திரப் பல்லுயிர் தொகுதி
- உலகின் மிக முக்கியமான வெப்பமண்டலப் காட்டு பல்லுயிர்த் தொகுதிகள் எவை ?
அமேசான் படுகை, காங்கோ படுகை மற்றும் இந்தோனேசிய தீவுகள்
- வெப்பமண்டலப் காட்டு பல்லுயிர்த் தொகுதிகளில் காணப்படும் முக்கிய மரங்கள் என்னென்ன?
இரப்பர், மூங்கில் ,எபோனி போன்றவை
- வெப்பமண்டலப் காட்டு பல்லுயிர்த் தொகுதிகளில் காணப்படும் முக்கிய விலங்குகள் என்னென்ன?
வவ்வால்கள், வண்ணக்கோழி ,சிறுத்தைகள்(jaguars) ,யானைகள், குரங்குகள் போன்றவை
- புற்றுநோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் தாவரங்களில் சுமார் எத்தனை சதவீத தாவரங்கள் மலைக்காடுகளில் காணப்படுவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் புற்றுநோய் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது?
70%
- வெப்பமண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி எதற்கிடையே காணப்படுகிறது ?
10° முதல் 20° வட தென் அட்சங்களுக்கு இடையே
- வெப்பமண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி புல்வெளிகள் எங்கு காணப்படுகிறது?
சேஹல், கிழக்காப்பிரிக்காவில் சகாராவின் தென்பகுதி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில்
- வெப்பமண்டல சவானா பல்லுயிர்த் தொகுதியில் வாழும் மக்களின் முக்கிய தொழில் எது ?
கால்நடை மேய்த்தல்
- வெப்பமண்டல சவானா பல்லுயிர்த் தொகுதியில் காணப்படும் முக்கிய விலங்குகள் என்னென்ன?
சிங்கம், சிறுத்தை ,புலி, மான் ,வரிக்குதிரை ,ஒட்டகசிவிங்கி போன்றவை
- வெப்பமண்டல சவானா பல்லுயிர்த் தொகுதியில் காணப்படும் தாவரங்கள் என்னென்ன?
புல்லுருவி, ரெட் ஓட்ஸ் புல்,லைமன் கிராஸ் (lemon grass)
- பாலைவன பல்லுயிர் தொகுதி எங்கு காணப்படுகிறது?
20° முதல் 30° வட,தென் அட்சங்களுக்கு இடையே
- பாலைவன பல்லுயிர் தொகுதியின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு என்ன?
25 சென்டி மீட்டர் இருக்கும் குறைவாக
- பாலைவன பல்லுயிர் தொகுதியில் காணப்படும் தனித்துவம் வாய்ந்த தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
பாலைவனத் தாவரங்கள் (Xerophytes)
- பாலைவன பல்லுயிர் தொகுதியில் காணப்படும் தாவரங்கள் என்னென்ன ?
முட்புதர்கள், குறுங்காடுகள் மற்றும் பனை போன்ற தாவரங்கள்
- பாலைவனங்கள் மற்றும் அரை வறண்ட பாலைவன பிரதேசங்களில் காணப்படும் வளமான நன்னீர் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
பாலைவனச்சோலை
- பாலைவன சோலைகள் எங்கிருந்து நீரைப் பெறுகின்றன ?
நீரூற்றிலிருந்து
- பாலைவன பல்லுயிர் தொகுதியில் காணப்படும் விலங்குகள் என்னென்ன?
பாம்புகள், பல்லிகள் ,தேள்கள் போன்ற ஊர்வன
- மிதவெப்ப மண்டல புல்வெளி தொகுதி எங்கு காணப்படுகிறது ?
கண்டங்களின் உட்பகுதியில்
- மிதவெப்பமண்டல புல்வெளி தொகுதி பிரதேசங்களில் எது பயிரிடுவதற்கு சாதகமாக உள்ளது?
கோதுமை
- மிதவெப்ப மண்டல புல்வெளி தொகுதியில் காணப்படும் விலங்குகள் என்னென்ன ?
வெட்டுக்கிளி, ஓநாய் ,காட்டெருமை, பிரெய்ரி நாய் போன்ற விலங்குகள்
- தூந்திரப் பல்லுயிர் தொகுதிகள் எங்கு காணப்படுகிறது?
ஆசியா ,ஐரோப்பா இவற்றின் வடபகுதி மற்றும் கிரீன்லாந்து ,ஆர்டிக் ,அண்டார்டிகா
- மிதவெப்ப மண்டல புல்வெளி தொகுதியில் வாழும் மக்கள் குளிர் காலங்களில் என்ன அமைத்து வாழ்கின்றனர் ?
“இக்ளூ” என்ற பனி வீடுகள்
- மிதவெப்ப மண்டல புல்வெளியானது வட அமெரிக்காவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ப்ரெய்ரி
- மிதவெப்ப மண்டல புல்வெளியானது யுரேஷியாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்டெப்பி
- மிதவெப்ப மண்டல புல்வெளியானது அர்ஜென்டீனா மற்றும் உருகுவேயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாம்பாஸ்
- மிதவெப்ப மண்டல புல்வெளியானது தென் ஆப்ரிக்காவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெல்ட்
- மிதவெப்ப மண்டல புல்வெளியானது ஆஸ்திரேலியாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டௌன்ஸ்
- மிதவெப்ப மண்டல புல்வெளியானது நியூசிலாந்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கேன்டர்பர்க்
- மிதவெப்ப மண்டல புல்வெளியானது சைனாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மஞ்சூரியன்
- நீர்வாழ் பல்லுயிர் தொகுதிய எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
இரண்டு :நன்னீர் வாழ் பல்லுயிர் தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர் தொகுதி
- உயிர்க்கோளக் காப்பகங்கள் (Biosphere reserve) என்பவை என்ன?
ஒரு சிறப்பு சூழ்நிலை மண்டலம் அல்லது தாவரங்கள் மற்றும் விலங்குகளை உள்ளடக்கிய தனித்துவமான பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதி
- இந்தியாவில் எத்தனை முக்கியமான உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன?
பதினெட்டு
9TH GEOGRAPHY STUDY NOTES |உயிர்க்கோளம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services